«

»


Print this Post

நமது மருத்துவம் பற்றி…


ஜெயமோகன் சார்,

நீயா நானா…

வீடியோக்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

http://tamil.techsatish.net/file/neeya-naana-99/

88

டியர் சார், நலம் நலமே விழைக,
நேற்று விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் தங்களின் பங்களிப்பை கண்டு மகிழ்ந்தேன். சற்றே மனம் தளர்ந்து டிவி டாக் ஷோவிலும் கலந்து கொண்டது எங்களை போன்ற வாசகர்களுக்கு மகிழ்ச்சி தான், அதிலும் நேற்று உங்களின் தார்மீக கோபம் எனது கண் முன்னே இன்னமும் நிற்கிறது, உங்கள் ஆளுமை என்னை மிகவும் ரசிக்க வைத்தது. என்னைப் போன்ற திரு கோபிநாத் அவர்களும் உங்களை மூச்சுக்கு முன்னூறு முறை ஜெயமோகன் , என்று விளித்துக் கொண்டே இருந்தார், மிகவும் ரசித்தேன், ஒரு ரசிகன் என்ற முறையில் இதுபோன்ற பல நிகழ்ச்சிகளில் இன்னமும் நீங்கள் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவலில்,
அன்புடன் ராகவேந்திரன்,தம்மம்பட்டி

அன்புள்ள ராகவேந்திரன்

நன்றி

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பொதுவாக நல்ல பேச்சாளார்கள், வழக்கறிஞர்களே வெல்ல முடியும். எனக்கு முன் அனுபவம் இல்லை. பேச்சாளானும் இல்லை. ஆனாலும் கூடுமானவரை என் தரப்பை சொன்னேன். முத்துகிருஷ்ணன், டாக்டர் ரவீந்திரன் ஆகியோர் நன்றாகபேசினார்கள்

டாக்டர்கள் மேல் விமரிசனத்தை முன்வைப்பது மட்டும் என் நோக்கமாக இருக்கவில்லை. குறைந்தசெலவில் தரமான மருத்துவம் அளிக்கவேண்டும் என்ற நோக்குடன் அமைபபகச் செயல்படும் ஈரோடு ஜீவானந்தம் போன்றவர்களை அடையாளம் காட்டவேண்டும் என்றும் எண்ணினேன். அதையும் அங்கே சொல்ல முடிந்தது

ஜெ

88

Dear Mr Jeyamohan

Sub: Accountability in Medical Profession – reg.

With reference to your reply dated 20th March 2008, I wish to share my views in this connection.
Incidentally I happened to watch the debate between Public and doctors in Star Vijay TV Program yesterday (01 Aug 2010) which also had u as one of the guests to represent the Mr.Public.

At the outset, I do agree that the medical profession is leaning more towards the commercial side rather than on the humanitarian side. But it is hard to accept that medical practitioners are squarely responsible for such a change. What do u suggest them to earn a livelihood?
Take for example: in the UK, health care delivery is through National Health Service (NHS) which is being conducted by individual regional trusts and is under the scrutiny by all concerned professional bodies and also by the members of the common public. They are under compulsion to self evaluate their quality of services against the set best standards of practice and publish their audit findings periodically. The king and a popper are treated the same way in a NHS hospital and accountability is the keyword for their quality of services rendered. Having said that, the medical professionals are paid by the NHS trust according to an agreed scale of pay which is uniform throughout the country and the staff of NHS hospitals do have a limited privileges to render their services for insurance paying patients for which payment by the insurance companies are clearly accounted. The health care delivery system is such that the care starts from a family practitioner and then escalates to tertiary care hospital as decided by the family doctor. Doctors also have the same rules for their own healthcare and they are required to register themselves with a family doctor in their locale. By now u must have grasped that the system is streamlined and transparent and every link in the health care delivery is endowed with definite roles and responsibilities which is cross checked at regular intervals.
compare the above with what we have here. Do we have a system in the first place? It is a big NO.
There is a gross bifid health care delivery system namely a) the Government sponsored and b) Private sector health care which ranges from a street corner single doctor owned clinic to corporate hospitals. I do not see any control over the medical practice by any of these systems (and hence the reason for sprouting of quack practitioners in the society) and the accountability is zero.
As you had mentioned in the TV show, the anxiety and fear of the public is capitalised by the practitioners to subjugate the public to undergo a said treatment by a patient. Adding insult to injury, the government is also supporting such a malfunctioning system unwittingly. Let me give u an example with the recently introduced “Kalaignar Kaapeetu thittam”. It has listed hysterectomy and thyroidectomy as procedures eligible for cashless service by the empanelled nursing homes. Suddenly there is a surge in the number of hysterectomies performed by these nursing homes. Why? For genuine reasons?? I doubt. Take the statistics of the above operations performed in the local government hospital as against those numbers done by the private nursing homes. The ratio is heavily lopsided towards the private nursing homes. Another thing. Who does these surgeries? Most of the occasions, this is done by a doctor employed by the government hospital. Why the said doctor does not perform this in the government hospital and is able to do so in the private sector?
One more issue. U may be aware that among doctors there are generalists, specialist of various disciplines and superspecialists. Are these operations done by suitably qualified specialist doctors? No. An M.S qualified surgeon can technically perform a Caesarean operation or a uterus removal (Hysterectomy) but he would not know the indications, contraindications and management of the patient in the long term. Only an Obstetrician knows this. For this reason, there is some thing called ‘Clinical Priviliges” in the western world under which a licensed medical practitioner is privileged to perform certain procedures based on their qualification and experience. But in our country, no such thing exists. (I know a B.Com graduate was performing operations 25 years ago in one of the metros simply for the reason he had worked as assistant under a renowned surgeon for donkey’s years and even educated elite sect of the public went to him for treatment!!) Do the authorities of the Kalaignar Kapeetu thittam scrutinize every single operation done under the scheme and are satisfied about the indications, contraindications and complications and the calibre of the performing doctor? If they do, they will be in for a big surprise, I am sure. The ill effects will take another 10 years to show up. Patients readily agree to surgery under the scheme since it is free. It is pity and it is an undeniable fact that they are also a party to it. Hence all this boils down to a connivance by all concerned parties: a)the medical profession b) the government machinery and c) Members of the common public.
To address the issue, we have to evolve a system which has a transparent, defined roles and responsibilities and accountability and the onus of providing enough proof of quality service should be owned by the medical profession and the health care system should be clearly defined in tiers and strictly supervised. All doctors employed in Government service should be strictly prohibited in engaging in private practice (which is the rule in the nearby state of Kerala for long years) to start with.
I hope this is enough for the time being.

With thanks and regards

Bharathi Mohan

888

அன்புள்ள ஜெயமோகன்,

மருத்துவர் x பொதுமக்கள் தொடர்பான நீயா நானா விவாதம் பார்த்தேன். சிறப்பு விருந்தினராக திடீரென உங்களைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

நீங்கள் சொல்வதின் அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ள விரும்பாமல் மருத்துவர்கள் உங்களைப் பேசவிடா விட்டாலும் அவர்களில் ஒருவரின் நேரடியான சட்ட மிரட்டலைத் தாண்டியும் நிதானமாக உங்கள் வாதத்தை வைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. நீங்கள் சொன்னது அனைத்துமே பொது சமூகத்தின் குரலின் ஒட்டுமொத்த எதிரொலி. அவர்களின் பிரதிநிதியாகத்தான் உங்களைப் பார்த்தேன்.

ஆனால் இந்தக் குரலிலிருந்த அடிப்படை அறத்தைப் புரிந்து கொள்ளாமல் மருத்துவர்கள் தங்களை நியாயப்படுத்திக் கொள்ள முயன்றதும் அது இயலாத பட்சத்தில் எதிரணியினர் மீது பாய்வதுமாக இருந்தனர். ஒரே ஒரு மருத்துவரின் சுயபரிசோதனையான பேச்சைத் தவிர மற்ற மருத்துவர்களின் விவாதங்கள் முறையற்றதாக இருந்தன (விதர்பாவை, மற்ற மாநிலங்களை விடுங்கள். தமிழகத்தில் இறப்பு சதவீதம் குறைந்திருககிறதா இல்லையா என்றார் ஒருவர்).

பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள்-அரசு – மருத்துவர்கள்- என்று மருத்துவத் துறையை ஆளும் இந்த மிகப் பெரிய மாஃபியாவை கண்டு நடுக்கமாக இருக்கிறது. மருத்துவத்துறை பெரும்பாலும் வணிகமயமாகிவிட்டதை கண்கூடாகவே உணர முடிகிறது.

அதையும் தாண்டி இன்னபிற மாய்மாலங்கள் இல்லாமல் எளிய மருந்துகளின் மூலமாகவும் நம்பிக்கையான உரையாடல்களாலும் மாத்திரமே நம் வியாதிகளைக் குணப்படுத்தும் மருத்துவர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம் முற்றிலும் நம்பிக்கையிழக்காமலிருப்பதற்கு இவர்களே காரணம்.

களப்பணியாளரான முத்துக்கிருஷ்ணனும் பொதுமக்களின் சார்பாக சிறப்பான வாதத்தை முன்வைத்தார். தொகுப்பாளர் கோபிநாத் நிகழ்ச்சியை சிறப்பாக முன்னெடுத்துச் செல்கிறார் என்றே எனக்குப் படுகிறது.


