«

»


Print this Post

எந்த அடையாளம்?


திரு ஜெ.. எனது பின்னூட்டத்தை வெளியிடவில்லை. சரி உங்கள் உரிமை. ஆனால் நீங்கள் வசனம் எழுதிய அங்காடித்தெரு படத்தில் ப்ராமணரை கொடுமைக்காரர்களாக காட்டி இருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டது உங்களைக் குத்தியதா என்பதையாவது விளக்குங்கள்!

hayyram

சாதியுடன் புழங்குதல்…

http://www.hayyram.blogspot.com/

அன்புள்ள hayyram

உங்கள் பின்னூட்டங்கள் மட்டுமல்ல உங்களுக்கு நேர் மாறான கோணத்தில் போடப்பட்ட சில பின்னூட்டங்களும் மட்டுறுத்தப்பட்டன. அவை மட்டுறுத்தப்பட்டமைக்கான காரணம் ஒன்றுதான். நீங்கள் இருசாராருமே தெளிவான முன்முடிவுகளுடன் கட்டுரைகளை வாசிக்கிறீர்கள். கட்டுரையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதென்பது உங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. கட்டுரையின் கைகால்களை ஒடித்து முடமாக்கி நீங்கள் நின்றுகொண்டிருக்கும் இடத்துக்கு இழுத்துக்கொண்டு செல்கிறீர்கள். அங்கே வைத்து ஆர அமர பிய்த்து குதறுகிறீர்கள். இதை நான் விவாதமாகக் கொள்ள முடியாது. விவாதம் நிகழும் தளத்தில் இருந்து வாசகர்களை விலக்கக் கூடியதாகவே அதைக் காண்கிறேன்.

நீங்கள் பிராமணசாதியின் பிரதிநிதியாக உங்களை உறுதியாக அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள். ஆகவே பிராமணசாதியைப்பற்றி பெருமிதமாக அல்லாது ஏதாவது சொல்லப்பட்டால் நீங்கள் உடனே புண்படுகிறீர்கள். புண்படுவதற்கான உரிமை உங்களுக்கு இருப்பதாக எண்ணிக்கொள்கிறீர்கள். உடனே எதிர்வினை ஆற்றுகிறீர்கள். இந்த எதிர்வினைகளுடன் நான் உரையாட முடியாது. நீங்கள் ஒரு குழுவடையாளத்தைச் சுமந்து கொள்வதும், அதன் பேச்சாளராக உங்களை எண்ணிக்கொண்டிருப்பதும் உங்கள் மனசிக்கல். அதை நான் அங்கீகரிக்க முடியாது. அங்கீகரித்தால் மட்டுமே அதற்கு எதிர்வினை ஆற்றமுடியும். நான் மனச்சிக்கல்களுடன் விவாதிப்பதில்லை. விவாதம் மூலம் நானும் நீங்களும் பொதுவாக ஏதேனும் அறியும்படி இருக்க வேண்டும்.

நீங்கள் எழுதிய இந்தக் கேள்வியை பலர் என்னிடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களை உதாசீனம்செய்யும்போது அது குற்றவுணர்ச்சியின் மௌனம் என்று விளக்கப்படுகிறது. ஒருபக்கம் பிராமணர்களை தூக்கிப்பிடிப்பவன் என்றும் மறுபக்கம் பிராமணர்களை இழிவுபடுத்துபவன் என்றும் நான் வசைபாடப்படுகிறேன். இப்போதல்ல, விஷ்ணுபுரம் வெளிவந்த காலம் முதலே. இந்த ஆட்டம் எனக்குப் பழகிப்போய்விட்டது. இது, உங்களைப்போன்ற அனைவருக்கும் என் பொதுப்பதில் -விவாதம் அல்ல.

