தொடக்கம்

ஜெயமோகன் அவர்களுக்கு

தங்களின் இணையதள பதிவுகளின் தொடர் வாசகன் நான். அதில் இடம்பெறும் ஒவ்வொரு சிறுகதைகளை படித்து முடிக்கும் போதும் , அவை என் வார்த்தைகளை எடுத்துக்கொண்டு எனக்குள் ஒரு பெரும் வெற்றிடத்தை உருவாக்கிவிடுகிறது . அடுத்த சில மணி நேரங்களுக்கு கனத்துவிடுகிறது என் இதயம். என் உடல் முழுவதும் என் இதயமாகவே ஆகிவிட்டதாக உணரச்செய்கிறது.

மூச்சு விடுவதும் கண் சிமிட்டுவதும் , எச்சில் விழுங்குவதும் கூட கடினமாக தோன்றுகிறது. தங்கள் கதைகளிலிருக்கும் உயிரோட்டம் சில சமயங்களில் என் வாழ்க்கையிலே கூட இருப்பதில்லை என்பது பல சமயங்களில் என்னை மிரளச்செய்கிறது . எழுத்தாளனாக வேண்டும் என்ற என் ஆசை தீக்கு தங்களின் பேனா மைகளே எண்ணெய் ஆகின்றது.

இத்தகைய எழுத்தாளரை சினிமா மூலமாகமட்டுமே அடையாளம் கண்டு கொண்டது எனக்கு சற்று வருத்தமளித்தாலும் , அந்த சினிமாவுக்கு என் நன்றிகள்.

தங்களின் மற்ற புத்தகங்களையும் வாங்க முயன்று கொண்டிருக்கும், தங்களின் எல்லா எழுத்துக்களையும் படிக்க காத்திருக்கும் பல ஏகலவ்யர்களில் ஒருவன்.

இல. ராம்ப்ரசாத்.

அன்புள்ள ராம்பிரசாத்

எந்த ஒரு கலையையும் நாம் அடையாலம் கண்டுகொண்டு அதில் ஈடுபட ஆரம்பிப்பது ஒரு பொற்தருணம். நான் மரபிசையை அறிந்துகொண்ட அந்த ஆரம்பநாட்களின் தித்திப்பை நினைவுகூர்கிறேன்

மெல்லமெல்ல அதில் நம் ரசனையின் பாதை தெளிவாகிறது. அது தொடர்வாசிப்பினூடாக நிகழ்வது

வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைநியாஸின் பதில்
அடுத்த கட்டுரைஎன் நண்பர்கள்