அன்பு ஜெயமோகன்,
வணக்கம்.
எம் எஸ் சுப்பலக்ஷ்மி பற்றிய புத்தகத்தைப் பற்றித் தங்களின் எண்ண ஓட்டங்களைக் கண்டேன். இது சம்பந்தமாக எனக்குத் தோன்றுவது வருமாறு:
சுப்பலக்ஷ்மியின் பிறப்பு குறித்து தங்களின் நண்பர் அறிந்தபின் அவரின் மதிப்பில் எம் எஸ் தாழ்ந்து விட்டதைக் குறிப்பிட்டு இருந்தீர்கள். அவருக்கு அது பற்றித் தெரியாதது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது.
என் அன்னை தந்தை போன்ற என் முந்தைய தலைமுறையினர்க்கும் அவர்கள் மூலமாக என் போன்றவர்க்கும் இது போன்ற விஷயங்கள் அனைத்துமே தெரியும். இதற்கும் மேலாகவும் ஒன்றிரண்டு விஷயங்களும் தெரியும். இது போன்ற விஷயங்கள் எம் எஸை ஆராதிக்கும் மிகவும் ஆசாரமான என் அன்னை போன்றவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தோன்றியதில்லை.
எம் எஸ் குரலினிமையினாலா பக்தியினாலா பாவத்தினாலா எல்லோரயும் கட்டிப் போட்டிருந்தார். கடையநல்லூர் வெங்கட்ராமனின் இசைக் கோர்ப்பும் பெரிய சங்கராச்சாரியாரின் ஆசியும் அவருக்குப் பெருமளவில் உதவின. அவர் எழுதிய மைத்ரீம் பஜத என்கிற பாடலைத் தான் எம் எஸ் ஐ நா சபையில் பாடினார்.
எம் எஸ்ஸைச் சுற்றி உருவாக்கப் பட்டிருக்கும் பிம்பம் உண்மையில் அவரைச் சுற்றி உள்ளவர்கள் உருவாக்கியது என்றா நினைக்கிறீர்கள்? எல்லோரும் அவரின் அலமாரியில் உள்ள எலும்புக்கூடுகளைக் கண்ட பின்னரும் அதையும் மீறி அவருக்கு அளித்த அங்கீகாரம்தான் அந்த பிம்பம் என்று எனக்குத் தோன்றுகிறது.
இப்படித் தான் திரு கருணாநிதி தமிழினத் தலைவரானதும் எம் கே காந்தி மஹாத்மா ஆனதும் நடந்திருக்கின்றன. மகாத்மாவின் காந்தியம் எப்படி நடைமுறைப் படுத்தப் படுகிறது என்பதைப் பற்றி நிராத் சி சௌத்ரி எழுதிய கேலிக் கட்டுரையை நீங்கள் படித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை.
நான் பார்க்கிற வரை எம் எஸ் அக்னி பிரவேசம் தான் செய்திருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.எங்கு எனக்கு அபிப்ராய பேதம் வருகிறது என்றால் அவர் குறைகளையும் மீறி சமுதாயம் அவருக்கு அளித்த பெரிய அங்கீகாரத்தினால் தான் இது சாத்தியம் ஆகிற்று என்று தோன்றுகிறது.
எம் எஸ்ஸை விட மேலான குரல் வளம் கொண்டவர் என் சி வசந்த கோகிலம். பிராமண ஜாதியைச் சேர்ந்தவர். எம் எஸ்ஸை விடக் கீழான வாழ்க்கை வாழ்ந்து அகாலமாய் மரணம் அடைந்தார். இவருக்கு எந்த ஆமை ஓடும் பாதுகாப்பு அரணாய் அமையவில்லை.
பெரிய சாதனைகள் செய்யும் மனிதர்கள் சிலருக்கு சமுதாயம் அவ்வப்போது இப்படிப் பட்ட சலுகைகளை வழங்கி வந்த போதிலும் அது எல்லோருக்கும் அமைவதில்லை.
எம் எஸ்ஸின் பாடல் இதோ:
அன்புடன்,
அஸ்வத்
Dear Jeyamohan
The book by MR. George on MS Amma is a research in a wrong direction. To me a musician is a musician, I don’t care about their personal life unless they share it. So also for any artist. I can understand if a research has been done on the progress of her music talents and how in certain Ragas she can really reach the perfection would have been a better topic. Or her struggle to break that binding social chains with a stigma. But adding her very personal letters to GNB leaves a bad taste.