சுரேஷ் கண்ணன்
http://pitchaipathiram.blogspot.com

8888

அன்புள்ள சுரேஷ்

தொலைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது பற்றிய சந்தேகங்கள் தயக்கங்கள் இன்னமும் இருக்கின்றன. குறிப்பாக இலக்கியம் சினிமா சம்பந்தமாக. ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டமைக்குக் காரணம் ஒன்றே, இவ்விஷயம் எனக்கு எப்போதுமே முக்கியமானதாக இருந்து வந்துள்ளது. மனக்கொந்தளிப்புடன் கசப்புடன் இந்த விஷயங்களை பலகாலமாக பேசி வந்திருக்கிறேன். இவை நேரடி அனுபவங்களின் அறிதல்கள் என்பவை ஆதலால் என்வரையில் திட்டவட்டமான உண்மைகள். அவற்றை திடமாக வைக்க வேண்டியிருந்தது. அதற்கு பிரபல ஊடகம் தேவைப்பட்டது. எதிர்வினைகளை பார்க்கையில் அது நல்ல முடிவே என்று தோன்றுகிறது

இப்போது இந்த நிகழ்ச்சிக்குப் பின் நான் அறியவந்தவை இன்னும் கோபமும் வருத்தமும் அளிப்பவை. நம்முடைய அலோபதிமருத்துவம் மீது வலுவான சட்டக்கட்டுப்பாடு உருவாக வேண்டிய நேரம் பிந்திவிட்டது. இல்லையேல் அது ஒரு பேரழிவையே உருவாக்கிவிடும்

ஜெ

வீடியோக்கள்:

YOUR presence in VIDEOS:

LINKS:

http://www.youtube.com/watch?v=TlYJIhQ9jvo&feature=player_embedded#!

http://www.youtube.com/watch?v=wrpNWkLdQAc&feature=player_embedded

http://www.youtube.com/watch?v=R3DfZ-TXxvY&feature=player_embedded

http://www.youtube.com/watch?v=vexMKDhaDHw&feature=player_embedded

http://www.youtube.com/watch?v=al1FXOsv-qM&feature=player_embedded

A n a n t h

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7639

24 comments

Skip to comment form

 1. கோவை அரன்

  நடுத்தர விவசாயியான என் தந்தை தான் வாழ்நாள் முழுவதும் சேர்த்த அத்தனையும் அவருக்கு கால் மூட்டில் வந்த பிரச்சனைகாக 3 வருடம் நடந்த நவீன மருத்துவதால் இழந்தார் ,

  பின்பொரு முறை 2005ல் என் திருமணத்திற்க்கு 30 நாட்கள் முன்பு மற்றொரு முறை கிட்னி பெய்லியர் என கோவையின் பெரும் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டார், அவ்வளவு நாள் நான் உழைத்த மொத்தமும் உங்கள் தந்தையை இழக்க நேரிடும் என்று பிளாக்மெய்ல் செய்தே தினமும் 10,000 மாக பிடுங்கப்பட்டது மூன்று லட்ச ரூபாய்க்கு பின் கையில் ஏதுமில்லை என்றானபின் திருமணத்திற்க்கு 2 நாட்களுக்கு முன் என தந்தை ஐசியுவிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் , ”ஒரு வாரம் மட்டுமே தாங்குவார் , திருமணம் முடிந்தவுடன் மூன்று லட்சத்துடன் வந்துவிடுங்கள்” என்ற எச்சரிக்கையுடன்,

  காலையில் அல்லது மாலையில் – எப்போது இறப்பாரோ என்ற திகிலுடனே திருமணம் நடந்தது , மறுவாரம் வெளிநாடு போயிருந்த எங்கள் வழக்கமான மருத்துவர் ஊர்திரும்பினார் , குடும்ப மருத்துவர் ஆலோசனையுடன் அவரை சந்தித்தோம் , 120 ரூபாய் எக்ஸ்ரேவில் என் தந்தையின் பிரட்ச்சனை அவரது முதுகெழும்பில் உள்ளது என கண்டு பிடித்த அவர் 1000 ரூபாய் செலவில் சரிப்படுத்தி விட்டார் , 6 மாத தொடர்மருந்தில் முதுகெலும்பை சரிசெய்ய முடியாவிட்டாலும் வேறெந்த பிரச்சனையும் இப்போது இல்லை , 5 வருடமாக நலம்,

  இப்போது நினைத்தாலும் எனக்கு கொதிக்கும் , எனது மற்றும் நிச்சயிக்கபட்ட பெண்ணின் குடும்பமும் அந்த 30 நாட்களும் பட்டபாடும் சிந்திய கண்ணீரும் .

  என்றாவது அந்த மருத்துவர்களின் முகத்திற்க்கு நேரே என் தந்தையை கொண்டு நிறுத்தி கேள்வி கேட்க வேண்டுமென தோன்றும் , ஆனால் “நீதிமன்றத்தில் சந்திக்க தயாரா ?” என விடப்படும் சவாலுக்கு என்னிடம் பதில் இருக்குமா தெரியவில்லை .

  மருத்துவமும் வணிகமே , நல்ல வணிகரிடம் சென்றால் பிழைத்தோம் , அவ்வளவே.

 2. prem

  ஜெ ஜெ ஜெ :).. இத தான சொன்னோம் …வாங்க வந்து பேசுங்கன்னு …ஷர்மா சார் கூட ரொம்ப கிண்டல் பண்ணார் அதுக்கு. ரொம்ப சந்தோஷம்..

  புத்தகங்கள் படிக்க சோம்பேறித்தன படர பலருக்கு இந்த மாதிரி விஷயம் தெரிந்தவர்கள் வந்து பேசினா நல்ல விஷயங்கள் சென்று சேரும்.. இன்னும் பல பொறுப்பான விவாதங்கள்ல கலந்துக்கனும்னு கேட்டுக்றேன்.

 3. ஜெயமோகன்

  அன்புள்ள ஜெ:

  விஜய் நிகழ்ச்சியில் நீங்கள் ஒரு கமிஷன் ரிப்போர்ட் பற்றி சொன்னீர்கள் (மொழி பெயர்த்ததாகவும்). அது என்ன என்றும், சுட்டி ஏதேனும் கொடுக்க முடியுமா? ரெகார்டிங்’ல் பெயர் சரியாக விழவில்லை.

  அன்புடன்,
  பாலா

  அவசியமருந்துக்களைப் பற்றி ஆராய்வதற்காக போடப்பட்ட ஹாத்தி கமிட்டியின் அறிக்கை 1975ல் வெளிவந்தது. அதன் சுருக்கமான மலையாள மொழியாக்கத்தில் இருந்து 1989ல் நான் தமிழ்ப்படுத்தினேன், ஒரு தொண்டு அமைப்புக்காக. இந்தியாவில் புழங்கும் மருந்துக்களில் கணிசமான மருந்துகள் முற்றிலும் தேவையற்றவை என்று அந்தக் கமிட்டி அறிக்கையிட்டது. நெடுநாள் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. வெளிவந்தபின் அதன் பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும் என்ற தொடபோராட்டங்களை தொண்டு அமைப்புகள் நிகழ்த்தின. நடைமுறைப்படுத்தப்படவில்லை. இன்றும் அந்த அறிக்கை பயனில்லாமலேயே உள்ளது. பயனற்ற மருந்துகள் மும்மடங்காக ஆகிவிட்டன என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்

  http://www.scribd.com/doc/25194622/Hathi-Committee-Report-1975
  http://openlibrary.org/books/OL1831458M/Decade_after_Hathi_Committee

 4. ஜெயமோகன்

  நீயா நானா நிகழ்ச்சியின் வீடியோ வை உங்கள் தளத்தில் பார்த்தேன். உண்மையில் முதன் முதலில் இந்த வீடியோ வில் தான் நீங்கள் பேசி பார்க்கிறேன். பொதுமக்கள் சார்பாக உண்மையான அக்கறையோடு நீங்கள் பேசிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. மிகவும் மென்மையானவர் என்று நான் நினைத்த ஜெ. தார்மிக பிரச்சனை என்று வரும்போது கடுமையாக வாதிட்டதை கண்டு பிரமித்தேன்.

  என் தந்தை அரசு மருத்துவமனை அலுவலகத்தில் வேலை பார்த்தவர் என்ற முறையில் அரசு மருத்துவமனையில் நடக்கும் விஷயங்களை நான் அறிவேன். சில விஷயங்கள் நிச்சயமான உண்மை.
  மருத்துவர்கள் மற்ற எவரையும் விட முக்கியமானவர்கள். அவர்களில் எத்தனையோ பேர் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். சொல்ல தேவையில்லை. நம் வாழ்நாளை தீர்மானிப்பதில் அவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. மற்றவற்றுக்கு செலவு செய்ய தயங்காத நாம் நமக்கென்று ஒரு உடல் பிரச்னை வரும்போது செலவை பற்றி கவலைப்படும் அளவுக்கு இங்கு அதீதமாகி விட்டது மருத்துவ செலவு. அது இன்னொரு பிரச்னை. அதற்காக நாம் மருத்துவர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. அரசு ஆசிரியர் தன்னிடம் படிக்கும் மாணவர்களை டியூஷன்க்கு வர சொல்வதற்கும் அரசு மருத்துவர் தன் நோயாளிகளை தன் சொந்த மருத்துவமனைக்கு வர சொல்வதற்குமான வித்தியாசத்தை நாம் உணர முடியும். பல அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பு , உபகரணங்களின் தரம் இவற்றை முற்றிலும் மருத்துவர்கள் தீர்மானிப்பதில்லை. ஆனால் அவை மோசமாக இருக்கின்றன என்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவும் அவர்கள் தயங்குவதில்லை. எனில் பிரச்னை தொடங்குவது எங்கு இருந்து என்று புரிந்து கொள்ளலாம். நான் அரசு மருத்துவமனை சார்ந்தே பேசுவதாக நினைக்க வேண்டாம். அவை முதலில் சரியாய் செயல்பட்டால் தானே தனியார் மருத்துவமனையும் , அதன் செலவு சார்ந்த பிரச்னையும்? இவை சாதாரண வியாதிகளில் இருந்து சிக்கலான சிகிச்சை தேவைப்படும் நோய்கள் வரை அனைத்துக்கும் பொருந்தும். மற்ற எல்லா விஷயங்களிலும் இருக்கும் நடைமுறை பிரச்னை போலவே மருத்துவத்திலும் இருக்கிறது. அதை அரசு, மருத்துவர்கள், வரி கொடுக்கும் நாம் எல்லோரும் சேர்ந்து தான் சரி செய்ய முடியும். மருத்துவர்களை ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டவும் முடியாது. நம் பலவீனங்களை அவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். நீயா நானா போன்ற நிகழ்ச்சிகள் அவசியமானவை தான் என்றாலும் வெறும் நேரக்கணக்கு என்று பார்க்காமல் ஒரே பிரச்னையை அதன் தீர்வு கிடைக்கும் வரை அதை பற்றி பேசுவது அதற்கான முயற்சிகளை எல்லா மட்டத்திலும் எடுப்பது என்று விரிவுபடுத்தப்பட்டால் பலன் நிச்சயம் கிடைக்கும். மருத்துவர்களின் பண ஆசையை மட்டும் குற்றம் சாட்ட முடியாது என்பது என் கருத்து, அதை தாண்டியும் நிறைய பேசப்படவேண்டும். அதி நவீன சிகிச்சை முறை, உபகரணங்களுக்கான செலவு ஆகியவற்றை தீர்மானிப்பதில் அரசின் பங்கு , நடைமுறைப்படுத்துவதில் உள்ள பொருளாதார சிக்கல்கள் என எல்லாவற்றியும் கணக்கில் கொள்ள வேண்டும். வெறுமே மருத்துவர்கள் மக்கள் என்று எதிர் எதிர் முனையில் நிறுத்தினால் அவர்கள் வெறும் குற்றசாட்டுகளை மட்டும் பகிர்ந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து நீங்கள் அதில் பங்கேற்றால் இது போன்ற விஷயங்களை கொண்டு வர முயற்சி செய்யுங்கள். எங்கள் சார்பாக நீங்கள் பேசுவது அவ்வளவு வலிமையானது. எழுத்தாளர் என்கிற முறையில் தார்மீக உணர்வுடன், நான் மிகவும் மதிக்கும், நீங்கள் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சி தந்தது.


