மேகி நாடகம், இரு கடிதங்கள்- பாலா

http://indianexpress.com/article/india/india-others/food-minister-slams-the-food-regulator-it-is-creating-fear/

http://economictimes.indiatimes.com/industry/cons-products/food/fssai-maggi-call-may-drive-away-funds-dilip-shanghvi-md-sun-pharma/articleshow/48289443.cms

2001 ல், Food Safety and standards of India என்னும் நிறுவனம் உருவாக்கப் பட்ட போது, அரசு தரப்பில் இருந்து, இனிமேல் இந்தியாவில் உற்பத்தி செய்யப் படும் உணவுப் பொருட்களின் தரம் எப்போதுமில்லாத வகையில் மேம்பட்ட தரத்தில் இருக்கும் எனச் சொல்லப் பட்டது.

ஆனால், அதில் கொடுக்கப் பட்டிருந்த சில தரக்கட்டுப்பாட்டு அளவுகள் இந்தியாவில் சாத்தியமில்லாத வகையில் இருப்பதைச் சுட்டிக் காட்டினோம். (எடுத்துக்காட்டாக, கிராமத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் பாக்டீரியாவின் அளவு சாத்தியமேயில்லாதது). அது மட்டுமில்லாமல், அந்நிறுவன அதிகாரிகளுக்குக் கொடுக்கப் பட்ட வானாளாவிய அதிகாரத்தையும் சுட்டிக் காட்டினோம். வழக்கம் போல, கறுப்பு ஆடுகள் என தொழில் நிறுவனங்களின் ஆட்சேபணைகளைப் புறந்தள்ளி விட்டு, FSSAI உருவாக்கப் பட்டது.

இதில் முதல் பலியாடு இறக்குமதிதான். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப் படும் பொருட்களுக்கு, இந்திய FSSAI முறைப்படி லேபிள்கள் இருக்க வேண்டும் எனச் சொல்லப் பட்டது. ஆனால், அவை சர்வ தேச விதிகளின் படி இருந்தால் நல்லது எனச் சொன்னோம். மூர்க்கமாக மறுக்கப் பட்டது. அப்படியெனில், நடைமுறையில் எங்களை இறக்குமதி செய்ய அனுமதியுங்கள் – ஒரு சுங்க அதிகாரத்துக்குட்பட்ட கிடங்குகளில் இறக்கி இந்திய FSSAI க்குத் தேவையான லேபிள் ஒட்டி, பின் அனுமதி வாங்கிப்பின் விற்பனை செய்ய எடுத்துக் கொள்கிறோம் என்றோம். சில காலத் தற்காலிக அனுமதிக்குப் பின் அதுவும் மறுக்கப் பட்டது. மிக அதிக அளவில் ஆட்டோமேட் செய்யப் பட்ட ஐரோப்பிய ஆலைகளில், இந்தியாவுக்கெனப் பிரத்தியேகமாக லேபிள் ஒட்டுவது சாத்தியமின்றி, சிறு அளவிலான இறக்குமதிகள் நின்று போயின.

அடுத்த படியாக, இறக்குமதி செய்யப் படும் பொருள்களின் தரக் கட்டுப்பாடு. முதலில், போர்ட் ஹெல்த் ஆஃபிஸர் அலுவலகத்தில் இருந்து சாம்பிள்கள் எடுக்கப் பட்டு, தரக்கட்டுப்பாட்டுச் சோதனைகள் செய்யப் பட்டு, அவை அனுமதிக்கப் படும். ஊழல் மலிந்த இடம். FSSAI வந்த உடன், அவர்கள் தரக்கட்டுப் பாடு செய்வார்கள் எனச் சொன்னார்கள். ஆனால், அந்தச் சோதனைகள் முடிந்து அனுமதி பெற ஒரு கால நிர்ணயம் இல்லாமல் இருக்கிறது. புதிதாய் ஆரம்பிக்கப் பட்ட FSSAIக்கென நவீன பரிசோதனைக் கூடங்களின் கொள்திறன் தேவையான அளவு இல்லை. சில சமயங்களில் மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்தப் பரிசோதனைச் சாலைகளின் கருவிகள் நவீனமாக இல்லை. அவற்றின்முடிவுகள் பல சமயம் தாறுமாறாக இருந்தன. மேலே அப்பீல் சென்றால், ஏற்கனவே குறைவான கொள்திறன் கொண்டிருந்த சோதனைச் சாலைகள் இதை வெறுப்பாகப் பார்த்தன. அப்பீல் என்ற வார்த்தையை, FSSAI அதன் அதிகாரத்தைச் சீண்டும் விஷயமாக எடுத்துக் கொண்டு, மேலும் மாதக் கணக்கில் அதன் முடிவை நிறுத்தின.. ஏனெனில், மிக உயர் தரக் கட்டுப்பாடுகளைக் கொண்டு, அதிகாரம் படைத்த FSSAIக்கு, உரிய நேரத்தில் முடிவுகளைச் சொல்ல வேண்டும் என்னும் கடமையை சட்டபூர்வமாக்க வில்லை சட்டம் செய்தோர்.

இதன் முதல் பலி LINDT சாக்லேட்கள்.. 2012 ந் இறுதியில் இந்தியாவெங்கும் கிட்டத் தட்ட 20-25 கண்டெயினர்கள் பல்வேறு துறைமுகங்களில் காலவரையின்றி மாட்டிக் கொள்ள இந்தியாவில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்தது. ஒரு கண்டெயினர் சாக்லேட் கிட்டத் தட்ட ஒரு கோடி ரூபாய்.

