«

»


Print this Post

கேரளா கபே


அன்பு ஜெ.மோ.,

Kerala Cafe – மலையாளப் படம் பார்த்தீர்களா? இலக்கிய வாசிப்பின் அனுபவத்தை கிட்டத்தட்ட திரையில் கொடுக்கமுடியும் என நிரூபித்துள்ள படம். 10 சிறுகதைகள் செயற்கையாக இணைக்கப்பட்டிருந்தாலும் அருமையான படமாக இருக்கிறது. நெஞ்சைத்தொடும் கதைகள், பேய்க்கதை, நகைச்சுவை என நல்ல கதம்பம்.

அன்புடன்,
சாணக்கியன்
http://vurathasindanai.blogspot.com/

இன்னும் பார்க்கவில்லை. அதேபோல இங்கும் ஒரு முயற்சி செய்யலாமென சில இயக்குநர்கள் சேர்ந்து விவாதித்தோம்- கடைசியில் சிக்கல் அதேதான், தயாரிப்பாளர் யார்? ஆனால் கேரளா கபே இருமடங்கு லாபம் சம்பாதித்தபடம். அதைச் சொன்னால், ’அங்க நடக்கும்சார் இங்க ஜனங்க டான்ஸ் ஆடினாத்தான் பாப்பாங்க’ என்பதே பதில்.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7732

4 comments

Skip to comment form

 1. V.Ganesh

  டியர் ஜெயமோகன்,
  ஹிந்தியில் ‘தஸ் கஹானியான்’ ; ( பத்து கதைகள்) என்ற ஒரு படம் மூன்று/ நான்கு வருடம் முன்பு வந்தது. படம் ஓடவில்லை. ( சபான ஆஸ்மி, நஸ்ருதீன் ஷாஹ் தலா ஒரு கதை நடித்தார்கள்)

 2. GK

  திரு. சாணக்கியன்,
  நானும் கேரளா கபே-ஐ பார்த்தேன். உண்மையில் சற்று ஆயாசமாக இருந்தது. முதல் இரு கதைகளைப் பார்த்தபொழுது, ஆங்கிலப்படமான Babel – ஐ போல ஏதோ ஒருவகையில் இக்கதைகள் சம்பந்தப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தேன். ஒவ்வொரு கதையிலும ரயில் நிலையத்தின் உணவகம் சம்பதப்படுவது ஆர்வத்தை மேலும் அதிகரித்தது. ஆனால் திடீரென படம் முடிந்தது. ஒரு கதைக்கும் மற்றொன்றுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்தது. பாலச்சந்தரின் ‘ஒரு வீடு இரு வாசல்’ இரு கதைகளைக் கொண்டபோதிலும், அவை வெவ்வேறானவை என்பது நமக்கு முன்னமேயே அறிவிக்கப்பட்டுவிடுவதால் இரு கதைகளையும் நன்கு ரசிக்க முடிகிறது. இப்படம் அப்படி இல்லை. ஆனால் நீங்கள் குறிப்பிட்டபடி அனைத்து சிறுகதைகளும் மிக அருமையாக சொல்லப்பட்டு உள்ளது.

 3. Rajan

  அன்புள்ள ஜெயமோகன்

  நான் சமீபத்தில் பார்த்த ஒரு நாவலும் பத்து சிறுகதைகளும், ஒரு நாவலும், இரண்டு சினிமாக்களும் என்று இந்த கேரளா கஃபேயையும், பாலேரி மாணிக்யத்தையும் சொல்வேன்.

  இது ஏதும் புதிய முயற்சியெல்லாம் இல்லை. தமிழில் ஆதிகாலத்தில் இருந்து ஏ பி நாகராஜன், சின்னப்பா தேவர் ஆகியோர் பாவித்த டெக்னிக்தான். ஆறு கதைகளை எடுத்து அறுபடை வீட்டுக்கொன்றாக ஒரு பாட்டும் போட்டு விட்டு எல்லா கதைகளையுமே கிருபானந்தவாரியார் வந்து முருக பக்தி என்னும் திரியில் கோர்த்து விட்டு விடுவார். அல்லது திருவிளையாடற்புராணக் கதைகளை அவ்வைப் பாட்டி முருகனுக்குச் சொல்லும் பொழுது நமக்கு ஏ பி என் காண்பித்து விடுவார். அதெல்லாம் அந்தக் காலம். அது போக பாலச்சந்தரின் ஒரு வீடு இரு உலகம், பழைய பாதுகாப்பு போன்ற இன்னும் சில படங்களும் இந்த உத்தியில் எடுக்கப் பட்டிருக்கின்றன ஆனால் அவற்றும் இந்தப் படத்திற்கும் ஒரு மிக முக்கியமான வித்தியாசம் இருக்கிறது.

