வேறு மனிதர்கள் வேறு வாழ்க்கை ஒரே உலகம் -காளிப்ரஸாத்

kali

பஸ்ஸில் பேசிக்கொண்டு போக முடியாது எனவே எட்டு மணி பஸ்ஸுக்கு ஏழு மணிக்கே வந்து சந்திப்போம் என சென்னை நண்பர்களிடம் சொல்லியிருந்தாலும் கவிதை பிரிண்ட்டுகளை எடுத்துக்கொண்டு செல்ல எட்டேகாலாகிவிட்டது. சென்னை வட்ட செயலாளர் செந்தில்குமார்தேவன் வரமுடியாததால் சதுர செயலாளர் செளந்தர் அனைவரையும் ஒருங்கிணைத்திருந்தார். செளந்தரை பலமுறை சந்தித்திருந்தாலும் மற்றவர்களை சந்திப்பது இதுவே முதல்முறை. ரகுராமன் மற்றும் டாக்டர் வெஙகடேஷை ஒருமுறை பார்த்து ஹலோ சொல்லியிருக்கிறேன். அறிவழகனும் ரவிகுமாரும் அன்றுதான் அறிமுகமாகியிருந்தார்கள். எப்படி குழுமம் அறிமுகமானது என பேசிக்கொண்டு வந்தோம்.

2

4

கத்திபாராவில் சீனிவாசன் சாரும் சுதா மேடமும் எங்கள் பஸ்ஸிலேயே ஏறினார்கள். அதன் பிறகே கச்சேரி களைகட்டியது. இரவு பன்னிரெண்டரை மணிவரை எங்கள் சீட் அருகே நின்றுகொண்டே பேசிக்கொண்டு வந்தார்கள். எட்டுமணி பஸ் என்பதால் நாங்கள் எதுவுமே சாப்பிடவில்லை. அப்புறம்தான் தெரிந்தது, வண்டி சேலத்தில் டீசல் போடத்தான் அடுத்தது நிற்கும் என்பது. அதனால் சுதா மேடம் தான் செய்து கொண்டு வந்திருந்த மைசூர்பாகை எங்களுக்கு கொடுத்து சற்றே பசியாற்றினார்கள் (மீதிதான் அரங்கிற்கு..) அதன்பிறகு பசியும் எடுக்கவில்லை.. செவிக்குணவில்லாதபோதுதானே….அதேபோல் திரும்பிவரும்போதும் எங்களுக்கும் சேர்த்து பழம் வாங்கிக்கொண்டு வந்தார்கள் (பஸ் இப்பயும் நிக்கலைன்னா என்ன பண்றது காளி என போன் செய்து சொன்னார்) சென்னையிலிருந்து முதல் முறையாக வந்த எங்கள் அனைவருக்கும் இந்த சந்திப்பு ஒரு மறக்கமுடியாத அனுபவமானதற்கு இவர்கள் இருவருமே முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.
3

1

மறுநாள் காலையில்தான் இதுவரை எழுத்துவழியாக பார்த்திருந்த அனைவரையும் நேரில் பார்த்தது. விஜயராகவன் சார் கணக்கு வழக்கு பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் கவிதை பிரிண்டுகளை கொடுத்தேன்.. நன்றி என வாங்கிக்கொண்டவர் இது உபயமா இல்லை அன்பளிப்பா என்று கேட்டார்.. ( தட் பவுலிங்கா.. ஃபீல்டிங்கா மொமெண்ட்) முடியலத்துவம் செல்வாவின் மூன்றரை திகவும் சென்டர் ஃப்ரஷ் ஸ்டைல் கம்பராமாயண வாசிப்பும் குலுங்கி சிரிக்க வைத்தன… சுதாமேடம் தீய அரங்காவை என கம்பராமாயணத்தில் கலாய்த்ததில் அரண்டு போன அரங்கா… அடுத்தநாள் படிமம் அரங்கில் என்ன செய்வார்களோ என பயந்து அன்றிரவே தலைமறைவாகிவிட்டார். நிகழ்ச்சிகள் முடிந்ததும் உறங்குவதற்கு முந்தைய இரண்டு மணி நேரம் சுரேஷின் மேடையாகி போனது. மனிதர் எல்லா பாடல்களையும் சரணத்திலிருந்துதான் பாடுகிறார். பல்லவியை பிடிக்காது போலிருக்கிறது (அழகான ஆர்ட்டிஸ்ட் சார்… ) மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்.. பாடல் பாடியபோது உருகாதவர்கள் குறைவு. அதேபோல் ஜடாயு கம்பராமாயணம் பாடியதும்… அவர் செய்யுள்களை ஏற்ற இறக்கத்தோடு வாசித்ததும் சிறப்பு.. அவர் பேசும் ஸ்டைலே நன்றாக இருந்தது ( ராஜா வர்றான்.. அம்பு போறது.. ஜஸ்ட்…)

