வலைச்சேவை நிறுவனங்கள் இலவசமாக எப்படி இந்தச் சேவைகளை நமக்கு அளிக்கின்றன? அது இலவசம் அல்ல, அது போல் தோன்றுகிறது. உதாரணமாய் கூகுள் நிறுவனம் ஜிமெயிலை நமக்கு இலவசமாக அளித்து விட்டு விளம்பரங்களை அதில் நுழைத்துப் பணம் பார்க்கிறது. இலவசமாகக் கொடுத்துப் பழக்கி விட்டு, அதே ஜிமெயில் சேவையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு காசுக்குத் தருகிறது. இப்படி மறைமுகமாக நம்மிடமிருந்து காசு வலைச்சேவை நிறுவனங்களுக்குப் போய்க் கொண்டு தான் இருக்கிறது. நேரடியாக அவர்களுக்கு நாம் காசு கொடுப்பதில்லை என்பதால் இலவசப் பிம்பம்.
பெரிதும் பேசப்படும் இணையச்சமநிலை பற்றி சரவணக்கார்த்திகேயனின் கட்டுரை