ராயின் காந்தியும் உண்மையான காந்தியும்

2111

அருந்ததி ராயின் அத்தனை அரசியல் கருத்துக்களையும் ஒற்றைவரியில் ‘முதிர்ச்சியற்ற, சமநிலையற்ற, தற்காலிகப்புகழைத்தேடும், உள்நோக்கம்கொண்ட எழுத்துக்கள்’ என சொல்லிவிடலாம். அவருக்குப்பின்னால் இருப்பது ஒரு சர்வதேச வலை. தன்னார்வக்குழுக்களாலும் இந்திய எதிர்ப்பு அமைப்புகளாலும் புரக்கப்படுவது அது

அருந்ததி காந்தியைப்பற்றி எழுதிய ‘முனைவரும் புனிதரும்’ என்னும் கட்டுரை தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு இங்குள்ள இந்திய எதிர்ப்புத் தன்னார்வக்குழுக்களாலும் அரசியலமைப்புக்களாலும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியான ஒரு வாரத்திற்குள் ஓர் அரசியல் ஆவணம்போல இந்த அபத்தமான கட்டுரை மொழியாக்கம் செய்யப்பட்டது. மிகப்பெரிய பதிப்பகங்களாலும் தன்னார்வக்குழுக்களாலும் வெளியிடப்பட்டது.

அக்கட்டுரைக்கு ராஜ்மோகன் காந்தி எழுதிய எதிர்வினை ‘சுதந்திரமும் சமூக நீதியும்’என சுனில் கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில், சர்வோதய இலக்கியப் பண்ணை வெளியீடாக தமிழில் வரவிருக்கிறது. அந்நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளன. காந்தியின் மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமான தரவுகளின் அடிப்படையில் அவதூறு, திரித்தல் என நிறுவும் இந்நூலை சுநீல் கிருஷ்ணன் போல ஒரு தனிநபர் தன் சொந்த ஆர்வத்தால் மொழியாக்கம் செய்து அலைந்து திரிந்து பிரசுரகர்த்தர்களை நாடி வெளியிடவேண்டியிருக்கிறது. அருந்ததியின் நூலை வெளியிட்ட எவரும் இந்த ஆதாரபூர்வமான மறுதரப்பு பற்றி வாய்திறக்கவில்லை. இதுவே இன்றைய அரசியல் நிலை

ராயின் காந்தியும் உண்மையான காந்தியும்

முந்தைய கட்டுரைஹொய்ச்சாள கலைவெளியில் – 3
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 1