நாம் வாழும் சூழல் எப்படிப்பட்டது? கஸ்தூரிமான் வெளிவந்தபோது பரீக்‌ஷா ஞாநி ஒரு கூட்டத்தில் கர்ஜனை புரிந்தார் – அதில் கதாநாயகியின் அக்காவின் கணவனும் அவள் அன்னையும் கொடூரமானவர்களாக காட்டப்பட்டிருப்பார்கள். அவர்களை தாழ்த்தப்பட்ட சாதியினராகக் காட்டியிருப்பதாகச் சொன்ன ஞாநி ‘தாழ்த்தப்பட்டவர்கள் கொடூரமானவர்கள் என்று எழுதிய ஜெயமோகன் மன்னிப்பு கோரவேண்டும்’ என்றார்

முதல் விஷயம் அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச்சேர்ந்தவர்களாகக் காட்டப்படவில்லை. என்ன சாதி என்பது படத்திலேயே உள்ளது. அது லோகிததாஸின் வழக்கம், எப்போதும் தெளிவாகச் சாதி சொல்லி படைப்பை எழுதுபவர் அவர். இரண்டு, அப்படத்தின் மலையாள மூலத்தில் லோகிததாஸ் எழுதி உருவாக்கிய கதாபாத்திரத்தின் நேரடியான தமிழ் வடிவம் அது. அதை எழுதி இயக்கியவர் அவர், நான் மொழிபெயர்ப்பாளன். நான் அதில் எதையுமே சேர்க்கவில்லை, ஆகவே அது என் உருவாக்கம் அல்ல. கடைசியாக, லோகிததாஸே தாழ்த்தப்பட்ட சாதியொன்றைச் சேர்ந்தவர்.

அங்காடித்தெரு வந்தபோது ‘அரசியல்’ என்ற வார இதழில் பாமரன் என்பவர் ஒரு கட்டுரை எழுதினார். அதில் கங்காணி கதாபாத்திரம் ‘அருந்ததியப்பயலே’ என்று வசைபாடுவதாகவும் அதை எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன் உடனே தீண்டப்படாதார் வன்கொடுமைச் சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும் என்று சொன்னார். படத்தில் திட்டவட்டமாக தெளிவாக ‘அறுதலி’ என்றுதான் வசனம் ஒலித்தது. பாமரனுக்கு அச்சொல் புரிந்திருக்காது, அல்லது அவர் வேண்டுமென்றே அதை எழுதினார்

அறுதலிப்பயல் என்பது தென்னாட்டின் சாதாரண வசை. பொதுவாக ’அவிழ்த்துவிடப்பட்டவன்’ என்று அதற்கு பொருள். அந்த விளக்கம் இயக்குநர் தரப்பில் அளிக்கப்பட்டபோது பாமரன் பேசாமல் இருந்தார். அந்தக்கட்டுரை வெளிவந்ததுமே ஒரு கும்பல் வந்து எழுதியவனை வெட்டியிருந்தால் யார் பொறுப்பேற்பது? இதழா, விமரிசகரா? யாருக்குக் கவலை? மன்னிப்பு கோரும் நாகரீகமெல்லாம் பாமரன் போன்றவர்களிடம் எதிர்பார்ப்பதற்குரியதல்ல.

இங்கே முக்கியமான விஷயம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட இருவருமே அந்த ‘பாதிக்கப்பட்ட’ சாதியைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதே. ஒரு கலகம் நடந்தால் நல்லதுதானே என நினைக்கும் எளிமையான மனங்கள். அதன் மூலம் தனக்கு ஒரு முற்போக்கு பிம்பம் வந்தால் வரட்டுமே என ஆசைப்படுபவர்கள். இந்தவகையான நெருக்கடிகளுடன் மட்டுமே இங்கே படங்கள் எடுக்கப்படுகின்றன.

கருத்துச் சுதந்திரம் , படைப்புச் சுதந்திரம் எதுவுமே இல்லாத அரைப்பழங்குடிச் சமூகம் நம்முடையது. அதை மேலும் பாமரத்தனமாக ஆக்குவதே அறிவுஜீவியின் பணி என நம்பும் முற்போக்கு சிந்தனயாளர்களே இங்கே பெரும்பான்மையினர். உலகத்தளத்தில் சினிமா ஏன் இல்லை என்று கூவுபவர்களே இவ்வகையான பாமரத்தனத்தின் உச்சத்திலும் நிற்கிறார்கள். இவர்களுடன் போராடியே இங்கே எழுதவேண்டியிருக்கிறது.

