ஆசிரியருக்கு,
ஒருகணத்துக்கு அப்பால், பெரியம்மாவின் சொற்கள் மற்றும் கரடி இம்மூன்று கதைகளின் பொது அம்சம் என்பது மத்திய மார்க்கம். குழைந்தும் இல்லாத திடமாகவும் இல்லாத ஒரு கரைசல், ஆனால் விளைவுகள் வேறு வேறு.
எல்விஸ் ப்ரெஸ்லி ஒன்றும் உன்னத கலை வடிவம் அல்ல. உயர் கலையின் சற்று மட்டுப் படுத்தப் பட்ட கேளிக்கை வடிவம். கிருஷ்ணாபுர சிற்பங்கள் வெறும் நிர்வாண பொம்மைகள் அல்ல, மேம்படுத்தப் பதட்ட கலைப் படைப்பு. பெரியவர் இதில் இரண்டிலும் சென்று வருகிறார், இரண்டிற்கும் மத்தியில் தனது வாழ்கையை அடைகிறார். இங்கு அடைப்படைக்கு சற்று மேலானது உன்னதத்திற்கு சற்று குறைவானது.
Helen of troyயும் மகா பாரதமும், ஆங்கிலமும் தமிழும், மேற்கு விழுமியமும் கிழக்கும் சந்திக்கும் இடத்தில் you is bond டையும் self ஐயும் கிழவி அடைகிறாள்.இங்கு இரண்டு உச்சங்களின் மேல் நின்று புதிதான ஒரு உயரம் படைக்கப் படுகிறது.
கரடியில் ஒரு பக்கம் மிருகம் மனிதனாகிறது மறு பக்கம் மனிதன் மிருகமாகிறான். இரண்டும் ஒன்றை ஒன்று வெறுக்கிறது, ஒன்றை ஒன்று கொல்கிறது. இங்கு இரண்டும் முரண்பட்டு அழிவைத் தேடிக் கொள்கிறது.
கிருஷ்ணன்