«

»


Print this Post

சுஜாதாவின் அறிவியல்


அன்பு ஜெ,

சுஜாதாவின் சிறுகதைகள், நாவல்கள், கணையாழியின் கடைசிப்பக்கக் கட்டுரைகளின் நையாண்டி, திருக்குறள் பொழிவுரை, நானூறு காதல் கவிதைகள், கூரிய சினிமா வசனங்கள், கற்றதும் பெற்றதும், மற்றும் அவரின் கவிதை மோப்ப சக்தி, ஹைக்கூ அறிவு, ஆகியவற்றை இனிமேலும் எவரும் விரித்து எழுதத் தேவையில்லை.

பல்லவன் பஸ் லேட்டா வந்ததைப் பற்றியோ, பாத்ரூம் குழாயில் தண்ணீர் வராததைப் பற்றியோ அடி, தொடை, தளை தட்டாமல் உடனே ஒரு எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமோ, ஹைக்கூவோ, விஞ்ஞானச் சிறுகதையோ, கட்டுரையோ எழுதிவிடும் வல்லமை படைத்தவர் அவர். அவரின் தமிழ் நடையால் பாதிக்கப்படாதவர் கோணங்கி மட்டுமே என்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். உண்மைதான்.

தமிழில் அறிவியல் எழுதும் முதல் முன்னோடியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர் சுஜாதா. தற்போது தமிழில் கிடைக்கும் ஓரளவேனும் தரமான, எல்லாருக்குமான அறிவியல் (Popular Science) எழுத்து பெரும்பாலும் அவருடையதே. போட்டியே இன்றி தமிழ் அறிவியலின் சிம்மாசனத்தில் அவர் மட்டுமே வீற்றிருந்தார். தொடரோ, துணுக்கோ அவர் எதை எழுதினாலும் அதை உடனே பதிப்பிக்கவும் படிக்கவும் உலகத் தமிழ்ச் சமுதாயமே காத்துக் கிடந்தது.

ஆனால், அறிவியல் கட்டுரைகளில் போகிற போக்கில் தன் வழக்கமான துள்ளள் மொழியின் ரசிப்பில் மேம்போக்கான எண்ண ஓட்டங்களை எழுதிவைத்தாரே தவிர, அவர் எழுதுவது அறிவியல் என்றோ, அதிலும், தான் அறிவியல் படித்து அறிவியலைத் தொழிலாக மேற்க்கொண்டவன் என்பதால், தன் எழுத்துக்களை, சம கால நவீன அறிவியலின் நம்பிக்கைக் குரலாக படிப்பவர்கள் எடுத்துக்கொள்ள நேரும் என்ற உண்மையின் தீவிரத்தையோ அவர் உணர்ந்திருந்தாரா, தன் மேல் உள்ள அதீத பொறுப்பின் பாரம் அறிந்தாரா தெரியவில்லை.

ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து, கடவுள் இருக்கிறார போன்ற புத்தகங்களில் சுஜாதா முன் வைத்திருக்கும் அறிவியல் தீவிர விவாதத்துக்குரியது. காட்டாக, கடவுள் இருகிறாரா -விலிரிந்து ஸாம்பிளுக்கு மிகச் சுருக்கமாக சில:

1.’பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து, அன்று உடனே விழுங்கி கரந்து,உமிழ்ந்து, கடந்து, இடந்தது கண்டும் தெளிய கில்லீர்’ என்னும் நம்மாழ்வாரைப் போல் அத்தனை நிச்சயமாக சொல்லமுடியாமல் தவிக்கிறார்கள் விஞ்ஞானிகள் (பக்கம் 34).

2. கடவுளே பார்க்காத காட்சியாக, கேளாத கானமாக், புரியாத வார்த்தையாக இருக்கலாமல்லவா (பக்கம் 36).

3. கடவுளுக்கு ஒரு ‘மனம்’ இருக்கிறது என்பதை பெரும்பாலான அறிஞர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். கடவுளே ஒரு மனம் தானோ என்று வியக்கிறார்கள் (பக்கம் 53).

4. எனவே கடவுள் இருக்கிறார என்ற கேள்விக்கு அறிவியலின் பதில் – “இருக்கலாம்’. ஆன்மிகத்தின் பதில் “இருக்கிறார்”. என் பதில் it depends.

இவை சுஜாதா என்ற தனி மனிதரின் கருத்து என்றால் எந்தச் சிக்கலும் இல்லை.

அறிவியல் இப்படிக் கூறுகிறது, விஞ்ஞானிகள் இப்படிக் கூறுகிறார்கள் என்ற வரிகள் மறு விமர்சனதிற்க்கும் நேர்மையான கண்டனத்துக்கு உரியவை. இதை முழுமுதல் உண்மையென நம்பிப் படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் சாதாரண வாசகர்களுள் விளையும் சிந்தனை நிகழ்வுகள் ஆபத்தானவை அல்லவா?.

தமிழில் எழுதிக் கொண்டிருக்கும், எழுதப்போகும் எவரையும் பாதிக்கும் அவரின் அபார நடையை நீக்கிவிட்டால், மேற்சொன்ன இரண்டு புத்தகங்கள் மற்றும் ஏன் எதற்க்கு எப்படி, தலைமைச் செயலகம், ஜீனோம், உயிரின் ரகசியம் போன்றவற்றில் உள்ள ஒட்டு மொத்த விஷயங்கள், ஆங்கிலம் படிக்கத்தெரிந்த ஒரளவு பொது அறிவுடைய எவரும் நெட்டில் தட்டிப் பார்த்துச் சொல்லி விடக்கூடியதே.

படிக்கும்போது ஒரு பட்டாம்பூச்சி பறக்குமே தவிர. ’மனுஷனுக்கு எவ்வளவு விஷயம் தெரிஞ்சுருக்கு பாரு’ என்று பிரம்மிக்கத் தோன்றுவதோடே அவை நின்றுவிடுகின்றனவே அன்றி படித்து முடித்ததும் வாசகனுக்குள் அடிப்படையான, ஆழமான அறிவியல் புரிதலை, தெளிவை அவை நிகழ்த்துவதில்லை. அவற்றில் ஆழமான அறிவியலின் தெளிவோ, தர்க்க ஒழுங்கின் கடுமையோ இல்லை. அடிப்படையான தகவல் தவறுகளும் (factual errors and mistakes) இவற்றில் உண்டு.

அறிவியலைப் பாடமாகப் படிக்காத சில எழுத்தாளைர்களிடம், சாதாரண விஷய விவாதங்களில் கூட, தேர்ந்த விஞ்ஞானியின் துல்லியத்துடன், பிறழாத நடுநிலையோடு கறாரான உண்மைகளின் வழி அலசி ஆராய்ந்து தெளியும் அணுகுமுறையைக் காணலாம். அவர்களை உலகத்தரம் வாய்ந்த தேர்ந்த சமூக விஞ்ஞானிகள் என்று துளி சந்தேகமும் இன்றி உடனடியாகக் கூறி விட முடியும். அறிவியலைப் பாடமாகக் கற்ற சுஜாதாவின் அறிவியல் எழுத்துகளில் ஏனோ அது காணக்கிடைப்பதில்லை.

அறிவியல் கட்டுரைகளுக்கு உரிய கறாரான நடுநிலையான விவாதத்தில், தன் தனிமனித நம்பிக்கையை வெல்ல அவராலேயே முடிந்ததில்லை. இதை அவரே, “ஓர் ஆறுதல் வார்த்தை என்ன என்றால் இதையெல்லாம் படித்ததில் உங்களுடன் நானும் குழம்பித்தான் போகிறேன் என்று சொல்ல விரும்புகிறேன்” (க. இ. பக்கம் 36) என்று எழுதுகிறார். அவரின் அறிவியல் விவாதங்கள் நமக்குக் காட்டுவது நாலாயிர திவ்ய பிரபந்தமும் சுலோகங்களும் கழுத்தை நெரிக்க விழிபிதுங்கி மூச்சு முட்டும் ஒரு நடுவயது வைணவரையே. அறிவியலைத் தொழிலாக மேற்கொள்ள நேர்ந்த ஒரு அறிவியல் தொழிலாளியே அவர்.

என் வலைப்பூவிலோ, வேறு எங்கோ அறிவியல் தொடரோ கட்டுரையோ எழுத நேர்ந்தால் சின்ன சுஜாதா அல்லது சுஜாதா தாசன் என்ற பெயரை ஒருவேளை நானே எனக்கு வைத்துக் கொள்ளக் கூடும். என்னை அறிந்தவர்கள் ஆச்சரியப்பட மாட்டார்கள்.

எந்த ஒரு தமிழ் இளைஞனயும் போல சுஜாதாவின் எழுத்துகளை நானும் சின்ன வயசிலிருந்தே வாசித்து வருகிறேன். அந்த வயதில் ஜேம்ஸ் பாண்ட், இரும்புக்கை மாயாவி, கமல் ஆகியோருக்கு நிகரான ஒரு ஹீரோவே அவர். அச்சில் வந்த அவரின் எல்லா வரிகளையும் படித்திருக்கும் அவரின் தீவிர ரசிகன் நான்.

எளிமையாகவும் சுவையாகவும் சொல்ல நினைத்து மேம்போக்காக எழுதிவிடுவது -அறிவியலைப் பொறுத்தவரை தவறானது, ஆபத்தானதும் கூட என்பதே நான் சொல்ல நினைத்தது.

இதையெல்லாம் வேறு யாரேனும் எழுதியிருக்கலாம். நானே எழுத நேர்ந்ததில் எனக்கு வருத்தமே.

வேணுகோபால் தயாநிதி

அன்புள்ள வேணு

நீங்கள் சொன்ன இதே விஷயங்களை இதற்கு முன்னரே பல அறிவியலாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். சுஜாதாவை முன்னுதாரணமான அறிவியல் எழுத்தாளர் என்று சொல்ல முடியாதென்பதே என் எண்ணமும். அவரது பாணி உண்மையில் அறிவியலுக்கே எதிரானது. எளிமையாக்கிச் சொல்கிறேன் என்ற பாவனையில் அவர் அறிவியல் விஷயங்களை சல்லிசாக ஆக்குகிறார். பலசமயம் ஓரிரு வரிகளில் சொல்லிவிட்டு பக்கவாட்டில் திரும்பி வேடிக்கை காட்டுகிறார். தமிழில் அறிவியல் எழுதவந்த பலரும் சுஜாதாவை முன்னுதாரணமாகக் கொண்டமையால் எளிமையான, ஆனால் அறிவியலில் ஈடுபாட்டை வளர்க்கக்கூடிய, கட்டுரைகள் எழுதுவதற்கான முனைப்பே இங்கே திசை திருப்பப்பட்டுவிட்டது. அறிவியல் தமிழுக்கு சுஜாதாவின் பங்களிப்பு எதிர்மறையானது என்று சொல்ல வருத்தமாகவே இருக்கிறது

அதேபோல அறிவியல்புனைகதைகளுக்கும் அவரது பங்களிப்பு அதிகமில்லை. [அவர் இருக்கும்போதே நான் எழுதிய பழைய கட்டுரையில் அதைச் சொல்லியிருக்கிறேன்.]. அவரது அறிவியல் கதைகள் அறிவியல்புனைவு குறித்த தெளிவான பார்வை அற்றவார். எளிய திகில் கதைக்கு அல்லது துப்பறியும் கதைக்கு ஒரு அறிவியல் அடிக்குறிப்பு கொடுக்கவே அவர் முனைந்தார்.அறிவியல் புனைகதை என்பது ஒன்று அறிவியலின் ஒரு கேள்வியை புனைவு மூலம் சந்திப்பதாக இருக்கும். அல்லது வாழ்க்கையை சித்தரிப்பதற்காக அறிவியலை குறியீடாக ஆக்கும். சுஜாதா பெரும்பாலான தருணங்களில் வேடிக்கை காட்டவே அறிவியலை பயன்படுத்துகிறார். விதிவிலக்குகள் சிலவே. சுஜாதாவின் பல அறிவியல் கதைகளில் அவற்றின் அறிவியல் அடித்தளம் பலவீனமானது – என்னைப்போன்ற பொது வாசகனே சுட்டிக்காட்டும் அளவுக்கு

சுஜாதா எழுதிய பிற தளங்களில் தத்துவம் இலக்கியக் கோட்பாடு சார்ந்த எழுத்துக்கள் மிக மேலோட்டமானவை, தவறானவை, உபயோகமற்றவை என்ற வகைகளிலேயே அடங்குபவை. அவற்றை அவர் பொருட்படுத்தி வாசிக்கவும் இல்லை, புரிந்துகொள்ளவும் இல்லை. இதை அவற்றை பல ஆண்டுகளாக கவனிப்பவன் என்றமுறையில் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அதை அவை வெளிவந்த காலங்களிலேயே சுட்டிக்காட்டியிருக்கிறேன்

சுஜாதாவின் பங்களிப்பு என்பது இவற்றில் அல்ல. அவரது நடையில். உரையாடல்களை அவர் அமைத்த விதத்திலும் கதைச்சூழலை சித்தரித்த விதத்திலும். Hஎமிங்வே முதல் ஜான் அப்டைக் வரையிலான அமெரிக்க எழுத்தாளர்களிடம் இருந்து உருவான நடை தமிழில் அவருக்கு இருந்த பயிற்சியுடன் இணைந்து அவரது தனித்தன்மையாக ஆகியது. அதுவே முதன்மையாக அவரது பங்களிப்பு. அத்துடன் நாடகங்களிலும் சில சிறுகதைகளிலும் வெளிப்பட்ட பிராமண மத்தியவற்க சித்தரிப்பின் யதார்த்தம். சில சிறுகதைகளை தமிழின் சாதனைகள் என்பேன்.

அவ்வளவுதான் அவரது இடம். சுஜாதா தமிழின் நல்ல எழுத்தாளர்களில் ஒருவர். ஆதவன், இந்திரா பார்த்த சாரதி ஆகியோரின் தளத்தைச் சேர்ந்தவர். அசோகமித்திரன், சுந்தர ராம்சாமி ,தி ஜானகிராமன்,கு அழகிரிசாமி போன்றவர்களுக்கு பல படிகள் கீழே நிற்பவர். அவர்களின் தரிசனமும் தீவிரமும் ஒருபோதும் அவரிடம் கூடியதில்லை. அவரது எல்லைகள் மிக மிக வலுவானவை. அவரது எழுத்துக்களில் மிகப்பெரும்பாலானவை இதழியல் தேவைகளுக்காக எழுதபப்ட்ட ஆழமற்ற வெற்றுரசனைக்குரிய அவசர வெளிப்பாடுகள்தான்.

சுஜாதாவை முற்றிலும் நிராகரிக்கும் ஒரு தரப்பு உண்டு, சிற்றிதழ்களில். அதை நான் ஏற்கவில்லை. அவரது ந்டை மற்றும் சிறுகதைகளை தமிழின் இலக்கிய சாதனையாக முன்வைத்துவருகிறேன் – இருபது வருடங்களாக.. அவர்களிடம் விவாதிக்க தயாராக இருக்கிரேன். அவரை இலக்கியமேதை என்று தூக்கி வைக்கும் மேலோட்டமான வாசகர்களை முற்றிலுமாக புறமொதுக்குகிறேன். இதுவே என் நிலைபாடு.