இந்தவகையான ஒரு கும்பல் மனநிலையில் நின்றே நீங்களும் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். நான் எப்போதும் எதிர்கொண்டு வரும் மனநிலை அது. எந்தச்சாதியினராக இருந்தாலும் இந்த மனநிலை புறக்கணிப்புக்குரியது, பண்பாட்டுச்செயல்பாட்டுக்கு எதிரானது என்றே எண்ணுகிறேன். ஆகவே அது விவாதத்துக்குரியதே அல்ல.

இந்தக் கும்பல் மனநிலையின் தர்க்கமே அபத்தமானது. ஒரு தலித் அல்லது தேவர் அல்லது பிராமண கதாபாத்திரம் எதிர்மறையாகக் காட்டப்பட்டால் உடனே ஒட்டுமொத்த தலித் அல்லது தேவர் அல்லது பிராமணர்களையும் அது குற்றம்சாட்டுவதாக எண்ணிக்கொள்கிறார்கள். அங்காடித்தெரு எங்கே ’பிராமணர்களை’ காட்டுகிறது? ஒரு பிராமணப்பெண்ணை காட்டுகிறது. உங்கள் வாதம் சரி என்றால் ஒரே ஒரு பிராமணர்கூட அப்படி இலலமல் இருக்க வேண்டும். அப்படி நம்பும் மனக்கோளாறு உங்களுக்கு இருக்கலாம். நான் ஏன் அதை ஏற்கவேண்டும்?

அந்த தர்க்கத்தின்படி எந்த சாதியையும் மதத்தையும் சேர்ந்தவராக எதிர்மறைக் கதாபாத்திரம் இருக்கக்கூடாது. பழைய எம்ஜியார் படங்களில் நம்பியார் வருவதுபோல ‘எங்கோ’இருக்கும் கொள்ளைக்கூட்ட தலைவனாக இருக்க வேண்டும், உள்ளங்கையை முஷ்டியால் குத்தி ‘ஜ்ஜ்ஜக்கூ’ என்று கூவ வேண்டும் இல்லையா? இந்த தர்க்கமே அதற்கடுத்தபடிகளுக்குச் செல்கிறது. எதிர்மறைக் கதாபாத்திரம் எந்த தொழிலையும் செய்வதாகக் காட்டக்கூடாது, சம்பந்தப்பட்ட தொழிலைச் செய்பவர்கள் புண்படுவார்கள். போராடுவார்கள். இனி இதே தர்க்கம் இடங்களுக்கு பரவும். எந்த ஊரையும் குறிப்பிடக்கூடாது. ஆக, எதைத்தான் திரையில் காட்டவேண்டும் என்கிறீர்கள்?

அங்காடித்தெருவில் அப்பட்டமாக எல்லாருக்குமே சாதி காட்டப்படுகிறது. படம் முழுக்க முற்றிலும் எதிர்மறைக் கதாபாத்திரமாக வருபவர்களுக்கும்கூட. இன்று தமிழில் வெளிவரும் எல்லா யதார்த்தப்படங்களிலும் சாதி தெளிவாகவே உள்ளது. அச்சாதிகளின் மூர்க்கமும் அறியாமையும் வன்முறையும் காட்டப்படுகிறது. எவரும் கொதித்தெழவில்லை. அவர்களுக்கு இருக்கும் பொறுமையும் நாகரீகமும் கூட பண்பட்டவர்கள் என்று தங்களைக் கருதிக்கொள்ளும் உங்களைப்போன்றவர்களிடமில்லை என்பதை காலத்தின் கோலம் என்றே கொள்ளவேண்டும்.

