மலேசியா பயணம்

வரும் செப்டெம்பர் மாதம் நான் மலேசியாவுக்கு வருகிறேன். சென்றமுறை மலேசியா வந்தபோது தமிழ்ச்சங்க கூட்டத்தில் ஒருசாரார் கலந்துகொள்ளவில்லை. இம்முறை அந்த நண்பர்கள் கூப்ப்ட்டு மீண்டும் வருகிறேன். அமைப்புகளுக்கும் இலக்கியத்துக்கும் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் ஊடல்.

செப்டெம்பர் ஐந்தாம்தேதி சென்னையில் இருந்து மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில் கொலாலம்பூர் வழியாக பினாங்கு செல்கிறேன். அங்கே சிலகூட்டங்கள். அங்கிருந்து பதினொன்றாம்தேதி கிளம்பி கொலாலம்பூர். அங்கே கூட்டம் முடிந்து பதிமூன்றாம் தேதி இரவு மீண்டும் சென்னைக்கு

மற்றபடி கூட்டங்கள் குறித்து எனக்கு இப்போது ஏதும் தெரியாது. விவரங்கள் இணையத்தில் அறிவிக்கப்படும். தொடர்புகளுக்கு வல்லினம் ஆசிரியர் நவீனிடம் பேசலாம். “na vin”,

முந்தைய கட்டுரைவிக்கி லீக்
அடுத்த கட்டுரைக.நா.சு