சுஜாதாவின் அறிவியல் நூல்களை முழுமையாக தவிர்த்துவிடலாம் என்றுதான் நான் பொதுவாசகர்களுக்குச் சொல்வேன். கொஞ்சம் காலாவதியானவை என்றாலும் நான் பரிந்துரைப்பவை சோவியத் ருஷ்யாவால் வெளியிடப்பட்ட அறிவியல் நூல்கள் -ராதுகா மற்றும் முன்னேற்ற பதிப்பக ஆக்கங்கள். அனைவருக்குமான’உடலியங்கியல் ,அனைவருக்குமான இயற்பிய்ல், நம்முள் செயல்படும் சைபத்தீனியம், வேதியயலைப்பற்றிய கதைகள், மனிதன் எங்ஙனம் பேராற்றவல் மிக்கவன் ஆனான்பொழுதுபோக்கு பௌதீகம் அனைவருக்குமான இயற்பியல் போன்றவை முக்கியமான ஆக்கங்கள். அவை தமிழின் அறிவியல் கலைச்சொற்களை உருவாக்கியவை. போலியாக வேடிக்கை காட்டாமல் அறிவியலையே ஆர்வமூட்டும் விஷயமாக முன்வைத்தவை. அத்தனை நூல்களையும் நான் வாங்கி சேமித்தேன். என் பிள்ளைகளுக்கும் கொடுத்தேன். ஒரு பொதுவாசகனாகிய நான் அறிவியலுக்குள் நுழைய அவை உதவின

அடுத்தபடியாக நெடுஞ்செழியன் கல்வியமைச்சராக இருந்த எழுபதுகளில் தமிழில் பட்டப்படிப்புகளைக் கொண்டு வருவதற்காக உருவாக்கப் பட்ட பாடநூல்களைச் சொல்வேன். கிட்டத்தட்ட 600 நூல்கள் வெளி வந்துள்ளன. எல்லா துறைகளிலும். பொது வாசகனும் எளிதாக தமிழில் வாசிக்கலாம். இவற்றையெல்லாம் எவரேனும் மீண்டும் தமிழில் பதிப்பிப்பது நல்லது. ருஷ்ய நூல்களுக்கு பதிப்புரிமை இல்லை

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7587

40 comments

Skip to comment form

 1. gomathi sankar

  சுஜாதா வேடிக்கை காட்டவே அறிவியலைப் பயன்படுத்தினார் என்பது உண்மையாகவே இருக்கலாம்.ஆனால் அவருக்கு முந்திய எழுத்தாளர்கள் அதற்கு கூட அதைப் பயன்படுத்தவில்லை.சிறு வயதில் நீங்கள் சொன்ன சோவியத் அறிவியல் புத்தகங்களை வாங்கிப் படித்து மண்டை காய்ந்தவர்களில் நானும் ஒருவன்.ஏற்கனவே அறிவியலின் மீது ஒரு பயத்துடன் இருந்த என்னை அவற்றின் தட்டையான மொழி மேலும் பயமுறுத்தவே செய்தது.அப்போது ஓடியவனை அதன் பிறகு சுஜாதா தான் கணையாழியில் மொபி ஸ்ட்ரிப் ஸ்ட்ரிங் தியரி என்று பேசி உள்ளே கொண்டுவந்தார். தமிழ் இலக்கியத்தின் வரம்புக்குள் அறிவியலைக் கொண்டுவந்தவர் அவரே.அசிமாவ் பற்றி கூட இதே போல் சொல்லப் பட்டது உண்டு.அவரது பவுண்டேசன் நாவல்களில் நிஜ அறிவியல் என்பது குறைவே.ஆர்தர் கிளார்க் போன்றவர் அல்லர் அவர்.ஆனால் அசிமாவ் கொடுத்த மன விரிவு புறக்கணித் தக்கதல்ல.அவர் ஒரு திசை திறப்பாளர்.அவரைப் பிடித்து தொங்காமல் தாண்டிச் செல்லவேண்டும் என்பதே உண்மையே.ஆனால் அவரது அறிவியல் கதைகளைப் படிக்கவே வேண்டாம் என்பது தொட்டியோடு சேர்ந்து குழந்தையையும் தூக்கி எறியச் சொல்வது போலதான் தெரிகிறது.[ஏறக் குறைய பாலகுமாரனைப் பற்றியும் இதே போன்ற ஒரு கருத்தைதான் சொன்னீர்கள் என்று நினைவு.]உங்களது கூர்மையான தர்க்க அறிவு இவ்வளவுதான் இது அவ்வளவுதான் அவர் என்று எல்லாவற்றையும் ஒரு சூத்திரத்துக்குள் கொண்டுவந்து விடுவதாக தோன்றுகிறது.ஆனால் அது அவ்வளவு எளிதா என்ன.

 2. ramalingamn

  அறிவியலை மட்டுமல்ல தமிழையும் அவர் எவ்வளவு மேலோட்டமாக புரிந்து கொண்டுள்ளார் என்பதற்கு உதாரணம் திருக்குறளுக்கு அவர் எழுதிய சுருக்க உரை.

 3. Dhandapani

  ஆனால் இப்புத்தகங்களை ஒரு நுழைவாக பயன்படுத்த இவை சரியானவயே. ஜூனியர் விகடன்-இல் மரபியல் குறித்து சுஜாதா எழுதியது என்னை பாதித்தது. பண்புகள் எவ்வாறு DNA லிருந்து mRNA பிறகு புரதங்கள் வழியாக வெளிப்படுத்துவதை எளிதாக விளக்கியிருப்பார். அது என்னை நிச்சயம் வசீகரித்தது. நான் IPT (Iso-pentenyl transferase) Gene – Sequencing செய்து அமைப்பை சரி பார்த்த பொது Jacob and Monad நினைவுக்கு வரவில்லை. ஜூனியர் விகடன் கட்டுரையில் இருந்த சித்திரம் தான் நினைவுக்கு வந்தது. எனக்கென்னவோ அவர் சிறிது கீழிறங்கி அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிமைப் படுத்தினார். சிறிது பிழைகள் இருக்கலாம்! அதற்காக அவர் ஞானியிடமோ இன்னும் சில சமூகவியல் எழுத்தாளர் அளவுக்கு ஒப்பிட வேண்டிய அளவுக்கு குறைவான ஞானம் பெற்றவர் இல்லை. நான் அவரிடம் பேசியதில்லை என்பதையும் கூற விரும்புகிறேன். அதற்காக வருந்துகிறேன். அவர் நவீன அறிவியலை பரப்பியதில் முன்னோடி என்று கூறலாம் எனப்படுகிறது. அவரின் பணி applied research ! கலாம் அவர்களை போல ஆய்வுகள் மேற்கொள்ள BHEL ஏதுவானதாக இல்லாமல் இருந்திருக்கலாம்!

 4. Satheesh Kumar.V

  சுஜாதா எழுதியது அறிவியல் பாட புத்தகத்திற்காக அல்ல.. வெகுஜன ரசனைக்காக.. அதிலும் அறிவியலை கொஞ்சமாவது எளிமைப்படுத்தி மசாலாவும் சேர்த்தால் தான் சாதாரண வாசகனுக்கு ஏதாவது புரியும்..அவர் எழுதியது அறிவியலைப் பற்றி..(“about ” சயின்ஸ்).. அறிவியல் அல்ல.. மேலும் அவர் எல்லாவற்றையும் எளிமைப்படுத்தி கொன்று போட்டு விட்டார், அதனால் அறிவியலைப்பற்றி அவர் எழுதியவைகளைப் படித்து இன்று எத்தனையோ பேர் அறிவியலுக்கே வராமல் போய்விட்டார்கள் என்ற தொனியில் கதறுவது கொஞ்சம் ஓவர்.. அவரின் நூல்கள் ஒரு நல்ல திசை காட்டி போல.. திசை மட்டும் தான் காட்டும்.. திசை பார்த்து நாம் தான் செல்ல வேண்டும். இலக்கியத்தில் அவருக்கு என்ன இடம் இருக்கிறதோ இல்லையோ, அறிவியலை பிரபலப் படுத்தியதில் அவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க ஒன்று..!! மற்ற மூன்றாம்தர கிளு கிளுப்பு எழுத்தாளர்களுக்கு அவர் எவ்வளவோ மேல்..!!!

 5. வேணுகோபால் தயாநிதி

  அன்பு ஜெ,

  மறுபதிப்பு இல்லாத நிலையில் ருஷ்யப் பதிப்பகங்களின் அறிவியல் நூல்கள் இன்று ஏறக்குறைய வழக்கொழிந்து விட்டன. ’வேதியலைப் பற்றிய 108 கதைகள்’ என்னிடம் உள்ள அரிய புத்தகங்களுள் ஒன்று. ’நான் ஏன் என் தந்தையைப் போல் இருக்கிறேன்’ நூலை நண்பர் ஒருவரிடமிருந்து ஒளிநகல் எடுத்து வைத்திருக்கிறேன். யா. பெரல்மானின் ’பொழுதுபோக்கு பௌதீகம்’ ’அனைவருக்குமான உடலியங்கியல்’ (ஆசிரியர் நினைவில்லை) ஆகியவற்றை ஏழாம் வகுப்பு படித்த போது போது கிளை நூலகதிலிருந்து எடுத்து வாசித்திருந்தேன். சில வருடங்களுக்கு முன் ஒளிநகல் எடுக்கத் தேடியபோது இவை அங்கில்லை. பழசாகிக் கிழிந்து போனதால் குப்பையில் போட்டு விட்டார்கள்.

  ஒரு சில பிரதிகளே மீதியுள்ள ருஷ்யப் பதிப்பக புத்தகங்களை நியு செஞ்சுரி புக்ஹவுஸில் மூட்டையாகக் கட்டி, குடோனில் ஒரு மூலையில் கடாசி விட்டார்கள். மனிதன் எங்ஙனம் பேராற்றவல் மிக்கவன் ஆனான் தேடி சில வருடங்களுக்கு முன் பலமுறை முயன்று சென்றதில், கடைசியில் மனமிறங்கி மூட்டையை அவிழ்த்துத் தேடிப்பார்க்க அனுமதித்தார்கள். தூசிப் புழுதியில் கிடந்து தும்மி அல்லாடியதுதான் மிச்சம். இவை எதுவுமே அகப்படவில்லை.

  நெடுஞ்செழியன் கல்வியமைச்சராக இருந்த எழுபதுகளில் தமிழில் பட்டப்படிப்புகளைக் கொண்டுவருவதற்காக உருவாக்கபப்ட்ட பாடநூல்களை நான் கேள்விப் பட்டது கூட இல்லை.

  சுஜாதாவின் அறிவியல் எழுத்துக்களின் மீதான விமர்சனங்கள் மிகவும் குறைவு என்றே தோன்றுகிறது. நீங்கள் எழுதியதைப் படித்திருக்கிறேன். சுஜாதாவின் க்வாண்டம் தியரி விளக்கியானங்களை 2002 வாக்கில் நண்பர் இரா. ஜவஹர் நக்கீரனில் எழுதியதும் பிறகு புத்தகமாக வெளிவந்ததும் தெரியும். அது சென்னை புத்தகக் கண்காட்சியில் (2008) அதிகம் விற்பனையான ஒன்று என்று இந்தச் சுட்டியிலிருந்து அறிகிறேன் http://yugabharathi.wordpress.com/2009/12/30/ .

  பிற விமர்சனங்களைப் பற்றி எனக்குத் தெரியவில்லை.

 6. down under

  Sujatha was a pioneer in how he wrote abt science …(in tamil )
  He wrote about science in a non-serious , unscientific way ..which was very unique and refreshing.

  A good reader of sujatha would know better to not to take him
  verbatim abt whatever he writes abt science.The very nature of his writing is not aimed at being accurate, empirical or factual…its more a dip-and-go approach focussing on variety and fascination.
  This created a unique combination of getting to read about tamil poetry …religion ..literary reviews ….fascination about science and technology etc all in one page of lively prose.

  By doing like this either knowingly or unknowingly ..he evoked that curiosity and fascination about topics ..which .. many of us would have taken a long time to reach with direct approach or even completly missed.

  He was the crude google of that age,For ex I remember him ..writing something about ..”Linguistic structuralism” with an on the go two line comment ..but when I recently had to really read abt it in a “proper text ” and realised that he was not very off target with what he had to say.

 7. sitrodai

  மதிப்பிற்குரிய ஜெமோ,

  ஆதவனை தி.ஜா மற்றும் அசோகமித்ரனை விட சில படிகள் கீழே காட்டுவது ஆச்சர்யமூட்டுகிறது.

  ஆதவனின் சிறுகதைகள் தமிழ் சிறுகதை உலகில் ஒரு சாதனை அல்லவா?

  அவரது கதை சொல்லும் பாங்கும், மொழியை கையாளும் விதமும் அபாரமானது.

  சிறுகதைகளை பொறுத்தவரை, ஆதவன் கண்டிப்பாக தி.ஜா. வகையறாவை சார்ந்தவர் என்றே எண்ணுகிறேன்.

  தங்களின் கருத்தை அறிய விழையும் ஆவலுடன்,

  சிற்றோடை.

 8. ganesan

  ///ஏன் எதற்க்கு எப்படி, தலைமைச் செயலகம், ஜீனோம், உயிரின் ரகசியம் போன்றவற்றில் உள்ள ஒட்டு மொத்த விஷயங்கள், ஆங்கிலம் படிக்கத்தெரிந்த ஒரளவு பொது அறிவுடைய எவரும் நெட்டில் தட்டிப் பார்த்துச் சொல்லி விடக்கூடியதே///
  முட்டாள்தனமான வாதம். அவர் அந்த விசயங்களை எழுதிய காலத்தில் நெட் என்பது அவருக்கும், ஏன், தினந்தோறும் கம்ப்யுட்டரில் வேலை பார்பவருக்குமே கிடைக்காத காலம். (அதாவது பத்து பதினைந்து வருடத்திற்கு முன்பு வரை). இன்றும் எல்லா துறைகளுக்கும் broadband இணைப்பு இல்லாத பல்கலைக்கழகங்கள் கூட தமிழகத்தில் உண்டு. சாதாரண வாசகனுக்கு எளிதில் கிடைக்காத அறிவியல் விசயங்களை அவனுக்கு புரியும் படி எழுதுவதே அவரது நோக்கம். (விட்டால், நெட்டில் கிடைக்கக்கூடிய தமிழ் இலக்கிய நூல்களை சாமிநாத ஐய்யர் ஏன் ஊர் ஒற்றாக தேடினார் என்று கேட்பீர்கள் போல).

  கடவுள் என்று வரும் போது, இறுதிக்காலத்தில் சற்று சார்பு நிலை எடுத்துவிட்டார். ஆனாலும் தன்னை நாத்திகவாதி என்று அவர் கண்பித்துக்கொன்டதே இல்லை. தனது ஆத்திக நம்பிக்கைகளை மறைத்துக்கொண்டதும் இல்லை.

  சிறு வயதில் நம் கையை பிடித்து அ ஆ எழுத சொல்லிகொடுத்த ஆசானைப் போன்றவர் அவர். புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை, அதில் ஒரு சுவையை ஏற்படுத்திக்கொடுத்தவர். வளர்ந்த பிறகு, அந்த ஆளுக்கு அ ஆ தான் தெரியும். குவாண்டம் மெக்கனிக்ஸ் தெரியாது, இவரெல்லாம் என்ன ஆசான் என்று கூறுவது போல அவரது அறிவியலை பழிப்பது நியாமல்ல.
  – கணேசன்

 9. K.R அதியமான்

  //சுஜாதாவின் பல அறிவியல் கதைகளில் அவற்றின் அறிவியல் அடித்தளம் பலவீனமானது – என்னைப்போன்ற பொது வாசகனே சுட்டிக்காட்டும் அளவுக்கு///

  இல்லை. நான் மாறுபடுகிறேன். he knew what he was writing about the scientific base and knowledge was certainly not shallow or superflous. கம்ப்யூட்டர் பற்றிய அவரது ஆரம்ப கால கதைகள், (சொர்கத் தீவு நாவல்) அதை உறுதி செய்கின்றன. மேலும் அவர் சயிஸ்ட் ஃபிக்சன் நாவல்களில் மிக மிக அதிகம் படித்தவர். பெரிய பட்டியல் அது. எனவே..

 10. K.R அதியமான்

  //சுஜாதாவின் அறிவியல் நூல்களை முழுமையாக தவிர்த்துவிடலாம் என்றுதான் நான் பொதுவாசகர்களுக்குச் சொல்வேன். //

  அன்புள்ள ஜெ,

  இது மிக தவறான, மேலோட்டமான, ஏன் அபாயகரமான வாதம். Gross generalisation without any proof. அவரின் கடைசி நூல்களில் ஒன்றான ‘ஜீனோம்’ பாடித்து பாருங்கள். இவ்வளவு அருமையாக, தெளிவாக, விரிவாக அதே சமயம் எளிதில் புரியும்படியாக எழுத இனி ஆளில்லை. அவரின் மிக முக்கிய படைப்புகளை இப்படி ஒரே அடியாக நிராகரிக்க சொல்வது பொறுப்பற்ற செயல் என்றே எனக்கு படுகிறது.

  30 ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய :

  காசலவில் ஒரு உலகம்,
  கம்யூட்டரின் கதை
  சிலிக்கன் சில்லு புரட்சி

  இவை அன்றைய வாசகர்களுக்கு பெரும் சந்தர்பத்தை அளித்தன.
  அன்றும், இன்றும் இப்படி எளிமையாக, தெளிவாக, அதே சமயம் ஆழமாக விஞ்ஞான விசியங்களை எழுத வேறு யாரும் இல்லை என்றே கருதுகிறேன். பெரும் இழப்பு.

 11. va.srinivasan

  கு.அழகிரிசாமி பெயரைக் குறிப்பிட்டது பற்றி மகிழ்ச்சி. சுய பரிதாபத்திற்குள் மூழ்கிப் போன ஆதவனையும், அலுப்புத் தட்டும் மூளை விளையாட்டு ஆடும், எல்லாப் பாத்திரங்களிலும் தானே பேசும் இ.பா. வையும், சுஜாதாவையும் ஒரே தளத்தில் வைத்து விட்டீர்கள். இவகளை விட பல படிகள் உயர்ந்தவர் சுஜாதா. இதழியல் தேவைகள் அவரை நீர்த்துப் போயே இருக்கும்படி செய்துவிட்டன. அதற்கும் அவரே பொறுப்பு. ஜனரஞ்சக வணிக அவா சுஜாதாவுக்கு முன்பும், பின்பும் அவரைச் செய்தது போலவே நீர்த்துப் போக மட்டுமே செய்யும். அது ஒரு மாற்ற முடியா பௌதிக விதி.