  Chandramohan Vetrivel,
  New Delhi.

 5. ஜெயமோகன்

  அன்புள்ள சந்திரமோகன்

  உண்மையில் இத்தகைய நிகழ்ச்சிகள் ஒருவகை தற்செயல்கள். எல்லாவற்றையும் சீராகச் சொல்லிவிட முடியாது. பலவிஷயங்களை தொட்டுவிடவேண்டியிருக்கும். பேச இடம் கிடைக்காது, நாம் கைப்பற்றிக்கோண்டு பேசவேண்டியிருக்கும். இந்த எல்லைக்குள் எதைச் சொல்ல முடியுமோ அதைச் சொல்லியிருக்கிறேன். ஆனால் இவை விவாதவடிவில் இருப்பதனால் சுவாரசியம் உருவாக்குபவை. ஆகவே அதிக பார்வையாளர்களக் கொண்டவை. அதிகபேரைச் சென்றடைபவை.

  மருத்துவர்களின் தரப்பில் அவர்களின் வாதங்களை அழுத்தமாக அவர்கள் சொல்லவில்லை. அவர்களில் பலருக்கு அடிப்படை வாசிப்போ எளிய மொழித்திறனோ கூட இல்லை. விதர்ப்பா என்றால் எங்கே என்றுகூட பலருக்கு தெரிந்திருக்கவில்லை. ஆகவெ விதண்டாவாதங்களையே அதிகமும் சொன்னார்கள்

  அவர்களின் தரப்பில் இரு விஷயங்களை அவர்கள் சொல்லியிருக்கலாம். இன்றைய அரசுகள் திட்டமிட்டு மெல்லமெல்ல அரசுசேவையாக மருத்துவம் அளிப்பதை நிறுத்திக்கொண்டிருக்கின்றன. நிதிப்பற்றாக்குறை ஆள்பற்றாக்குறைமூலம் அரசு மருத்துவமனைகளை கேலிக்கூத்தாக அடிப்பவை அரசுகளே.தனியார் மருத்துவத்தை ஊக்குவிப்பதே நோக்கம்.

  இரண்டாவதாக, நோயாளிகள் நோய்பற்றிய அறிமுகமோ மனப்பயிற்சியோ இல்லாமல் இருப்பது. நிகழ்ச்சி முடிந்தபின் ஒரு டாக்டர் என்னிடம் சொன்னார். ‘சார் நீங்கள் சொன்னது போல நாங்கள் ஒரே கெமிக்கலை பல பெயர்களில் பலமடங்கு கொடுக்கிறோம். உண்மை. அதை எல்லாருமே செய்கிறார்கள். அதற்கான முக்கியமான காரணம் இதுதான். எந்த நோய்க்கும் அது குணமாவதற்காக ஒரு காலக்கெடு உள்ளது. நோய்முறி மருந்துகள் உடம்பு நோயை எதிர்ப்பதற்கு உதவி செய்யக்கூடியவைதான். ஆனால் எங்களிடம் வரும் நோயாளிகள் எதற்கும் தயாராக இருப்பதில்லை. இரண்டுநாள் தாண்டினால் இன்னொருவரிடம்செல்கிறார்கள். தொழில்போட்டி அச்சுறுத்துகிறது. ஆகவே நாங்கள் மருந்துகளை அள்ளிக்கொடுக்கிறோம்’ அதிக மருந்து எழுதும் மருத்துவரிடமே அதிக கூட்டம் இருக்கும்,சந்தேகமிருந்தால் போய்பாருங்கள் என்றார்

  ’நீங்கள் அதை சொல்லியிருக்கலாமே’ என்றேன். ’எனக்கு பேச வராது சார்’ என்றார். என்னுடைய நோக்கம் நவீன மருத்துவம் சம்பந்தமான ஒரு எச்சரிக்கையை சொல்வது மட்டுமே. அதைச் சொல்லியிருக்கிறேன் என்று பட்டது. இன்னும் விரிவான உரையாடல்கள் வரக்கூடும்

  ஜெ

 6. ramji_yahoo

  மாற்றத்தை நம் தான் ஆரம்பிக்க வேண்டும். நாம் மருத்துவ உதவிக்கு தேவைகளுக்கு அரசு மருத்துவ மனைகளை மட்டுமே அணுக வேண்டும், எழுத்தாளர் ஞானி பலமுறை இதை செயலில் காண்பித்து உள்ளார்.

  தேர்தல் அன்று வாக்கு அளிக்கும் பொழுது நாம் இந்த விசயங்கள் எல்லாம் ஞாபகத்தில் வைத்து கொளது இல்லை.

 7. sundaraz

  அன்புள்ள ஜெயமோகன்,
  உங்களை திரையில் பார்த்தால் உங்கள் எழுத்துக்கு மாறாக ரொம்பவும் soft ஆன மனிதராகவே தெரிகிறீர்கள். நீங்கள் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் என்று இரு முறை சொன்னது கூட கொஞ்சம் நக்கல் பண்ணுகிறீர்களோ என்று யோசிக்க செய்தது.

  உங்கள் மற்றும் முத்துகுமாரின் தரப்பை முழுவதுமாக ஒத்து கொள்ள முடியவில்லை. மருத்துவ வசதியையும், மருந்து கம்பனிகளையும், மருத்துவர்களையும் சேர்த்து அவர்களை பிரதிநிதி ஆக்கிவிடீர்கள் என்பது போல உணர்ந்தேன். எல்லாவற்றிற்கும் மருத்துவர்களையே பொறுப்பு ஏற்று கொள்ள செய்வது நியாமாக இல்லை.முத்துகுமார் மற்றும் நீங்கள் கூறிய அரசு மருத்துவமனைகளில் நடக்கும் அட்டூழியம், பொதுவாக எல்லா அரசு நிறுவங்களுக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன். நீங்கள் போலீஸ், கல்வி, மற்றும் மருத்துவர்கள் மீது பொது மக்களின் கோவம் என்று கூறினீர்கள். அதை நான் அனைத்து அரசு நிறுவனங்களின் மீது உள்ள கோவத்தின் நீட்சியே என்பேன். மருத்துவர்களுக்கு பதிலாக அரசு ஊழியர்கள் என்று ஒரு கூட்டத்தை அங்கு அமர்த்தி இருந்தால் மக்கள் கோபம் இன்னும் பன்மடங்கு இருந்திருக்கும் என்பதே என் உணர்வு. நான் சொல்வது, சமீப காலமாக புழங்கி வரும் எண்ணமாகிய “அரசு கெட்டது ; தனியார் நல்லது”, என்பதை கிளி பிள்ளை போல் சொல்வது மாதிரி இருந்தாலும், அது உண்மை என்று சொல்கின்ற அளவில் தான் நமது அரசு நிறுவங்களும் இருக்கின்றன.

  விதர்பாவில் நடந்தது கூட அந்த மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகள கூட தர முடியாத ஒரு கையாலாகாத அரசும், அவங்களை பண கஷ்டத்தில் சாக விட்ட ஒரு மொத்த சமூகத்தின் பொறுப்பு ஆகுமே தவிர, அது வெறும் மருத்துவர்களின் பொறுப்பாக எனக்கு தெரியல. மருத்துவ செலவும் வசதியும் பல காரணங்களின் முடிவே. உண்மையில் அந்த காரணங்களில் மருத்துவர்களின் பங்கு நாளுக்கு நாள் சிறியதாகி கொண்டு தான் இருக்கிறது.

