எம்.ஏ.சுசீலா, லதானந்த்:பரிந்துரைகள்

மதுரை ஃபாத்திமா கல்லூரி தமிழ்ப்பேராசிரியை ஆக இருந்து ஓய்வுபெற்ற எம்.ஏ.சுசீலா  அவர்களை நான் ஒருமுறை என் நூல் வெளியீட்டுவிழா ஒன்றில் சந்தித்திருக்கிறேன். என்னுடைய படைப்புகளைப் பற்றிய விரிவான கடிதங்களை எழுதியிருக்கிறார்.

சுசீலா அவர்கள் இலக்கியக் கட்டுரைகளும் கதைகளும் எழுதிவருகிறார். ஓய்வுபெற்றபின் அவர் மொழியாக்கம் செய்த தஸ்தயேவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ ஒரு சாதனை. இப்போது தஸ்தயேவ்ஸ்கியின் ‘இடியட்’ ஐ தமிழ்ழாக்கம் செய்து வருகிறார்

சுசீலாவின் வலைப்பூ வெளியாகியிருக்கிறது.

 www.masusila.blogspot.com

***

ஜெ..
லதானந்த் விகடன் தீபாவளி மலரில் ஒரு அனுபவக் கட்டுரை எழுதியுள்ளார்.

மனைவி லதா.(லதாள் to be precise – பொன்னாத்தாள், கண்ணாத்தாள் என்று பெயருடன்”ள்” சேர்த்துக் கொள்ளுதல் கொங்கு மரபு) திருமணமாகி 15 நாட்களில், ஃப்ரீயா இருக்கும் மனைவியைக் கூட்டிக்கொண்டு காட்டுக்குள் செல்கிறார். காலில் ஒரு அட்டை ஒட்டிக் கொள்கிறது .
அவர் மனைவி  “மச்சா.. கால்ல என்னமோ புளுவு (புழு என்பதன் கொங்கு version) ஒட்டிட்டு இருக்கு  பாருங்.. அதக் கொஞ்சம் எடுத்து உடுங்..”அன்பர் கர்ம சிரத்தையோடு, உப்பின் உதவியோடு, அட்டையை வீழ்த்துகிறார் –அப்போதுதான், நெயில் பாலீஸ் போட்ட, அழகான கால் விரல்கள் அவர் கண்களில் படுகிறது. பார்த்த பரவசத்தில், கால் விரல்களை வருடுகிறார்.

மனைவி சொல்கிறார் ” அதான் புளுவ எடுத்துப் போட்டீங்கள்ளோ.. இன்னம் ஏன் காலச்சொறியிறீங்கோ??

கொங்கு மகளிரின் காதல் மெல்லுணர்வுகளை இதை விட அழகாகச் சொல்வது கடினம்.

http://www.lathananthpakkam.blogspot.com

பாலா

ஷாஜியின் வலைப்பூ

ஞாநி இணையதளம்

போதகரின் வலைப்பூ

பெண்ணெஸ்வரனின் இணையப்பக்கம்

அவலாஞ்சி

முந்தைய கட்டுரைஅசோகமித்திரன் சந்திப்பு
அடுத்த கட்டுரைகுறள்:கடிதங்கள்