திரிகோணமலையில் பிரமிள் நினைவுமலர் வெளியீடு

piramiL

இன்று 20-09-2015 ஆம் திகதி மறைந்த கவிஞர் பிரமிளின் அபிமான வாசகர்கள் திருகோணமலையில் நீங்களும் எழுதலாம் வாசகர் வட்டம் என்ற இலக்கிய அமைப்பின் சார்பில் மட்டக்களப்பிலிருந்து வெளியாகும் மகுடம் இதழின் பிரமிள் சிறப்பு மலர் அறிமுகவிழாவையும் நடத்தி எங்கள் தேசத்துக்கும் தமிழகத்திற்கும் பொதுவான மனிதனாக மறைந்த தருமு சிவராமின் நினைவரங்கை நடத்துகிறார்கள்.

இன்று ஞாயிறு மாலை 4 மணிக்கு திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரிக்கு சமீபமாக அமைந்துள்ள Jesuits Academy மண்டபத்தில் நடக்கும் இந்த அரங்கிற்கு நீங்களும் எழுதலாம் இதழ் ஆசிரியர் திரு. எஸ்.ஆர். தனபாலசிங்கம் தலைமை தாங்குகிறார்.

சிரேஷ்ட சட்டத்தரணி, இலக்கிய ஆர்வலர் ஆ. ஜெகசோதி பிரதம விருந்தினராக கலந்துகொள்ளும் இந்நிகழ்வில் படைப்பிலக்கியவாதி திருமலை நவம் சிறப்பு மலர் குறித்த விமர்சனவுரை வழங்குகிறார்.

முருகபூபதி

பிரமிள் நினைவுமலர் வெளியீட்டுவிழா சிறக்க வாழ்த்துக்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 6
அடுத்த கட்டுரைசி.மோகனுக்கு விளக்கு விருது