 12. va.srinivasan

  மேலும் சில வார்த்தைகள். புதுமைப் பித்தன் எத்தனை அவசரமாக எழுதினாலும், சத்யஜித் ராய் எவ்வளவு படங்கள் எடுத்தாலும் அவர்கள் கலை, உச்சத்திலேயே இருந்தது. அதற்குக் காரணம் அவர்களது எசமானர்கள் அவர்களே. எஸ்.ஏ.பியோ, எஸ்.எஸ்.பாலனோ அல்ல. இதன் பொருள் சுஜாதாவை சாடுவதல்ல. அவர் தெரிந்தோ, வாழ்வில் பெரும்பாலனவற்றைப் போலவே செலுத்தப் பட்டோ (சுஜாதாவின் பிரயோகம்) இவற்றைச் செய்திருக்கலாம். ஒரு ‘க்ளாஸிக்’ அவரிடமிருந்து வராததன் காரணத்தைத் தேடுகிறோம். அவ்வளவே. அவர் பங்கேற்ற திரைப்படங்களில் ஒன்றைக் கூட நல்லபடம் என்று கூறமுடியாது. இதே சமயம் ஜெயகாந்தன் என்னும் ஆளுமையால் ‘உன்னைப் போல் ஒருவனையும்’ (கமர்ஷியல் வெற்றியையும் பெற்ற) ‘சில நேரங்களில் சில மனிதர்கள’யும் தர முடிந்திருக்கிறது.

 13. ramji_yahoo

  எனது இந்த பின்னூட்டத்தை வெளியிடுவீர்களா என்று தெரிய வில்லை.

  கணேசனின் பின்னூட்டத்தின் கடைசி பாராவை இருநூறு சதம் வழி மொழிகிறேன்.

  எனக்கு எல்லாம் தமிழ் எழுத்துக்களை வாசிக்க ஆர்வம் ஏற்படுத்தியவர் சுஜாதா ஒருவரே. இதை சொல்வதற்கோ எழுதுவதற்கோ எந்த வித சங்கோஜமும் வெக்கமும் அவமானமும் எனக்கு இல்லை.
  என் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களால், பெற்றோர்களால் எனக்கு வாசிக்கும் ஆரவத்தை ஏற்படுத்த முடிய வில்லை. அதுவரை மதிப்பெண்களுக்காக மட்டுமே தமிழை படித்து, வாசித்து வந்த நான் சுஜாதாவின் அறிமுகத்திற்கு பிறகே அகநானூறு, பாஞ்சாலி சபதம், தொல்காப்பியம் போன்றவை படிக்க ஆரம்பித்தேன். வைகோ, காளிமுத்து, கலைஞர் போன்றோரின் தமிழ் பேச்சுக்களை கேட்க ஆர்வமும் வந்தது.

  எப்படி ஹிந்தி ஆங்கிலப் பாடல்களை பாடி கொண்டு இருந்த தமிழ் மக்களை , தமிழ்ப் பாடல் முனுமுனுக்க இளையராஜா செய்தாரோ அதே போல தான் நான் சுஜாதவை பார்க்கிறேன்.

 14. ramji_yahoo

  மேலே உள்ள எனது எட்டாவது பின்னூட்டத்தை சேமித்து வைத்து உள்ளேன். வெளியிட வேண்டுகிறேன். இல்லாவிடில் நான் ஒரு தனியான பதிவாக எனது வலைப் பதிவில் வெளியிடும் எண்ணம் உள்ளது. இந்த முரண்டிர்க்கு காரணம் சுஜாதா (குரு) மீது உள்ள பாசம் மற்றும் நன்றிகடன்.

 15. jeevartist

  வேணுகோபால் தயாநிதி, நீங்கள் சொல்லும் ருஷ்ய புத்தகங்கள் மீண்டும் புதிய பதிப்புகளாக நியூ சென்சுரியில் வந்திருக்கின்றன. பொழுதுபோக்கு பவுதீகம் சமீபத்தில் வாங்கினேன்.

 16. ramji_yahoo

  வா ஸ்ரீனிவாசன்

  என்னது சுஜாதா பங்கேற்ற திரைப்படங்களில் ஒன்றை கூட நல்ல படம் என்று கூற முடியாதா.

  ஆமாம் அவர் பங்கேற்ற படங்கள் எல்லாம் குப்பை தான் – உதாரணங்கள்- நினைத்தாலே இனிக்கும், விக்ரம், பாரதி,அஞ்சலி, அந்நியன், ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால்

  இப்போது திருப்தியா பாஸ்

 17. ஜெயமோகன்

  இந்த விவாதத்தில் வரும் கருத்துக்களைப் பார்க்கும்போது இலக்கியவிமரிசனம் என்ற ஒரு துறை இருக்கும் தகவலே கணிசமானவர்களுக்கு தெரியவில்லையோ என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. இலக்கிய விமர்சனம் என்பதே இலக்கியப்படைப்புகளை கூர்ந்து வாசித்து அவற்றை மதிப்பிட்டு அவற்றுக்குரிய இடத்தை தன் நோக்கில் நிறுவிக்கொள்வதுதான். தமிழில் வ.வெ.சு.அய்யர் முதல் வேதசகாயகுமார் வரை விமர்சகர்கள் தமிழில் எழுதிய அத்தனை முக்கியமான படைப்பாளிகளைப்பற்றியும் இதைச் செய்திருக்கிறார்கள். உலகம் முழுக்க இலக்கிய விமர்சனம் இபப்டித்தான் செய்யப்படுகிறது. விமர்சனத்தில் இருந்து எந்த எழுத்தாளனையும் ‘பாதுகாக்க’ முடியாது. என்னுடைய இலக்கியவிமரிசனக்கருத்துக்களை பாரதி முதல் இன்றைய கண்மணிகுணசேகரன் வரை அனைவரைப்பற்றியும் இப்படித்தான் பதிவுசெய்திருக்கிறேன்

  என்னுடைய மதிப்பீட்டை ஏற்றுக்கொள்ளாத ஒருவரை நான் புரிந்துகொள்கிறேன். மாற்றுக்கருத்துக்கள் வழியாகவே இலக்கியப்படைப்பின் மீதான புரிந்தல்கள் விரிவடைகின்றன. ஆனால் அவை தெளிவான தர்க்க முறையுடன் முன்வைக்கப்படவேண்டும். அவற்றை நான் பரிசீலிக்க அவை உதவும். இக்கட்டுரையில் நான் சொன்ன கருத்துக்களை முன்னர் எழுதிய விமர்சனக்கட்டுரைகளில் விரிவாகவே ஆராய்ந்திருக்கிறேன். [சுட்டிகள் முந்தைய கட்டுரையில் பார்க்க]

  சுஜாதாவை வணிக எழுத்தின் தளத்தில் இலக்கிய பிரக்ஞையுடன் செயல்பட்டவர் என்று அங்கீகரிப்பதிலோ அல்லது அவர் ஏராளமான வாசகர்களை வாசிப்புக்குள் கொண்டுவந்தார் என்பதிலோ எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. சுஜாதா அவரது உச்சநாட்களில் சிற்றிதழ் சார்ந்த இலக்கியத் தரப்பால் முழுமையாக நிராகரிக்கப்பட்டவராகவே இருந்தார். கணையாழி உள்ளிட்ட இதழ்களிலேயே அதைப்பற்றிய விவாதங்கள் நிகழ்ந்தன. என்னுடைய தலைமுறை எழுத்தாளர்கள் இலக்கியத்துக்கு வந்த பின்னரே அவரது இந்த இடம் அடையாளம் காணப்பட்டது. குறிப்பாக நான் எழுதவந்தகாலம் முதலே அவரது இடத்தை வலுவாக முன்வைப்பவனாக இருந்தேன். அவருக்காக சிற்றிதழ்ச்சூழலில் தீவிரமான விவாதங்களிலும் ஈடுபட்டு, குமுதத்தில் எழுதப்போக வழிதேடுகிறேன் என்று வசைபாடவும்பட்டேன்.

  அதேசமயம் அவரது இலக்கியச்சாதனைகள் மிக எல்லைக்குட்பட்டவை என்பதே என் மதிப்பீடு. அதற்கான காரணங்களையும் தொடர்ச்சியாக எழுதிவந்திருக்கிறேன். முக்கியமான முதற் காரணம் அவர் இலக்கிய ஆக்கத்தை, அறிவுச்செயல்பாட்டை அதற்கான முக்கியத்துவத்தை அளித்து தீவிரமாகச் செய்யவில்லை என்பதே. இதே குற்றச்சாட்டை அவரது அறிவியல் எழுத்து மீதும் முன்வைப்பேன். அவை முதலில் தொழில்நுட்பத்தப்பற்றியே அதிகம் பேசுகின்றன- அறிவியல் கோட்பாடுகளைப்பற்றி அல்ல. அவை அறிவியலைப்பற்றிய மேலோட்டமான வேடிக்கை மனநிலையை மட்டுமே உருவாக்குகின்றன- அறிவியலில் ருசியை அல்ல. நான் என் குழந்தைகளுக்கு கண்டிப்பாக அவற்றை பரிந்துரைக்க மாட்டேன். அவரே தமிழில் அறிவியல் கதைகளையும் அறிவியல் கட்டுரைகளையும் தொடர்ச்சியாக எழுதியவர், ஆகவே ஒரு முன்னோடி என்பதில் ஐயமில்லை. என் அறிவியல் சிறுகதைகள் நூலை அவருக்கே சமர்ப்பணம் செய்திருக்கிறேன். ஆனால் அவரது இடத்தை மிகைப்படுத்திக்கொள்வதும் சரி அவர் உருவாக்கிய விளையாட்டுத்தனமான எழுத்துமுறையை முன்னுதாரணமாகக் கொள்வதும் தவறான விளைவுகளையே உருவாக்கும்

  மாற்றுக்கருத்துக்களுக்கு நன்றி

  ஜெ

 18. ramji_yahoo

  அன்பு ஜெமோ க்கு

  சுஜாதாவிற்கு நிகராக எந்த எழுத்தாளரும் இல்லை என்று நாங்கள் சொல்ல வில்லை. சுஜாதாவை விஞ்சுபவர் இனி வரவே முடியாது என்றும் நாங்கள் சொல்ல வில்லை. அப்படி ஒருவர் வர வேண்டும் என்பதே எங்கள் அவா.

  சுஜாதா அவர் காலத்தில் ஒரு எல்லைக்குட்பட்டே எழுதினார், ஏன் எழுதினார் என்றால் என்னை போன்ற வாசகர்களும் அப்போது அடிப்படை வாசிப்பில் தான் இருந்தோம்.

  சுஜாதாவிடம் எந்த எல்லை தாண்டியும், எந்த அறிவியலின் உள் சென்றும் எழுதும் திறமை இருந்தது, நாங்கள் (வாசகர்கள் தான் மெதுவாக முன்னேறி வந்தோம், அங்குதான் குறை).
  As Jothi basu said Communism would have succeeded in all 24 states in India. Only we Leaders and cadres were lazy and had not pushed it well.

  Sujatha tried to go aggressively in Nammavar, Boys , Mumbai Express but we audience were unable to pick his speed,perception.

  கணேசனின் பின்னூட்டத்தில் அழகாக பதில் இருக்கிறது. சுஜாதா ஆரம்ப பள்ளி ஆசிரியராக இருந்தார் எங்களுக்கு.

  நான் பட்ட மேற்படிப்பு படிக்கும் பொழுது என் கல்லூரி பேராசிரியர் முனைவர் அதிக விஷயங்கள் சொல்லி தருகிறார், இந்த அளவு எனக்கு ஆரம்ப பள்ளி ஆசிரியர் மூன்றாம் வகுப்பில் சொல்லி தர வில்லை, என்று புலம்புவது போல இருக்கிறது.

  மூன்றாம் வகுப்பு ஆசிரியராலும் கல்லூரி பேராசிரியர் அளவு சொல்லி கொடுக்க முடியும், திறமை உண்டு, ஆரவம் இருக்கிறது.

  அவர் எழுத்துமுறையை முன்னுதாரணமாக கொண்டு எழுதும் எழுத்துக்களை ஆதரிப்பது, புரகன்னிப்பது என்பதை வாசகர்கள் தீர்மானிக்கட்டும். வாசகர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

 19. stride

  “அதேசமயம் அவரது இலக்கியச்சாதனைகள் மிக எல்லைக்குட்பட்டவை என்பதே என் மதிப்பீடு. அதற்கான காரணங்களையும் தொடர்ச்சியாக எழுதிவந்திருக்கிறேன். முக்கியமான முதற் காரணம் அவர் இலக்கிய ஆக்கத்தை, அறிவுச்செயல்பாட்டை அதற்கான முக்கியத்துவத்தை அளித்து தீவிரமாகச் செய்யவில்லை என்பதே.” என்று ஜெ சொல்வது உண்மையாகவே இருக்கலாம். சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ( உயிர்மை பதிப்பகம்) முன்னுரையில் சுஜாதா எழுதுவது இது

  “ஏறத்தாழ எல்லாக் கதைகளும் deadline காலக்கெடுவின் நெருக்கடியில் எழுதப்பட்டவை எனினும் கதைகளின் சிறப்புக்கு இந்த கெடுவும் காரணம்.
  ஆற அமர வார்த்தைகளை செதுக்கி அடித்து திருத்தி… இதெற்கெல்லாம் சமயமின்றி எழுத ஆரம்பித்த கதைகள் பல சந்தர்ப்பங்களில் தன்னையே எழுதிக்கொண்டவை”

  சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து கதைகளும் மற்ற சிறுகதைகளும் அவரது பிராமண மத்தியதர பாரம்பரியத்தில் அமர்ந்து ஆனால் அதனை அறைகூவாமல் மிருதுவாக subtleஆக நம்மிடம் பேசுகின்றன. ஒவ்வொரு வார்த்தையும் தன பாரம்பரியத்தின் சுமையை தாங்கி நிற்பது போல் எழுதாமல் light touch கொடுப்பது தான் அவரது ஜீனியஸ். அந்த விஷயத்தில் அவரை மிஞ்ச ஆள் இல்லை.

  ஜெ முன்றைய கட்டுரையில் சொன்னது போல் சுஜாதாவின் சிறுகதைகள் பல தமிழின் சாதனைகள். வேறு மொழிக்கதைகளில் சிறந்தவைகளென கூறப்படுபவகைளை படிக்கும் போது சுஜாதாவின் சிறுகதைகள் பல அவற்றுக்கு நிகராக உச்சத்தில் நிற்கின்றன என்று தோன்றும். அவரது நாவல்களில், அறிவியல் கதைகளில் எனக்கு ஈடுபாடு வந்ததே இல்லை.

  சிவா

 20. வேணுகோபால் தயாநிதி

  நான் அறிந்த வரையில் சுஜாதாவின் தீவிர வாசகனாகவும், ரசிகனாகவும் நான் கருதுவது, என்னையே.

  இங்கு நான் முன்வைத்தது அவரின் அறிவியல் விவாதங்களை, இன்னும் குறிப்பாக அவரின் அறிவியல் அணுகுமுறையின்(scientific approach) மீதான என் கேள்விகளை மட்டுமே.

  அ, ஆ எல்லாம் எழுதக்கற்று பல்கலை வந்த மாணவர்களுக்கு, தப்பாகவே சொல்லிக்கொடுத்தாலும் உண்மையை அவர்களே கண்டறிந்து விடுவார்கள். ஆனால் அ, ஆ எழுத ஆரம்பித்திருக்கும் எல்லாரும் பல்கலை மாணவர்கள் அல்ல என்பதால், இப்பத்தான் அ, ஆ, கற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதால், அதீத கவனத்துடன், தெளிந்த, ஐயத்திற்கிடமில்லாத அடிப்படை உண்மைகளை, புரியும்படி, சரியாகக் கற்றுத்தருவதே பொறுப்புள்ள ஒரு ஆசான் செய்வது. அந்த வகையில் மூன்றாம் வகுப்பு ஆசிரியரின் பணி பல்கலைப் பேராசிரியரின் பணியை விட மிக மிக முக்கியமானதே.

  அறிவியல் அறிமுகமே இல்லாத ஒரு மனிதனுக்கு, குறைந்த பட்சமாகக் கற்றுக்கொடுக்க முடிவது எது? கறாரான உண்மைகளின் வழி அலசி ஆராய்ந்து தெளியும் அறிவியல் அணுகுமுறையைத் தான் அல்லவா.

  அறிவியல் பூர்வமாக, கடவுள் விவாதத்தை புரிந்து கொள்ள விரும்பும் ஒரு எளிய தமிழ் வாசகனுக்குக் கிடைக்கும் நூல்கள் எத்தனை?

  ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து, கடவுள் இருக்கிறார என்ற புத்தகங்களில் உள்ளடக்கமாகி இருப்பது அறிவியலின் அடித்தளத்தோடு சம்மந்தப்பட்ட ஆதார விஷயம் என்பதால், தமிழில் சமகால அறிவியல் சிந்தனையின் உயரத்தையே இவை அடையாளப் படுத்துகின்றன என்பேன். எனவே இப்புத்தகங்களின் மீதான விவாதம் தமிழின் சம கால அறிவியல் சிந்தனையின் அளவுகோல் என்றே சொல்வேன்.

