அஃக் பரந்தாமன்

ஃபேஸ்புக்கில் கவிதா சொர்ணவல்லி பகிர்ந்த செய்தி இது

https://www.facebook.com/valli.mkavitha/posts/10205537492289312?fref=nf

எட்டு ஆண்டுகளாக இவர் நடத்திய ‘அஃக்’ இதழ்தான் சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், நகுலன், பிரமிள், வெங்கட் சுவாமிநாதன், வண்ணதாசன், கலாப்ரியா, அம்பை… போன்ற தமிழ் இலக்கியவாதிகளின் படைப்புகள் பிரசுரமாவதற்கான பிரதானக் களம். புத்தகம் மற்றும் பத்திரிகையின் நேர்த்தியான வடிவமைப்புக்காக மூன்று முறை தேசிய விருது வென்ற 75 வயது பரந்த்தாமனை, வாழ்வின் தீராத பக்கங்களில் ஒரு சருகைப்போல உதிர்த்து உலர்த்திப்போட்டிருக்கிறது காலம்.

இலக்கியம் ‘வாழ்வின் ஆவணம்’ என்பார்கள். அந்த இலக்கியத்தை ஆவணப்படுத்துவதில், காலம் எல்லாம் முன்நின்ற பரந்தாமனின் வாழ்வு அலங்கோலமாகக் கலைந்துகிடக்கிறது. பரந்தாமனுக்கு இன்று உடனடித் தேவை… அவரது மனதையும் உடலையும் சீராக்கும் மருத்துவச் சிகிச்சை. வாழ்வில் இளைப்பாறுதல் பருவத்தில் நிலைகுலைந்து, ஆறுதலும் ஆதரவும் இல்லாமல் தவிக்கிறார் பரந்த்தாமன்.

உங்களால் முடிந்தால் உதவுங்களேன்! உதவி செய்ய விரும்புவோர்
[email protected] என்ற மெயில் ஐடிக்கு உங்களைப் பற்றிய தகவல்களை அனுப்புங்கள். பரந்த்தாமனுக்கு என்ன விதமாக உதவ விரும்புகிறீர்கள் என்றும் அந்த மெயிலில் குறிப்பிடுங்கள்.

முந்தைய கட்டுரைமாதொரு பாகன் – அஸ்வத்
அடுத்த கட்டுரைவாஷிங்டனில்…