அங்காடித்தெரு காட்டுவது ஒரு சமூக யதார்த்தத்தை. ஒருபக்கம் மதம் தீட்டைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறது, மறுபக்கம் தீட்டை புனிதமாகவும் அதே மதம் நினைக்கிறது. அதன் ஒரு கடவுள் சாந்தமானவர், இன்னொரு கடவுள் உக்கிரமானவர். உங்கள் சாதிப்பித்தை விட்டுவிட்டு படம் பார்த்தால் அந்தக்காட்சியில் ஒடுக்கப்பட்ட ஒரு பெண் தீட்டையே தகுதியென ஏற்றுக்கொள்ளும் ஒரு உக்கிரமான கடவுளைச் சார்ந்து தன்னை தைரியமானவளாக மாற்றிக்கொள்ளும் பரிணாமத்தின் கதையை காணமுடியும்.

ஏன் அங்கே பிராமணப்பெண் காட்டப்படுகிறாள் என்றால் அவ்வாறு தீட்டை ஒரு சமூக அமைப்பாக நிறுவிய மதத்தரப்பு பிராமணர்களால் தொடர்ச்சியாக நூற்றாண்டுகளாக நிலைநாட்டப்பட்டது என்பதனாலேயே. இன்றும் அந்த தீவிரமான தீட்டை கடைப்பிடிக்கும் பிராமணர்களை நான் நாகரீகச் சென்னையில், திருவல்லிக்கேணியில் கண்டிருக்கிறேன். ஆம், வேலைக்காரியை கொல்லைப்பக்கம் படுக்கவைப்பதையே கண்ணால் கண்டிருக்கிறேன் -போதுமா?

இந்தப்புண்படுதல் சங்கதியை நீங்கள் கொஞ்சம் அடக்கிக்கொள்ளத்தான் வேண்டும். நான் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள பிராமண வெறுப்பை ஏற்றுக்கொண்டவன் அல்ல. அது அடுத்தகட்ட சாதியப்படிகளில் நின்றவர்கள் அரசியலதிகாரத்தை கைப்பற்ற கையாண்ட உத்தி மட்டுமே என நினைப்பவன். இன்று தங்கள் சொந்த சாதிவெறியை மறைக்கவே அவர்கள் அதைக் கூச்சலிடுகிறார்கள். நாளை தலித் அரசியல் வலுப்பெறும்தோறும் அந்த வேடம் கலையும்.

இந்தியப் பண்பாட்டுக்கு பிராமணர்களின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது என்று நினைப்பவன் நான். அதை இந்த இணையதளத்தில் மிக வலுவாக எழுதியுமிருக்கிறேன். இந்து ஞானமரபின் ஒரு முக்கியமான பகுதி என்றே பிராமண மதத்தை [பூர்வமீமாம்சம்] நினைக்கிறேன். இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பிராமணர்களின் பண்பாட்டு, அரசியல், சமூகவியல் பங்களிப்பு முக்கியமானது. அதை மறந்தோ மறுத்தோ பேசுபவர் நேர்மையானவர் அல்ல.

பிராமணர்கள் இந்துப்பண்பாட்டின் நிலைச்சக்திகள். இந்துப் பண்பாடு அதன் அமைப்பையும் கட்டுக்கோப்பையும் தக்கவைத்துக்கொள்வதற்காக பல்லாயிரம் வருடங்களாக அவர்கள் ரத்தமும் கண்ணீரும் சிந்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்து என உணரும் எவரும் கடமைப்பட்டிருக்கிறார்.

ஆனால் எந்நிலையிலும் பிராமணர்களுக்கு எதிரான கடும் விமரிசனம் இந்து ஞான மரபுக்குள் இருக்கும். கீதையில் இருக்கிறது, உபநிடதங்களில் உள்ளது. விவேகானந்தரில் உள்ளது. அது நாளையும் இருக்கும். காரணம் நிலைச்சக்திக்கு எதிரானதாகவே செயல்சக்தி, மாற்றத்தின் விசை இருக்க முடியும். அது தவிர்க்கமுடியாதது. அது புண்படுத்துகிறது என்றால் அது வரலாற்றின் புண். நீங்கள் பிராமணராக உணரும் வரை அந்த அம்புகள் வந்து தைத்தபடியேதான் இருக்கும்.

ஆகவே நீங்கள் ஒரு மதிப்பீட்டின் அடையாளமாக இருப்பீர்கள், அதேசமயம் அந்த அடையாளத்தை விமரிசித்தால் புண்படுவீர்கள் என்று சொல்கிறீர்கள். மரபின் புனிதப்பசுக்களாக வாழும் உரிமை உங்களுக்கு உண்டு என நினைக்கிறீர்களா என்ன?

