உப்புவேலி பற்றி பாவண்ணன்

உப்புவேலி புத்தகத்தைப் படித்துமுடித்ததும் இந்தச் சம்பவம்தான் நினைவில் மோதியது. வியாபாரிகளாக நுழைந்த ஆங்கிலேய நிறுவனம், சுரண்டிக்கொள்வதற்கான எல்லா வளங்களுடன் இந்தியா திறந்து கிடப்பதைக் கண்டறிந்துகொண்ட பிறகு, படிப்படியாக தன் சுரண்டலை நிகழ்த்தியது. சுரண்டுவது என முடிவெடுத்துவிட்ட பிறகு, அதற்கு எல்லை வகுத்துவிட முடியுமா என்ன? சட்ட விதிகளுக்கு உட்பட்ட சுரண்டலை நிறுவனத்துக்ககாகவும் சட்ட விதிகளுக்குப் புறம்பான சுரண்டலை தன் சொந்த லாபத்துக்காகவும் செய்தார்கள். நில வரி முதல் உப்பு வரி வரைக்கும் அந்த நோக்கத்திலேயே விதித்து கறாராக வசூலித்தார்கள். உப்புக்கு வரி போட்டு என்ன சம்பாதித்துவிட முடியும் என்று இப்போது தோன்றலாம். சாதிமத வேறுபாடின்றி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் எல்லோரும் வாங்கிப் பயன்படுத்தும் ஒரு பொருள் உப்பு. ஒருவருக்கு ஒரு வேளைக்கு ஒரே ஒரு கரண்டி உப்பு என்று வைத்துக்கொண்டால்கூட, முப்பதுகோடி பேருக்கு ஒரு வேளைக்கு முப்பதுகோடி கரண்டி உப்பு தேவைப்படுகிறது. ஒரு கரண்டி உப்பு என்பதை ஐந்து மில்லிகிராம் என்று கணக்கு வைத்துக்கொண்டால்கூட ஒரு கோடி பேருக்கு இருநூறு மூட்டை உப்பு தேவைப்படுகிறது. முப்பது கோடி பேருக்கு ஆறாயிரம் மூட்டை. ஒரு மூட்டைக்கு மிகச்சிறிய தொகையை மட்டுமே வரியாக வசூலித்தால் எவ்வளவு கிடைத்திருக்கும் என்பதை நாம் கணக்கு போட்டுப் பார்த்துக்கொள்ளலாம். இது ஒரு வேளை கணக்கு. இப்படியே ஒரு நாள் கணக்கு, ஒரு மாதக்கணக்கு, ஓராண்டுக் கணக்கு என கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு மயக்கமே வந்துவிடலாம். இவ்வளவு தொகையா உப்பு வரியாகச் சுரண்டப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது என்று அதிர்ச்சியுடன் தோன்றலாம்.

உப்புவேலி நூல் குறித்து பாவண்ணன் கட்டுரை.

முந்தைய கட்டுரைவாசகனும் நட்பும்
அடுத்த கட்டுரைடொரெண்டோ விழா- ரசனை ஸ்ரீராம்