மேகி இன்று…

http://www.thehindu.com/todays-paper/tp-national/sc-upholds-stay-on-fssai-advisory/article7559573.ece

Non-standardised food products are categorised as proprietory food products and FSSAI insisted on forcing that in a separate process for approval is needed for which there was no time limit set for approval.

ஏற்கனவே சந்தையில் இருந்த அனைத்து proprietory உணவுகளுக்கும் இந்த அனுமதி வேண்டும் என FSSAI வலியுறுத்தியது. இதன் பின் இருந்த intention சரியாக இருந்த போதிலும், நடைமுறையில், அதை ஒரு பணம் பண்ணும் ஒரு கருவியாகவும், பயமுறுத்தும் கருவியாக மட்டுமே FSSAI பயன்படுத்த முயன்றது.

இதன் வீச்சு, மிகவும் அதிகம். எடுத்துக்காட்டாக, இன்று சத்து மாவு என்னும் ஒரு பொருளை ஒரு உள்ளூர் சிறு வணிகர் விற்க முயல்கிறார் என வைத்துக் கொள்வோம் – அவர் முதலில், FSSAI க்கு அப்ளிகேஷன் போட வேண்டும். அதில் உபயோகப்படுத்தப் படும் பொருட்களினால், நுகர்வோருக்கு கேடு ஏதும் விளையுமா என்பதன் ஆராய்ச்சி அறிக்கைகள் (குறைந்த பட்சம் 5 – 6 லட்சம் செலவு பிடிக்கும்) முதலியவற்றைக் கொடுக்க வேண்டும். அதன் பின்னர், FSSAI, அவர்களுக்கு சௌகர்யப்பட்ட காலத்தில் அனுமதி கொடுப்பார்கள்.

இந்த விதி, உள்ளூர் சிறு வணிகர்களை அதிகம் பாதிக்கும். குடிசைத் தொழில்கள் அழிந்தே விடும். பெரும் தயாரிப்பாளர்களுக்கு, கால வரையற்ற கால தாமதம் ஏற்படுத்தும். உச்ச நீதி மன்றம் இதை இன்று தள்ளுபடி செய்து விட்டது.

இந்த ஒரு முட்டாள்தனமான அணுகுமுறை, உணவுத் துறையை மிகவும் பாதிக்கிறது என பலமுறை தொழில் கட்டமைப்புகள் அரசுக்குச் சொல்லின. ஆனால், அரசுகளிடம் (முந்தைய மன்மோகன் சிங் மற்றும் இன்றைய மோதி அரசு) இருந்து ஒரு தீர்வும் வரவில்லை இதற்கு. இறுதியில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டியிருக்கிறது. (உடனே இந்தத் தீர்ப்பைக் கொடுத்தது பெங்களூர் குமாரசாமி என்னும் வகையில் முகநூல் போராளிகளின் வாள் வீச்சை எதிர்பார்க்கலாம்)

ஹே ராம்!

பாலா

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 82
அடுத்த கட்டுரையாகூப் மேமன் என்னும் தேசநாயகன்