கோவை வெண்முரசு வாசகர் அரங்கு

நண்பர்களே ,

சென்னை வெண்முரசு அரங்கம் போல கோவையிலும் மாதம்தோறும் நடத்த எண்ணியுள்ளோம் , துவக்கத்தில் விஜய் சூரியன் அலுவலகத்தில் நடத்த திட்டமிட்டுளோம் ,
நண்பர்கள் ஒரு 5 பேர் வருவதாக உறுதி படுத்தினாலே இந்த மாதத்திலேயே துவக்கி விடலாம் .

இது வெண்முரசு சார்ந்து நண்பர்களுக்கிடையேயான உரையாடலாக முதலில் துவங்கலாம் என எண்ணம் , அடுத்து வரவர கலந்து கொள்பவர்களின் கட்டுரைகள் முன்வைத்து விவாதிக்கலாம் . வெண்முரசின் வாசகர்கள் மட்டும் கலந்துகொள்வது

வரும் செப்டெம்பர் 27ம் தேதி ஞாயிற்று கிழமை காலை பத்து மணி முதல் ஒரு மணி வரை கோவையின் முதல் வெண்முரசு கூடுகை திட்டமிடபட்டு உள்ளது .முதல் முறை வெண்முரசு வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம் அடுத்த நிகழ்வுகளை எப்படி நடத்தலாம் என திட்டமிடலாம்

நண்பர்களின் ஆதரவை எதிர்நோக்குகிறோம்

நன்றி
விஜய் சூரியன்
[email protected]

Suriyan Solutions

93/1, 6th street extension ,100 Feet road , near Kalyan jeweler, Ganthipuram
99658 46999 ராதா கிருஷ்ணன் – 7092501546

முந்தைய கட்டுரைஇந்துமதம்,நாத்திகம்,ஆத்திகம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 12