அன்புள்ள ஜெ.மோ. அண்ணா,
வணக்கம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுதும் கடிதம் இது.
சசிப்பெருமாளுக்கு தங்கள் அஞ்சலி செய்தியை (http://www.jeyamohan.in/77530#.VcnxCLWHDIU) படித்தேன்.
//சசிப்பெருமாளை திருப்பூர் அறம் அறக்கட்டளை விழாவில் நேரில் சந்திக்கவும் வணங்கி ஆசிபெறவும் வாய்ப்பு கிடைத்தது. அதிகம் பேசாத எளிய மனிதர். தன் வாழ்க்கையின் இலக்கென்ன என வகுத்துக்கொண்டவர். செயல்மூலம் காந்தியை அறிந்தவர். காந்தியை அறிய சிறந்த வழி அதுவே. அதன் மூலம் காந்தியாகவே ஆகிவிடுதல். காந்தியாகவே நான் கண்ட சசிப்பெருமாளுக்கு என் அஞ்சலி//
சசிபெருமாள் ஐயாவுக்கு அறம் அறக்கட்டளை விருது வழங்கியதில் மிகுந்த பெருமிதம் அடைகிறோம். அதை உங்கள் கையால் கொடுத்தது இன்னும் சிறப்பு.
அந்த விழா தொடர்பான ஒரு படத்தை இத்துடன் இணைத்துள்ளேன். இந்தப் படம் உங்கள் தளத்தில் வெளியானால் பல்லாயிரம் பேரைச் சென்றடையும். அது மதுவிலக்கு கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும்.
காண்க: http://aramtirupur.blogspot.in/2015/08/2014.html
அன்புடன்
வமுமுரளி