  இந்தக் காலத்தில் இருக்கவே இருக்கு கேயாடிக் தியரி. அதை வைத்து அலெஜாண்ட்ரோ கோன்சாலஸ் இனாரிட்டு அமோரஸ் பெரஸ், 21 கிராம்ஸ், பேபல் என்று மூன்று படத்தை எடுத்துத் தள்ளினார். பல்வேறு கதைகளையெல்லாம் கெயாடிக் தியரியின் படி ஒன்றாகச் சேர்த்து விட்டு விடலாம். அதன் படி உங்க கதை ரெண்டு, அசோக மித்திரன் கதை ரெண்டு, தி ஜா ரா கதை ரெண்டு, நாஞ்சில்நாடான் கதை ரெண்டு எல்லாத்தையும் ஒன்றாகப் போட்டுக் கலக்கி கெயாடிக் தியரி படி எல்லாம் தொடர்புடையது என்று காட்டி விடலாம். அதுதான் இப்பொழுதைக்கு டிரெண்டு. அமொரஸ் பெரோசை தமிழில் ஏற்கனவே ஆயுத எழுத்து என்று மணி ரத்தினம் தழுவி விட்டார். ஆகவே கமலஹாசன் ஒரு பத்து கதை எழுதி தானே பத்து விதமாக நடித்து பத்து கதைகளையும் கெயோடிக் தியரி படி இணைத்து விட்டு விடுகிறார். இன்னும் யாரும் க்ராஷ் படத்தை தமிழில் எடுக்கத் துணியவில்லை. முடியவும் முடியாது. ஆக கெயாடிக் தியரி பட்டாம் பூச்சி விளைவு எல்லாம் இந்தக் கால ஃபேஷன்

  ஆனால் இப்படி அந்தக் காலத்திலும் சேராமல் இந்தக் காலத்து ட்ரெண்டிலும் கலந்து கொள்ளாமல் எடுத்திருக்கிறார்கள் கேரளா கஃபேயை. அதன் ஆகச் சிறப்பு சிறுகதைகளைப் படிக்கும் பொழுது நாம் பெறும் அதே உணர்வு சினிமாவில் பெருக்கிக் காண்பிக்கப் பட்டிருப்பதுதான். அதனால்தான் இந்தப் படம் கயோடிக் தியரி களேபரங்களில் இருந்து தனித்துத் தெரிகிறது. தமிழில் பல்வேறு காரணங்களினால் இப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது. முதலில் காதல் இல்லாமல் பத்து சிறுகதையைத் தேர்ந்தெடுக்க யாரும் அனுமதிக்க மாட்டார்கள். அப்புறம் பாட்டும் இருக்கக் கூடாது, அப்புறம் யாரும் ஆல்ப்ஸ்ஸுக்குப் போய் காக்காய் வலிப்பு நடனம் ஆடக் கூடாது, இதெல்லாம் கூட சரியென்று ஏற்றுக் கொண்டு விட்டாலும் அருவாள் இல்லாமல், டவுசர் தெரிய தூக்கிக் கட்டிய கைலி கட்டி பீடி குடிக்கும் தமிளர் பண்பாட்டை விளக்கும் காட்சி இல்லாமல் எப்படி சார் நாங்கள் தமிழில் ஃப்லிம் காண்பிக்க முடியும்? அப்படியே எடுக்க நீங்களும் ஒரு நல்ல இயக்குனரும் முன் வந்தால் முடியும் தான், ஆனால் காசு, துட்டு யார் போடுவார்கள்? இந்தப் படத்தில் பத்து கதைகளையும் பத்ம குமார், ஷங்கர் ராமகிருஷ்ணன், உதய் அனந்த், அஞ்சலி மேனோன், அன்வர் ரஷீத் போன்ற புது இயக்குனர்களும் லால் ஜோஸ், ஷ்யாம் ப்ரசாத், ரேவதி,ஷாஜி கைலாஷ் போன்ற திறமையான இயக்குனர்களும் கலந்து எடுத்திருக்கிறார்கள். பத்து கதைகளுக்கும் பத்து காமிராமேன்கள்.

