«

»


Print this Post

விக்கி லீக்


இரண்டு வருடங்களுக்கு முன்பு அனைத்து ஐரோப்பிய வரி ஆணையங்களுக்கும் இறுமாப்பு கூடியதோர் அதிர்ச்சியான தகவல் வந்தது. அந்தச் செய்தியின் சாராம்சம் “ஒரு ஸ்விஸ் தேசத்து தனியார் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களின் பட்டியல்களுடன் அந்த வங்கியின் கணணி அமைப்புகளுக்கான இணைப்பையும் சேர்த்துத் தரத் தயாராக இருக்கிறோம். நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா?”என்று தெனாவெட்டாக வினவியது அந்த மின்னஞ்சல்.

ச.திருமலைராஜன் எழுதிய இக்கட்டுரை சுவாரசியமான நடையில் நாம் சாதாரணமாக நம் நாளிதழ்களில் வாசிக்க முடியாத செய்திகளைச் சொல்கிறது.

http://solvanam.com/?p=10036

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7762

6 comments

Skip to comment form

 1. stride

  சொல்வனத்தில் ச.திருமலைராஜன் சுட்டிக் கட்டிய நியூயார்க் டைம்ஸ் கட்டுரையை சில மாதங்கள் முன்பு படித்த பின் இந்திய ஊடகங்களில் அதனைப் பற்றி ஏதாவது வந்திருக்கிறதா என்று அப்போது தேடிப் பார்த்து ஏமாந்தேன்.

  http://www.nytimes.com/2010/04/06/science/06cyber.html?pagewanted=1&ref=todayspaper

  “சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இருந்த சைபர் அட்டாக்கர்களால் இந்த ஊடுருவல் நடத்தப்பட்டது என்றும், இந்தியாவின் பலவீனமான நெட்வொர்க்குகளுக்குள் அவர்கள் மிக எளிதில் உட்புகுந்து இந்திய அரசாங்கத்தின் மிக மிக ரகசிய ஆவணங்களை எல்லாம் ஏற்கனவே ஒரு நகல் எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள் என்பதையும், இனி இந்தியாவில் எந்த ஆவணமாவது தவறுதலாக அழிந்தோ தொலைந்தோ போனால் பேசாமல் சீனாவிடம் கேட்டால் அவர்கள் ஒரு காப்பி அனுப்பி வைப்பார்கள் என்ற கேவலமான உண்மையை கனேடிய அமைப்பு இந்தியாவுக்குத் தெரியப்படுத்தியது.” என்று அவர் பகடி செய்வது வருத்தம் தோய்ந்த சிரிப்பை உண்டு பண்ணியது.

  சிவா

 2. writevishy

  இது இருக்கட்டும். கருணாநிதி யோட நேத்தி அறிக்கைக்கு ஜெயலலிதா என்ன பதில் சொன்னாங்க?

 3. bala

  அது மட்டுமல்ல.. மத்திய இந்தியாவின் கனிம வளங்களை விற்கும் ஆர்வத்தில், இந்தியாவின் சூழல் கேட்டுப் போகும் என்னும் பிற்காலப் பிரச்சினயை மற்றும், அங்கு வாழும் மக்களின் சமகாலப் பிரச்சினை முதலியவற்றை கொஞ்சம் கூட யோசிக்க மறுக்கும் மூர்க்கர்களாக ம.மோ.சி அண்ட் கம்பெனி மாறிவிட்டது தான் சரித்திர சோகம். 1990 ஆண்டு இந்தியாவுக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.. அதை வெற்றிகரமாக முடித்தார்.. அனால், அதன் பின் தேவை அலோபதி அல்ல.. இன்று அரசின் மிக முக்கிய கவலை தொழில் மட்டுமே.. பிர் மிலே சூர் மேரா துமாரா என்று துவங்கும் ரஹ்மானின் விடியோ பார்த்தேன்.. அமிதாப், ஐஸ்வர்யா, அபிஷேக், சச்சின், ஒரு தெலுங்கு நடிகர் என்பதோடு லிஸ்ட் முடிந்து விட்டது.. கிராமப் புறத்தில் இருப்பவர்களுக்குப் பசித்தால், அங்கே மேக் டொனால்ட்ஸ் இருக்கிறது.. சிக்கன் பர்கர் சாப்பிடலாம்..

 4. Rajan

  அன்புள்ள ஜெயமோகன்

  அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

  இங்கு அமெரிக்க ஊடகங்களிலும், பிற உலக ஊடகங்களிலும் இந்தியா குறித்து விவாதிக்கப் படும் பல முக்கியமான விஷயங்கள் இந்திய பத்திரிகைகளிலும், பாராளுமன்றத்திலும் தொலைக்காட்சிகளிலும் கண்டு கொள்ளப் படுவதே கிடையாது. அப்படி வேண்டுமென்றே திட்டமிட்டு மறக்கடிக்கப் பட்டு விடப் படும் சில விஷயங்கள் குறித்து குறைந்தது அவ்வப்பொழுது இணையத்திலாவது நேரம் கிடைக்கும் பொழுது பதிந்து வைக்கலாமே என்று நினைக்கிறேன்.

  இன்று உலக மீடியாக்களில் அடிபடும் ஒரு முக்கியமான செய்தி வந்துள்ளது. அது பற்றி யாராவது கவலைப் படுகிறார்களா என்பது தெரியவில்லை. ராஜஸ்தானில் இருந்து ம பி யில் உள்ள ஒரு வெடிமருந்து கம்பெனிக்கு அனுப்பி வைக்கப் பட்ட முன்னூறு டன் எடையுள்ள வெடி மருந்துகள் மொத்தமாக 61 டிரக்குகள் காணாமல் போயிருக்கின்றன. இந்தியாவில் அரசு என்று ஏதாவது அமைப்பு இன்னும் இருக்கிறதா? 300 டன் எடையுள்ள வெடி மருந்துகளும் 61 லாரிகளும் காற்றில் கரைந்து போய் விட்டனவா? எந்த தமிழ் செய்திச் சானலாவது இதைப் பற்றி பேசினார்களா?