I can understand if a research paper was submitted on the social acceptance of “Devadasis” and the uphill tasks they underwent. Just because MS Amma broke the tangles does not mean that her innate private and personal moments need to be publicized without her permission and when she is not here to defend or approve.
I do not think all the Fans of MS Amma are like that one example you have given who changed his attitude after knowing that she was the daughter of Srimathi. shanmugavadivu another great artist of that time.
Freedom of writing should have some etiquette of not probing into some tender very personal moments of life without that person’s permission. I felt sad that you liked that book published by Mr. George.
Thank you.
Warm regards
Sobana Iyengar
இவ்வினாக்களுக்கு இக்கட்டுரை முதலில் வெளிவந்தபோதே விரிவான பதில்களைச் சொல்லிவிட்டேன்
சுட்டிகள்
ஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்லவேண்டும்?
Thanks for publishing ‘venmurashu’ in internet.
Myself and my wife, from Sydney Australia, have been reading 3 chapters everyday and it gives us immense happiness to know the epic in full detail. It gives a 3 dimensional view on the events and all characters including the “cheddis” accompanying the queens whom we normally ignore. Please continue the good work. I read every chapter loudly to my wife and take about 30 minutes for one chapter and discuss the story in detail at the end and gives us immense happiness and understanding while doing this way.
This way we are able to connect the events and fully enjoy the environment and reasons that created those events and behaviors.
I also enjoyed your articles on JK , Brahmanism, Shankara , etc and all those articles were very illuminating and showed painstaking research behind them. the travelogues to rishikesh, hardwar, ajanta,ellora recreated similar spiritual experiences in us since we have visited them in previous years. Your articles on Gandhi,Tagore etc are very illuminating.
I did not enjoy the article on ‘MS’ (agnipravesham) since it talks a lot on her birth , mothers’ caste etc particularly these days when so much commotion in the community on caste related matters (IITM etc). Almost most of her fans know about her birth and events leading to her marriage. Most of the information in the book seems to based on guesswork since there is no recorded history (other than some letters written in her puberty). It is a bit denigrating the great artist. No need for us to know her young life in so much detail .I will be happy to know that the review was not written by you since i have lots of respect for your writing.
Please keep up the great work
Regards
Ramaswamy
அன்புள்ள ராமஸ்வாமி
உங்கள் கடிதத்தில் ஒரு தொனி உள்ளது, அதை ஒருபோதும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. தமிழகத்தில் உள்ள பொதுவான மனநிலை அது. எழுத்தாளனை ஓர் இசைக்கலைஞனைப்போல நடிகனைப்போல ஒருவகை கேளிக்கையாளனாகக் கருதுவது. அவன் தங்களுக்கு உகந்ததைச் சொல்லி மகிழ்வூட்டக்கூடியவன் என்ற மனச்சித்திரம்.
நான் உங்களுக்கு உகந்ததைச் சொல்ல வரவில்லை. உங்களுக்கு அல்லது பிறருக்கு என்ன பிடிக்கும் என்பது எனக்கு ஒரு பொருட்டும் அல்ல. எது நான் அடைந்ததோ அதை பகிர்வதே என் எண்ணம். ஒரு மனிதனாக நான் சாதாரணமானவன். அற்பனாகக்கூட ஒரு சில தருணங்களில் இருக்கலாம். ஆனால் என்கலையில் நான் எவரையும் விட மேலேதான். அங்கே என்னை கலைஞனாக, தன்னைவிட மேலானவனாக, தனக்குச் சற்றேனும் கற்பிப்பவனாக எண்ணுபவர்கள் மட்டும்தான் என் வாசகர்கள். மற்றவர்கள் இங்கே வரவேண்டியதில்லை
என்னிடம் விவாதிக்கலாம், மறுக்கலாம், ஆனால் நான் எழுதுவதை தவிர்க்கவேண்டும் என்றெல்லாம் சொல்பவர்கள் என் வாசகர்கள் அல்ல. நீங்கள் உங்கள் மனச்சித்திரங்கள் உடையாமல் பாதுகாத்துக்கொள்ள விழைபவர் என நினைக்கிறேன். மேலும் மேலும் உடைவுகளே உங்களுக்கு எஞ்சும். என் வாசகர்களை உடைத்து மறு அமைப்பு செய்ய மட்டுமே முயல்கிறேன் , ஆகவே நீங்கள் இப்போதே நின்றுவிடலாம். உங்களுக்கான எழுத்தாளர் வேறு ஆயிரம் பேர் காசுக்கிரண்டாக இதழ்களில் காணக்கிடைக்கிறார்கள்
நன்றி
ஜெ