எம். எஸ் .வியின் மலையாளப்பாடல்கள் – ஷாஜி

அன்பு ஜெயமோகன்
கனடா, அமேரிக்கப் பயணம் சிறப்பு என நம்புகிறேன். அருண்மொழியும் குழந்தைகளும் நலம் தானே?

எம் எஸ் வி யைப் பற்றி நான் மலையாளத்தில் எழுதிய விரிவான கட்டுரை (மலையாளம் வாரிக ஓணப்பதிப்பு 2014) நீங்கள் படித்திருக்கவில்லை என்று தெரியும். அவரது மலையாளப் பாடல்களைப் பற்றியான விரிவான பார்வை இதில் இருக்கிறது என்றே நினைக்கிறேன். சுட்டி இங்கே.

http://epaper.malayalamvaarika.com/336496/Malayalam-Vaarika/05092014#page/98/1

வாய்பு கிடைத்தால் படித்து கருத்தை சொல்லுங்கள்.

ஷாஜி

அன்புள்ள ஷாஜி

வேறொருவர் இணைப்பை அளித்து இந்தக்கட்டுரையை வாசித்துவிட்டேன். எழுதவேண்டுமென நினைத்தேன். தொடர் பயணம். இன்றுதான் கலிஃபோர்னியா வந்தேன். மூன்றுநாட்களுக்கு ஒரு ஊர் என்று அலைச்சல். கூடவே வெண்முரசு.

அற்புதமான கட்டுரை. இதைக்கூட தமிழாக்கம் செய்யலாம். எம்.எஸ்.வி பற்றிய ஒரு நல்ல நினைவஞ்சலி

இன்னொரு கடிதத்தில் உங்களைப்பற்றி சிலவரிகள் எழுதியிருந்தேன்

ஜெ

[மலையாளம் அறியாதவர்கள் இக்கட்டுரையை தமிழ் லிபிக்கு மாற்றி வாசிக்கலாம்]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 49
அடுத்த கட்டுரைஎம்.எஸ்.வி- விவாதங்கள்