கரடி – கடிதம்

அன்பு ஜெயமோகன்,

கரடி
சிறுகதை படித்தேன். “உள்ளூர் சர்ச்சில் இருந்து ஜாம்பன் உண்மையில் இந்துவா என்று பாதிரியாரின் உதவியாளர் வந்து விசாரித்துப்போனார். அவர் ஜாம்பவ ரிஷியின் மகன், ஆகவே பிறப்பால் பிராமணர் என்று முதலாளி சொன்னார்”, “ஜாம்பன் “அஷ்க பஷ்குலா புர்ர மர்ருலா மாஜமாஜ மாஜ பர்ர பர்ர பர்ரலா பாரலா பர்ர பர்ர கோரீகா கோரிய கோரீ” என்றது. காண்டவன் அதைக்கேட்டு இந்தியில் “ஜாம்பவவ சம்ஹிதையும் ஜாம்பவநீதியும் ஜாம்பமாகாத்மியமும் மட்டும் வாசித்தாலே போதும் என்று மூத்தவர் சொல்கிறார்” என்றான்”, “”முக்திக்கான வழி பக்தியா ஞானமா?’ என்றார் கிழவர். ஜாம்பன் ’கரையானும் தேனும்’ என்று பதில் சொன்னது. பெரியவர் திகைக்க ஜாம்பன் ’கரையான்புற்று என்பது சுறுசுறுப்பான கர்ம மண்டலத்தைக் குறிக்கிறது தேன் என்பது ஆன்மாவின் ஆனந்தம்’” என்பன போன்ற வரிகளுக்கு வாய்விட்டுச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. என்றாலும், “A beast is a beast” என எளிமையாகச் சொல்லிவிட்ட இன்ஸ்பெக்டரின் உரையாடலில் விதிர்த்துப்போனேன். அப்போது எனது முந்தைய சிரிப்பு ஒரு புல்லட்டாக என்முன் காட்சிதந்து மறைந்தது.

முருகவேலன்,

கோபிசெட்டிபாளையம்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 15
அடுத்த கட்டுரைசோர்வு