  இங்கு பல பேர் மருத்துவத்தின் வணிகமயமாக்கல் ஒரு தவறு போல சொல்லறாங்க. ஆனா இதுக்கு முன்னாடி நம்ம மருத்துவ வசதி ஓஹோன்னு இருந்த மாதிரி எனக்கு தெரியல. சமூகத்துல எல்லாரூம் காசே குரீன்னு சுத்தும் போது, மருத்துவர்கள மட்டும் சேவ மனப்பான்மையோடு செயுங்கன்னு சொல்றதும் சரியாய் தெரியல. இங்க அமெரிக்கால ஆங்கிலம் கற்று தர வாத்தியார்க்கு கணக்கு சொல்லி தர வாத்தியார விட கம்மியா சம்பளம் தரணும்னு சொல்றத கேட்டப்ப அதிர்ச்சியாதான் இருந்தது. ஆனா கணக்குல தேர்ச்சி பெற்றவங்களுக்கு மற்ற வாய்ப்புகள் இருக்கறதால, அவங்கள சம்பளம் ஜாஸ்தி கொடுத்துதான் incentivize பண்ண வேண்டி இருக்கு. மனித மேம்பாட்டுக்கு ரெண்டும் அவசியம்னாலும் நடை முறை தேவைக்கேற்ப இத பண்ண தான் வேண்டியிருக்கு. காசு தான் எல்லாத்துக்கும் முக்கியமா என்கிறது சமூகம் எடுக்க வேண்டிய முடிவே தவிர மருத்துவர் போன்ற ஒரு குழு ஏற்க வேண்டிய பொறுப்பு இல்லை என்று தான் தோன்றுகிறது. உண்மையில், இங்கு அமெரிக்கா வந்த பிறகு நம் நாடு மருத்துவர்கள் மீதிருந்த என் மரியாதை கூடி விட்டது என்றே சொல்ல வேண்டும்.

  மட்ட்றபடி நீங்கள் கூறிய நோயாளி மருத்துவரை தான் நம்ப வேண்டி இருக்கிறது என்பது சரியான எண்ணம். இங்கு அமெரிக்காவில் சமீபமாக ஒபமாவின் மருத்துவத்தை பொதுமயமாக்கும் முயற்சியின் போது, “free market’ எல்லா வற்றையும் பார்த்து கொள்ளும் என்று குரல் எழுந்த போது, சில லிபரல் பொருளாதார அறிஞ்ஞர்கள், இது மற்ற நுகர் பொருட்களை போன்று இல்லை என்று கூறி “true price discovery is not possible because of the asymmetric nature of the information available to the participants” என்ற வாதத்தையே முன் நிறுத்தினர். நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்க கூடும், இந்த வாதங்களில் அதுல் கவண்டே என்பவரின் கருத்துக்கள் ஒபாமா உட்பட பலரால் முக்கியமாக கருத பட்டது. http://gawande.com/

  -இராஜ்குமார்

 8. parthi6000

  அன்புள்ள ஜெ

  20 சதவீத சேமிப்பு மருத்துவத்திற்கு செலவாகிறது என்ற செய்தி என் உடல் மீது தற்போது நான் கவனம் செலுத்தவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி உள்ளது. தற்போது அரசின் காப்பீட்டுத் திட்டம் தனியார் மருத்துவமனைகளின் வணிகபோக்குக்கு மேலும் தீனிபோடுவதாகவே உள்ளதாக இந்த நிகழ்சியை பார்க்கும் போது தோன்றியது. உலகில் மக்கள் சுகாதாரத்திற்கு மிகக்குறைவாக நிதி ஒதுக்கும் நாடு இந்தியா என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. காப்பீட்டுத் திட்டத்திற்கு அரசு ஒதுக்கும் ௨௦௦௦ கோடியை அரசு மருத்துவமனைகளை நவீன படுத்த ஒதுக்கலாம்.

  அட்வகேட் பார்த்திபன்
  திருப்பூர்

 9. ஜெயமோகன்

  அன்புள்ள ராஜ்குமார்
  தொலைக்காட்சி விவாதத்தில் அந்த தொனி வந்தது உண்மை – அது இயல்பே. மக்களின் கோணம் என்பது எப்போதுமே கண்முன் உள்ளவர்களிடம்தான். எந்த அரசு ஊழியர்களைவிடவும் ஏன் காவல்துறையை விடவும் மக்கள் மருத்துவர்களைப்பற்றி கோபமும் கசப்பும் கொண்டுள்ளார்கள் என்பதே உண்மை. மருத்துவர்களில் முக்கால்வாசிப்பேர் எந்த வித மனசாட்சியும் இல்லாமல் பணத்துக்காக மக்களின் வாழ்க்கையை அழிக்கிறர்கள். மீதிப்பேர் செயலிழந்திருக்கிறார்கள். அந்த விஷயத்தைச் சுட்டிக்காட்டுவதற்கான அரங்குதான் அது. ஒட்டுமொத்த மருத்துவ அமைப்பைப் பற்றிய விவாதம் அல்ல

 10. brinjal

  கலைஞர் முதல் பல மந்திரிகளும் மற்றும் பல பெரிய அதிகாரிகளும் சென்னையில் உள்ள ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு போவதில்லை! முன் உதாரணம் எங்கே?
  கோபிநாத்துக்கு மேல் விஜய் டி. வி. அதிகாரி. அவருக்கு மேல் ஸ்டார் டி. வி. மேல் அதிகாரி!! தீர்வு காணும் வரை விவாதிக்க வேண்டும் என்ற வாதத்திற்கு மாற்று கருத்தே இருக்காது. ஆனால் சாத்யப்படுத்தப்போவது யார்?
  Divine interventions!!

 11. drsuneelkrishnan

  அன்புள்ள ஜெ,
  பொது மக்களின் தரப்பை , அதன் உரிய வீர்யம் மற்றும் கோவம் கொண்டு சிறப்பாகவே பேசினீர்கள் . மருத்துவர்களுக்கு பொது மக்கள் தரப்பு நீங்கள் என்ன கூருகீரிர்கள் என்பது பிடிபடவே இல்லை என்றே எண்ணுகிறேன் .அல்லது அவர்கள் காது கொடுத்து கேக்க வில்லை என்றே சொல்லணும் .விடர்பாவை பற்றி பேசிய மருத்துவர் எங்கள் ஊர்காரர் தான் எனது தந்தைக்கு நன்கு அறிமுகமானவர் :) ஒரு லட்சம் மதிப்புள்ள சிகிட்சை காப்பீடு திறத்தல் இரண்டரை லட்சம் அளவுக்கு உயருகிறது , இந்த பணம் மறைமுகமாக நாமே செலுதிகிறோம் என்பது பலருக்கு தெரியவில்லை .மக்களுடன் மக்களாக மருத்துவர்களால் இருக்கமுடியவில்லை அலல்து விரும்பவில்லை .எளிமையாக மக்களுடன் ஒன்றும் என்று நம்பப்படும் ஆயுர்வேதம் சித்தம் கூட இப்போது corporate culture இல் சிக்கி தவித்து மக்களிடமிருந்து விலகி போகிறது என்பதே உண்மை .நீங்கள் விஷயத்தை அழுத்தி சொல்ல வேண்டும் என்கின்ற காரணத்துக்காக கூறும் விஷயத்தில் உள்ள எண்ணிக்கை வைத்து கொண்டு பதில் அளிக்க முயன்றதெல்லாம் சிறுபிள்ளை தனமாக பட்டது. 30 மாருந்துகள் இல்லை என்றாலும் 10 மாருந்துகள் எழுதினால் அதில் 4 நிச்சயம் ஒன்று தான் .இதை பற்றி மேலும் மேலும் பொது மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். முத்துகிருஷ்ணன் , மற்றும் இன்னும் 2 மருத்துவர்கள் சிறப்பாக பேசினார்கள் . IMA தலைவர் கூட சரியாக விளக்கம் கூற முடியவில்லை என்பது இது தொடர்பாக அவர்களுக்குள் விவாதங்கள் நடக்கவே இல்லை என்பதை வெளிகாடுகிறது . முதலில் மருத்துவம் படிபதர்கான செலவை அரசு மற்றும் தனியார் குறைக்க வேண்டும், தேர்தல் மாறி போட்ட காசை எப்போ எடுக்கலாம் என்று எண்ணம் வந்துவிடுகிறது .இதையும் தாண்டி தன்னலம் இல்லாமல் உழைக்கும் நல்ல மருத்துவர்களை எனக்கு தெரியும் .

 12. samyuappa

  மருந்துகளை (Medicine) பற்றி முழுமையான அறிவு மருத்துவர்களுக்கு இருக்காது என்பது என் எண்ணம். நோய்களைப்பற்றி அதை கண்டுபிடிப்பதை பற்றிய அறிவு ( disease identification and cause) அபாரமாக இருக்கவேண்டும். மருந்துக்கும் பொதுமருத்துவருக்கும் (general physician) சம்மந்தமில்லை, பரிந்துரை (prescription)செய்வதைத்தவிர. Pharmacology -என்ற மருந்தியங்கியல் subject -ஐ ஒழுங்காக படித்த மருத்துவர்கள் மட்டுமே “நோய் நாடி…” குறளுக்கேற்ப மருத்துவம் செய்யமுடியும். (உத்திரமேரூரில் Dr.Murugan னிடம் அதிக மக்கள் செல்கிறார்கள், ஏனென்றால் அவர் Gold medal in Pharmacology) படிக்கும் போது தெரிந்துகொள்வதைவிட house-surgen ஆக இருக்கும் போது கற்றுக்கொள்வதை வைத்துதான் “பஜனை” செய்கிறார்கள். மற்றபடி, medical representative – சொல்லுவதை வைத்துதான் பரிந்துரை செய்வார்களென நினைக்கிறேன். நம்ம தொழில்ல இருக்குறா மாதிரிதான்…. புத்திசாலி, முட்டாள், அறிவாளி, கஞ்சன், செலவாளி, கருமி, சோம்பேறி, உழைப்பாளி, பக்கி, நேர்மையானவன், கடி-கிறவன், காமுகன், பேராசைகொண்டவன், மொக்கசாமி, பெரிய மனசுக்காரன், சுயநலக்காரன்,குடிகாரன், இரக்கமுள்ளவன் etc,….இப்படி அதிலும் இருக்கிறார்கள். இருக்கட்டும். விளக்கமாக நிறைய சொல்லலாம் ஆனால் சுருக்கமாக, மருந்து தயாரிப்பதிலிருந்து நோயாளியை வந்து அடைவதுவரை மேற்கண்ட “ஏகப்பட்டவர்களை” கடந்து தான் வர வேண்டும். Paracetamol , 500mg i.p tablet தான். ஆனால் 100 Company 100 brand name -இல் விற்பனை செய்கிறது. BA/BE experiment செய்து இல்லாதாதையும் பொல்லாததையும் சொல்லித்தான் விற்பனை செய்ய வேண்டும். ஒரு பொருள் (மருந்து) கடைக்கு வருவதற்கு ஏகப்பட்ட அரசியல் இருக்கு. அதுபோல அதை வாங்குவதற்கும் இருக்கு. தரமற்ற மருத்துவர்களை நாம் தான் உருவாக்குகிறோம். பிறகு சண்டையிடுகிறோம். “காக்கா பிரியாணி சாப்டா காக்கா குரல் வராம…உன்னி கிருஷ்ணன் குரலா வரும்?”

