வடக்கிருத்தல் தற்கொலையா?

jain3

http://www.thehindu.com/opinion/lead/a-reductive-reading-of-santhara/article7572187.ece?homepage=true


http://www.thehindu.com/opinion/op-ed/the-flawed-reasoning-in-the-santhara-ban/article7572183.ece?homepage=true

 

http://www.thehindu.com/opinion/op-ed/santhara-in-the-eyes-of-the-law/article7541803.ece

வயதான காலத்தில், உண்ணா நோன்பிருந்து உயிர் துறத்தல் சமண மதத்தினரிடையே உள்ள ஒரு வழக்கம்.

இதை, தற்கொலை என ஆகஸ்டு 10 ஆம் தேதி, ராஜஸ்தான் உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்து, இ.பி.கோ 309 மற்றும் 306 – தற்கொலை, மற்றும் அதைத் தூண்டிவிடுதல் போன்ற பிரிவுகளின் படி, குற்றம் எனத் தீர்ப்பளித்து இருக்கிறது.

இது பற்றிய மூன்று முக்கியமான பார்வைகளை – ஷேகர் ஹட்டங்காடி ( அரசியல் சட்ட வல்லுநர் – இவர் இது பற்றிய ஒரு ஆவணப் படம் தயாரித்தவரும் கூட), ஷிவ் விஸ்வநாதன் (சமூகவியல் பேராசிரியர்) மற்றும் சுஹரித் பார்த்த சாரதி (உயர் நீதி மன்ற வக்கீல்) ஹிந்து வெளியீட்டிருக்கிறது.

உண்ணா நோண்பிருந்து உயிர் துறத்தலுக்கும், தற்கொலைக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் வழங்கப் பட்ட தீர்ப்பு என்று கூறுகிறார்கள் மூவருமே.

ஷிவ் விஸ்வநாதன், “The court could have been strict about aberrations or deviations from Santhara but to reduce the ritual act to suicide amounts to an exhibition of illiteracy. ” என்று சொல்கிறார்.. இதை விட அழகாக, நீதிபரிபாலனத்தைக் கேவலமாகத் திட்ட முடியாது.

நம் கண் முன்னே, நடந்து முடிந்த இந்த நிகழ்வின் மூன்று பரிமாணங்களை, ஒரு நாளிதழ் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருப்பது மிக முக்கியமான விஷயம்.

மூன்றாம் பக்கச் செய்திகளும், agony aunt பத்திகளும் மட்டுமே நிறைந்து வரும் tabloidகள் மக்கள் மனதை ஆக்கிரமித்துள்ள இக்காலத்திலும், இது போன்ற விஷயங்கள் வருவது ஆரோக்கியமானதுதான்.

பாலா

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 86
அடுத்த கட்டுரைசுயபலி