  இந்தப்பதிவு முழுதுமே ஒரு நண்பருக்கு நான் சமீபத்தில் அனுப்பிய மின் அஞ்சலின் சுருக்கம். அதில் “ஆங்கிலம் படிக்கத்தெரிந்த ஒரளவு பொது அறிவுடைய எவரும் என்சைகிளோபீடியாவில் படித்து அல்லது நெட்டில் தட்டிப் பார்த்துச் சொல்லி விடக்கூடியதே” என்றே இருந்தது. எட்டுப்பக்க மின் மடலை அரைப்பக்கமாகச் சுருக்கியதில் ’என்சைகிளோபீடியாவில் படித்து’ விடுபட்டு விட்டதை நான் கவனிக்கவில்லை. 10, 15 வருடங்களுக்கு முன் தமிழ் நாட்டில் பலருக்கு பிராட்பேண்ட் இணைய வசதி இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய திரு. கணேசன் அவர்களுக்கு நன்றி.

  ஜெயமோகனின் வாசகர்களுக்கான வலைப்பூவில், சாதாரண ஒரு சிறு பின்னூட்டமே அதை எழுதியவரையே முட்டாளாகக் காட்டிவிடும் என்றால்,

  மனித குல நாகரீகத்தின் அடியாளத்தை அளக்கும் சிக்கலான ஒரு தத்துவ அடிப்படையை, அறிவியலின் அடித்தளத்தையே ஆட்டிப்பார்க்கும் விஷயத்தை, வாழ்க்கையின் குறுக்குவெட்டின் பல்வேறு தரப்பினரும் படிக்க, தொடரோ புத்தகமோ எழுதும்போது ஒருவர் எவ்வளவு அஞ்சித்துணிய வேண்டும்?

  நான் சொல்ல நினைத்தது இதுவே.

 21. scho

  //ஆங்கிலம் படிக்கத்தெரிந்த ஒரளவு பொது அறிவுடைய எவரும் என்சைகிளோபீடியாவில் படித்து அல்லது நெட்டில் தட்டிப் பார்த்துச் சொல்லி விடக்கூடியதே// – சரி.. அப்படியே வைத்து கொள்வோம்… என்சைகிளோபீடியா ஆயிரமாயிரம் தமிழ் ilainkarkalin ஆர்வத்தை தூண்ட வில்லை.. ஆனால் சுஜாதாவின் எழுத்து அந்த ஆர்வத்தை தூண்டியது.

 22. வேணுகோபால் தயாநிதி

  பிராட்பேண்ட் லேப்டாப்புகள், ஐ-போன்கள், ஐ-பேட் மற்றும் கிண்டில்கள் மலிந்த நிலையிலும், நூலின் மூலங்களைத் தேடி, ஊர் ஊராக இன்றும் மனிதர்கள் அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் உ.வே. சாமிநாத ஐயர் இந்தச் சமயத்தில் நினைவு கூறத்தக்க ஒருவரே.

  அன்றாடம் படிக்கும் ஜெ.யின் வலைப் பூவில் பின்னூட்டங்களை அநேகமாக நான் எழுதியியதே இல்லை. எழுத நினைத்த கருத்தின் வரிசையில் ஏற்கனவே யாராவது எழுதிவிட்டால் அதை நானே எழுதியதாகப் பாவித்து வாளாயிருந்து விடுவேன். தலைப்பின் விவாதப் பொருளுக்கு ஆழமாகப் பங்களிக்காத சிறு எண்ணங்களை, பெரும்பாலும் தவிர்த்து எழுதாமல் விட்டு விடுவேன். பின்னூட்டங்களை அதிகம் படித்ததும் இல்லை.

  10, 15 வருடங்களுக்கு முன்பை விட இன்று பிராட்பேண்ட் இண்டர்நெட் வசதி தமிழ்நாட்டில் பலருக்கும் கிடைக்கிறது என்ற அரிய உண்மை, பின்னூட்டங்களைப் படித்துப் பார்க்கையில் தெளிவாகத் தெரிகிறது. சில பின்னூட்டம் எழுதியவர்களின் பெயர்களே பரிச்சயமாகிவிட்டது.

  சுஜாதாவே, “இன்டர்நெட்டில் எழுதுபவர்களின் பிளக்கைப் பிடுங்கி விடவே நினைக்கிறேன்” என்று எழுதியிருந்ததாக ஞாபகம்.

  ஏதோ ஒரு குறு கட்டுரையில் என்று நினைக்கிறேன். சின்னச் சின்னக் கட்டுரைகள் என்ற புத்தகத்தில் இருக்கலாம், சரியாக நினைவில்லை. வெளியூரில் இருப்பதால் தேடிக்கண்டுபிடிக்க, தற்சமயம் புத்தகங்கள் கைவசம் இல்லை. யாராவது அது எந்தக்கட்டுரையில் என்று கண்டுபிடித்துச் சொன்னால் நன்றியுடையவனாவேன்.

  அவர் ஏன் அப்படிச் சொன்னார், என்பதையும் ramji_yahoo போன்ற வலைப்பதிவர்கள் விரிவாக ஆராய்ந்து எழுதவேண்டும், என்பதே என் அவா.

 23. ramji_yahoo

  வேணுகோபால் தயாநிதி
  எனக்கு தெரிந்து சுஜாதா இன்டர்நெட்டில் புதிதாக யாரும் எழுத வந்து விடக் கூடாது (பிளாக் எழுதுபவர் கணினி இணைப்பை துண்டிக்க வேண்டும்) என்று எழுதியதாக தெரிய வில்லை. புதிய இளைய எழுத்தாளர்களை என்றுமே அவர் ஆதரித்து தூக்கி விட்டவர்.

  ஒரு வேளை என்னை போன்று தமிழ் இலக்கணத்தை கொலை செய்பவர்களை தவிர்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் வேண்டுமானால் அவர் சொல்லி இருக்கலாம்.

  மனுஷ்ய புத்ரனின் இந்த வரிகள் எனக்கு உறக்கத்திலும் மறக்காது. சுஜாதாவின் மறைவு குறித்த இதழில் மார்ச் 08 எழுதி இருப்பார் – சுஜாதாவின் எழுத்துக்களில் கால் வைக்காமல் படைப்பின் சவால்களை மொழியின் சவால்களை ஒருவர் கடப்பது மிகவும் கடினம்.எமது எல்லாச் செயல்பாடுகளிலும் வாசிப்புக்களிலும் எழுத்துக்களிலும் சுஜாதாவின் சொல்லின் வலிமையும் அன்பின் நிழலும் படிந்திருக்கிறது.

  இன்னும் சொல்ல போனால் இணைய தமிழ் எழுத்திலும் ஆரம்ப காலத்தில் அவரின் பங்களிப்பே ஏராளம். அம்பலம், ஆறாம் திணை, கருத்து போன்றவை.

  பத்து வருடங்கள் முன்பே அவர் நகைச்சுவையாக எழுதி இருந்தார். மாடியில் இருக்கும் பையனுக்கு கீழே டைனிங் ஹாலில் இருந்து அம்மா மின்னஞ்சல் seivaar சாப்பாடு ரெடி என்று. இன்று நாம் த்விட்டேரிலும் (twitter), முகப் புத்தகத்திலும் (facebook) அதை தான் செய்து கொண்டு இருக்கிறோம்.
  பலமுறை அவர் லினக்ஸ், இலவச மென்பொருள்களை ஆதரித்து பில் கேட்சை எதிர்த்து எழுதிய பொழுதும் நாங்கள் கணினி வளர்ச்சியில் பில் கேட்ஸின் பங்களிப்பு குறித்து அவருடன் விவாதம் செய்து இருக்கிறோம்.
  மாற்று கருத்துக்களை இரு கரம் நீட்டி வரவேற்கும் மனப் பான்மை உண்டு அவரிடம். ஆறு வருடங்களுக்கு முன்பே சொன்னார் விரைவில் பில் கேட்ஸ் சந்தையை இழப்பர், பாருங்கள் என்றார். இன்று முகப் புத்தகமும், கூகுளே yum அவர் அனுமானத்தை உறுதி செய்கின்றன. அவருக்கா அறிவியல், கணிதம் குறித்த ஆழ்ந்த அறிவு, ஆழந்த அனுபவம், தொலை நோக்கு பார்வை இல்லை.

  இலக்கிய விவாதம், இலக்கிய ஆய்வு, பின் நவீனத்துவம், முன் பழமைதுவம் , அறிவியல், வரலாறு எல்லா வகை எழுத்துக்களும் எழுதும் திறமை அவரிடம் இருந்தது. வாசகர்களாகிய எங்களிடம் தான் அப்போது அதை படிக்கும் ஆர்வம் இல்லை (இப்போதும்). எனவே அவர் எங்கள் மீது உள்ள அக்கறையால் எங்கள் அளவிற்கு இறங்கி வந்தார் என்றே சொல்ல வேண்டும்.

  இலக்கிய விவாதம் ஒன்றும் ராக்கெட் சைன்ஸ் அல்ல. சம கால பதிவர்கள் நால்வரை (உதாரணப் பதிவர்கள்- அய்யனார், சித்தார்த், லேகா, கல்பனா சேக்கிழார் ) அழைத்து மாதம் நாற்பதாயிரம் நாங்கள் சம்பளம் தந்து விடுகிறோம். உங்கள் வேலை ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் பல்வேறு நூல்களை புத்தகங்களை படித்து , அவை பற்றி கட்டுரைகள், விவாதம் எழுத வேண்டும் என்று சொன்னால், பல இலக்கிய விவாத எழுத்தாளர்கள் கிடைப்பர்.
  When we are able to make Miss world, super singers why cant we able to make literature research writers. Writers also can be made, writers need not be born.

  பல இளைஞர்கள் இலக்கிய விவாதம், தீவிர அறிவியல் எழுத்தாளர்களுக்கு உள்ள திறமை, தகுதி உடையவர்கள். ஆனால் எழுத்திலிருந்து வரும் வருமானம் குறைவு. வருமானத்திற்கு அவர்கள் வேறு வேலைகளும் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது, எனவே தான் அவர்களால் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வாசிக்க முடிவது இல்லை.

  சுஜாதாவின் பங்களிப்பை நமது பின்னோட்டங்கள், பதிவுகள் வழியாகத்தான் எடுத்து சொல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லை, வேறு உருப்படியான வேலைகள் செய்ய இன்று ஆர்வம் இல்லாததால் நானும் உக்காந்து தட்டச்சு செய்து கொண்டு இருக்கிறேன் நண்பரே.

 24. ramji_yahoo

  i am not sure Manushyaputhran’s uyirmmai issue on March or Apr08.

 25. Hariharan

  திரு ஜெ,

  முதலில் உங்களது இந்த கட்டுரை நான் படிக்கும் முன்பு charuvin பிளாக்கர்ல் இதைப் பற்றி விமர்சனம் கண்டேன் கொஞ்சம் சூடாகவே இருந்தது அனால் unagalathu இந்த கூற்றை நான் ஆமோதிக்கிறேன் ஏனென்றல் சிறிய வயதில் நான் அறிவியல் ஆற்றலை வளர்க்கவேண்டும் என்று படிக்க முனைந்திருக்கிறேன் ஒழிய கதை மற்ற ஈடுபாடு கொண்டு அல்ல இப்பொழுது உங்கள் கட்டுரை கண்டு மனசில் ஆகியது இந்த உங்களது அதே ” படிக்கும்போது ஒரு பட்டாம்பூச்சி பறக்குமே தவிர. ’மனுஷனுக்கு எவ்வளவு விஷயம் தெரிஞ்சுருக்கு பாரு’ என்று பிரம்மிக்கத் தோன்றுவதோடே அவை நின்றுவிடுகின்றனவே அன்றி படித்து முடித்ததும் வாசகனுக்குள் அடிப்படையான, ஆழமான அறிவியல் புரிதலை, தெளிவை அவை நிகழ்த்துவதில்லை”வரிகள் தன எனது நிலைப்பாடக இருந்தது என்பதை உங்கள் கட்டுரை கண்டே உணர முடிந்தது .
  வாழ்த்துக்கள் நிங்களது மெய்யான நிலைப்பாட்டிற்கு

  தொடரும்

 26. ganesan

  ramji_yahoo வின் பதிவு நன்று. சுஜாதாவின் தொலை நோக்கிற்கு ஒரு சிறு உதாரணம் – அவரது ‘பேசும் பொம்மைகள்’ நாவலில் வரும் ஒரு வாக்கியம் – “ஈமெயில் இல்லாமல் இப்பெல்லாம் ஆராய்ச்சி பண்ண முடியாது” இதை அவர் எழுதிய ஆண்டு 1985. பல விஞ்ஞானிகள் உள்ள எங்கள் பல்கலைகழகத்தில் ஈமெயில் வசதி வந்த ஆண்டு 1996.
  -கணேசன்.

 27. வேணுகோபால் தயாநிதி

  திரு ramji_yahoo,

  இந்தத் தலைப்பை விட்டு ஜெ. வெளியேறிப்போய் மூன்று நாளாகி விட்டது. காட்சி முடிந்து அரங்கம் காலியாகிவிட்ட பிறகு நான் எழுதும் இந்தப் பதிவு அவசியமில்லாத ஒன்று -என்பதை, நானே சொல்லிவிடுகிறேன்.

  வேறு புதிய கேள்விகள் இல்லாத நிலையில், இந்தப் தலைப்பில் என் கடைசிப் பதிவும் இதுவே.

  இதை எழுதும் நேரத்தைச் சேமித்திருக்கலாம் தான். இருந்தும் தார்மீகக் கடமையாக எண்ணி, ஒரு நல்லது நடந்து விடாதா, என்ற நப்பாசையில் இதை மேற்க்கொண்டும் எழுதுகிறேன்.

  நான் சொல்லத் தேவைப்படாமல், அடிப்படை உண்மைகளை, அனைவருக்கும் புரியும்படி நீங்களே எழுதிவிட்டீர்கள்.

  மேலும் சுஜாதா அம்பலம், ஆறாம் தி்ணை ஆகியவற்றில் எழுதியவர், புதிய இளைய எழுத்தாளர்களை என்றுமே ஆதரித்து தூக்கி விட்டவர், என்பதெல்லாம் பலரும் அறிந்திராததே.

  நீங்கள் சொல்லாமல் விட்ட இன்னொரு முக்கியமான உண்மையையும் நானே சொல்லிவிடுகிறேன். கம்ப்யூட்டரில், தமி்ழில் தட்டச்சு செய்த முதல் எழுத்தாளர், சுஜாதாவே.

  அப்படிப்பட்ட சுஜாதாவே, “இன்டர்நெட்டில் எழுதுபவர்களின் பிளக்கைப் பிடுங்கி விடவே நினைக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார் என்றால்?

  பின்னூட்டம் எழுதுபவர்கள், தவறாது, இதைச் சற்றேனும் எண்ணிப் பார்க்க அருள் புரியுமாறு, சுஜாதாவின் இஷ்ட தெய்வமான ஸ்ரீரங்கநாதரையே வேண்டிப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  பின்னூட்டம் எழுதுவர்களுக்கு குறைந்தபட்சமாக பேப்பர், மை, கூடத் தேவைப்படுவதில்லைதான். என்றாலும்,

  பின்னூட்டத்தைப் படித்துப் பார்த்து, சோதித்து அதை வலையேற்றுபவரின் நேரம், மின்சாரச் செலவு, இணைப்புக் கட்டணம், கம்ப்யூட்டரில் ஏற்படும் தேய்மானம் -ஆகியவற்றை, நாம் யோசித்துப் பார்க்க வேண்டாமா?

  எவருக்கும் எளிதில் புரிந்து விடக்கூடியதே என்றாலும் தங்களைப் பதிவு எழுதத் தூண்டிய காரணத்தை, நீங்களே முன் வந்து வெளியிட்டமைக்கு நன்றி.

  ”வேறு உருப்படியான வேலைகள் செய்ய ஆர்வம் இல்லை” என்ற உயரிய நோக்கத்தைத் தவிர,

  வேறு உருப்படாத சில காரணங்களுக்காகவும் பிறர் ஏழுதக்கூடும், அல்லவா?

  நாம் பின்னூட்டம் எழுதிகொண்டிருப்பதும் அவர் வலைப்பூவில் தான் -என்ற தகவலை, தற்செயலாகவேனும் நினனவு கொள்ளலாம், என்பதற்காகச் சொல்கிறேன். இன்று காலை, ஜெ.யின் வலைப்பூ காட்டுவது 7,631 பக்கங்கள். புத்தகமாக அச்சில் வந்த அவரின் எழுத்தும் அவ்வளவு இருக்கக்கூடும்.

  மேலும், நான் குறை கண்டுபிடித்த சுஜாதாவி்ன் இரண்டு புத்தகங்களும், குறைந்தது ஒரு தடவையாவது, படித்துப் பார்த்திருக்கத் தகுந்தவையே.

  நாம் எழுதும் பின்னூட்டத்தையாவது, அனுப்புவதற்கு சற்று முன், நாமே ஒருமுறை படித்து விடுவதும் உருப்படியான ஒரு பயிற்சியே.