 13. kasran

  Dear Mr Jeyamohan

  I am a Lions club Member, we are running a free rural health center 40 kms away from chennai. Daily 60 to 70 patients take free treatment and medicines.

  I would like to share my experience.A doctor is running a NGO doing yeomen service . Her focus is child care. She has entered MOU with TN govt. to adopt on Private Public Partnership basis with all the Govt Hospitals. Presently she has adopted couple of depts. in Chennai Children Hospital, Egmore and Chengalpet GH. Her experienence is, with minimum contribution of money and manpower we can get maximum mileage using govt. infrastructure. (You can see Children Cancer ward, ICU etc in Govt. Children hospital) By this PPP poor people can get treatment equal to any pvt hospitals in Chennai. (She provides all life saving medicines in case it is not available, get rented ventilators etc, provide Nursing Assistant, House Keeping etc). The concept is using experienced govt. doctors, infrastructure give best treatment to all the children. Her ultimate aim is extended this success to all the district GH further to taluk level. She is willing to share her experience also with interested people. Let us contribute positively to this country.

  This is my first comment you can suitably edit as per your wish. My idea is sharing some positive contribution by a doctor

 14. samyuappa

  இந்த விஷயம் எனக்கு ரொம்ப சம்பந்தப்பட்டது. நிறைய எழுத வேண்டியிருக்கிறது. எனக்கு ஒரு நோய் வந்தா… என் கிட்ட கெஞ்சும்…கூத்தாடும்…DOCTOR கிட்ட போடாநு. …கடைசியில் “அடச்சீ போடா நு போய்டும்” . ஏன் சொல்றேன்னா, நம்மை விட நம் உடம்புக்கு நம்மேல் அக்கறை அதிகம். அது பாத்துக்கும். நம் உடம்புக்கு சம்பந்தமில்லாத ஒன்று உள்ளே சென்றால் அகிம்சை / தீவிரவாத – முறையில் வெளியேற்றிவிடும். சாப்பிடுற உணவே அப்படித்தான். தீவிரவாத முறைதான் நமக்கு நோயை உணரவைக்கிறது. இப்போ… நமக்கு ஜுரம் வருது. ஏன் வருது? உடம்பில் இருக்கும் நுண்ணுயிர்களை (eg . Bacteria ) கொல்லுவதற்காக நம் உடம்பு நம்மை Autoclave /sterilize செய்கிறது. நம்ம பாட்டுக்குபோயி paracetamol சாப்டு அந்த mechanism-ஐ அம்பேல் ஆகிட்றோம். ஆகமொத்தம் என்ன சொல்ல வர்றேன்னா…. Doctor கிட்ட போகாம நம்மள பாத்துக்கணும்.

 15. KannanV

  அன்புள்ள ஜெயமோகன், நீயா ? நானா? – கட்டுரையில் கொடுத்துள்ள சுட்டிகளை சொடுக்கி இணயத்தில் பார்த்தேன்!! எனக்கு தோன்றிய எண்ணங்கள் !!

  1 . நீங்கள் சொல்லியதில் பெருமளவு உண்மை இருந்தபோதிலும், உங்கள் வாதம் மருத்துவர்களை சாடிய அளவு பெரும் மருத்துவமனைகளை சாடவில்லை !! உங்கள் வாதத்தின் பெரும் பகுதி சிகிச்சை செலவீனங்களைப் பற்றிதான் இருந்த்தது – இதற்கு காரணம் மருத்துவமனைகள் தான். (பெரும்பகுதி மருத்துவ செலவீனங்கள் சிகிச்சை அல்லாத செலவீனங்கள்தான் (குளிர்பதன் அறை வாடகை, …) என்ற டாக்டரின் வாதத்தை நீங்கள் எதிர் கொல்லவில்லை !!

  2 . சாரு நிவேதிதாவின் விஜய் டிவி அனுபவத்தை தொடர்ந்து உங்கள் பங்களிப்பு வந்ததில், எழுத்தாளர்களை / அவர்களின் பேதங்களை – ஊடகங்கள் தங்கள் சுயனலனுக்காக பயன்படுத்திக்கொள்கிறதா என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை !!

  வெ கண்ணன்

 16. ஜெயமோகன்

  அன்புள்ள கண்ணன்

  நான் ஏன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன் என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டேன். இந்த தலைப்பு எனக்கு ஏற்புடையது, நான் சொல்ல விழைவது. முத்துகிருஷ்ணன் போன்றவர்கள் என் நெடுநள் நண்பர்களும்கூட. இந்த விஷயத்தை அச்சு ஊடகங்களில் முன்னமே பேசியவன் நான். என்றுமே விஜய் டிவி என்னை அழைத்துக்கொன்டுதான் இருக்கிறது. நான் இதை ஏற்றுக்கொண்டமைக்குக் காரணம் எனக்கு ஒப்ரு நோக்கம் இருந்தது. மருத்துவம் சர்த்நு

  நீங்கள் சொல்லும் வரி உங்கள் மனச்சிக்கலை காட்டுகிறது. இலக்கியத்தின் வம்புகளில் ஊறிய எழுத்தாலர் சிலர் இப்படியெல்லாம் யோசிக்கலாம். வாசகரும் இந்த மனநிலை கொண்டிருப்பது வம்புகளுக்கான தாகத்தை மட்டுமே காட்டுகிறது

  ஜெ

 17. ஜெயமோகன்

  Perfunctorily I saw that programme in Vijay TV for a few minutes. I am always little critical of the title “Naanaa Neeya”. Why not Nanum and neeum. In this case it is of course Naana and neeya only as there is conflict of interest in both the parties. .

  When I saw that show for a few minutes I am convinced that it is going to be one sided affair. I commiserate with the doctors. They had neither communication skill nor debating skill nor intellectual abilities. They did a mistake. They should not have come to the debate and if at all they wanted to submit their side they should have sent their PR people. These doctors were already being heckled by one of the persons on the opposition camp with solid data and statistics. Then I saw you coming in as one of the Experts in the debate. Then I knew poor doctors they were never going to have a chance. There were going to be trashed left and right. It would only make them angry and therefore turn to some stupid debating arguments. Of course the debate will be heated up but empty heat.
  This is a systemic problem in our Health care delivery system in our country. There should not be any private or corporate hospitals in this country particularly with a large poor and lower middle class population. All hospitals should be public and at the most a few more Trust hospitals (managed by trusts). I am assuming that the trust hospitals may be little more sensitive to the needs of the patients instead of sensitive to the owners or the share holders. In Socialistic Scandinavian countries the health care delivery is the duty of the Government (Of course there the people pay heavy income and other taxes). One of those who commented in your blog recommended National Health Service of Great Britain. But there are lots of complaints about NHS. In USA Healthcare is in shambles in spites of heroic efforts of Obama. In India I also believe there is nexus among the doctors, Pharmacists and those who do the diagnostic tests. I would blame only the Government. The latest insurance system for poor people may look that it brings the poor with others seeking health care delivery in the corporate hospitals but it only increases the frauds by the hospitals.
  Having said all this suppose if I or any of my dear and near ones fall into some serious health problem (for minor problems like headache or minor indigestion I do not go to a doctor at all) what do I do. I immediately rush to Apollo Hospital or Malar etc. At least I, do not have the courage at that critical hour to find out who is the honest doctor. So the systemic problem has to be corrected. I wonder whether this change can take place by TV debates.(or TV debates only). I may be wrong. I have seen a few such debates between doctors and lay public. There was sometime back in the NDTV-Hindu channel. There should be social movement for this incorporating social activists, legislators and also doctors (doctors are not enemies of society at lest not all of them).
  Within few minutes when I realized that this is going to be one side debate, effective arguments from one side and whimpering rebuttals from the other side I lost interest and used my remote. I am only sorry that such a serious and socially useful topic is spoiled by bad advocacy on one side.
  R VENKATARAMAN

 18. ஜெயமோகன்

  அன்புள்ள வெங்கட்ராமன்

  உண்மை. ஆனால் இது டாக்டர்கள் நோயாளிகள் இடையே ஒரு விவாதம். மருத்துவம் சார்ந்த பொதுவிவாதம் அல்ல. மருந்து நிறுவன பிரதிநிதிகளோ மருத்துவமனை பிரதிநிதிகளோ அங்கே இல்லை. டாக்டர்களின் பங்களிப்பை சீரழிவை பற்றி மட்டுமே அங்கே பேசமுடியும். அதில் எந்த மிகையோ பொய்யோ பேசப்படவில்லை

  டாக்டர்களின் தரப்பில் டாக்டர் ரவீந்திரன் எபவர் அமைப்பு மீதான தன் கடுமையான விமரிசனத்தை சொன்னார். அரசின் கொள்கைகளையும் விமரிசித்தார்

  நீங்கள் முழுக்க பார்த்திருக்கலாம்

  ஜெ

 19. sankar.manicka

  பொதுமக்களின் பயத்தை டாகடர்கள் பயன்படுத்தி பணம் பண்ணுகிறார்கள் என்பது நீங்கள் பொதுமக்கள் சார்பாக வைத்த முதன்மை குற்றச்சாட்டு. இன்சூரன்ஸ் கம்பெனிகள் செய்வதும் அதுவே.

  டாக்டரிடம் நம்பிக்கையில்லை என்றால் நோய் குணமடையப் போவதில்லை. நம்பிக்கை வைப்பவனை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பது டாக்டர்கள் செய்யும் நம்பிக்கை துரோகம் அன்றி வேறில்லை.

