வண்ணதாசனுக்கும் சிவக்குமாருக்கும் விருது

இவ்வருடத்தைய எஸ்.ஆர்.எம் விருதுகள் புனைவிலக்கியத்துக்காக கல்யாண்ஜிக்கும் மொழியாக்கத்துக்காக ஆர்.சிவக்குமாருக்கும் அளிக்கப்பட்டுள்ளன.

7

கல்யாண்ஜி என்னும் வண்ணதாசன் தமிழின் நுண்ணிய புனைவிலக்கியவாதிகளில் ஒருவர். எந்த விருதுக்கும் தகுதியானவர். அவர் பெறும் இவ்விருது அவரால் பெருமைகொள்கிறது

7

ஆர்.சிவக்குமார் நான் தர்மபுரியில் பணியாற்றியகாலத்தில் நன்கு அறிமுகமான நண்பர். முக்கியமான மொழியாக்க நிபுணர். அவர் மொழியாக்கம் செய்த லத்தீன் அமெரிக்க சிறுகதைகள் தமிழில் அன்று ஒரு இலக்கியமாற்றத்தை உருவாக்கியவை. இப்போது மேலைத்தத்துவத்தை எளிமையாக அறிமுகம்செய்யும் சோஃபீஸ் வேர்ல்ட் என்னும் நூலை மொழியாக்கம் செய்திருக்கிறார்.

விருதுபெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

முந்தைய கட்டுரைஅமெரிக்கப்பயணம் புகைப்படங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 62