அன்புள்ள அண்ணா,
சமீபத்தில் தன் முக நூல் பக்கத்தில் மார்க்கண்டேய கட்ஜி, தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான ஹெச் எல் தத்து பெருமளவில் வாங்கிக்குவித்திருக்கும் சொத்துக்கள் பற்றிய 100 பக்க ஆதாரங்களை டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டிற்கு அனுப்பி அதை உறுதி செய்து கொண்டு உண்மை இருப்பின் வெளியிட கோரி இருந்தார். இதை தன் முக நூல் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தார். (https://www.facebook.com/justicekatju/posts/969434869763726?fref=nf&pnref=story)ஆனால் இதை பற்றி எந்த ஊடகமும் வாயை திறக்க வில்லை.(http://www.thenewsminute.com/article/media-scared-investigating-chief-justice-dattus-assets-asks-katju). ஊடகங்களில் ஊழலை வெளிப்படுத்த சில அளவுகோல்களை வைத்திருக்கின்றன.
உதாரணமாக ஊழல்களுக்கும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் எதிராக தொடர்ந்து இயங்கி வரும் சவுக்கு இணையதளம், நீதிமன்றத்தில் நடை பெறும் ஊழல்கள், நீதியரசர்களின் அக்கிரமங்கள், வழக்கறிஞர்களின் அதிகார துஷ்பிரயோகங்கள், ஆகியவற்றை வெளியிட்டதால் நீதினறத்தால் பலமுறைகள் வேறு வேறு காரணங்களை சொல்லி 18 முறைக்கு மேல் தடை செய்யப்பட்டது. பத்திரிக்கையாளர்கள் செய்யும் அராஜகங்களை , லாபிகளை , முறையற்ற நடத்தைகளையும் வெளியிட்டதால் பத்திரிக்கைகள் இந்த அநீதியை வெளியிட வில்லை. வெகுஜன ஊடகங்களிலும் தொடர்ந்து இந்த புறக்கணிப்பு இருக்கிறது. ஊடகங்கள் ஊழலை முழங்குகின்றன, ஆனால் நீதித்துறை,வழக்கறிஞர்கள்,பத்திரிக்கையாளார்கள் செய்யும் முறைகேடுகளை வெளியிடுவதே யில்லை. அரசியல்வாதிகள், காவல்துறை, அரசு அதிகாரிகளில் குறிப்பிட்டவர்களை தவிர இவர்கள் வேறு யாரை பற்றியும் சொல்வதில்லை. ஏன் இப்படியான பாராமுகம். செலக்ட்டிவ் அம்னீஷியாவிற்கு ஆட்படும் ஊடகங்களின் போலி முகத்தை கூட விமர்சிக்க யாரும் முன் வருவதில்லை. இது என்ன ஆரோக்கியமான ஜனநாயகம், ஆரோக்கியமான ஊடக அறம்
நன்றி