  மதுரை, மற்றும் தெற்கே உள்ள இன்ன பிற மத்திய தர நகரங்களில் டாக்டர்கள், இரத்தப்பரிசோதனை நிலையங்கள், ஸ்கேன், ஈ.சி.ஜி நிலையங்கள் கூட்டுச் சேர்ந்து பணம் சம்பாதிப்பது பற்றி இங்கு சொல்லவேண்டும்.

  இரத்தப்பரிசோதனை நிலையத்தில் ஒரு டெஸ்டுக்கு ரூ 100 வாங்கினால் அதில் ரூ 50 அந்த டெஸ்ட் செய்யச் சொல்லி எழுதி நோயாளியை அனுப்பிய டாக்டருக்குப் போய்ச் சேரும். 50% கமிசன். இது 3 ஆண்டுகளுக்கு முந்தய நிலை. அப்பொழுதே சிலர் 60% கமிசன் கொடுப்பதாக சொன்னார்கள். சில டாக்டர்கள் இதற்காகவே தேவையில்லாத டெஸ்ட் எல்லாம் எழுதிக் கொடுப்பார்கள். 50% கமிசன் கொடுத்தே இரத்தப்பரிசோதனை நிலையம் நடத்துபவன் ஒழுங்காக ரிசல்டு கொடுப்பானா என்பது நம் தலையில் ஆண்டவன் என்ன எழுதியிருக்கிறான் என்பதைப் பொருத்தது.

  தற்போதைக்கு கோவை, சென்னையில் இந்த நிலை இல்லை. கூடிய சீக்கிரமே அங்கும் கமிசன் ராஜியம் வரக்கூடும்.

 20. ஜெயமோகன்

  நீயா நானாவில் சமூக பொறுப்புடன் ,மக்களின்குரலாக ,பாமரனின் ஆதங்கமாக ,நீங்க பதிவு செய்தது வரவேற்க தக்கது . இது போல எல்லா படைப்பாளிகளும் ,கலைஞர்களும் சமூகத்தின் மீது தங்களது பங்களிப்பை ,பொறுப்புடன் செய்வார்கள் என்றால்மாற்றங்கள் கண்டிப்பாக நிகழும் .வாழ்த்துகள்
  Sent at 5:19 PM on Thursday
  kannan vivega

 21. எம்.ஏ.சுசீலா

  அன்பின் ஜெ.எம்.,
  ஞாயிறு இரவு 9.45 மணிக்கு மதுரையிலுள்ள என் தோழி குறுஞ்செய்தி அனுப்பி நீங்கள் விஜய் டீவி நிகழ்ச்சியில் இருப்பதைத் தெரிவித்தார்.ஆனால் நான் அக் குறுஞ்செய்தியைப் பார்ப்பதற்குள் நிகழ்ச்சியே முடிந்து போய் விட்டிருந்தது.
  ஏமாற்றத்துடன் இருந்த எனக்குத் தங்கள் வலையில் இருந்த சுட்டிகள் ஆறுதலளிக்க நிகழ்ச்சி முழுவதையும் பார்த்து முடித்தேன்.

  தங்கள் தார்மீகச் சீற்றம் உண்மையின் ஆழத்திலிருந்து வருவதால் மிக அழுத்தமாகவும்,பாவனைகள் இன்றியும் அன்று பதிவானது கண்டு மகிழ்ந்தேன்.
  மருத்துவர் சொல்லும் மருந்தை நம்பித்தானே ஆக வேண்டியிருக்கிறது என்ற அடிப்படையான மனித மனோபாவத்தை சாதகமாக்கிக்கொண்டு
  மருத்துவக் கல்வி மற்றும் அதற்கான அதிகாரக் கையகப்படுத்தலினால் அவர்களிடம் காணலாகும் மேல்மட்ட மனோபாவத்தைத் தாங்கள் சரியாக முன் வைத்தீர்கள்.

  மக்கள் தரப்பின் வாதங்கள் அடிவயிற்றிலிருந்து பீறிடும் சத்திய ஆவேசங்கள் என்றும் மாற்றுத்தரப்பு வாதம் சமாளிப்பு மட்டுமே என்றும் நீங்கள் கூறியது மறுக்கவே இயலாத உண்மை.
  உண்மை அவர்களக் கொஞ்சம் அதிகமாகவே அன்று சுட்டிருக்கும்.

  நான் கடந்து வந்த பாதையில் எதிர்ப்பட்ட மருத்துவக் கசப்புக்கள் ஏராளம்.
  76 வயது நிறைந்த தாயை அழைத்துக் கொண்டு 2 வருடங்கள் ஒவ்வொரு மருத்துவ மனையாக ஏறி இறங்கியிருக்கிறேன்.(’80களில்)
  என் மகள் தன் கல்லூரி நாட்களில் படித்ததெல்லாம் மருத்துவமனை வராந்தாக்களிலேதான்.
  ஆறுதல் மொழி இல்லையென்றாலும் ’வயதானவர்கள்தானே அப்படித்தான் இருக்கும்;இனிப் போய்ச் சேரவேண்டியதுதானே ’ என்ற அலட்சிய பாவனைகளை மட்டுமே பல மருத்துவ எதிர்வினைகளாகப் பெற்று,
  ஆலகாலம் போல அவற்றை உண்டு உட்செரித்து
  ‘வயதானவருக்கு வாழ்வுரிமை இல்லையா என்ன ‘ என்ற உட்கோபத்துடன் அடுத்த இடம் நோக்கி நகர்ந்திருக்கிறேன்.(அப்போதெல்லாம் முதியோர் மருத்துவம் பிரபலமாகவில்லை).
  இறுதியாக வயதானவர்களிடம் பரிவு காட்டும் கரிசனையான ஒரு மருத்துவரை நெருங்கிச் சிறிது காலத்திற்குள் அம்மா காலமாகி விட்டார்கள்.
  அதற்கும் காரணம் ,முதல் மருத்துவ அறுவையின்போது மயக்க மருந்தூட்டுகையில் நடந்த குளறுபடிதான்.
  70 வரை தலைமை ஆசிரியையாகப் பணி செய்த அவர்களின் வாழ்நாள் சேமிப்பும்-
  (அவர்கள் காலகட்டத்தில் வாங்கிய சம்பளம்,மற்றும் பென்ஷன் எத்தனை குறைவாக இருந்திருக்கக் கூடும் என்பது எல்லோரும் அறிந்ததுதான்)
  தாங்கள் குறிப்பிட்டது போலவே அந்த இரண்டாண்டுக் காலத்தில் கரைந்து போக என்னையும்,என் மகளையும் ஏதுமின்றி விட்டுவிட்டுப் போவதான உணர்வுடனேயே (நடுத்தரக் குடும்பப்பின்னணியில்)அவர்கள் மடிந்தார்கள்.அவர்கள் தந்த படிப்பும் அதன் வழி நான் பார்க்கும் வேலையும் இருப்பதாக எத்தனை எடுத்துச் சொல்லியும் அந்த மனத்தால் கடைசிவரை ஆறுதல் கொள்ளவே முடியவில்லை.

  ‘70களின் இறுதியில் என் தொண்டையில் ஏற்பட்ட ஒரு முடிச்சை (nodule )நீக்கும் அறுவை சிகிச்சைக்காகத் தமிழகத்தின் தலை சிறந்த காது மூக்கு தொண்டை மருத்துவரிடம்
  – அவர் வாரம் ஒரு முறை மதுரை பறந்து வந்து கொண்டிருந்தபோது-
  காட்ட ,அவர் இரத்த உறைவு நேரத்தைக்கூடக் கணக்கிலெடுக்காமல் அறுவையைத் தொடங்கி நாக்கை வெளியிலெடுத்து ஆயுதத்தைக் கையிலேந்த உடன் குருதி பீறிட்டடிக்க
  (என் இரத்தம் உறைய ஆகும் நேரம் கூடுதலாம்)
  அறுவை அரைகுறையாய் நிற்க…. நாக்கை நீட்டிய காளியாய் நெடுநேரம் நான் ….
  பின்பு சென்னை பொதுமருத்துவமனைக்கு வரச் சொல்லி அங்கும் இழுத்தடித்து மனிதத் தன்மைக்கே ஒவ்வாத வார்த்தைகளால் தினமும் ஏதோ குறை கூறி அர்ச்சித்தபடி அறுவையை ஒருவாறு முடித்தார்.
  (முடித்தாரா என்பதே ஐயம்தான்.காரணம் அந்தக் குறைபாடு ‘90களின் பிற்பகுதி வரை என்னைத் தொடர்ந்து, பிறகு ஒரு சுபயோக சுபதினத்தில் அதற்கு மேலும் என்னைப் பாடுப்டுத்த விரும்பாமல் தானாகவே புறங்காட்டி ஓடி விட்டது.)
  உலகப் புகழ் பெற்ற அந்த மருத்துவர் அன்று அப்படி நடந்து கொண்டதற்குக் காரணம்,சென்னைப் பொது மருத்துவ மனையிலிருந்து
  (முத்துகிருஷ்ணன் சொன்னது போல அவரது பிக் அப் பாயிண்டிலிருந்து)
  அவரது பிரத்தியேக மருத்துவமனைக்கு நாங்கள் செல்லாததுதான் என்ற உண்மை மிகவும் தாமதமாகவும் தற்செயலாகவுமே எங்களுக்குத் தெரிய வந்தது.
  போலி மருந்துகளுக்கு எதிராக மருத்துவர் சங்கம் சுண்டு விரலைக்கூட அசைக்காதது பற்றிய குற்றச்சாட்டுக்கும் அவர்களிடம் எந்த பதிலுமில்லை.
  திரு முத்து கிருஷ்ணன் தன் களப் பணியில் கண்டடைந்த முடிவுகள் அவர்களிடமிருந்து ஆவேசத்தை வரவழைக்க மட்டுமே உதவின என்பது ஒரு காலத்தில் மருத்துவத் துறைக்குள் நுழைய வேண்டுமென்பதை ஆதர்சமாகக் கொண்டிருந்த என் போன்றோர்க்குப் பேரதிர்ச்சி அளித்திருக்கும்.

