இயற்கைக் கடலைமிட்டாய்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,

இயற்கை வழி முறையில் கருப்பட்டி கடலை மிட்டாய் செய்யும் குடிசைத்தொழிலை துவங்க உள்ளேன்.

வருகின்ற அக்டோபர் 2ம் தேதி மதுரை டி.கல்லுப்பட்டியில் அமைத்துள்ள ஜே .சி.குமரப்பா அவர்களின் நினைவிடத்தில் எளிய துவக்க விழாவுடன் இந்த பயணத்தை துவங்க உள்ளேன் .

துவக்க விழா
அழைப்பிதழ்

.குக்கூ குழந்தைகள் வெளியில் இணைந்த பிறகு,என்னுடைய பால்ய கால நினைவுகளின் வழியே தான் எனது வாழ்க்கைப்பயணம் அமைகின்றது.இது எனக்கு குழந்தைகள் அளித்த வரமாகத்தான் பார்கின்றேன்.குக்கூ காட்டுப்பள்ளியின் பயணத்தில் என்னை இணைத்துக்கொள்ள இதை ஒரு வாய்ப்பாக உணர்கிறேன்.

நான் சிறு வயது முதலாக தேடி விரும்பி சாப்பிட்ட கடலை மிட்டாயை அதே தரத்துடனும் சுவையுடனும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதுடன்,மூத்த தலைமுறையினர் தனது சிறு வயதில் விரும்பி சாப்பிட்ட கருப்பட்டியில் செய்த கடலை மிட்டாயை அதே மரபு சுவையுடன் மீட்டெடுத்து பரிமாற உள்ளேன்.

இந்த முயற்சிக்கு உறுதுணையாய் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்க்கு நன்றி.

உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றேன்.

E-mail id :
[email protected]
For Facebook link :

பேஸ்புக் இணைப்பு

என்றும் அன்புடன்,

ஸ்டாலின்.பா
(9994846491).

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 18
அடுத்த கட்டுரைகாந்தியம் இன்று -உரை