பின்னூட்ட நிறுத்தம்

இந்த தளத்தில் பின்னூட்டங்களை நிறுத்தலாமென முடிவுசெய்திருக்கிறோம். முக்கியமான காரணம் சமீபத்தில் வந்த வணிக இலக்கியம் சம்பந்தமான நீண்ட பின்னூட்டங்கள். அவற்றின் மூலம் இந்த இணையதளத்தின் கொள்ளளவுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. கூட்டமோ கூட்டம் என்ற ஒரு பதிவே சட்டென்று நிறுத்தப்பட்டது, மீண்டும் இடம் பெற்று வெளியிட்டோம்

பழைய கட்டுரைகளில் நீளமானவை இணையதளத்தில் தெரிவதில்லை என்ற குறை சொல்லப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட முந்நுறு பெரிய கட்டுரைகள் உள்ளே உள்ளன, ’காட்சி ஆவதில்லை. இடம் பெரிதாக்கப்பட்ட பின் அவை வெளியாகும்.

வேர்ட்பிரஸ் மிக செலவு குறைவான ஒரு சேவை என்பதையும் இதன் இட அளவு மிக எல்லைக்குட்பட்டது என்பதையும் நினைவூட்ட விரும்புகிறோம். இதை பெரிய இணையதளமாக ,செலவுமிக்கதாக ஆக்கவும் விரும்பவில்லை

கருத்துக்களை கடிதங்களாக தெரிவிக்கலாம். அவற்றில் சிறந்தவை வெளியிடப்படும்

ஜெ

முந்தைய கட்டுரைஆவுடையக்கா
அடுத்த கட்டுரைபாரதியை பற்றி செல்லம்மாள்