  காவல்,கல்வி,மருத்துவம் ஆகிய மூன்று துறைகளிலுமே – நீங்கள் குறிப்பிட்டதைப் போன்ற – ஒரு கசப்பான அனுபவமும்,அதன் உடனிகழ்வாக நேர்ந்த வெறுப்பும் சராசரி இந்தியர்களுக்கு இருந்துகொண்டுதானிருக்கும்.
  அதை நீக்கும் பொறுப்பிலிருப்பவர்கள் இதுபோன்ற பொது நிகழ்ச்சிகள் வழியேனும் பொருள் பொதிந்த அந்தக் கோபத்தைப் புரிந்து கொண்டாக வேண்டிய தருணம் இது.
  எங்கள் தரப்பின் சிறந்த பிரதிநிதியாக அதைப் பதிவு செய்த தங்களுக்கு என் நன்றிக் கைகூப்பு.

 22. Rajan

  அன்புள்ள ஜெயமோகன்

  முழு வீடியோவையும் பார்த்தேன். எனக்கு இது போன்ற தொலைக்காட்ச்சி விவாவதங்களில் அவ்வளவாக ஆர்வம் கிடையாது. குறிப்பாக இந்த நீயா நானா நிகழ்ச்சியில். நான் காண நேர்ந்த ஒரு சில நீயா நானா நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரது அதிகப்பிரசிங்கித்தனமும் அடுத்தவர்களை முழுக்க பேச விடாமல் தடுப்பதும் தனது அஜெண்டா படி பேச்சுக்களை வழிநடத்துவதும், ஒரு சில நேரங்களின் அநாகரீகமாக நடந்து கொண்டதும் கடும் எரிச்சலை அளித்தபடியால் இது போன்ற நிகழ்ச்சிகளை சுத்தமாகப் பார்ப்பதில்லை. மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளில் எதுவுமே முழுமையாக அலசப் படுவதும் அதற்கான சுதந்திரமும், கால அவகாசமும் அளிக்கப் படுவதும் கிடையாது என்பதினால் பேசிக் கலைந்து போகும் மற்றுமொரு திண்ணைப் பேச்சாகவே இந்த நிகழ்ச்சிகள் அமைந்து விடுகின்றன.

  இந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சியிலும் கூட நீங்கள் சொல்ல வந்ததையோ டாக்டர்கள் பேச நினைத்தையோ யாருமே முழுமையாகச் சொல்ல முடியவில்லை. இவை போன்ற முக்கியமான விவாதங்களை இது போன்ற விளம்பர இடைவேளைகளுக்கு நடுவே பேச்சுக்களை இடைமறித்து நடத்தப் படும் விவாதங்களில் நடத்த முடியாது. மேலும் இவற்றையெல்லாம் கருப்பு வெள்ளையாகவும் அணுக முடியாது. அந்தக் காலத்தில் ஒரே ஒரு டாக்டர் தனது க்ளினிக்கை திறந்து வைத்துக் கொண்டு அதிக பட்சம் ஒரு கம்பவுண்டரை உதவிக்கு வைத்துக் கொண்டு நம்மை அறிந்த நமக்கு நெருக்கமானவராக இருப்பவராக நம் உடல்நிலைகளைக் கருத்தில் கொண்டு சின்ன சின்ன மருத்துவ உதவிகளை வழங்கும் ஒரு குடும்ப நண்பராக இருப்பார். இன்றைய சூழலில் டாக்டர்கள் என்போர் ஒரு பெரிய கார்ப்போரேட் நிறுவனத்தின் அங்கம் போலச் செயல் படுகின்றனர். மருத்துவ நிலையங்கள் பெரிய வியாபார நிலையங்களாக நடக்கின்றன. ஒரு சாதாரண நோயாளி இவை எதுவுமே புரியாத குழப்பத்தை அளிக்கின்றன. ஆக இனிமேல் வெறும் டாக்டர்களை மட்டுமே கருத்தில் கொண்டு அணுக முடியாது.

  இது போன்ற கால அவகாசம் அளிக்கப் படாத நிதானமாக எதையும் விவாதிக்க முடியாத அந்த சிறிய நேரத்தின் இடையிலும் கூட நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தை ஆணித்தரமாக வைத்தீர்கள். அது உண்மைதான். டாக்டர்கள் ஆயிரம் பிரச்சினைகள் சொன்னாலும் கூட மக்களுக்கு மருத்துவர்கள் மேல் உள்ள நம்பிக்கையை இழந்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை. விதி விலக்குகள் இருக்கலாம். நாம் பொதுவாக நிலவும் சூழலை வைத்துத்தான் பேச முடியும். அந்த வகையில் நீங்கள் ஒரு முக்கியமான பிரச்சினையை பொது மக்களின் எண்ணத்தை மிகவும் அழுத்தமாக பிரதிபலித்திருக்கிறீர்கள். அதை வெளிப்படையாகவும் தெளிவாகவும் சொல்வதற்கு இந்த டி வி விவாத நிகழ்ச்சி உதவியிருக்கிறது.

  இந்த மருத்துவர்கள் என்பவர்கள் வானத்தில் இருந்து குதிப்பவர்கள் அல்லர். இவர்களும் நம் சமூகத்தில் இருந்தே உருவாகிறார்கள். நம் சமூகத்தையே பிரதிபலிக்கிறார்கள். ஆகவே நம் சமூகத்தில் நிலவும் அத்தனை நல்லது கெட்டதும் அவர்களிடமும் காணப்படும். இருந்தாலும் சமுதாயத்தில் இருக்கும் எந்தவொரு குழுவினரையும் விட இந்த மருத்துவர் தொழிலில் இருப்பவர்களுக்கு சில அதிகமான பொறுப்புகளும் எதிர்பார்ப்புகளும் உள்ளன அதை அவர்களும் இந்த நிகழ்ச்சியின் நீங்கள் சொல்வதின் மூலமாகமாவது புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிகழ்ச்சியில் உங்களை நீதிமன்றத்துக்கு அழைத்த டாக்டர் கர்ஜித்ததைப் பார்த்து நானே ஒரு கணம் அரண்டு போனேன். இவரிடம் வரும் நோயாளி ஏதாவது கேள்வி கேட்டு அதற்கு இவர் எப்படிச் சீறுவாரோ என்பதை நினைத்த பொழுது குதம் கலங்கியது :) நல்லவேளை ஜெயமோகனுக்கு இனி எந்த மருத்துவரும் வைத்தியம் பார்க்கக் கூடாது என்று ஃபட்வா போடாமல் விட்டாரே என்று ஆறுதலாக இருந்தது. அடுத்த முறை நீங்கள் விவாதத்திற்குப் போகும் பொழுது சகலவிதமான ஆதாரங்களையும் கூடவே ரெண்டு வக்கீல்களையும் அழைத்துக் கொண்டு போகவும். இன்னொரு டாக்டர் தி.ஜானகிராமன் சிறுகதையில் வந்த டாக்டர் போலப் புலம்பினார். மதுரையில் என் நண்பன் ஒருவன் மிகக் குறைந்த கட்டணம் வாங்கிக் கொண்டு ஏழைகளுக்கு மருத்துவ சேவை அளித்து வருகிறான். அவனுக்கு ஒரு சிலர் பணம் கொடுக்காமலும் போகிறார்கள் இருந்தாலும் அவனும் அவன் குடும்பமும் இவர் சொல்வது போல ரோட்டில் நிற்கவில்லை. யாரை ஏமாற்றினாலும் மருத்துவர்களுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்ற நம் மக்கள் பொதுவாக எண்ணுவதில்லை. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரு மருத்துவர்கள் குறிப்பாக உங்கள் மீது வழக்கு தொடர்வதிலேயே குறியாக இருந்தார்கள் இவர்கள் பார்ட் டைமாக வக்கீல் வேலையும் பார்ப்பார்கள் போலிருக்கிறது :)

