என்றுமுள கண்ணீர்

Siluvaiyin Peyaral

கிறிஸ்துவை என் பத்துவயதில் அறிந்தேன் என நினைக்கிறேன். நான் கண்ட முதல் மரணத்தின் இரவில். தனிமையில், துயரில். அன்றுமுதல் பைபிளின் சொற்களாக கனவுகனிந்த விழிகளாக அவர் என்னுடன் என்றும் இருக்கிறார். தனித்தவன், தனியர்களின் தெய்வம்.

எந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக விலகிவிடுகிறது. அவ்விலகல் மீதான என் கண்டனத்தைப் பதிவுசெய்வதுகூட கிறிஸ்துவை மேலும் நெருங்கும் முயற்சியே என உணர்கிறேன். இந்நூலில் இவ்விரு இயக்கங்களும் ஒரே சமயம் நிகழ்ந்துள்ளன

என் கிறிஸ்துவை சொற்கள் மூலம் மேலும் அறியும் முயற்சி. அவரை மறைக்கும் விஷயங்களை சொற்கள் மூலம் கிழித்தகற்றும் முயற்சியும் கூட

ஜெ

கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் சிலுவையின் பெயரால் நூலின் மறுபதிப்புக்கான முன்னுரை

முந்தைய கட்டுரைவிளையாடல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 35