வெடிக்கக் காத்திருக்கும் ஒரு சூழியல் பேரழிவு

http://www.ndtv.com/tamil-nadu-news/from-tamil-nadu-an-environmental-crisis-in-your-wardrobe-foreign-media-1213020?pfrom=home-lateststories

வழக்கமான கழிவு நீர்த் தொழில் நுட்பங்கள் அனைத்தும், கழிவு நீரை நுண்ணியிரிகள் உண்ணும் ஒரு கட்டமைப்பு அமைத்து, அதன் பின்னர் எஞ்சும் திடக் கழிவை வடிகட்டி, அதன் வேதி பின்புலத்துக்கு ஏற்ப, அத்திடக் கழிவை வெளியில் அனுப்புவார்கள். எடுத்துக்காட்டாக, உருளைக்கிழங்கு பதனிடும் கழிவு எனில், அதில் பெரும்பாலும், உருளைக்கிழங்கில் இருந்து வரும் ஸ்டார்ச் மற்றும் அதனோடு ஒட்டியிருக்கும் மண்ணும் திடக் கழிவுகளாக எஞ்சும். இதில், ஸ்டார்ச்சை முன்பே வடிக்கட்டி, மறு சுழற்சி செய்வார்கள். மண் கழிவு இறுதியில் எஞ்சி, மண்ணுக்கு உரமாகப் போகும்.

ஆனால், திருப்பூர் சாயக் கழிவுகள் எதுவுமே அப்படி உபயோகப்படுத்த முடியாத வகை. அவை “சிவப்பு” என்று வகைப்படுத்தப் பட்டு, தமிழகத்தில் சில இடங்களில் மட்டும் ஆழமாகக் குழி தோண்டிப் புதைக்கப் பட வேண்டிய அபாயகரமான வேதிப் பொருள்.

பல முறை மக்கள் போராட்டத்துக்குப் பிறகு, நீதி மன்ற தீர்ப்ப்புக்கு பிறகு, திருப்பூரின் தொழிலதிபரக்ள், கொஞ்சம் முன்னெடுத்து, கழி நீர் பதப் படுத்தும் ஆலைகளைக் கட்டினார்கள். இதில், ஆலைகள் எவ்வளவு செலவு பிடிக்குமோ, அவ்வளவு செலவு தினமும் கழிவு நீர் பதப்படுத்துவதும். எனவே, ஆலைகள் மட்டும் கட்டப்பட்டன – கழிவு நீரை, அனைவரும் ஒன்று கூடி, விதிகளை மீறி வெளியே அனுப்பி விடுவர்.. இறுதியில் அது நொய்யலில் சேரும்.. (மிகச் சிறந்த விதி விலக்குகள் உள்ளன. அவை மைனாரிட்டி).

இதற்கு ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு நியாயம் சொல்வார்கள். தொழிலதிபர்கள் கழிவு பதப்படுத்தும் செலவினால், அவர்களால் பங்களாதேஷ் உற்பத்தியாளர்களால் போட்டி போட முடியவில்லை என்பார்கள். மாசு கட்டுப் பாட்டு அதிகாரிகள், நாங்கள் 24 மணி நேரமும் கவனிக்க முடியாது எனச் சாக்குச் சொல்வார்கள்.. ஆனால், ஒரு ஐந்து ஆண்டுகள் நேர்மையான மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் இருந்தால், இவ்விடம் மீளும் சாத்தியம் இருக்கிறது.

net net என்ன ஆகியிருக்கிறது எனில், திருப்பூரின் சுற்று வட்டாரம் முழுதும் நிலத்தடி நீர் எந்த உபயோகத்துக்கும் ஆகாது போயிருக்கிறது.. ஈரோட்டுக் காவிரியின் சிறு மின்சார உற்பத்திக்காகத் தேக்கி வைத்திருக்கும் நீர் கருநீல நிறத்தில் இருக்கிறது..

முற்பகலே விளைந்து விடும் போலிருக்கிறது. இன்று காந்தி இருந்திருந்தால், திருப்பூரில் போராடியிருந்திருப்பார்.

பாலா

முந்தைய கட்டுரைபேராசிரியரின் குரல்
அடுத்த கட்டுரைகடலடியில்