  பொதுவாக நான் கவனித்த வரையில் நம் மருத்துவர்களிடம் எளிய நோயாளிகளை ஒரு அலட்சியபாவத்துடன் நடத்தும் போக்கு இருக்கிறது. இதில் நிச்சயம் விதி விலக்குகள் இருக்கின்றனர். என் நண்பர்கள் ஒரு சிலர் வரும் ஒவ்வொரு நோயாளியையும் மரியாதையுடனும் அக்கறையுடனும் நடத்துவதையும் கண்டிருக்கிறேன். ஆனால் பொதுவாக ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேலான நோயாளிகளைப் பார்க்கும் பொழுது அவர்களிடம் ஒரு வித சலிப்பு தோன்றி நோயாளிகளை அலட்சியமாகவும் ஒரு சில வேளைகளில் அவமானகரமாக நடத்துவதும் நடக்கிறது. அரசு மருத்துவமனைகளில் இதை நீங்கள் நேரடியாகவே காணலாம். இவர்கள் நிச்சயம் கடினமான ஒரு படிப்பை படித்துள்ளவர்கள். சாதாரணர்களை விட அறிவு நிலையில் பல படிகள் மேல் உள்ளவர்கள். உயிர் காக்கும் பொறுப்பு மிக்கவர்கள். உண்மைதான் ஆனால் இவர்களிடம் வரும் ஒவ்வொரு நோயாளியும் அவர்கள் எவ்வளவுதான் ஏழ்மையானவர்களாகவும் விபரமில்லாதவர்களாக இல்லாதவர்களாக இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தான் என்பதைப் புரிந்து கையாள்வதில்லை. மேலும் நோயாளிகளுக்கு நோய் குறித்த முழு விபரங்களும் அறியத் தரத் தேவையில்லை என்றே நினைக்கிறார்கள். கேட்ப்பவர்களுக்கும் கூடச் சொல்லுவதில்லை. உனக்கு இதெல்லாம் தெரியாது சொன்னாலும் புரியாது தேவையுமில்லை நான் கொடுக்கும் மருந்தை சாப்பிட்டு விட்டுப் போ என்பதே இவர்களது பெரும்பான்மையினரது அணுகுமுறையாக இருக்கிறது. நூற்றுக்கணக்கான நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் இவர்கள் நேரம் எடுத்து அக்கறையுடன் சொல்லத் தேவையில்லை. ஆனால் தேவைப் படும் நேரங்களில் சிறிது அவகாசம் எடுத்து அக்கறையுடன் விளக்கினால் நன்றாக இருக்கும். முதலில் எளிமையானவர்களை அலட்ச்சியமாகவும் மரியாதையின்றியும் நடத்தும் போக்கை கை விட வேண்டும். ஒரு முறை மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு என் தாத்தாவை அழைத்துச் சென்றிருந்தேன். எளிமையானவர். அவர் ஊரில் மரியாதையும் கண்ணியத்துடனும் வாழ்ந்து வந்த ஒரு பெரியவர். அவரை செக் செய்ய வந்த இளம் மருத்துவர் “ஏ பெருசு இந்தப் பக்கம் வா” என்றும் “அறிவில்லை” போன்ற கேள்விகளை உதிர்த்தும் மிக எளிமையாகத் தோற்றமளித்த அவரைத் தொடர்ந்து அலட்சியமாகவும் ஏளனமாகவுமே நடத்திக் கொண்டிருந்தார். என் தாத்தா கூனிக் குறுகிப் போனார். அப்படியாகப் பட்ட ஒரு அவமரியாதையை அவர் வாழ்நாளில் யாரிடமும் அனுபவித்தது கிடையாது அவரும் அப்படி யாரையும் நடத்தியது கிடையாது. அவர் இறக்கும் வரை பல தருணங்களில் இந்த அவமரியாதையை கசப்புடன் நினைவு கூர்ந்திருக்கிறார். நம் டாக்டர்களுக்கு மருத்துவத்தை விட மரியாதையைக் கற்றுக் கொடுப்பது முதல் அவசியம்.

  மக்கள் மருத்துவர்களிடம் நம்பிக்கை இழக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மையே. என் வீட்டில் சென்ற மாதம் நடந்த ஒரு துயரமான விஷயத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன். என் நெருங்கிய உறவினரின் மனைவிக்கு சென்னை தி நகர் பஸ் நிலையும் அருகில் மருத்துவமனை நடத்தி வரும் ஒரு டாக்டரிடம் பிரசவத்திற்காக காட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த மருத்துவர் செயற்கை முறையில் கருத்தரிப்பு ஏற்பாடு செய்பவர். (உங்களுக்கு ஆட்சேபணையில்லாவிட்டால் அவரது பெயரையும் முகவரியையும் வெளியிடுவதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் கிடையாது. இதைப் படிப்பவர்கள் இவரைப் போன்ற மருத்துவர்கள் அருகில் போகாமல் நாளைக்கு இன்னொரு உயிர் பறிபோகாமல் இருக்கவாவது என் தகவல் உதவும்) தி நகர் பஸ் நிலையம் அருகே இருக்கும் மருத்துவமனையின் ஒரு பகுதியில் தன் நோயாளிகளுக்கு மருத்துவம் கன்சல்ட்டிங் அளிப்பவர். அந்த முன்னாள் பிரதமர் பெயரில் இருக்கும் மருத்துவமனையில் மட்டுமே பிரசவம் பார்க்க வர வேண்டும் என்றும் பிரசவத்திற்காக வேறு டாக்டர்களிடமோ மருத்துவமனைக்குச் செல்லக் கூடாது கட்டளையிட்டிருக்கிறார். ஒவ்வொரு மாதமும் ஸ்கானிங் செக்கப் என்று பல லட்சம் செலவழிக்க வைத்திருக்கிறார். கீழ் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த என் உறவினரும் லட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து வந்திருக்கிறார். கடைசியாக பிரசவத்திற்கு ஒரு மாதம் முன்பாக பெண்ணிற்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட உடனே அதே டாக்டரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அது நாள் வரை வேறு டாக்டரிடம் போகக் கூடாது என்று தடுத்திருந்த அதே டாக்டர், இந்தப் பெண்ணிற்கு இனி நான் மருத்துவம் பார்க்க முடியாது மிகவும் சிக்கலான கேஸ் பேசாமல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று நிராதரவாக தன் பொறுப்பைத் தட்டிக் கழித்து அவர்களை தன் மருத்துவமனையில் இருந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருக்கிறார். வேறு வழியில்லாத என் உறவினர் அவசரம் அவசரமக எக்மோர் மருத்துவமனைக்குத் தன் மனைவியை அழைத்துச் சென்றிருக்கிறார். அரசு மருத்துவமனையாக இருந்த பொழுதிலும் அவசர சிகிச்சையில் சேர்த்து கூடுமானவரை அவர்கள் தாயையும் சேயையும் காக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அது வரை அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்த டாக்டரின் அலட்சியத்தினாலேயே இந்த நிலை வந்திருக்கிறது என்று அரசு டாக்டர்கள் கடிந்து கொண்டிருக்கிறார்கள். எந்த முயற்சியும் பலனளிக்காமல் அந்த இளம் பெண் வயிற்றி 8 மாதக் குழந்தையுடன் மரணமடைந்தார். குழந்தையை வயிற்றில் இருந்து எடுக்க முடியாமலேயே எரிக்க வேண்டி வந்தது. அந்த சோகத்தில் இருந்து என் சகோதரி குடும்பத்தார் இன்று வரை மீள முடியாமல் வேதனையில் இருக்கிறார்கள். அந்தப் பெண்ணிற்கு மருத்துவம் பார்த்த அந்த டாக்டர் அவர்களிடம் எந்த விபரமும் சொல்ல மறுத்திருக்கிறார். விபரம் அறியாத அந்தப் பெண்ணைத் தவிர வேறு யாரையும் தன்னைச் சந்திக்க அவர் அனுமதித்ததில்லை என்று சொல்கிறார்கள். இவ்வளவு நாட்களாக லட்சக்கணக்கில் கறந்து விட்டு கடைசியில் ஒரு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு முக்கிய தருணத்தில் நான் மருத்துவம் பார்க்க மாட்டேன் அரசு மருத்துவமனைக்கு எடுத்துக் கொண்டு போ என்று சொல்வது எந்தவிதமான தொழில் தர்மம்? எந்தவிதமான மனிதாபிமானம்? உறவினர்கள் கெஞ்சிய பொழுதும் மறுத்து வெளியில் அனுப்பிய அந்த டாக்டர் ”ஆண்டவன் என் பக்கம் இருந்தால் உன் மனைவி பிழைக்கவே மாட்டாள் என்று சாபமும் இட்டிருக்கிறார்”. அந்த டாக்டர் மீது யார் எந்த நடவடிக்கை எடுக்க முடியும்? இதைப் போன்ற டாக்டர்களை கட்டுப் படுத்த டாக்டர்கள் அமைப்பு என்ன செய்ய இருக்கிறது? இவ
  ர்களிடம் செல்வாக்கு இருக்கிறது “வித்யா” கர்வம் இருக்கிறது, ஏழைகளிடம் கறந்த பணம் இருக்கிறது ஆனால் அவர்களையே நம்பி வந்த ஒரு ஏழைப் பெண்ணின் மீது மனிதாபிமானம் மட்டும் இல்லாமல் போய் விட்டிருக்கிறது.

  உங்களது நேர்மையான துணிவான கேள்விகள் இவரைப் போன்ற மனிதாபிமானமற்ற மருத்துவர்கள் ஒரு சிலரின் மனசாட்சியையாவது உலுக்கினால் அதுவே இந்த நிகழ்ச்சியில் விளைந்த ஒரு பயனாக இருக்கும்

  அன்புடன்
  ராஜன்

 23. kthillairaj

  ஒரு மருத்துவர் கூட போலியான மருந்துகள் அதிகமாகிவிட்டது என்பதை புகார் கொடுக்க வில்லை என்பதை தாங்கள் கோபமாக கூறியதை பார்த்தோம், தங்களின் இந்த கருத்துக்கு நாங்கள் தலைவணங்கி நன்றி சொல்கிறோம்

 24. eraniel senthil

  As a doctor myself especially inside an icu enviornment i will never deny these allegations.. i always beleive all doctors should follow simple rules.This can be avoided only if we treat patients with Equality, (independent of their financial status,NRI status,political clout),

  other desireable qualities would be maintaining,

  Accountability(Do not be surprised if somebody asks,How do you know the instrument you just just used is sterilised upto standards,and what is the quality controlguideline you follow?,Have you ever been taught a proper handwashing technique?Doctor when did you change your ventilator breating circuit last?)

  Transparency(Donot be surprised if someone asks, are you registered with IMC, What mistakes you have made in your career,How many times have you managed to be scot free),(Can you confidently publish your’s / Hospital’s performance in any area ,Can you compare in the open to international standards)

  Standardisation(our quality as a medical practitioner varies from -150% to +150%,so donot be surprised if anybody asks us ‘where did you study?,and How does that place differ from AIIMS/MANIPAL’ )(Doctor you were practising which guideline on my grand father? why did your junior just practise another method?)

  Auditing our practise against established standards,(So donot be surprised if you are asked,What standards/guideline s do you follow in managing CPR for in hospital cardiac arrest,How many doctors in the hospital practise the same guideline, For those not practising the guidelines what solution has been suggested to bring the practise to acceptable levels?)

  Above all Respect for another human being, (our nurse community),proper utilisation of human resources, we should consider tham as an asset rather than make them a furniture.Empowerin g them and raising their standards is so vital,otherwise the medical system will always remain handicapped. (like the majority of women in india, who represent 50% of us don’t express themselves adequately, lack confidence,How do we expect to succeed as a nation with only half of us trying to function effectively. )

Comments have been disabled.