ஒரு நாகரீக மனிதன் தன்னை எந்த ஒரு இனக்குழு அடையாளங்களுடனும் பொருத்திக்கொண்டு அதன் உணர்ச்சிகளை அப்படியே பிரதிபலிக்க மாட்டான். புறவயமான பார்வையுடன் அதை பரிசீலித்து சென்றகால அடையாளமாக அவன் அந்த பண்பாட்டு அம்சங்களை அவன் எடுத்துக்கொள்ளலாம். மாறாக ’நாங்கள்லாம் பிறாமணாள்’ என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால் நீங்கள் இருப்பது நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில். நவீன காலகட்டம் வந்து உங்களை மோதிக்கொண்டேதான் இருக்கும். நீங்கள் தலைமுதல் கால்வரை புண்பட்டபடியேதான் இருப்பீர்கள்.

’அந்தச் சாதியைச் சொல்வாயா? இந்த மதத்தைச் சொல்வாயா?’ என்ற பாமரத்தனமான கேள்வி எழுந்து வருவதை கண்டிருக்கிறென். ஆம், நேரடியான விமரிசனங்களை எதிர்கொள்ளும் மனப்பயிற்சி இல்லாத மூர்க்கமான இனக்குழுக்கள் பல உள்ளன. அவற்றுடன் போய் மோதுவது பலசமயம் பொருளற்றதுதான். ஆனால் நான் பிராமணர்களை அப்படிப்பட்டவர்களாக நினைக்கவில்லை. உங்களைப்போன்ற சிலர் இருந்தாலும் பிராமணர்கள் பொதுவாக இன்னமும் அறிவுத்தளச் சமநிலை கொண்ட மென்மையான மனிதர்கள்தான்.

சென்னையில் ஒருமுறை பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன், கையில் ’பின் தொடரும் நிழலின்குரல்’ இருந்தது. பெரிய நாமமும் குடுமியும் பூணூலுமாக ஒரு பழுத்த வைணவ முதியவர் ‘குடுங்கோ’ என்று வாங்கி புரட்டிப்பார்த்தார். என் படத்தை பார்த்துவிட்டு ‘நீங்கதானா?’ என்றார். ‘என் பையன் படிப்பான். விஷ்ணுபுரத்தை குடுத்து படிக்கச் சொன்னான்.நன்னா இருந்தது’ என்றார். அவர் ஒரு வைணவ அறிஞர்.

நான் கொஞ்சம் துடுக்காக ’அதிலே நிறைய பிராமண கண்டனம் இருந்ததே’ என்றேன். ‘ஆமா’ என்றார் சிரித்துக்கொண்டு ‘அது நம்ம மதத்திலே எப்பவும் இருக்கறதே… வாதமும் பித்தமும் கபமும் சமமா இருக்கணுமே’ என்றார். நான் ’அதிலே பிராமணர்கள் சாப்பிடுற காட்சி பத்தி என்ன நினைக்கிறீங்க?’ என்றேன். ‘பிரமாதம்’ என்று சிரித்தார். கிளம்பும்போது ‘நல்லா இரு..எல்லா ஷேமமும் வரட்டும். குரு இருக்காரோ இல்லியோ’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். ‘நினைசேன்.நல்லா இரு’ என்றார்.

நான் பிராமணன் என நினைப்பது அவரை, உங்களை அல்ல. நீங்கள் பெரும்பாலானவர்களப்போல் கற்றும் செய்தும் ஒரு சுயத்தை உருவாக்க முடியாமல் நீங்கள் பிறக்க நேர்ந்த இனக்குழுவையே உங்கள் அடையாளமாகக் கொண்டிருக்கும் பாமர ஆத்மா

ஜெ

http://www.jeyamohan.in/?p=1314
http://www.jeyamohan.in/?p=1460
http://www.jeyamohan.in/?p=3863 சம்ஸ்கிருதம் யாருடைய மொழி?

