பூவம்பழம்

வைக்கம் முகமது பஷீரின் பூவம்பழம் என்ற புகழ்பெற்ற சிறுகதையின் மொழியாக்கம் நக்கீரன் இதழில் .சுரா செய்திருக்கிறார். மூலக்கதையின் மொழிநாசுக்கு வர வாய்ப்பில்லை. இருந்தாலும் ரசிக்கும்படியான மொழியாக்கம்

இன்றைய வாசிப்பில் ஒருசாராருக்கு பெண்களுக்கு எதிரான ஒரு ஆணாத்க்க கதை என தோன்றலாம். அது ஒரு மேலோட்டமான மனப்பதிவு என்றே சொல்வேன். உறவின் தொடக்கத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே ஒரு அகங்காரச் சமநிலைக்கான தேடல் உண்டு . அந்த தராசு ஆடி ஆடி நிற்கும்போதுதான் உறவு சரியாகிறது. தேனிலவு என்பதே ஊடலும் கூடலும் மாறி மாறி நிகழும் ஒரு களம். கணிசமானபேருக்கு தேனிலவில் இனிப்பு அளவுக்கே கசப்பும் இருக்கும். அதுதான் ஆண்பெண் உறவின் ரகசியம்

க.நா.சுவின் ஒருநாள் நாவலில் நேர் எதிரான ஒரு கதை. அங்கே உலகமெல்லாம் கண்ட மேஜர் மூர்த்தி ஒரேநாளில் மங்களத்தின் ‘ஆம்படையானாக’ மாறுகிறான்

ஒரு நகைச்சுவை. ‘திருமணத்துக்குப் பின் தம்பதியர் ஒருவராக ஆகிறார்கள். அந்த ஒருவர் யார் என்பதில்தான் சண்டையே ஆரம்பிக்கிறது’

http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=6712

முந்தைய கட்டுரைகற்கண்டு கனவு வயல்
அடுத்த கட்டுரைதுளை