ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்

Rajeswary-Balasubramaniam

2000 வாக்கில் திண்ணை இணைய இதழில் எழுத ஆரம்பித்த காலம் முதல் நான் அறிந்த ஆளுமை ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்.முதன்மையாக ஒரு சமூகப்பணியாளர். அரசியல் செயல்பாட்டாளர். அவரது புனைகதைகள் அனைத்தும் அந்த கருத்தியல்செயல்பாட்டின் பகுதியாக அமையும் பிரச்சார நோக்கம் கொண்டவை.

சென்ற முப்பதாண்டுக்காலமாக ராஜேஸ்வரி தளராத தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறார். பலவாறாக பிளவுண்டு வசைகளும் கசப்புகளுமாக குழம்பிக்கிடக்கும் ஈழத்து அரசியல் சூழலில் கடுமையான எதிர்ப்புகளையும் மனம்சோரச்செய்யும் தருணங்களையும் ராஜேஸ்வரி சந்தித்திருக்கிறார். அவற்றை மீறி தன் அகவிசையின் வல்லமையால் நிற்கவும் செயல்படவும் அவரால் முடிந்திருக்கிறது. அவரது பணிகளின் பெறுமதி இன்று மெல்லமெல்லத் துலங்கியும் வருகிறது

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்து எழுத்தாளரான நண்பர் முருகபூபதி அவர்கள் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் பற்றி எழுதியிருக்கும் கட்டுரை தேனீ இணையதளத்தில்

ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் பற்றி முருகபூபதி

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 9
அடுத்த கட்டுரைசிலைகள் -கடிதங்கள்