அன்புள்ள ஜெ,
நேற்று ஒரு சாலை விபத்தில் காலமானார் நாஷ் (http://en.wikipedia.org/wiki/John_Forbes_Nash,_Jr.)
இவர் “கேம் தியரி” உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர், economics துறையில் மிக உயரிய விருதான Nobel Memorial Prize in Economic Sciences (இது அல்ப்ரெட் நோபலால் உருவாக்கப்பட்ட விருது இல்லையெனிலும், அதே தேர்வு முறையைக்கொண்டு, அதே மேடையில் தரப்படுகிறது) விருது பெற்றவர்.
இன்று இன்று ஒரு முக்கிய செய்தி, ஆனால் முன்னிறுத்தப்படுவது இச் சாதனைகள் நல்ல. பெரும்பாலான செய்தி தலைப்புகள் இந்த சாதனைகளை விட “Beautiful Mind” நாஷ் மறைந்தார் என தான் செய்தி வெளியிடுகின்றன.
Beautiful Mind என்பது அவரது வாழ்க்கையைப் பற்றி சில்வியா நாசர் என்பவர் எழுதிய புத்தகம். இந்த புத்தகம் மிகுந்த வரவேற்பு பெற்றது. அது திரைப்படமாகவும் வந்துள்ளது. மிக அருமையான படம்.
அந்த புத்தகம் கூட அவர் வாழ்வின் சில பகுதிகளை மறைத்துவிட்டாக விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் வேறு வழியில்லை, உலகம் பார்க்கும் ஜான் நாஷ் இப்போது “Beautiful Mind” நாஷ் தான். அவரின் எல்லா சாதனைகளும் இந்தப் புத்தகம் வழியாக அறிவது தான்.
இலக்கியம் வாழ்வை விட பெரிதாகும் தருணமாக இதைப் பார்கிறேன். வெண்முரசு நாவலில் சொல்லப் படுவது போல சூதர் கதைகளில் சொல்லப்படுவது தான் உலகத்துக்கான வரலாகிறது.
இதை படித்தவுடன் உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைத்தேன்,
அன்புடன்
சுரேஷ் பாபு