கடிதங்கள்

குறைத்துரைத்தலின் அழகியல் வாசித்தேன். எழுபது எண்பதுகளில் வீட்டை விட்டு வெளியேறி நக்சலைட் இயக்கத்தில் சேர்வது ஆங்காங்கே நிகழ்ந்திருக்கிறது. என் பக்கத்து வீட்டு அக்கா ஒருவர் விஜயகாந்த் படம் வந்தால் கண்ணீரோடு பார்ப்பார். விஜயகாந்த் படத்தில் அழுவதற்கு என்ன இருக்கிறது என்று ஒரு நாள் கேட்டேன். ஏறக்குறைய அ.மார்க்ஸ் சொன்னது தான். இருபது வயது- கம்யுனிஸ பிடிப்பு காணாமல் போகுதல் – ஒரே ஒரு நாள் மின்னல் சந்திப்பு மீண்டும் காணாமல் போய்விடுதல் . விஜயகாந்தைப் பார்த்தால் காணாமல் போன எங்க அண்ணன் மாறியே இருக்கு என்று அவர் சொன்ன பின் தான் அது புரிந்தது. அதன் வலி குறைத்துரைத்தலின் அழகியல் படித்த பின்புதான் முழுவதுமாக உணர முடிகிறது.என் நண்பன் ஒருவன் வீட்டில் எத்தனை பேர் என்று கேட்டால் எப்பொழுதும் மூவர் என்றுதான் சொல்வான். அவர்கள் வீட்டில் அவனது அம்மாசொன்னபோதுதான் தெரிந்தது முதல் அண்ணன் இதே போல் காணாமல் போய் நக்ச்லைட் இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாகக் கடிதம் வந்திருக்கிறது. அவனது அம்மாவைத் தவிர பிறர் காணாமல் போன அண்ணனைக் குடும்ப எண்ணிக்கையில்சேர்ப்பதில்லை.இன்னொரு ஒற்றுமையும் இவர்களிருக்கும் தாய்மொழி தெலுங்கு. அ.மார்க்ஸ் குறிப்பிடும் குடும்பமும் தெலுங்கு போலத்தான் தெரிகிறது. ஏன் இப்படி

அன்புடன்

பூபதி

ஆலயம் தொழுதல் வாசித்தேன். ரத்தத்திலேயே ஊறின கொழுப்பும் குசும்பும். பிறகு ஏன் பஸ்ஸில் போகிறவன் அடிக்க மாட்டான்?

எப்படி இருக்கிறீர்கள் எழுத்தாளரே?

முட்டி மோதி இந்திர நீலம் வந்து விட்டேன். எப்படி, சாதனை தானே?

அன்புடன்

சிவா

*

முந்தைய கட்டுரைவனம்புகுதல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 46