இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ என்ற திரைப்படம் உலகப்புகழ்பெற்ற வெனிஸ் திரைவிழாவில் போட்டிப்பிரிவில் கலந்துகொண்டிருக்கிறது. இந்தியத் திரைப்படங்கள் போட்டிப்பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதே அபூர்வம் என்னும் நிலையில் அப்படம் மனித உரிமைப்போராட்ட நோக்கம் கொண்ட படம் என சிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்பது பெரிய வெற்றி
வெற்றிமாறனையும் படக்குழுவையும் மனமார வாழ்த்துகிறேன். தரமான தமிழ் சினிமா இயக்கத்தின் ஒரு தொடக்கமாக இது அமையட்டும்