 28. down under

  ///4. எனவே கடவுள் இருக்கிறார என்ற கேள்விக்கு அறிவியலின் பதில் – “இருக்கலாம்’. ஆன்மிகத்தின் பதில் “இருக்கிறார்”. என் பதில் it depends.

  இவை சுஜாதா என்ற தனி மனிதரின் கருத்து என்றால் எந்தச் சிக்கலும் இல்லை.

  அறிவியல் இப்படிக் கூறுகிறது, விஞ்ஞானிகள் இப்படிக் கூறுகிறார்கள் என்ற வரிகள் மறு விமர்சனதிற்க்கும் நேர்மையான கண்டனத்துக்கு உரியவை. இதை முழுமுதல் உண்மையென நம்பிப் படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் சாதாரண வாசகர்களுள் விளையும் சிந்தனை நிகழ்வுகள் ஆபத்தானவை அல்லவா?.///

  curiously , I do not see what’s wrong or dangerous in this.I agree Sujatha is making a blanket statement.but that’s what it is ,isn’t it ? Taking into account that generalisation I can’t see anything so dangeroulsy subverting science in it.He has stated his understanding of what science is moving towards (for ex:science still can’t explain the events before singularity) i.e plausible.Religion says ..yes HE is ..and sujatha says it depends ..it could depend on many things .. starting from ..what exactly is his idea of God …how he likes to see it ..how he likes to related to it …and how he feels abt it.

  Are we going to say that “all of science” or “all scientists” will agree unanimously on the same topic?How many qualified scientists are unanimous on aclimate change or Intelligent design ,even if we have volumes of empirical data on these topics ?

  Sujatha on another instance made a comment saying “The fact the whether God exists or not in itself is a big issue ..what is important and relevant is that we need Him”.This will make sense if we approach the idea of God from a psychological point of view .

  //2. கடவுளே பார்க்காத காட்சியாக, கேளாத கானமாக், புரியாத வார்த்தையாக இருக்கலாமல்லவா (பக்கம் 36).///

  again .. can’t see why this is disputable …its just a simple hypothesis….which can’t be proved or disproved.This is just another way of looking at things.He is just indicating the possibility of “extra dimensions” which we maynot be able to feel or measure with out limited senses ?
  ——-
  All that aside , I think that we should just take him for what he wrote not for what he did not write , we cant ask him why he did not write in a certain way

 29. varasiththan

  சுஜாதாவின் அறிவியல் எழுத்துக்கள் கோழி குஞ்சுகளுக்கு இரை காட்டுவது போல கோழி இரை இருக்குமிடத்துக்கு கூட்டிச்செல்லும் கிளறிவிடும்.குஞ்சுகள் பொறுக்கிக்கொள்ளவேண்டியதுதான். மண்ணாலோ சருகுகளுக்கிடையில் மூடப்பட்டிருக்கும் அதையறிந்து கிளறி வெளிக்காட்டுவதைத்தான் சுஜாதா செய்ததாக நான் உணர்ந்தேன்.
  சில பறவைகள் ஊட்டிவிடும்.தங்கள் வாயிலெடுத்து விழுங்கி அரைகுறையாகச்சமித்த உணவை மீண்டும் எடுத்து குஞ்சுக்கு ஊட்டும் பறவைகள் இருக்கின்றன.சில பேராசிரியர்கள் அப்படி.மிக எளிமையாக சிக்கலான விஷயங்களைச்சொல்லுவார்கள்.
  அறிவியல் எழுத்தில் சிறப்பானது உள்வாங்கி செரித்து அதை மிக எளிமையாகத்தருவதுதான்.
  அறிவூட்டலில் பல தரங்கள் இருக்கின்றன. ஏனென்றால் வாங்கிக்கொள்பவர்கள் பலரகம்.
  அறிவியல் எழுத்துக்களை அனேகம்பேர் படிப்பதில்லை.ஏனென்றால் மனதுக்கு இன்பம் அளிப்பதில்லை.பரீட்சை என்கிற கட்டாயத்தில் படித்தவர்களைத்தவிர.
  துறை சார் ஆர்வமுள்ளவர்களுக்கு எழுத்து, நடை ஏன் மொழி கூட தடையாயிருப்பதில்லை. அவர்களைப்பொறுத்தவரையில் விஷயதாகமே முக்கியம்.அவர்கள் தேடிப்படிப்பவர்கள்.
  சுஜாதாவின் எழுத்துக்கள் தாகமுள்ளவருக்கு அலுப்பாகத்தெரியும்.
  அறிந்தவருக்கு அட இப்படிச்சொல்லலாமா இதை என்று தோன்றும்.பொதுவாசகனுக்கு ஒரு அந்தத்துறையில் ஒரு ஈர்ப்பை தொடுக்கும்.
  வாசல் என்றும் சொல்லலாம்.வாசல்வரை போய் திருப்திப்படுபவர்கள் அனேகம்.அதை ஆரம்பமாகக்கொண்டு மேலும் ஆழ அவர்கள் இறங்கலாம்.
  அறிவியல் நூல்கள் பல்வேறு தரங்களில் வரவேண்டும்.
  படக்கதைகளாகவே பல நூல்கள் இருக்கின்றன. அறிவியல் என்பது உண்மையில் நிருபிக்கப்படுகிற கற்பனைகளே.
  கற்பனையைத்தூண்டாத அறிவியல் கல்வி இரத்தத்தில் கலக்காது.
  அறிவியலில் மூலக்கூற்றியல் இருக்கிறது.கண்ணுக்கு தெரியாத அந்த உலகை வார்த்தைகளில் மாற்றவேண்டுமென்றால் அதற்கு உவமானமாக ஒரு பருப்பொருளைச்சொல்ல வேண்டும்.அதற்குக்கற்பனை வேண்டும். தேர்ந்தெடுக்கும் பருப்பொருள் சுவையாக இருந்தால் அறிவூட்டல் செயல் சுவையானதாக இருக்கும்.ஆனால் சிலர் மூலக்கூறை விட்டு விடுவார்கள். உவமானப்பருப்பொருளை பிடித்துக்கொள்ளுவார்கள்.
  ஏற்கனவே விளங்கிக்கொண்டவருக்கு உவமானம் அலுப்பாயிருக்கும்..ஆக ஒரு பகுதியினர்தான் அதில் பயன் பெறுவார்கள்.
  எனவே அறிவியல் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களில் நிலைகளில் புத்தகங்களாக வெளிவர வேண்டும்.
  நேரடி உண்மைகள்,உதாரணங்களுடன் உண்மைகள் இப்படி
  அறிவியலை எப்படியும் பரிமாறலாம்.கொஞ்சம் எண்ணெய்விட்டுத்தாளித்து கற்பனைசேர்த்து கசப்பாயிருப்பதை சுவை கூட்டலாம்.
  பொழுதுபோக்குப்பௌதிகம் நல்ல புத்தகம். எட்டாம் வகுப்பில் நீர் பாத்திரத்தின் வடிவத்தை எடுக்கும் என்று இருக்கிறது.பொழுதுபோக்குப்பௌதிகம் நீரின் வடிவம் கோளம் என்று சொல்கிறது.அதற்கு நல்ல பரிசோதனையும் போட்டிருக்கிறது.
  டீச்சரைக்கேட்டபோது இந்த லெவலில் அது பாத்திரத்தின் வடிவந்தான் என்றார்.அவர் சொன்னது சரி.பிரபஞ்சம் ஈர்ப்பு விதிகள் அறிந்தபின்னர் அது புரியும்.
  அறிவியல் கல்வி அத்தகையதுதான்.
  சுஜாதாவின் அறிவியல் எழுத்துக்கள்/செய்திகள் ஒரு தளத்தில் நிலைபெறுகின்றன.புறந்தள்ள முடியாது.

 30. வேணுகோபால் தயாநிதி

  சுஜாதாவையும் சுஜாதாவின் புத்தகங்களை அறவே வெறுத்து வந்த நான், அவைகளைப் படித்திராத நிலையில், எந்த ஆதாரங்களும் இல்லாமல், அவரின் மீதிருந்த காழ்ப்பை மட்டுமே ஒரே காரணமாகக் கொண்டு, கண்மூடித்தனமாகத் தாக்கி எழுதிவிட்டேன். அதனால், அநாமதேயக் கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் திட்டியும் கொலைமிரட்டல் விடுத்தும் தீவிர வாசகர்கள் சிலர் தங்கள் மறுப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

  இந்நிலையில் உயிருக்குப் பயந்து, இணைய வசதி இல்லாத ஒரு இடத்தில் தலைமறைவாகி விட்டதால் உடனே எழுத முடியவில்லை. ஆங்கிலத்தில் பின்னூட்டங்கள் வந்ததும் நான் பயந்து தலைமறைவாகி விட்டதற்கு இன்னொரு காரணம் என்பதை ஒத்துக் கொண்டு, தாமதத்திற்கு வருந்துகிறேன். விவாதங்கள் கீழே:

  “The fact the whether God exists or not in itself is a big issue ..what is important and relevant is that we need Him”.

  கடவுள் மனிதனுக்குத் தேவைப்படுறாரா என்றால், “மிகவும் நிச்சயமாக” என்பதே என் பதில்.

  எல்லையற்று அகண்டு விரிந்து கிடக்கும் பிரபஞ்ச வெளியின், மிகச்சிறு துணுக்காக இயற்கையால் தூக்கி யெறியப்பட்டு, நிராதரவாக விடப்பட்ட மனிதனின் தனிமையை, அச்சத்தை, கடவுள் நம்பிக்கை, ஒருவேளை, தணித்து விடக்கூடும். இதுவே, தன்னளவில், எச்சரிக்கையாக எழுத வேண்டிய நீண்ட ஒரு தத்துவ விவாதம். This is not the topic of the discussion, here right now.

  If matters such as god can be so deep and complicated that even “all of science” or “scientists” could not agree unanimously, and come to a conclusion, even with the help of volumes of empirical data on these topics,

  but a writer can simply throw misleading blanket statements, which are neither scientific nor critical or neutral, and claim them in the name of science,

  and we can not see anything wrong,

  even just for the point of view of literary criticism,

  -then there is nothing to discuss I guess. I entirely agree.

  “extra dimensions”? “11th dimension”? and “unification theory?
  Thanks for bringing these to context. I was originally hesitant and uncomfortable to mention them here.

  Why don’t we do this very simple empirical experiment? So that we can close this discussion once for all, for good.

  Please bring a copy of ’கடவுள் இருக்கிறாரா’ to a simple reader in a Tamil nadu branch library, say for instance a place like kutraalam (எல்லாருக்கும் தெரிந்த பிரபலமான நல்ல ஒரு ஊர் எது, என்று யோசித்துப் பார்த்த போது சட்டென நினைவுக்கு வந்தது. இந்த ஊரைக் குறிப்பிட்டதில் வேறு எந்த உள் நோக்கமும் இல்லை என்பதை வெளிப்படையாகச் சொல்லி விடுகிறேன். ஆகவே, குற்றாலத்தைச் சேர்ந்த நண்பர்கள், என்னைத் திட்டி தனியாக வேறு பின்னூட்டம் எழுதத் தேவையில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்), to a reader who had never heard this book or these topics. Let he/ she read the book and note down how far he/ she can understand extra dimensions, 11th dimension, and unification theory -by reading this book. These are the readers that Sujatha had in mind, throughout writing these, and solely wrote for, isn’t?

 31. down under

  Dear venugopal,
  Before I proceed let me briefly state some disclaimers ..
  1.I am neither a big fan nor an expert on sujatha, personally I see him as a fascinating and “useful” writer, if I may put it he is the literary equivalent of a “swiss knife”.
  2.My main interest in sujatha writings are his non-fiction writings and his short stories.
  3.I am indebted to him in helping me get to know majority of quality writers and poets in tamil ,without him it would have taken me years to reach out to them (hence I use the term useful ) and a kickstart on many scientific concepts (with the access and facilities of late 80’s )

  If I understand right the core point of contention here is whether sujatha can be called a science writer or not.
  —————————–
  Let me try to summarise my views by way of what i agree & disagree.

  //அவரது பாணி உண்மையில் அறிவியலுக்கே எதிரானது. எளிமையாக்கிச் சொல்கிறேன் என்ற பாவனையில் அவர் அறிவியல் விஷயங்களை சல்லிசாக ஆக்குகிறார்//
  I don’t think its against science maybe we could say it’s just another way of “presenting” science.I agree he tried to make things very simple but i guess his focus was not necessarily to make things accurate or exact but to make it more “fascinating” (but not “cheap”.)

  //அவர் எழுதியது அறிவியலைப் பற்றி..(“about ” சயின்ஸ்).. அறிவியல் அல்ல..//
  I agree with the above comment by satheesh.I also concur with most of what varsitthan wrote.

  //அறிவியல் புனைகதை என்பது ஒன்று அறிவியலின் ஒரு கேள்வியை புனைவு மூலம் சந்திப்பதாக இருக்கும். அல்லது வாழ்க்கையை சித்தரிப்பதற்காக அறிவியலை குறியீடாக ஆக்கும்//

  I agree with this too science fiction is not limited to writing stories in a scientific / futuristic background.Many of JM’s science fiction shorts stories exploit the full possibilities of science fiction and I dont think sujatha did this as much.

  //சுஜாதாவின் அறிவியல் நூல்களை முழுமையாக தவிர்த்துவிடலாம் என்றுதான் நான் ொதுவாசகர்களுக்குச் சொல்வேன்//

  I think this is an extreme stance, even if we don’t confer him with the title of a science writer ,I really don’t see a rational need to
  reject his books on /about science altogether .
  —————-
  1.I do believe he had a decent understanding on the concepts about what he was writing and he wasn’t bluffing.He did take liberties in making sweeping statements and sacrificed detail and method for the sake of simplifying and “interestingness”

  2.He is a useful writer who wrote about science and his writings were fascinating and invoked curiosity not necessarily explaining everything “ithu eppadina …..” with a big list of footnotes or bibliography to support his point.

  3.He explained certain basic concepts (for ex: binary theory ) in a very simplified way that he was able to reach out to the most unlikeliest of the readers who would otherwise have never bothered to read or know about it.

  4.I did not have the pleasure of reading books on science by soviet publications , but I have read several other good science writings in tamil, magazines like kalaikathir (published by the GD Naidu group ,not sure if it is still being published ) come out with good articles on science I enjoyed them too , but sujatha was different ..his was quick,brief,light and interesting.
  ————————-
  Coming to what you have asked .. I am really not going to disputing what you are saying ..but I differ in how I am seeing it .
  Take the same example you are saying,that let a random reader pick up his book and read and let us see what she / he would understand from it .I am seeing it this way , present them with two books ..one by sujatha and another a proper scientific explanatary writing on the same subject (in tamil ) and the question that is of interest to me is which book would they give up on first.

  By reading sujatha .. the reader first comes to “know” something interesting,which would then make him/ her want to know more, this ultimately leads to deeper understanding based on individual curiosity and effort ..its a bait.

  For example ..
  he makes a playful comment to one of the questions that
  “By looking at the expansion of the pupil in a girls eyes , you can tell whether she loves you are not”

  This is a rough scientific fact (there are other few reasons why a pupil would expand ) but this can be very fascinating piece of tit-bit even for someone who only reads dinathanthi and/or who is scientifically not very inclined.Now its upto the reader how he/she reacts to this stimulus and react accordingly and finds out more.

  He could probably write about it explaining for three or four pages titled something like “sympathetic nervous system and reproduction in mammals ” …how many people would be curious enough to coninue reading it ?
  [I remember someone saying to Stephen Hawkings that each equation he puts in his book (A brief history of Time ) the book sales would come down by half , and he ended up having only one equation in his whole book :) ]

  a very appealing aspect is that ..the scientifically uninclined / dinathanthi reader now “knows” about science ( not necessarily straightaway understand it) and “consumes” science /knowledge ,same like a light bulb user need to not know about how the light bulb works or how it is manufactured to be able to use it .He needn’t have to among the elite monority who has the facility , access and guidance to be able to properly and seriously access science.

  This is what , I think , sujatha did .It does not really matter to me what tag we give to such writing or where we place it in relation to similar writings/ writers.

  This holds just enough water for my bucket :)

  He pioneered this style of writing in a certain era ..that suited him well , it may not necessarily work with the current generation ,with internet on their fingertips.I would wonder how he would write if he was born into generation Y :)

 32. வேணுகோபால் தயாநிதி

  பின்னூட்டமாக எழுதிய ஒரு சிறு தனி எண்ணத்தை, இப்படி விரித்து எழுத நேரும், என்று நான் நினனைக்வில்லை.
  வலைப்பூவோ, அப்படி ஒன்றை ஆரம்பிக்கும் எண்ணமோ இல்லை என்ற நிலையில்,

  நான் முன்வைத்த கேள்விகளை அதன் சரியான கோணத்தில் புரிந்து கொள்ள, கீழ்வரும் விளக்கங்களையும் இங்கு பதிவு செய்வது அவசியம் என்றே நினைக்கிறேன்.