  நமது ஊடகங்கள் மறைத்த மற்றுமொரு முக்கியமான விஷயம் வாஷிங்டன் டி சி யில் நடந்த ஓட்டுப் பதிவு இயந்திரம் குறித்து வல்லுனர்கள் கலந்து கொண்ட ஒரு செமினார் பற்றியது. நம் இந்திய ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் உள்ள ஓட்டைகளையும், அதன் மூலமாகச் செய்யக் கூடிய மோசடிச் சாத்தியங்களின் பிருமாண்டம் குறித்தும் அனைத்து அமெரிக்க வல்லுனர்களும் பேராசிரியர்களும் தெரிவித்துள்ள கவலைகள் குறித்து நம் அரசியல்வாதிகளோ ஊடகங்களோ யாரேனும் பேசினதாக நீங்கள் கேள்விப் பட்டீர்களா? இந்தியாவின் ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை அது. யாருக்கும் அப்படி ஒரு விஷயம் நடந்ததே தெரியாது. அக்கறை காட்ட வேண்டிய கட்சியான பி ஜே பி யே கவலையில்லாமல் உள்ள பொழுது வேறு யார் கவலை படப் போகிறார்கள்.

  நமக்கு பயங்கரவாதி ஷொராபூதீனைக் கொன்ற மோடியைத் தூக்கில் போட வேண்டும். இயந்திரன் படம் பற்றி செய்தி அறிந்து கொள்ள வேண்டும். நிதியானந்த சாமிகளின் படுக்கையறைக் காட்சிகளை நடு வீட்டில் அமர்ந்து பார்க்க வேண்டும். பாராளுமன்றத்தின் முக்கியமான பிரச்சினையோ மொழிபெயர்ப்பாளர் இல்லாமல் போனதால் சிறிது நேரம் மொழி பெயர்க்க முடியாமல் போனதுதான். இந்திய ராணுவ ரகசியம் குறித்தோ, இன்று காணமல் போன வெடி மருந்து லாரிகள் யார் கைகளில் சென்று சேர்ந்தது என்பதெல்லாம் பற்றி யாருக்கும் அக்கறையில்லை. அப்படியே அந்த குண்டு வெடித்தால் சாகப் போவது மக்களும், ஜவான்களும்தானே?

  ஏதோ இப்பொழுதைக்கு என்னால் முடிந்தது இணையத்தில் தகவல் பரப்புவது மட்டுமே. இந்தியாவில் இந்த விக்கிலீக் போன்ற ஒரு பணியை மிகச் சிறப்பாகச் செய்தவர் பயனீர் பத்திரிகையின் பத்திரிகையாளர் திரு.கோபிக்கிருஷ்ணன் அவர்கள். அவரது http://jgopikrishnan.blogspot.com/ ப்ளாகில் ஏராளமான தகவல்களை துணிந்து ஆதாரங்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார். தற்பொழுது அவர் மீது வழக்கு போட்டு வாயை அடைத்து வைத்திருக்கிறார்கள்

  அன்புடன்
  ராஜன்

 5. V.Ganesh

  டேஹெல்க (tehalka) என்ற ஒரு பத்திரிகை உண்டு. அதை நம்மூர் அரசியல்வாதிகள் படுத்திய / படுத்துகிற பாடு.
  புனே யில் அருண் பாட்டியா என்று ஒரு முன்னாள் IAS அதிகாரி. அவர் நிலைமை.
  எல்லாவற்றயும் emotional ஆக எடுத்து, தனிப்பட்ட முறையில் தகராறு செய்யும் நாம் இன்னும் ஆயிரம் ஆண்டு அடிமையாக இருந்தாலும் போதாது.

 6. stride

  கடந்த ஒரு வாரமாக பாகிஸ்தான் வெள்ளம் பற்றி அமெரிக்க ஊடகங்களிலும் வலைப்பதிவுகளிலும் வரும் பின்னூட்டங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு நிவாரணம் தர வேண்டும் என்கிற கேள்வியையே எழுப்புகின்றன. வெள்ளத்தால் பரிதவிக்கும் மக்களுக்கு நிவாரணம் அனுப்ப கூடாது என்னும் அளவுக்கு பாகிஸ்தான் மீது வெறுப்பு தோன்றியிருப்பதுக்கு சில வாரங்கள் முன்பு விக்கி லீக்ஸ் ஆப்கானிஸ்தான் போர் பற்றிய வெளியிட்ட ஆவணங்கள் முக்கிய காரணமாக தெரிகிறது. இடது சாரி முற்போக்கு பதிவுகளிலும் பாகிஸ்தான் எதிர்ப்பு இவ்வளவு பலமாக தென்படுவதை முதல் தடவையாக பார்கிறேன். நாம் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு நம்மையே கொல்ல பாக் ராணுவம் உதவுகிறதே என்கிற கோபம் அப்பட்டமாக வெளிப்படுகிறது.

  விக்கி லீக் போன்ற அமைப்புகள் அரசாங்கங்களுக்கு பெரும் தலைவலி தர போகின்றன. இந்த அமைப்புகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பல நாடுகளும் சேர்ந்து நடவடிக்கைகள் எடுக்கும் என கூடிய சீக்கிரம் எதிர்பார்க்கலாம் .

  சிவா

Comments have been disabled.