அதன் பின்னர் பல பெரும் நிறுவனங்களும் இதற்கான விலையைக் கொடுத்து வருகிறார்கள். தனிப்பட்ட அளவில் எஙக்ளையும் இது பாதித்தித்ருக்கிறது – இத்தாலியில் இருந்து எங்கள் உணவுக் கச்சாப் பொருளை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டொம் – வருடம் 3 கோடி வியாபார நஷ்டம். தெரிந்த வகையில், டாபரின் பழச் சாறுகள் பலமுறை சரியான காரணங்கள் இல்லாமல் தர அனுமதி மறுக்கப் பட்டிருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவெனில், இந்த பொருட்கள் மற்றும் கச்சாப் பொருட்கள் உலகின் மிக அதிகத் தரம் வாய்ந்த நாடுகளில் உற்பத்தி செய்து., அங்கே உபயோகிக்கப் படுவதும் கூட.

இப்போதைய நிலவரம் – இறக்குமதி செய்யும் உணவுப் பொருட்களை, துறைமுகத்தில் இருந்து க்ளியர் செய்ய ஆகும் காலம் குறைந்த பட்சம் ஒரு மாதம்.

துவக்கத்தில் மிக முக்கியமான bottle neck ஆக இருந்த தரக் கட்டுப் பாட்டுத் தலைவரை மாற்றினார்கள். ஆனால், ஒரு மாற்றமும் நிகழவில்லை.

உணவு உற்பத்தியை ஒரு கால் நூற்றாண்டு காலமாகக் கவனித்து வருபவன் என்னும் முறையில், நெஸ்ட்லேயின் ஆலையும், தரக்கட்டுப்பாடுகளும் உலகில் மிகச் சிறந்தவை எனக் கூற முடியும். அதன் பன்னாட்டு விதிகளின் காரணமாக, அந்நிறுவனம், எந்தக் குறுக்கு வழியையும் மேற்கொள்ளாது எனவும் நிச்சயமாகக் கூற முடியும். அதன் தரத்தோடு ஒப்பிடுகையில், எந்த இந்திய நிறுவனமும் அருகில் நிற்க முடியாது என்பதே உண்மை. இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப் பட்ட மேகி, அந்த ஊர்த் தரக்கட்டுப்பாடுகளைத் தாண்டி அங்கே அனுமதிக்கப் பட்டிருக்கிறது என்பதே அதற்குச் சான்று.

ஹல்திராம் துவங்கி நமது இந்திய உணவு நிறுவனங்களைச் சோதனையிட்டால் உலகமே சிரிக்கும். மும்பையின் அண்ட்ர் பெல்லியான தாராவியில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களை FSSAI பரிசோதிப்பதில்லை. அங்கே போனால், யாரும் உயிருடன் திரும்பி வர முடியாதென்பதே காரணம். ஆகக் கிடைப்பது பன்னாட்டு இளிச்சவாயர்கள் மட்டுமே.

இப்படி ஒரு கடினமான சட்டம் வரும்போதே நாங்கள் எல்லோரும் நினைத்தோம் – அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இதை வைத்துப் பணம் பண்ணுவார்கள் என.. ஜமாய்க்கிறார்கள்..

மிகப் பெரும் நஷ்டம் இந்தியத் தொழில்துறைக்கு.. பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே தமது ஆலைகளை நிறுவி நடத்துவதே இந்தியத் தொழில் துறையின் தரக் கட்டுப் பாடுகள் மேம்பட உதவியிருக்கின்றது. )(அவற்றின் பொருட்கள் மற்றும் நுகர்வுக் கலாச்சாரம் பற்றி இந்த வாதத்தில் பேசப் போவது இல்லை). ஆனால், உலகை நோக்கும் இன்றைய நமது பொருளாதார நோக்கை, திட்டங்களை, இது போன்ற சட்டங்களும், அரசியல்வாதிகளும் தோற்கடித்து விடுவார்கள். எவ்வளவு விரைவில் இதை அரசு உணரும் எனத் தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் நம்பிக்கை கரைகிறது.

இந்தப் பிரச்சினையை உணவுத் துறையில் இருக்கும் தொழிலதிபர்கள், அரசிடம் கொண்டு போக அஞ்சுகிறார்கள். முதல் முறையாக, உணவுத் துறையில் இல்லாத, மருந்து உற்பத்தித் தொழில் செய்யும் திலிப் சாங்வி இதைப் பேசியிருக்கிறார். அரசு கண்டு கொள்ளுமா என்பது இப்போது மில்லியன் டாலர் கேள்வி.

பாலா

**

http://www.ndtv.com/india-news/fssai-approved-lab-finds-maggi-noodles-safe-1203850

இந்த நாடகத்தின் உச்சகட்டம் நேற்று முடிவடைந்து விட்டது. CFTRI (central Food technolgy Research Institute) – இந்தியாவின் மிக நவீன உணவுத் துறைக் கழகம் மேகி யைப் பரிசோதித்து, அது, பாதுகாப்பானது எனச் சொல்லிவிட்டது.

இந்தப் பிரச்சினையில் தவறாக முடிவெடுத்த அரசு அலுவலர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஒன்றுமில்லை. அவர்கள் அடுத்து எங்கே நெஸ்ட்லே மாட்டும் எனக் காத்திருப்பார்கள்.

http://businesstoday.intoday.in/story/maggi-ban-nestle-sees-more-than-rs-320-cr-loss/1/220566.html

நெஸ்ட்லேவுக்கு மூணு மாதத்தில் 320 கோடி நஷ்டம்.

இது தான் இந்தியத் தொழில்துறையை வாட்டும் ஒரு முக்கிய பிரச்சினை.

இதை அரசிடம் எடுத்துச் சொல்லும் ஒரு வழி இல்லை.

பாலா

முந்தைய கட்டுரைகடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 69