தருணம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்
மிக மிக அற்புதமான தருணம்…இயல் விருதுக்கு நீங்கள் சென்றதிலிருந்தே மனம் சந்தோசத்தில் துடிக்க ஆரம்பித்துவிட்டது…அந்த நாள் வரும் வரை இணையத்தில் போட்டோக்களை பார்த்தபடியே இருந்ததே என் முதல் வேலை..

எழுத்தாளருக்கான,இலக்கியத்திற்கான மிகச்சிறந்த அடையாளத்தை தருவதாக இந்த விருதை நினைக்கிறேன் ..என் அப்பாவிடமும்,மனைவியிடமும் போட்டோக்களை காட்டி சந்தோசப்பட்டேன்.

இலக்கியத்தை வாசிக்கவும்,எழுதவும் மிகச்சிறந்த முன்னோடியாக நான் உங்களை கருதுகிறேன்..இங்கிருக்கும் பல இளம் வாசகர்,எழுத்தாளர்களுக்கும் நீங்களே முன்னுதாரணமாக இருக்கிறீர்கள்…நேரடியாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் மறைமுகமாக அது உண்மையே

தங்களின் ஆளுமை என்னை மிகவும் கவர்ந்து விட்டது என்று நினைக்கின்றேன்..பல நேரங்களில் நான் சோர்வடையும்போதெல்லாம் நீங்கள் கடந்த பாதைகளை பார்க்கிறேன் அந்த தன்னம்பிக்கை எனக்குவாசிப்பிற்கு ம், எழுத்திற்கும் மட்டுமின்றி வாழ்க்கைகான அள்வுகோளை காட்டுகிறது .

உங்கள் பெற்றோர்களின் மரணத்திற்கு பிறகேற்பட்ட கடுமையான மனக்கொந்தளிப்பு, அந்த ஒளி ஊடுருவும் உடல் கொண்ட புழுவை கண்டது, இன்று வரை சோர்வுராமல் வாழ்வை வீணடிக்காது சென்றுகொண்டிருக்கும் இந்த எழுத்து பயணம் . இது அத்தனையும் நீங்கள் பல முறை பல இடங்களில் சொல்லப்படுவது ஒவ்வொரு மனிதனும் வாழ்வின் அவன்து இருத்தலை உணர்த்துவதற்காகவே.

இன்றைய இலக்கிய , ஊடக அரசியலில் மேலே எழுந்து வர முடியுமென்பது சாதாரணமானதனறு.தீராநதி,காலச்சுவடு ,உயிர்மை இதழ்களில் (நான் பார்த்தில் .மற்றவைகளை நான் பார்க்கவில்லை )முதல் இரண்டு மூன்று பக்கங்களில் நீங்கள் பெற்ற விருது பற்றியும் இலக்கியத்தின் பெருமையடைந்தையும்
எழுதியிருக்கிறார்கள்..

இன்று நீங்கள் நியூஜெர்சியில் இருப்பீற்களென நினைக்கிறேன் ….

உங்களை சந்தித்து பேசவே ஆவல் இருந்தும் மனம் காத்திருக்காமல் இன்று எழுதுகிறேன்…

இலக்கியத்தை படிக்கும் ஒவ்வொருவருக்கும் இது தூண்டுகோல்..
மனமகிழ்வுடன் நன்றி..
மு. தூயன்
புதுக்கோட்டை

முந்தைய கட்டுரைதெய்வங்கள் பேய்கள் தேவர்கள் : 2 – பேய் சொன்ன பேருண்மை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 43