ஈழ மாணவர்களுக்கு உதவி

நண்பர் சந்திரசேகர் இலங்கை அகதிகள் முகாம் பிள்ளைகளின் படிப்பிற்காகத் தன் வருமானத்தில் பெருமளவை செலவு செய்து வந்தவர். அவரது அகிலம் டிரஸ்ட் மூலம் 8 அகதி முகாம் பிள்ளைகள் கல்வி பயின்று வந்தனர். அவரது நண்பர் முத்துராமன் இதை ஒருங்கிணைத்துவந்தார்.

unnamed

இவரது மரணத்தின் மூலம் அப்பிள்ளைகளின் எதிர்காலம் சிக்காலாயாகியுள்ளது. உதவ முடிகிறவர்கள் இதற்காக உழைக்கும் களப்பணியாளர் முத்துராமனை 9629136989 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

முத்துராமன் அறக்கட்டளை என எதையும் நடத்தவில்லை. அவர் உதவிதேவைப்படுபவர்களின் பட்டியலைத் தயாரித்து முழு விபரங்களுடன் உதவுபவர்களுக்கு அளிப்பார். உதவி செய்பவர்கள் நேரடியாகவே அந்த மாணவர்களுக்கோ அந்தக் கல்விநிறுவனங்களுக்கோ பணம் அனுப்பலாம். நேரடித்தொடர்பிலும் இருக்கலாம்.

இந்த மாணவர்கள் அனைவரும் சராசரிக்கும் மேலான மதிப்பெண்கள் பெற்றவர்கள். உயர்மதிப்பெண்கள் பெற்றவர்களும் சிலர் உள்ளனர். இவர்களின் பெற்றோர் அகதிமுகாம்களில் கூலிவேலை மட்டுமே செய்யக்கூடிய நிலையில் உள்ளனர். அவர்கள் இலங்கையில் எத்தனை கல்வி பெற்றிருந்தாலும் அந்தச் சான்றிதழ்கள் இங்கே செல்லுபடியாவதில்லை

முத்துராமன்
முத்துராமன்

இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த இக்குழந்தைகளுக்கு இங்கே குடியுரிமை இல்லை. ஆகவே இட ஒதுக்கீடு, உதவிச்சம்பளம் உள்ளிட்ட எந்தச் சலுகைகளும் இல்லை. அவர்கள் கல்விகற்றால்கூட எளிதில் பணி கிடைப்பதில்லை. உயர்மதிப்பெண் பெற்றால் மட்டுமே வாய்ப்பு. பொறியியல் கற்றபின் மீன்கூடை சுமக்கும் இளைஞர்கள் உள்ளனர்

இருந்தாலும் விடாப்பிடியானபோராட்டத்தில் இருக்கிறார்கள் இவர்கள். இந்தியாவில் தமிழினத்திற்காக வாழும் எந்த அரசியல்கட்சியும் அமைப்பும் இவர்களுக்கு எந்த உதவியும் செய்ததில்லை. பொதுவாகவே பெரும்பாலானவர்கள் ஈழத்தவர் என்பதனாலேயே உதவுவதில்லை என்பதே உண்மை. முத்துராமனைப்போல எந்தப் பின்புலமும் இல்லாத தனிநபர்களின் உதவி மட்டுமே உள்ளது.

நம்முடைய கருணையை மட்டும் அல்ல நாம் பேசிக்கொண்டிருக்கும் சொற்கள் எந்த அளவுக்கு உண்மையானவை என்பதை நாமே உணர்ந்துகொள்ளவும் இது ஒரு வாய்ப்பு.

முத்துராமன் இதை மிகுந்த நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செய்துவருகிறார். நண்பர்களின் உதவி இத்தருணத்தில் தேவைப்படுகிறது. இந்தியாவிலும் வெளியிலும் உள்ள நண்பர்கள் உதவவேண்டும் என்று கோருகிறேன்

முத்துராமன் எண் 9629136989

முத்துராமன் மின்னஞ்சல் [email protected]

============================================================================================================

ஒரு வாழ்வுரிமைக் கோரிக்கை

முத்துராமன் தி இந்து செய்தி

முந்தைய கட்டுரைமுந்நூறில் ஒருவர்
அடுத்த கட்டுரைமதம் – கடிதம்