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7499/

22 comments

3 pings

Skip to comment form

 1. Mahi

  வணக்கம் குரு.,
  இது போன்ற பட்டவர்த்தனமான கருத்து சொல்லும் உங்களின் துணிச்சல் அச்சமாகவேயுள்ளது.
  இறுதி வரிகள் கண்டிப்பாக அனைத்து ‘மேன்மக்களும்.!’ மனதில் நிறுத்தி கொள்ளவேண்டியது.

 2. haranprasanna

  கலக்கல்.

 3. samyuappa

  என்னுடன் ஒரு நண்பர் இருந்தார். Seminar , Presentation என்றால் உட்கார்ந்து என்ன என்ன கேள்விகளை கேட்கலாமென்று list போடுவார். பேசுபவர் என்ன சொல்லுகிறார் என அவருக்கு கவலை இல்லை. நான் எப்போதும் “ஆமாம் சாமி” என்பது வேறு விஷயம். “காமராஜி…நாம கேள்வி கேக்குறத வச்சிதான் knowledge ஆன ஆளுன்னு தெரிஞ்சிப்பாங்க…ஏதாவது கேளு நீயும்” -சொன்னாரு. நான் சொன்னேன் ” பாட்டு பாடி பேர் வாங்குற புலவர்கள் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். நான் பாட்டு பாடியே வாங்கிக்கிறேன்”. அதாவது molecular pharmacology படி ஒரு enzyme / gene ஐ inhibit பண்ணினா வேறு ஒரு signal transduction pathway மூலம் தேவையில்லாத / தேவையான upstream / downstream molecules எல்லாம் modulate ஆகும். தவிர்க்கமுடியாதது. தவிக்கவேமுடியாது ….அது இயற்கை. இந்த mechanism நம் உடலில் மட்டுமல்ல…எண்ணங்களுக்கும், மனித உறவுகளுக்கும் தான். இயற்கையை எண்ணி வியக்கிறேன். ஜெ சார்… மனித உறவுகளின்/எண்ணங்களின் basic structure ஐ nature உடனும் தத்துவத்துடனும் அணுகியதில் பெற்ற வெற்றியை உங்களோடு கொண்டாடுகிறேன். பலர் திகைத்து நின்ற தருணங்களை எழுதுக்களாக்கிய உங்களை எனக்கு பிடிப்பது அதனால்தான். (அந்த ஒளவையார் பாடலை பின்னூட்டமாக போடாததில் துளி கூட வருத்தமில்லை).

 4. mohan.subramanyan

  அருமையான பதில் ஜெயமோகன்.

 5. sithakannan

  வணக்கம் குரு,
  நானும் தக்கலையில் பிறந்தவன். தங்களின் கருத்துகள் என்னுடைய தேடலின் சாரமாக பார்கிறேன்.
  நன் கடந்த 2 வருடமாக உங்களின் தளத்தின் வாசகனாக இருக்கிறேன்.
  முக்கியமாக இந்த பிராமணர்கள் , ஜாதி குறித்த கருத்துகள் மிக , மிக சரியான வாதம். இந்த அரசியல் பூசப்பட்ட வாழ்க்கை உலகில் வாயை திறந்து பேசவே யோசிக்க வேண்டி உள்ளது.
  உங்களை போல அறிவு ஜீவிகள் பேச்சு இந்த வலை தளத்திலே ஒரு குறிப்பிட்ட வட்டத்திக்குள் முடங்கிவிடும் என்பது என் கருத்து. இது மேடை பேச்சு, டிவி , பத்திரிகை போல பாமர மக்களுக்கு செல்வது இல்லை .
  சென்றாலும் அரசியல் மாயை மக்கள் புரிய மாட்டார்கள்.
  இருந்தாலும் உங்கள் கருத்துகள் இந்த வலை தளத்தில் என்டண்டும் உயிரோட்டமாக உலா வரும்.

  தற்போது நான் அயல் நாட்டில் சாப்ட்வேர் பணியில் இருப்பதால் உங்கள் தளம் மிக்க உதவியாக தன்னம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது.