  “என்ன மாப்ள, சுஜாதாவோட எல்லா புக்கையும் வீட்ல வரிசையா அடுக்கி வச்சு படிச்சுட்டு இருப்ப, ’நீயே’ இப்படிச் சொல்லிட்ட” என்று கேட்டவர், என் நெருங்கிய கல்லூரி நண்பரே. ’நானே’ என்று என்னை முந்தைய பதிவுகளில் நான் விளித்தது இந்த ’ஒரே அர்த்தத்தில்’ மட்டுமே.

  ”சுஜாதாவையே எதித்து கேள்வி கேக்கறே, நீ பெரிய புடுங்கியா?” என்று குருபக்தி, நன்றிக்கடன் ஆகியவற்றால் உந்தப்பட்டு ஆவேசப்படும் நண்பர்களுக்கு, என் தாழ்மையான பதில், “இல்லை” என்பதே. தொடர்ந்து படிக்கவும்.
  * * *
  சுஜாதவின் ஆளுமை பிரம்மாண்டமான ஒன்றே. ஏறக்குறைய அவரின் எல்லா எழுத்துக்களும் தமிழில் பெருவாரியாக வாசகர்கள் படிக்கும் பத்திரிகைகளில் வெளிவந்தவை என்பதும் அவை புத்தகமாக வெளிவந்து விற்றுத் தீர்வதும் யாவரும் அறிந்ததே.

  ’கடவுள் மறுப்பு’ என்ற நிலையில் நின்று சுஜாதாவை விமர்சித்தேன் என்பவர்களுக்கு: கடவுள் மனிதனுக்குத் தேவைப்படுகிறாரா என்றால், “மிகவும் நிச்சயமாக” என்பதே என் பதில்.

  கடவுள் மனிதனுக்குத் தேவைப் படுகிறார் என்று சுஜாதா எழுதியதில் எனக்கும் உடன்பாடே. எல்லையற்று அகண்டு விரிந்து கிடக்கும் பிரபஞ்ச வெளியின், மிகச்சிறு துணுக்காக இயற்கையால் தூக்கி யெறியப்பட்டு, நிராதரவாக விடப்பட்ட மனிதனின் தனிமையை, அச்சத்தை, கடவுள் நம்பிக்கை, ’ஒருவேளை’(அடிக்கோடு), தணித்து விடக்கூடும். இதுவே, தன்னளவில், மிகவும் எச்சரிக்கையாக எழுதி நிறுவ வேண்டிய நீண்ட ஒரு தத்துவ விவாதம்.

  நானும் கோயிலுக்குப் போகும் ஒருவன் தான் என்பதை இங்கே சொல்லிக் கொள்ள வெட்கமோ அவமானமோ எனக்கு இல்லை. கோயில், சர்ச், தர்கா அல்லது இன்ன பிற இடங்களுக்குப் போகும் எவருக்கும் அவை இருக்கத் தேவையில்லை. என் நெருங்கிய நண்பர்கள் பலரும் இங்கெல்லாம் செல்பவர்களே.

  ’வைணவ எதிர்ப்பாக’ எடுத்துக் கொண்டவர்கள் என் உண்மையான முழுப்பெயரில் ஒளிந்து நின்று புல்லாங்குழல் வாசித்துக் கொண்டே மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணரை கவனித்து விடவும். கிருஷ்ணர் வைணவக் கடவுளே என்பதையும், சிரமமில்லாமல் நானே சொல்லிவிடுகிறேன்.

  சுஜாதாவைப் பற்றி, ஜெ. ஏற்கனவே புகழ்ந்து எழுதியிருப்பதை, இங்கு படிக்கலாம். http://www.jeyamohan.in/?p=286.

  இதைத்தவிர, சுஜாதா பற்றிய பலரின் கருத்துகளையும் தொகுப்பாக, நண்பர் தேசிகனின் வலைப்பக்கதில் இங்கே படிக்கலாம். http://www.desikan.com/blogcms/wiki/index.php?id=sujatha_anjali_index

  இவைகளின் நீட்சியாக, இதில் பதிவாகாத சில அவதானிப்புகளை மட்டும், ஒரு சாதாரண தமிழ் வாசகனான இங்கே சொல்லிவிடுகிறேன்.

  * * *

  தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளர்களான புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், லா.ச.ரா, அசோகமித்திரன் ஆகியோரின் எழுத்தில் உள்ள தத்துவ அடக்கமோ, தரிசனமோ சுஜாதாவின் எழுத்துக்களில் இல்லையென்றாலும் இவர்களின் நடையின் அடுத்த நிலையாக, சுஜாதாவின் நடையைச் சொல்லலாம்.

  [சுஜாதாவின் நடையை சுருக்கமாக ஒப்பிடுவதற்காக மட்டுமே இந்தப் பெயர்களை எழுதினேன். அதனால் ”என் இஷ்ட எழுத்தாளரை ஏன் எழுதவில்லை?” என்று கேட்டு யாரும் பின்னூட்டம் எழுத வேண்டாம். தமிழ் எழுத்தாளர்களின் விரிவான பெயர்கள் மற்றும் விவாதத்தை ஜெ.-ன் ’நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம்’ புத்தகத்தில் விரிவாகக் காண்க].

  எந்த ஒரு விஷயத்தையும், சமகால இளைஞனின் புத்திசாலித் தனமான குறும்பாக, துல்லிய எளிய வர்ணணையாகச் சொல்லி விடுவது சுஜாதாவின் பாணி.

  மேடைப் பிரசங்கிகளின் தோரணை மிகுந்த அறுபதுகளில், சுஜாதா தனக்கெனக் கண்டுபிடித்து வளர்த்துக்கொண்ட இந்த நவீன நடை, உயிர்த்துடிப்பு மிக்க சுவாசமாக, புத்துணர்வூட்டுவது.

  அன்றாடத் தமிழ் வாழ்க்கையின் நுண்ணிய அவதானிப்புகளாக, எண்ண ஓட்டத்தின் போக்கில், எளிய தமிழில் வரும் வரிகள், ஏற்கனவே தெரிந்த நண்பரைப் போல, படிக்கும் எவரையும் அண்மையில் நெருங்கி, தன்னில் அந்தரங்கமாக அடையாளங் காணச் செய்து விடும்.

  அவரின் நடை, அவரின் சாதனையே. உரைநடையில், தமிழ் மொழியின் முக்கியத் திருப்புமுனை, என்றே அவரைச் சொல்லாம். இன்னும் ஆயிரம் வருடம் கழித்து அவரைப் பற்றி எழுதுபவர்களும் இதையே சொல்வார்கள், -என்பது என் ஆழமான நம்பிக்கை.

  தமிழில் இதுவரை தோன்றிய எழுத்தாளர்களில், குறுகட்டுரைக்கான(column) சுஜாதாவின் இடம் ஒப்பிட முடியாதது. அதில் முதலிடம், என்றும் அவருக்கே. எவரும் எளிதில் அடைந்து விட முடியாத இடம் அது.

  உலகெங்கும், குறுகட்டுரை எழுதும் பலரிடமும் சுஜாதாவின் நடையின் கூறுகளையும் ஒற்றுமையையும் காணலாம். காட்டாக, சமகாலத்தின் சிறந்த குறுகட்டுரையாளர்களுள்(Columnist) ஒருவர் என்று கருதப்படும் ஜோயல் ஸ்டைன், டைம் வார இதழில் எழுதிய குறுகட்டுரைகளில் ஒன்றை இங்கே வாசிக்கலாம்.
  http://www.time.com/time/magazine/article/0,9171,1999416,00.html

  என் சிற்றறிவுக்கு எட்டியவரை, உலகின் சிறந்த பதினைந்து குறுகட்டுரையாளர்களில் சுஜாதாவும் ஒருவர், என்று உறுதியாகக் கூறுவேன். தமிழின் சிறந்த பதினைந்து சிறுகதைகளில், உலகின் சிறந்த நூறு சிறுகதைகளில், அவரின் ஒரு சிறுகதையையாவது நிச்சயமாக, தயக்கமே இல்லாமல் வைத்துவிடலாம்.

  கணையாழியில் குறுகட்டுரை எழுத, அறுபதுகளில் அவர் தேர்ந்தெடுத்த நடை, உலகத்தரமான ஒன்றே. அவரின் குறுகட்டுரைகள் உலகின் வேறு எந்த மொழியில் வெளியாகும் குறுகட்டுரைக்கும் சற்றும் குறைந்தவை அல்ல என்பதை, என்னால் உறுதியாகக் கூற முடியும்.

  ஆனால், பெரிய மாறுதல்கள் ஏதும் இல்லாமல், இந்த நடையிலேயே அவர் தொடர்ந்து கடைசி வரை எழுதினார். அந்த வகையில், கணையாழியின் கடைசிப்பக்கங்களின் தொகுப்பில் உள்ளதே அவரின் முத்திரை நடை என்றும் முத்திரை எழுத்து என்றும் சொல்ல முடியும். அதற்குப் பின் அவர் எழுதிய அனைத்தும் (கதை மாந்தர்கள், காட்சியமைப்புகள் நீள அகலங்களில் வந்தாலும்) ஒருவகையில், இதன் நீட்சியே. அவரின் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கட்டுரைத்தொடர்கள் எல்லாவற்றையும் எவரும் உடனே அடையாளம் கண்டுபிடித்து விடுவதற்கும், இதுவே காரணம்.

  [அவரின் ’நடையின் கோணத்தில் மட்டும்’(அடிக்கோடு) வைத்தே இதை எழுதுவதால் இது அவரின் மொத்த எழுத்துக்களின் மீதான என் விமர்சனம் அல்ல என்பதை, தவறாமல் இங்கு சொல்லி விடுகிறேன். அப்படி நான் சொல்லி விட்டதாகத் திரித்துப் புரிந்து கொண்டு, யாரும் பின்னூட்டம் எழுத வேண்டாம்]

  * * *

  எந்த விஷயத்தையும் மேலோட்டமாக போகிற போக்கில் ஒரு நக்கலான குறும்பாக எழுதி விட்டு வேறு விஷயத்துக்கு வேகமாகத் தாவி விடுவதே அவர் பாணி.

  இதைப் பெரிதும் மாற்றாமல் அவர் எழுதி வந்த நிலையில் நேர்ந்த துர்ப்பாக்கியம் என்னவென்றால்,

  இந்த நடையிலேயே, அவர் அறிவியல் கேள்வி பதில்களையும், அறிவியல் கட்டுரைகளயும், அறிவியல் விவாதக் கட்டுரைகளயும் எழுத முயன்றார், எழுதினார் என்பதே.

  இதில் நேர்ந்த சிக்கல்களைச் சொல்லிவிடுகிறேன்.

  இலக்கியம், தத்துவம், அறிவியல் -இவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவையே என்றாலும் இவை மூன்றும் ஒன்றல்ல என்பது, நாம் எல்லோரும் அறிந்ததே. அதனால், இவற்றை ஒரே தளத்தில் வைத்துப் புரிந்து கொள்ளவோ விவாதிக்கவோ முடியாது. (ஜெ. இதைப் பற்றி நிறையவே எழுதியிருக்கிறார், தேடிப் படிக்கவும்).

  * * *

  அறிவியலிலும் நிரூபணமாகாத கோட்பாடுகளும் தியரிகளும் உண்டு. ஆனால் இவை இரும்புக் கட்டிடங்களின் மீது பறக்கும் கொடியைப் போல. தவறு என்று தெரிந்ததும் சட்டென இறக்கி விட்டு சரியானதை ஏற்றி விடலாம்.

  அறிவியல், சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமான, ஆழமான, தெளிந்த அடிப்படைகளைக் கொண்டது. இவைகளின் மீதுள்ள தர்க்கத்தின் தெளிவி்லேயே அறிவியல் நிகழ்வுகளை, அறிவியல் விவாதங்களை, “அறிவியல் ரீதியாக” நிகழ்த்த முடிவது சாத்தியம்.

  ஆகவே, அறிவியலை, அறிவியலாக இல்லாமல் வேறுவகைகளில் சொல்வது, அதாவது பொது அறிவியல் (Popular Science) எழுதுவது என்பது உண்மையில் ஒரு சவாலான விஷயமே. இதுவரை தோன்றிய குறுகட்டுரையாளர்கள், கட்டுரையாசிரியர்கள், சிறுகதையாசிரியர்கள், நாவல், நாடகம், கவிதை, விடுகதை, துணுக்கு, விமர்சனம் ஆகியவை எழுதுபவர்கள் மத்தியில், பொது அறிவியலை வெற்றிகரமாக எழுதியவர்களின் எண்ணிக்கை மிக சொற்பமே, என்ற உண்மையையே கூட, இதற்கு ஒரு ஆதாரமாகவும் சொல்லலாம். உலக மொழிகளிலும் அவ்வாறே.

  என்றுமே முழுமையாக அறிந்து விடவே முடியாத இப்பிரபஞ்சத்தின் அடிப்படையை, தன் முயற்சியால் ஓரளவேனும் அறிந்து விடத்துடிக்கும் பெரும் போரட்டத்தில், மனிதன் கண்ட மிகச்சிறு வெற்றியே, அறிவியல் என்பது.

  பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தின் காலடியில் தன் வாழ்நாளின் முழு உழைப்பையும் முற்றிலுமாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து, சில நூறு மனிதர்களாவது, தன்னலமற்றுத் தந்து விட துணிந்து விட்டதன் விளைவே, எங்கோ ஒரு மூலையில் இருந்து நான் எழுதியதை, முறுக்கு சாப்பிட்டவாறே லேப்டாப்பில் இன்று உங்களால் படிக்க முடிந்ததன் பின்னனி.

  உங்கள் லேப்டாப் திடீரென பிரசன்னமாகி விட்ட ஒன்றல்ல. ஒவ்வொரு சின்ன சின்ன உண்மையாக நுணுகி ஆராய்ந்து, ஒரு சிறு கண்டுபிடிப்பை, சோதித்துப் பார்த்து, அதன் தர்க்கத்தை ஆராய்ந்து, இன்னும் பெரிதாக்கி, மேலும் மேம்பட்ட ஒன்றாக ஆக்க தொடர்ந்து நூற்றாண்டுகளாக மனிதன் மேற்கொண்ட இடையறாத ஆழ்ந்த சிந்தனை உழைப்பின் வியர்வையையே, இன்று நாம் வீட்டில் ஒரு பொருளாகக் காண முடிவது.

  சாதாரண பேப்பர் கிளிப்புக்குப் பின்னாலும் ஆதி மனிதனின் ஆவி, மானுட குலத்தின் ஞானத் தேடல், ஒளிந்திருக்கிறது -என்று எங்கோ படித்த ஞாபகம்.

  பொருளாகி, பிளாஸ்டிக் பேனாவாக நம் மேசையில் கிடப்பது, இந்த ஞானத் தேடலே. எதையும் நுணுகி ஆராய்ந்து, அறியும் தர்க்கமே. இன்னும் முக்கியமாக, எல்லாக் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னாலும் அடித்தளமாக மறைந்திருப்பது, மனிதன் தனக்கென கண்டுபிடித்துக் வளர்த்துக்கொண்ட,

  கறாரான உண்மைகளின் வழி அலசி ஆராய்ந்து தெளிந்து முன்னேறும் ”அறிவியல் அணுகுமுறையே”(அடிக்கோடு).

  எனவே, அறிவியல் எழுத வருபவர்களுக்கு, அடிப்படைத் தேவையாக இருப்பவை:

  ஒரு விவாதத்தை, அதன் எல்லாக் கோணங்களிலுருந்தும் பார்த்து, பிறழாத நடுநிலையோடு ”அறிவியல் அணுகுமுறையில்” (அடிக்கோடு) நடத்திச் செல்லும் உறுதியும்,

  அறிவியல் என்ற பெயரில் எழுதுவதால் அதில் இருப்பதை எவரும் முழுமுதல் உண்மையென, முற்றாக நம்பிப் படிப்பார்களே, அப்படி ஒன்றை எழுத வேண்டுமே என்ற ஆழமான பொறுப்புணர்வின் அச்சமும்,

  சொல்ல வந்ததை விஷயத்தை, (போகிற போக்கில் எழுதிவிடாமல்), தகவல்களின் அடிப்படையை, நம்பகத்தன்மையை, துல்லியத்தை (accuracy), மூல நூல்களைப் படித்து நுணுக்கமாக ஆராய்ந்து, சரிபார்த்து, பிழையற எழுதி விடும் உழைப்பால் அந்த அச்சத்தை, வென்று விடும் துணிச்சலும். (எழுத்தாளர்களுக்கு இருக்க அடிப்படைத் தேவைகளாக ஜெ. சொல்வது இவைகளே).

  * * *

  எல்லோருக்கும் புரியும்படி அறிவியல் எழுத வேண்டுமானால், சொல்ல வந்த விஷயத்துக்கெல்லாம் அடிப்படையான அடிப்படையை வரையறுத்துச் சொல்லி, பிறகு அதன் தர்க்கத்தின் உறுதியில் பிற விஷயங்களைச் சீராக, நிதானமாக அடுக்கிக் கொண்டு செல்லக்கூடிய பொறுமை வேண்டும்.

