விஷ்ணுப்பிரியாவும் நூறுநாற்காலிகளும்

1

ஜெ

ஒருவருடம் முன்பு நூறுநாற்காலிகளை வாசித்துவிட்டு நான் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில் ஒருவிஷயம் சொல்லியிருந்தேன். இன்றைக்கு ஐ ஏ எஸ் ஐ பி எஸ் போன்ற உயர்பதவிகளில் இருக்கும் தலித்துக்களுக்கு இதேபோன்ற சிக்கல்கள் ஏதும் இல்லை என்று சொன்னேன். அவர்கள்தான் மற்றவர்களை ஆட்டிவைக்கிறார்கள் என்று சொன்னேன். நீங்கள் எழுதியதெல்லாம் போனதலைமுறைப் பிரச்சினை என்று சொன்னேன்.

இன்றைக்கு விஷ்ணுப்பிரியாவின் தற்கொலையையும் அதற்கான காரணங்களையும் வாசிக்கும்போதுதான் நூறுநாற்காலிகள் அப்பட்டமான உண்மை என்று தெரிகிறது. நூறுநாற்காலிகளில் நீங்கள் எழுதிய அதே யதார்த்தம் இன்னும்கூட குரூரமானதாக அந்தக்கதையில் இல்லாத அளவுக்கு மேலும் அப்பட்டமாக தெரியவந்திருக்கிறது. விஷ்ணுப்பிரியா சாதிசார்ந்து தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். அதை தாளாமல் உயிரை விட்டிருக்கிறார். நூறுநாற்காலிகளில் வரும் காப்பன் சாகவில்லை. ஆனால் இவர் செத்துவிட்டார்.

2

நான் முன்பு எழுதியது எனக்குத்தெரிந்த நண்பர்கள் சொன்னதை வைத்துத்தான். அவர்கள் அவர்களுக்குத்தெரிந்தவற்றைச் சொல்கிறார்கள் என்பதை நம்பினேன். அவர்கள் தாங்கள் நம்ப விரும்புவதைத்தான் சொல்லியிருக்கிறார்கள் என்று இப்போது தெரிந்தது. அவர்களிடம் இப்போது முன்பு பேசியதை வைத்து என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டேன். அந்தப்பெண்ணுக்கு அறிவு கிடையாது, தைரியம் இல்லாவிட்டால் எதற்கு போலீசுக்கு வரவேண்டும் என்று சொன்னார்கள். அப்போதுதான் அவர்களின் மனநிலையே எனக்குப்புரிந்தது.

விஷ்ணுப்பிரியா தனித்துவிடப்பட்டிருக்கிறார். நீங்கள் கதையிலே சொல்வதுபோல நூறுநாற்காலிகள் அல்ல ஆயிரம் நாற்காலிகள் அவர்களுக்குத்தேவை

மோ.சுரேஷ்

அறம் அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரைநான் கிறித்தவனா?
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 21