நண்பர்களுக்கு
இன்று சென்னையிலிருந்து நீண்டபயணம் கிளம்புகிறோம், நானும் அருண்மொழியும். தோராயமான பயணத்திட்டம் இது.
ஜூன் 11 முதல் 22 வரை கனடா ,டொரெண்டோ
ஜூன் 23 முதல் 26 வரை பாஸ்டன்
ஜூன் 26, 27, 28 (வெள்ளி – ஞாயிறு) – வாஷிங்டன் டிசி
ஜூன் 29, 30 & ஜூலை 1 – நியு ஜெர்சி, நியு யார்க்
ஜூலை 2 & 3 – ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியா
ஜூலை 4 – கனெக்டிகட்
ஜூலை 5 முதல் 10 – டொலீடோ, டெட்ராய்ட், மிச்சிகன், பிட்ஸ்பர்க்
ஜூலை 11,12,13 – ராலே, வடக்கு கரோலினா
ஜூலை 14 முதல் சான் ஃபிரான்சிஸ்கோ
அமெரிக்கா அதன் நாகரீக வளர்ச்சி, பொருளியல் வெற்றிக்கு அப்பால் அழகிய நிலம் என்றே என் மனதில் பதிவாகியிருக்கிறது. நீர்நிலைகள், மலைகள். குறிப்பாக இம்முறை செல்கிறோம் என்றதுமே மௌண்ட் சாஸ்டா என்பது நெஞ்சில் எழுந்தது. அதைப்பார்க்கப்போகிறோம் என்பதே இனிக்கிறது
ஒவ்வொரு ஊரிலும் பொதுச்சந்திப்புகளும் தனிச்சந்திப்புகளும் உண்டு. அவை இந்த இணையதளத்தில் அறிவிக்கப்படும். விரும்பும் நண்பர்கள் வரலாம்.