  நடுநிலையில் நின்று, மிகவும் அடித்தளமான ஆழமான அடிப்படை உண்மைகளை, சந்தேகத்திற்கிடமின்றி படிப்பவருக்குப் புரியும்படி விளக்கி நிறுவி உறுதி செய்து கொண்ட பின், அவற்றின் மீதான கோட்பாடுகளையும் தியரிகளையும் விவாதிப்பதையே உலகின் சிறந்த அறிவியல் எழுத்துகளின் சாரமாக நாம் காண முடிவது.

  அன்பு Down_under, நீங்கள் குறிப்பிட்ட Brief history of time இப்படித்தான் இருக்கிறது இல்லையா. ஸ்டீபன் ஹாக்கிங்கிடம் அவர் பதிப்பாளர் சொன்ன, நீங்கள் குறிப்பிட்ட உண்மையும் முக்கியமான ஒன்று. அண்மையில் வெளிவந்த எடுத்துக் காட்டுகளாக பிரையன் கிரீன் எழுதிய The elegant universe (1999 (http://en.wikipedia.org/wiki/The_Elegant_Universe மற்றும் The fabric of the cosmos (2004) http://en.wikipedia.org/wiki/The_Fabric_of_the_Cosmos
  ஆகியவற்றைச் சொல்லலாம். சுருக்கமாக எழுதுவதால் பிற புத்தகங்கள், எழுத்தாளர்களைப் பற்றி இங்கு விரித்து எழுதவில்லை.

  படிப்பவருக்குப் புரியும்படி அறிவியல் எழுத, அறிவிலில் ஆழ்ந்த புலமையும், தெளிவான தர்க்க அறிவும், சீரான வேகமுள்ள நிதானமான நடுநிலையான நடையும், இதெல்லாம் எழுதியதில் வந்திருக்கிறதா என்று படித்து சோதித்துப் பார்த்து மாற்றியமைக்க அவகாசமும், நிறையப் பொறுமையும் அவசியம்.

  ஆனால், சுஜாதாவின் நடையோ, நாலாபுறமும் தாவிக் குதித்து பாய்ச்சல் காட்டுவது. எந்த விஷயத்தையும் போகிற போக்கில் ஒரு நக்கலான குறும்பாக எழுதி விட்டு வேறு விஷயத்துக்குத் வேகமாகத் தாவி விடுவதே அவர் பாணி. அவரின் துரிதமான, நாலாபுறமும் பாயும் இந்த நடை, அறிவியல் விவாதங்களை அனைவருக்கும் புரியும்படியாக எழுத ஏதுவானது அல்ல.

  இன்னும் சொல்லப் போனால் அவரின் நடை ஒரு அறிவியல் விவாதத்தை நிகழ்த்துவதன் தேவைக்கு, முற்றிலும் எதிரானது. சில சமயங்களில் பாத்திரத்தின் வடிவம், அதற்குள் வைக்க முடிகிற பொருளையே நிர்ணயித்து விடுகிறதல்லவா.

  அடிப்படையான ஒரு தத்துவத்தை நிறுவும் முயற்சியின் பொறுமையோ, அதை நெறிப்படுத்தி விளக்கும், தர்க்கத்தின் கடுமையோ பெரும்பாலும் அவரின் அறிவியல் எழுத்துக்களில் காணக்கிடைப்பதிலை. ஒரு விஷயத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதை முழுக்க நிறுவி, படிப்பவருக்கு முற்றிலும் புரியவைத்துத் தெளியாமல் அடுத்த விஷயத்துக்குத் தாவி ஓடிவிடுவதே அவரின் எல்லா அறிவியல் எழுத்துக்களிலும் நாம் காண முடிவது.

  10, 15 வருடங்களுக்கு முன்னால் இண்டர்நெட் வசதியில்லாத நிலையில் அவரின் ஏன் எதற்கு, எப்படி போன்றவை, அறிவியல் மீதான ஒரு பரவலான பொதுவான விழிப்புணர்வை ஏற்படுத்தியது, என்பது உண்மையே. இந்த வகையில் அவரின் பங்கு கணிசமானதே.

  ஆனால் இது போன்ற புத்தகங்களின் அவர் எழுதியது மிக எளிய அறிவியல் செய்திகள் அல்லது அதன் மீதான அவரின் ரசனையப் பற்றிய குறிப்பையே. அவற்றை ஓரளவேனும் அறிந்திருந்த படித்த மக்களின் மத்தியில் அந்தச் செய்திகளின் மீதான விளையாட்டான கருத்தாகவோ, குறும்பான எண்ணமாகவோ இது சென்றடைந்தது.

  இதைவிட இன்னும் படிப்பறிவு குறைந்த எளிய வாசகனுக்கு அவரின் பரவலாகத் தகவல் அறிந்த(savvy) ஆளுமையைப் பறைசாற்றி ’மனுசனுக்கு எவ்வளவு விவரம் தெரிஞ்சுருக்கு பாரு’ என்ற ஒரு பொதுவான வியப்பை ஏற்படுத்தியதே தவிர, அந்த அறிவியல் செய்திக்கு அடித்தளமான கறாரான அறிவியல் அடிப்படையை, தத்துவத்தை கொண்டு சேர்க்க பெரும்பாலும் தவறி விட்டது. படிக்கும் போது பறக்கும் ஒரு பட்டாம் பூச்சியைத் தவிர, படித்து முடித்தபின் வாசகனுக்குள் பெரும்பாலும் எஞ்சுவது, எதுவும் இல்லை.

  இதில் சந்தேகமிருப்பவர்கள் நான் குறிப்பிட்ட புத்தகங்களின் ஒரு அத்தியாயத்தை இப்புத்தகங்ளையோ அதன் தலைப்புகளையோ கேள்விப்பட்டிருக்காத ஒரு ஒரு பக்கத்து வீட்டு நண்பருக்கு படிக்கத் தரவும். பிறகு மூடிவைத்து விட்டு இதுவரை தனக்குப் புரிந்த அறிவியல் அடிப்படை உண்மைகள் அல்லது தர்க்கங்கள் என்னென்ன என்று பட்டியலிட்டுப் எழுதச்சொல்லிப் பார்க்கவும். தாங்களாகவும் பரிசோதித்தும் பார்க்கலாம்.

  * * *

  துறை சார்ந்து கல்லூரியில் படிக்காத முதல் நிலையிலான சிந்தனையாளர்கள், தத்துவ மேதைகள், சமூக அறிஞர்கள், எல்லா நாடுகளிலும் எப்பவும் உண்டு. அதே போல மொழியை, இலக்கியத்தைப் பாடமாகப் படிக்காத முக்கியமான பல எழுத்தாளர்கள், கவிஞர்கள் எக்காலத்திலும் உண்டு. தன் வாழ் நாளின் பெரும்பகுதியையும் கற்ப்பதில் அர்ப்பணித்து விட்டதாலே இது அவர்களுக்கு சாத்தியமாயிற்று. நுண்ணிய அவதானம் மற்றும் உள்ளுணர்வின் வெளிப்பாடான புனைவு எழுத்தின் முக்கியமான வித்தியாசம் இது.

  அறிவியலோ தொடர்ந்து மாறி முன்னேறி வரும் தகவல்களை, மிக முக்கியமாக அவற்றின் ஆதாரமான முரணியக்கத்தை, அடிப்படையாகக் கொண்டது. இதை, துறை சாராமல் முறையாக முழுமையாகப் படிக்க தளங்கள் அநேகமாக இல்லை. அப்படி ஒருவர் அத்துறையில் முன்னோடியான அறிவியல் எழுத்தாளராக ஆனது அனேகமாக வரலாற்றில் இல்லை.
  அறிவியலை வெறும் தகவல்களாக மட்டும் படித்திருப்பதையே சுஜாதாவின் புத்தகங்களில் எவரும் காண முடிவது.

  நான் மேலே குறிப்பிட்ட புத்தகங்களை எழுதிய பிரையன் கிரீன் மற்றும் Down_under குறிப்பிட்ட ஸ்டீபன் ஹாக்கிங், மற்றும் கார்ல் சாகன், டெஸ்மண்ட் மாரிஸ், ரிச்சர்ட் டாக்கின்ஸ், ஐசக் அசிமாவ், மைக்கேல் கிரிக்டன் ஆகிய அனைவரும் அவரவர் துறைகளில் படித்து, முனைவர் பட்டம் பெற்று, கல்வித்துறையிலும் ஆராய்ச்சியிலும், பிரபலமான முழுநேரப் பேராசிரியர்கள் என்பது நாம் முக்கியமாக நினைவு கொள்ள வேண்டியது.

  ஒரே துறையில் படித்துப் பட்டம் பெற்ற இரண்டு நண்பர்களே விவாதித்துப் புரிந்து கொள்ள சிரமமான ஆய்வுத்தலைப்புகளாக அறிவியல் ஆழ்ந்து விரிந்து விட்ட நிலையில்,

  அறிவியலின் சகல துறைகளின் விற்பன்னராகவும் சுஜாதா தன்னை நினைத்துக் கொண்டு விட்டாரோ என்ற ஐயம், அவர் அறிவியல் எழுத்துக்களைப் படிக்கும்போது எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

  அதுவும், மானுட குல சிந்தனனயின் அடியாளத்தை, அகலத்தை அளக்கும் தத்துவ அடிப்படையை, அறிவியலின் அடிப்படையையே ஆட்டிப் பார்த்து, மிகக் கவனமாக ஆழ்ந்து ஆராய்ந்து தெளிந்து, ஒவ்வொரு படியாக நிறுவி, நடு நிலையோடு எழுத வேண்டிய, மிகவும் சிக்கலான, கடவுள் -போன்ற விஷயங்களில், சற்றேனும் அஞ்சித்துணியாமல், மேலோட்டமாக. போகிற போக்கில் அவர் வைக்கும் விவாதங்கள், அறிவியல் அறிமுகம் கொண்ட எவரையும் துணுக்குற வைப்பவை. மேலும், இவற்றில் தர்க்க ஒழுங்கோ ஒரு விஷயத்தை நிறுவி, படிப்பவருக்குப் புரியவைக்கும் முயற்சியோ சிறிதும் இல்லை.

  பொறுக்கி எடுத்து, கல் தூசு நீக்கி, நொறுங்க வேகவைத்துத் தர வேண்டிய கஞ்சியை, நோயாளிக்குப் பிடிக்கும் என்பதற்காக உப்பு, லேசாகச் சேர்த்திருந்தால் பரவாயில்லை. இவற்றோடு புளி, மிளகாய், கடுகு, சீரகம் ஏலம், கிராம்பு, இலவங்கப் பட்டை, பே இலை, ஆகியவற்றையும் தாராளமாக அள்ளிப் போட்டு தாளித்து விட்டார் என்பதே அவர் அறிவியல் எழுத்துகளில் காணக் கிடைப்பது.

  வரி வரியாக, ஆழ்ந்து படித்துத் தெளிய வேண்டிய அத்தியாயங்கள் கொண்ட, பிரபஞ்ச விதிகளை உள்ளடக்கிய மகாப் புத்தகமாகிய அறிவியலை, அதிரசம் சாப்பிட்டவாறே எட்ட நின்று இடதுகையால் ரேண்டமாகப் புரட்டிப் பார்த்து அனுப்பிய குறுஞ் செய்திகளையே அவரின் அறிவியல் எழுத்துகளாக நாம் காண்பது.

  அந்தப் புத்தகத்தைப் படிக்கும் வேட்கையை, ஆவலை, ஞானத் தேடலைத் தூண்டாமல் ”அந்த புக்கா? இந்த SMS –ஸ படி, மச்சி! அவ்வளவு தான் அந்த புக்கே. அதான் சுஜாதாவே சொல்லிருக்காரே!” என்று பெரும்பாலான தமிழ் இளைஞர்களை நம்ப வைத்து விட்டது தான் அவர் செய்தது.

  அவர் எழுத்தில் உள்ள பிழைகளையும், குறைகளையும் அவரின் திட்டமிட சதி என்று நான் சொல்லவில்லை. அப்படி ஒரு தப்பான குறுஞ்செய்தியையாவது அனுப்பி, இந்தத் தலைப்புகளின் பெயர்களையாவது தமிழ் மக்களுக்குப் பரப்பி விட முடிந்ததில் சுமார் இருபது வருடங்களுக்கு முன், அவரின் பங்கு கணிசமானதே. அதே சமயம், அவரின் பங்கு அவ்வளவுதானோ? -என்று தோன்றும் சந்தேகம் ஒரு புறம்.

  அவர் எழுதாத தலைப்புகளே இல்லைதான். ஏன் எதற்கு எப்படி மற்றும் கற்றதும் பெற்றதும் தொடர்களில் அவர் எழுதியிருக்கும் 13,456 விஷயங்களில் ஒரு பத்தையாவது, அறிவியல் அணுகுமுறையில்’ நிதானமாக விரித்து ஆழமாக எழுதியிருக்கலாமே என்ற ஆதங்கம் இன்னொரு புறம்.

  “ஏறத்தாழ எல்லாக் கதைகளும் deadline காலக் கெடுவின் நெருக்கடியில் எழுதப்பட்டவை எனினும் கதைகளின் சிறப்புக்கு இந்த கெடுவும் காரணம். ஆற அமர வார்த்தைகளை செதுக்கி அடித்து திருத்தி… இதெற்கெல்லாம் சமயமின்றி எழுத ஆரம்பித்த கதைகள் பல சந்தர்ப்பங்களில் தன்னையே எழுதிக் கொண்டவை”
  -என்று ஒரு முன்னுரையில் எழுதியதும்,

  “தப்பு செஞ்சா வேற யாரும் கண்டு புடிச்சு அதட்டமாட்டாங்கள்ல. ஈஸி” என்று எப்பவோ வேறு எதற்காகவோ அவர் சொல்லியதும் நினைவில் மினுங்கி மறைகின்றன.

  அறிவியல் விவாதங்கள் இப்படியெல்லாம் கூட எழுதி விடக்கூடியவையே என்பதை சுஜாதாவின் வாசகர்களும், அறிவியல் விவாதங்கள் இப்படியெல்லாம் எழுதி விடக்கூடியவை அல்ல என்பதை, அவரின் வாரிசாக எழுத வருபவர்களும், கவனமாக நினைவில் கொள்ள வேண்டும்.

 33. வேணுகோபால் தயாநிதி

  Dear down under,

  Let me say this one more time, politely. My intention is neither to claim an expert nor an exponent on sujatha’s books, but only to express my views as an average tamil reader. Hope you will agree with some of my observations.

  You slice a nice piece of the pie. I enjoyed our conversation, thanks :)

  BTW, the statements that you have cited are J’ s and not mine.

 34. down under

  dear venugopal ,
  you have been more than sufficiently polite thanks .:)
  For the sake of brevity and focus let us even remove ref to sujatha and replace it with writer x who writes in this way abt science.

  * my main area of differing is the perception that this is how one should write about science or this is the only way to write about science.My view is that as long as someone does not bluff or write pseudo science , it should be just taken as a different way of writing or presenting science.The writer should have the creative liberty and freedom of judgement to present it in a way he / she sees fit.Writing so is not seen as disrespectful to science nor would if affect science in any way .

  * If valluvar writes “poimayum vaimai idathu ” we dont ask him why he did not write a detailed article to explain exactly how he has arrived at such and such conclusion the ethical and moral arguments behind it any supporting evidence.I mean this is not very different from science,especially in the use of method , rigorous logic and replicability of truth.

  * What will be a big concern is that if the writer made some serious scientific blunders / errors in his writing.Especially if it was intentional , pretence or to prove a personal pet theory.
  ————————–
  Putting him back into the picture…

  * // இலக்கியம், தத்துவம், அறிவியல் -இவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவையே என்றாலும் இவை மூன்றும் ஒன்றல்ல என்பது, நாம் எல்லோரும் அறிந்ததே.//
  This is a very important point.Among other differences there are not many places in science where you can go and hide unlike
  literature or philisophy where if you are sufficiently smart you can almost get away with murder.Science by its own design and nature is
  well protected .It the most rigorous,ruthless and democratic of all the other knowledge fields and you can’t forever “jalliadichufy” in this field. :)

  * The main area I differed from you is the three or four lines you quoted from his “kadavul” book (I assume we are considering this as a test case) which you say are not scientific. How I see that is, in my view, yes its grossly simplified , subjective , appear biased ( his almost exclusive references to vaishnavite lit and philisophy ) but it is not incorrect or wrong.

  * From what little I have read (say atleast 50% of his non-fiction ) I did not get the impression that he was bluffing or making up about science.If it is established as true then ..its a pity ..and we all should accept that and he deseves a strike in red ink (for his articles on/about science).
  ———————
  This all aside in general

  * Science is not contesting to be a solid entity accumulating knowledge over generations .. it is getting adventurous .. and invading other spheres of knowledge.For example there are recent developements in the area of string theory .. which is gaining momentum .. that gravity itself is a illusion (. Dr. Erik Verlinde / NYT /2010).If sujatha were now he would be having a field day with this .. :) I am sure he would have a handful of pasuram to quote about this :)

  * The way sujatha writes is like a magician ,who shrinks that tall concrete building to the size of a toy :) he does not really disturb the building How he wrote also reflects what he wrote and what be believed in .He can’t build a real building brick by brick nor is he interested,writers like JM are “brick and mortar” writers ,fuelled by scorching introspection who engage in rigorous logic , persistent and dedicated approach to whatever they write about ,they are like Danko with his burning heart :)

  sujatha will always remind me of these line from one of manushyaputhran’s poems ..