5
6

சிறுகதை பற்றி சொல்லவந்து அரசியல் நிலைப்பாட்டை சொன்ன ராதாவும் கவனக நிகழ்ச்சி நடத்திய திருமூலநாதனும் நடைபயிற்சியை நடைபயணமாக மாற்றிக்கொண்ட விஜயசூரியனும் இன்னும் சிறப்பித்தார்கள். உப்புவேலி விழாவில் பத்ரியை பார்த்து “ஹலோ அரவிந்த நீலகண்டன் சார்… ஹவ் ஆர் யூ” என கேட்டு அதிரவைத்த ரகுராமன் இன்னும் முன்னேறினார். காலை ஆறுமணிக்கு தேயிலை செடிகளை பார்த்தபடி நின்றிருந்த தேவதேவனிடம் ” கவிதைன்னா என்ன சார் ” என்று கேட்டு அலற வைத்தார். (இவரின் மற்ற அலப்பறைகளுக்கு தனி பதிவே போடணும்) மற்றபடி ” நீ உண்மையிலே யோகா மாஸ்டர்தான்.. முதுகுவலி போயேபோச்சே..” என்று ஜெ யிடம் பட்டயம் வாங்கினார் செளந்தர். நமது குழுமத்தின் பவுன்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அறிவழகன்..  பொண்ணு நாகர்கோயில்‍னு சொன்னதால கல்யாணத்துக்கு ஓகே சொன்ன ரவிகுமாரின் ஆசான்பாசம் கண்டு கண் குஷ்பு குளித்த குளமாகியது… டாக்டர் வெங்கடேஷ் அரங்கைவிட்டால் ஆசிரமம் என்று இருந்தார். வென்னிமலை ரொம்ப பேசவில்லை.. ஏன்சார் என்று கேட்டதற்கு நாந்தான் உங்ககிட்ட பேசினேனே என்றார்… இரண்டாம் கரண்டி சாம்பார் ஊற்றும்போது ” போதும்” என்று பேசியது நினைவுக்கு வந்தது.

7
8
9

நடைபயிற்சியின் போது நாஞ்சில் சாரிடம் பர்சனலாக பேசியது நிறைவான ஒன்று.. மூன்றுமுறை அவரை பார்த்தும் பேசாமல் வந்திருந்தேன்.. இந்தமுறை பேசிவிட்டேன்…ஆனால் வேறொரு நடைபயிற்சியில் சினிமா கதை பேசியும்.. பௌத்த மரபு பற்றி அரைகுறையாக் கேட்டும் ஜெவிடம் வாங்கி கட்டிக்கொண்டது பல்பு மொமெண்ட்ஸ்….

இதில் இந்த முகாமின் மூலம் நான் முதல்முறை சந்தித்த மனிதர்களை பற்றியே குறிப்பிட நினைத்தேன். இன்னும் சொல்லவிரும்பும் பலர் இருந்தாலும் மொபைல் போனில் இந்தளவு டைப் அடிப்பதற்கே தாவு தீர்ந்து விட்டதால் அவர்கள் மன்னிக்க…… மற்றபடி அரங்க நிகழ்வுகளை யாராவது சிறப்பாக பதிவிடுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

‍‍‍‍‍‍‍‍அன்புடன்

ஆர்.காளிப்ரஸாத்

***

முந்தைய கட்டுரைஇசை – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஊட்டி நண்பர்கள் வருகை