சி.மோகனுக்கு விளக்கு விருது

simoo

எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், நூல்தொகுப்பாளரும்,கலை, இலக்கிய விமர்சகருமான சி.மோகனுக்கு இவ்வாண்டுக்கால விளக்கு விருது அளிக்கப்படுகிறது. சி.மோகன் அதிக முனைப்பின்றிச் செயல்படும் இயல்பு கொண்டவர். ஆகவே குறைவாகவே எழுதியிருக்கிறார். ஆனால் தமிழிலக்கியப்பரப்பில் முக்கியமான பங்களிப்பை தன் விமர்சனக்கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் நிகழ்த்தியவர்.

குறிப்பிடும்படியான சிறுகதைகளையும் ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்னும் சிறியநாவலையும் எழுதியிருக்கிறார். இவரது மொழியாக்கத்தில் வந்த ‘ஓநாய்குலச்சின்னம்’ தமிழ் மொழியாக்கங்களில் ஓர் அலையை உருவாக்கியபடைப்பு

சி.மோகனுக்கு வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரைதிரிகோணமலையில் பிரமிள் நினைவுமலர் வெளியீடு
அடுத்த கட்டுரைநமக்குரிய சிலைகள்