  சும்மா
  ஒரு சுவாரசியத்திற்காக
  கண்ணாடியில் என் பிம்பங்களை
  கொஞ்சம் சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறேன்
  அவ்வளவே

  *I appreciate your effort and time .Maybe one day someone would write a detailed and sufficient review about his writings in a very detailed scienfitic approach .

 35. வேணுகோபால் தயாநிதி

  நன்றி, வணக்கம்.

 36. gomathi sankar

  இது ஒரு புதுவிதமான தூய்மைவாதமாக தெரிகிறது.அறிவியல் என்பது இன்னுமொரு கடவுள் அல்லவா..அதை இப்படியா வேடிக்கையாக அணுகுவது?ஜெமோ பொழுதுபோக்கு பௌதீகம் என்று ஒரு நூலைச் சொன்னார்.பௌதீகத்தை பொழுதுபோக்காக அணுகுவது அபச்சாரம் அல்லவா.[உங்கள் வாதப்படி]

  அறிவியலில் மட்டுமல்ல தத்துவதளத்தில் கூட வாழ்வின் அடிப்படை பிரச்சனைகளை மிக தீவிரமாக அணுகுபவரும் மிக விளையாட்டாக அணுகுபவரும் உண்டு.[ஓஷோ போல] பயித்தியக்காரா என்று இறைவனையே திட்டும் மரபு நமது.ஆனால் உங்கள் அணுகுமுறை அறிவியலை இன்னுமொரு புனிதப் பசுவாக மாற்றும் முயற்சியாகத்தான் தெரிகிறது.சுஜாதா ஏன் அறிவியலை சீரியசாய் அணுகவில்லை என்பது அவர் ஏன் இன்னொரு ஆளாய் இல்லை என்பது போல்தான்.அது அவர் ஆளுமையில் இருக்கிறது.அது உங்களுக்கு உவப்பு இல்லை எனில்தாராளமாய்ப் அவரைப் புறக்கணித்துவிட்டு தமிழில் அறிவியலை நீங்கள் சொல்வது போல் இறுகிய முகத்துடனும் பல்லை உடைக்கும் நடையுடனும் அணுகும் எண்ணிறந்த எழுத்தாளர்களைப் படிக்கலாம்.ஆனால் நீங்கள் சொன்ன கார்ல் சாகன் மீது கூட ரொம்ப எளிமைப் படுத்தினார் என்ற குற்றச்சாட்டு உண்டு என்பதை நினைவு படுத்துகிறேன்.

  அவரது வேடிக்கையான நடை அறிவியலின் ஆழ்தளங்களுக்கு முன்னேறவிடாமல் தடுக்கிறது என்ற வாதம் எவ்வளவு உண்மை?அது போல உங்கள் கஞ்சி உவமை சரி என்றும் தோன்றவில்லை.எந்த மருந்துக்கும் குழந்தைகளுக்கு என தனியான இனிப்பு சிரப் வகை உண்டு,அது போல் கொடுப்பது தவறு.மருந்தே சாப்பிடாமல் அது துப்பிவிட்டாலும் பரவாயில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள்.சரியாகத்தான் இருக்கவேண்டும்.ஏனெனில் இதை சரியென வாதிடுவதற்கு நான் Rojer Penrose ஆக இருக்கவேண்டும்.இல்லையா.

 37. வேணுகோபால் தயாநிதி

  ”இறுகிய முகத்துடனும் பல்லை உடைக்கும் நடையுடனும் அறிவியலை அணுகவேண்டும்”

  -என்ற கருத்தை வலியுறுத்தும் நோக்கத்தோடு இதை எழுதவில்லை என்ற எளிய உண்மையை, நான் மேற்கோள் காட்டிய எழுத்தாளர்கள், புத்தகங்களை வாசித்தவர்கள் அறியலாம்.

  ” ஒரு சாதாரண தமிழ் வாசகனாக” “சுஜாதாவின் வாசகனாக” – என்று பல முறை தமிழில் வந்த வரிகளை சிலர் கனிக்காமலும் இருந்து விடுவார்கள் என்பது எனக்குத் தெரியவில்லைதான். இருந்தும், ”Let me say this one more time, politely. My intention is neither to claim an expert nor an exponent on sujatha’s books, but only to express my views as an average tamil reader” என்று ஆங்கிலத்திலும் தவறுதலாக எழுதியிருக்கும் வரிகளும் கவனிக்கப்படவில்லை என்பது வருந்தத் தக்கதே.

  ’ஒரு சாதாரண தமிழ் வாசகன்’ என்று என்னை நினைத்துக்கொண்டதால் தான் என்னை அப்படியே விளித்து வருகிறேன் என்ற உண்மை இதுவரை தெரியாதவர்களுக்கு, வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன்.

  சாதாரண தமிழ் வாசகனே, சொல்லிவிடக்கூடிய விஷயங்களை Rojer Penrose நேரில் வந்து சொன்னால் தான் கேட்பேன் என்றால் சொல்ல ஒன்றுமில்லை.

 38. வேணுகோபால் தயாநிதி

  முடிவாக:

  1. முன் வைப்பவரின் ஆளுமை, அவரின் பின்னணி ஆகியவற்றை வைத்தே ஒரு விமர்சனம் மதிப்புப் பெறுகிறது. ஜெ. சுஜாதாவைப் பற்றி சொல்கிறார் என்றால் அவர் அவரின் எழுத்துக்களைப் படித்திருக்கிறார், முழுக்க உள் வாங்கியிருக்கிறார், சுஜாதாவோடு இது விஷயமாக உரையாடியிருக்கிறார். இது ஜெ.யின் வலைத்தளம், அவரை ஒரு பொருட்டாக மதிப்பதால் தான் இங்கு எழுதவே வந்திருக்கிறோம் இல்லையா. அவர் சொல்வதில் உள்ள உண்மையை யோசித்துப் பார்க்கலாம் அல்லவா.

  ஜெ.யின் தகுதியை அவரே சொல்லிக் கொள்ளத் தேவையில்லை. அந்த வகையில் அவர் முன்வைத்த ஒரு கருத்து ஏற்கனவே நிலை பெற்று விட்ட ஒன்றே. நான் ’அது ஜெ. முன்வைத்தவை’ என்று, சொன்னது ”அதை திரும்ப நாம் மறுவிவாதம் செய்ய அவசியமில்லாதவை” என்ற பொருளிலேயே. அந்தக் கருத்துக்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்று நழுவி ஓடி ஒளிந்து தப்பித்து விட அல்ல. யார் என்ன சொல்கிறார்கள் என்று கூடக் கவனிக்காமலேயே, பின்னூட்டம் எழுதி வருகிறோம்.

  2. ஒரு ideology -யைச் சாராத நிலையில், ஒருவர் முன் வைக்கும் ஒரு விமர்சனத்தை அதில் உள்ள உண்மையை மறுத்து அதை வெறும் காழ்ப்பாக மட்டுமே திரித்துப் பார்க்கும் நிலையே படித்தவர்களிடமும், இன்னும் இருக்கிறது.

  ஜெ, சொல்வதையே அப்படிப் பார்க்கும் நிலையில், என்னைப் போன்ற ஊர் பேர் தெரியாத குப்பணாண்டிகள் சொல்வதை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள் என்பதால், நான் முன் வைத்த விவாதத்தின் நேர்மையை நிறுவ, அவை காழ்ப்பின் அடிப்படையில் உருவானதல்ல என்பதைச் சொல்ல, என் பெயர்ப் பின்னணியையும் கோயிலுக்குப் போவதையும் சொல்ல வேண்டியதாயிற்று. (தன் சொந்த கடவுள் நம்பிக்கையைத் தவிர ஒரு மனிதன் கோயிலுக்குப் போக பிற காரணங்களும் இருக்கக் கூடும். அவை, இங்கு அவசியமற்றவை).

  3. என்னைப் போன்ற ஊர் பேர் தெரியாத குப்பணாண்டிகள், சுஜாதாவை கண்மூடித்தனமாக விமர்சிக்கவில்லை என்பதை வலியுறுத்த, மெனக்கெட்டு அவரைப் பற்றிய ஒரு முழு விமர்சனத்தையும் கூட விரிவாக ஆராய்ந்து எழுதிவிட்டேன்.

  4. இது அறிவியல் கருத்தரங்கு அல்ல, இலக்கிய விவாதம். ஒரு எளிய தமிழ் வாசகனாக, இலக்கிய அடிப்படையி்லான தர்க்கங்களின் வழியே இந்த விமர்சனங்களை நான் முன்வைக்கிறேன். ஆகவே, இவற்றை நிறுவ இலக்கியக் காரணங்களைத் தவிர, நான் படித்த இடங்கள், வாங்கிய பட்டங்கள், விருதுகள், எழுதிய ஆராய்சிக் கட்டுரைகள், என் தொடர்புகள், நான் பணியாற்றும் பல்கலைக் கழகத்தின் புகைப்படம், முத்திரை இவற்றையெல்லாம் கொண்டு வந்து யாருக்கும் காட்டத் தேவையில்லை. ஒரு சாதாரண முனைவர் பட்டம் வாங்கிவிட்டு அமெரிக்காவில் ஒரு பல்கலைக் கழகத்தில் இருக்கும் திமிரே கூட இப்படி எல்லாம் எழுத்தூண்டி விடும் அல்லவா?

  இருந்தும் ஏற்கனவே துப்புத் துலக்கி மின்னஞ்சலைக் கண்டுபிடித்து விட்ட சில சிந்தனை வீரர்கள் கெட்ட வார்த்தைகளில் திட்டியும் அநாமதேயக் கடிதங்களிலும் தங்கள் நேர்மையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இன்னும் அதை போன்ற பல ஆர்வலர்களின் நலனை முன்னிட்டு என் மின்னஞ்சல் முகவரியைய கீழே தருகிறேன்.
  நண்பர்களும் எழுதலாம்.
  [email protected]

  இனிமேல் இந்தத் தலைப்பில் வேறு எதுவும் எழுதும் உத்தேசம் எனக்கு இல்லை.

 39. gomathi sankar

  அன்புள்ள வேணுகோபால்,உங்களைத் தாக்கித் தனிப்பட்ட மின் அஞ்சல்கள் வந்திருந்தால் கடுமையாக கண்டிக்கப் படவேண்டிய விடயமே.அட நம்ம தலைவரைத் தப்பா பேசிட்டாண்டா என்று சில ‘தீவிர விசிறிகள்’ கிளம்பி இருக்கலாம்.வருந்துகிறேன்.
  ஆனால் உங்கள் விவாதங்களில் இருக்கும் சில பாவனைகளைப் பற்றி நாகரிகமாய் சுட்டிக்காட்டுவது பிழையல்ல என்றே நினைக்கிறேன்.
  முதலில் நீங்கள் சுஜாதாவின் எழுத்துக்களை இணையத்தில் தட்டி எழுதக் கூடியவையே என்றீர்கள்.பிறகு கொஞ்சம் கீழ் இறங்கி தட்டச்சு பிழை ஆகிவிட்டது.என்சைக்ளோபீடியா என்றீர்கள்.இப்போது மேலும் மனம் இரங்கி அவர் நல்ல பத்தி எழுத்தாளர் என்கிறீர்கள்.நன்றி.ஆனால் இன்றைய தமிழ் இலக்கிய சூழலில் கொஞ்சம் பரிச்சயம் உள்ளவர் கூட இது பாராட்டல்ல .மிக மோசமான வசை என்று அறிவார்கள்.சிவாஜியைப் பற்றி பேசும்போது ‘அவர் பெரிய நடிகர் .என்ன.கொஞ்சம் அதிகமா நடிப்பார்’என்று சொல்வது போல ஒரு இடக்கரடக்கல்தான் இந்த மிகச் சிறந்த பத்தி எழுத்தாளர் பட்டமும்.
  இரண்டாவது ஜெமோவே சொல்லிவிட்டார் என்று அவரை உதவிக்கு இழுக்கிறீர்கள்.ஜெமோவின் தளத்துக்கு அவரோடு உடன்படுபவர் மட்டுமே வருவதில்லை.அவரோடு ஒரு எல்லைவரை ஆரோக்கியமாக முரண்பட அவரே அனுமதிக்கிறார்.அதுவே அவர் பலம்.இல்லாவிடில் வேறு சில இடங்கள் போல இது மற்றுமொரு பஜனைமடமாகவே இருக்கும்.அதன் அபாயங்களும் அவர் அறிவார்.சு ரா வுக்கு இறுதிக் காலங்களில் இதுவே நிகழ்ந்தது என்பதை அருகில் இருந்து பார்த்தவர் அவர்.

  விவாதம் சுஜாதாவின் அறிவியல் ஆக்கங்களின் எல்லைகள் பற்றி மட்டும் பேசாமல் அவை முற்றிலுமாகப் புறக்கணிக்கக் கூடியவை என்பதே சொன்னதால்தான் இத்தனை எதிர்வினைகளும்.ஜெமோவும் இதே போல் கருத்தைச் சொன்னார்.எனக்கு அதில் உடன்பாடில்லை.ஒரு ஆரம்பநிலை வாசகன் கூட புறக்கணிக்க வேண்டிய அறிவியல் படைப்புகளையே எழுதிய சுஜாதாவுக்கு தான் எழுதிய அறிவியல் சிறுகதை நூலை என் சமர்ப்பிக்கவேண்டும் என புரியவில்லை.

  இதோ அருகில் என் பையனுக்கு A FOR APPLE,R FOR RAT என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்.சிலசமயம் RAT என்றால் எலி.எலி பிள்ளையாரின் வாகனம்.பிள்ளையார் யானை போல் இருப்பார்.யானை என்றால் ELEPHANT என்று எங்கெங்கோ வேடிக்கையாய் தான் நகர்கிறது.ஆனால் இது அறிவியல் பூர்வமான அணுகுமுறை இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள்.அவள் அமெரிக்காவில் ஒரு சாதாரண முனைவராய்க் கூட இல்லாதது காரணமாக இருக்கலாம்.ஆனால் அவனுக்கு R FOR RELATIVITY A FOR ARTIFICIAL INTELLIGENCE சொன்னால் புரியுமோ தெரியவில்லை.

 40. rsdhar

  சுஜாதா விஞ்ஞானக் கதைகளையும், கட்டுரைகளையும், விஞ்ஞான விஷயங்களையும் எளிமையான முறையில் தமிழில் எழுதியது என்னைப் போன்ற கோடிக்கணக்கான, தமிழ் மட்டுமே படிக்கத் தெரிந்த பாமரர்களுக்கு. வேணுகோபால் தயாநிதி, ஜெயமோகன் போன்ற ஒரு சில நூறு அதிமேதாவிகளுக்கு அல்ல.

  ஐசக் அசிமாவ் போன்ற ஆங்கில எழுத்தாளர்களின் கதைகளோ, கட்டுரைகளோ என்றுமே என்னைப் போன்ற பாமரர்களுக்குப் புரிந்ததில்லை. அதையெல்லாம் சுஜாதா மூலமாகத்தான் தெரிந்து கொண்டோம். ஜீனோம் என்றால் என்ன, நானோ என்றால் என்ன, க்வாண்டம் தியரி என்றால் என்ன என்பதெல்லாம் சுஜாதா சொல்லித்தான் எங்களுக்கெல்லாம் தெரியும். உங்களைப் போன்ற மேதாவிகளுக்கு சுஜாதாவின் விஞ்ஞான எழுத்துக்கள் சாதாரணமானவை என்றால் விட்டுவிடுங்கள். நாங்கள் படித்துக் கொள்கிறோம்.

  சமீபத்தில் வெளியான அங்காடித் தெரு படத்துக்கு ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார் என நினைக்கிறேன். நான் அந்தப் படத்தை வெகுவாக ரசித்துப் பார்த்த போதும் அதில் வரும் எந்த வசனமும் எனக்கு நினைவில் வரவில்லை. சுஜாதா எழுதிய நிறைய வசனங்கள் (இந்தியன், முதல்வன், கன்னத்தில் முத்தமிட்டால், சிவாஜி, ரோஜா) இன்றும் பலருக்கு மனதில் பதிந்திருக்கிறது என்ற ஒன்றே அவருடைய வெற்றியின் சாட்சி.

  ஜெயமோகன் போன்ற “சிற்றிதழ்” மேதாவி எழுத்தாளர்களின் கதைகளை எங்களைப் போன்ற பெரும்பாலான வாசகர்கள் படிப்பதில்லை. படித்தாலும் அவை மனதில் நிற்பதில்லை. இலக்கியம் என்ற பெயரில் புரியாத (அல்லது வெகு சில அறிவு ஜீவிகளுக்கு மட்டுமே புரிகின்ற) எழுத்துக்கள் எங்களைப் போன்ற வெகுஜன வாசகர்களுக்கு என்றுமே புரிந்ததில்லை, இந்த இலக்கிய வகை எழுத்துக்களை படிக்காவிட்டால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை.

Comments have been disabled.