ராமு அய்யர்

ஜெயமோகன் அவர்களுக்கு,

இதை உங்களிடம் பகிர தோன்றியது.
FB – கணக்கு வேண்டும் என்று அடம் பிடிக்கும் என்பதால் கீழே பதிவை தருகிறேன்.

https://www.facebook.com/groups/1586894078265498/permalink/1606401242981448

ராமு ஐயர் கவிதைகள்
———————————-
தமிழையும் அறிவியலையும் இணைத்து பேசினால், இருவர் தான் பேசப்படுவர். 1. பெ.நா.அப்புசாமி. 2. சுஜாதா.

“திண்ணை ரசாயனம்” போன்ற நூல்களை எழுதி தமிழில் அறிவியலை வளர்க்க ராஜாஜி செய்த முயற்சிகள் தோல்வி என்றே சொல்லவேண்டும். தமிழர்களுக்கு தமிழில் அறிவியல் படிக்க பேச எழுத ஆர்வமில்லை என்றே கருதத் தோன்றுகிறது.

அறிவியல் கவிதை என்றால் எந்த பெயரும் சொல்லமுடியாது என்றே நினைக்கிறேன். ஆனால், அறிவியல் கவிதைகளை இயற்றி, மெட்டமைத்த ராமு ஐயர் என்று ஒருவர் இருந்தாராம். இத்தகவலை எனக்கும் மற்றவருக்கும் சொன்னவர் ”நகுபோலியன்” Balasubramanian Natarajan.

திருச்சி மாவட்டத்தில் நகுபோலியனின் மாணவ பருவத்தில் ராமு ஐயர் பரவலாக அறியப்பட்டாராம். அவரை பற்றி பலரிடம் கேட்டதாகவும், ஒன்றும் பலனில்லை என்றும் நகுபோலியன் நொந்துகொண்டுள்ளார். யாருக்காவது ஏதேனும் தகவல் தெரிந்தால் பகிரவும்.

இந்த வீடியோவில் ஒரு அறிமுகத்தோடு வெப்பம்-நீராவி-மேகம்-மழை-நதி-கடல்-நீராவி என்று பற்றி ராமு ஐயர் இயற்றிய பாடலை நகுபோலியன் பாடுவதை கேட்கலாம், காணலாம். அவர் பாடல்களின் பிரதி கிடைத்தாலும் நன்றாக இருக்கும்.

நன்றி

வெ. ராகவ்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 8
அடுத்த கட்டுரைகாந்தி உரை -கடிதங்கள்