  கேரளா கஃபே சிறுகதைத் தொகுப்பு என்றால் பாலேரி மாணிக்யம் முழு நீள நாவல். ஆனால் எனக்கு கேரளா கஃபேயில் கிடைத்த திருப்தி மம்முட்டி மாங்கு மாங்கு என்று மூன்று வேடங்களில் நடித்த பின்னாலும் கூட ஏற்படவில்லை. அதற்குக் காரணம் நம்பகத்தன்மை மற்றும் திரைக்கதையின் ஓட்டைகள். இருந்தாலும் ஒரு நாவலை அதன் உருவம் குறையாமல் நாவலில் இருந்து விலகாமல் நமக்குப் படிக்கும் பொழுது என்ன தோன்றியதோ அதை உணர்வுகளைக் கொண்டு வரும் வண்ணம் அர்ப்பணிப்புடன் எடுக்கப் பட்டிருக்கும் ஒரு படம். ஆங்கிலத்தில் நாவலை அப்படியே ஜஸ்டிஃபை செய்யும் பல நாவல்கள் வந்துள்ளன, நேற்று கூட நோ கண்ட்ரி ஃபார் ஓல்டு மேன் பார்த்து பிரமித்தேன். நாவலை சினிமாவாக எடுக்கிறேன் பேர்வழி என்று கிளம்பும் நம் தமிழ் இயக்குனர்கள் எல்லாம் ஒரு முறை பாலேரி மாணிக்யத்தைப் பார்த்து விட்டு சினிமாத் தொழிலில் தொடர்வதா வேண்டாமா என்பதை தீர்மானம் செய்து கொள்வது நல்லது. ராஜீவனின் நாவலை நான் படித்ததில்லை எனக்கு மலையாளம் படிக்கத் தெரியாது. ஆனால் ஒரிஜினல் நாவலிலோ அல்லது திரைக்கதையிலோ ஏதோ ஒன்று குறைகிறது அதை நேர்த்தி செய்திருந்தார்கள் என்றால் நாவலை அற்புதமான சினிமாவாக்கிய வரிசையில் பாலேரி மாணிக்யமும் சேர்ந்திருக்கும். பவித்ரனின் உத்தரம் தந்த திருப்தியும் நேர்த்தியும் இந்தப் படத்தில் இல்லைதான்.

  சமீபத்தில் பார்த்த மற்றும் ஒரு த்ரில்லர் ஸ்ரீநிவாசன் திலீப் நடித்த பாசென்ஜர். ஒரு த்ரில்லர் படம் என்றால் அதில் அநாவசியமாக காதல் கத்திரிக்காய், வடிவேல் காமெடி, ஆப்பிரிக்காவில் டான்ஸ், அண்டார்டிக்காவில் சண்டைக்கெல்லாம் இடமில்லை என்பதை நம் ஊரில் திரில்லர் படம் எடுப்பதாகப் பம்மாத்து செய்து வீணாக அமெரிக்கா போய் சினிமா வேட்டையாடி விளையாடும் ஆசாமிகள் ஒரு முறை பார்ப்பது நல்லது. சிறு குறைகள் இருந்தாலும் இயல்பாக எடுக்கப் பட்டிருந்த ஒரு த்ரில்லர் பாசென் ஜர். த்ரில்லருக்கு மற்றுமொரு நல்ல உதாரணம் முந்தா நாள் நான் மீண்டும் பார்க்க நேர்ந்த பத்மராஜனின் கரியில காட்டுப்போல. பழைய மலையாளப் படங்களின் பின்ணணி இசையில் மட்டும் காதை ரொங்க அடித்து விடுகிறார்கள். காதில் பஞ்சு வைத்துக் கொண்டு பார்க்க வேண்டியிருந்தது.

  அன்புடன்
  ராஜன்

 4. சாணக்கியன்

  பலரும் சொல்லியுள்ளதுபோல் இங்கு ‘டான்ஸ் ஆடினால்தான்’ பார்ப்பார்கள் என்பது ஓரளவுக்குதான் உண்மை என்று நினைக்கிறேன். பசங்க, பூ போன்ற படங்களும் ஓடத்தான் செய்கின்றன.

  ஒருவிதத்தில் சினிமாக்காரர்கள் தாங்களே உருவாக்கிவிட்ட ரசனையிலிருந்து இன்று மக்களை மீட்டெடுக்க முடியாமல் உள்ளனர். இதற்கு தொல்லைக்க்காட்சி சானல்கள் வளர்த்துவிட்ட ரசனைகளும் உறுதியான அடித்தளங்களாகிவிட்டன…

Comments have been disabled.