  வாழ்க உமது தமிழ் தொண்டு.
  வாழி நீவிர் பல்லாண்டுகள்!

  மிக்க நன்றி.

  கண்ணன்.
  வில்லுக்குறி

 6. tamilsabari

  //கருத்துச் சுதந்திரம் , படைப்புச் சுதந்திரம் எதுவுமே இல்லாத அரைப்பழங்குடிச் சமூகம் நம்முடையது. அதை மேலும் பாமரத்தனமாக ஆக்குவதே அறிவுஜீவியின் பணி என நம்பும் முற்போக்கு சிந்தனயாளர்களே இங்கே பெரும்பான்மையினர்.//
  எதேச்சையாக நான் சிந்தித்ததும், பதிவிட்டதும் கருத்து சுதந்திரம் பற்றியே !!! தமிழர்களின் சுய பரிசோதணை: http://sabaritamil.blogspot.com/2010/07/blog-post_2616.html

  //ஒரு கலகம் நடந்தால் நல்லதுதானே என நினைக்கும் எளிமையான மனங்கள். அதன் மூலம் தனக்கு ஒரு முற்போக்கு பிம்பம் வந்தால் வரட்டுமே என ஆசைப்படுபவர்கள். இந்தவகையான நெருக்கடிகளுடன் மட்டுமே இங்கே படங்கள் எடுக்கப்படுகின்றன.

  இந்தப்புண்படுதல் சங்கதியை நீங்கள் கொஞ்சம் அடக்கிக்கொள்ளத்தான் வேண்டும். நான் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள பிராமண வெறுப்பை ஏற்றுக்கொண்டவன் அல்ல. அது அடுத்தகட்ட சாதியப்படிகளில் நின்றவர்கள் அரசியலதிகாரத்தை கைப்பற்ற கையாண்ட உத்தி மட்டுமே என நினைப்பவன். இன்று தங்கள் சொந்த சாதிவெறியை மறைக்கவே அவர்கள் அதைக் கூச்சலிடுகிறார்கள். நாளை தலித் அரசியல் வலுப்பெறும்தோறும் அந்த வேடம் கலையும்.

  நேரடியான விமரிசனங்களை எதிர்கொள்ளும் மனப்பயிற்சி இல்லாத மூர்க்கமான இனக்குழுக்கள் பல உள்ளன. அவற்றுடன் போய் மோதுவது பலசமயம் பொருளற்றதுதான்.
  //
  முழுக்க உண்மை.

 7. raghunathan

  அன்பு ஜெ சார். நண்பர் சொன்னது போல், உங்கள் துணிச்சலும், நேர்மையும் அச்சம் தருவதாகவே உள்ளது. பாமரனைப் படித்துவிட்டு, யாராவது வெட்ட வந்திருந்தால் என்ற கேள்வியில் இருந்த நிதர்சனம் துணுக்குற வைத்தது. அப்படி ஏதும் நிகழாமல் இறைவன் என்றும் துணை நிற்கட்டும். பாமரன் கட்டுரை படித்த பிறகே நான் படம் பார்த்தேன் ‍ காட்சியின் கூச்சலில் வசனம் சரியாக கேட்காவிட்டாலும், அது “அறுதலி” என்றுதான் நானும் நினைத்தேன். ஒரு பயங்கரமான குற்றச்சாட்டை அள்ளி வீசுமுன், உண்மையை உறுதி செய்து கொள்ளும் குறைந்த பட்ச நேர்மை நம் எழுத்தாளர்களுக்கும், அறிவுஜீவிகளுக்கும் வேண்டும். மற்றபடி, மறுபடியும் ஒரு அருமையான கட்டுரை. மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டதில் மகிழ்ச்சி. கடைசி பாராவில் வரும் வைணவர் நெகிழ வைத்தார் ( நயத்தக்க நாகரிகம் கட்டுரையில், மீன் குழம்பை மறுக்காமல் உண்ட சு.ரா. அவர்கள் நெகிழ வைத்தது போலவே). முதிர்ச்சி, பக்குவம் என்பது இதுதான். மறுபடியும் நெஞ்சம் நிறைந்த வாழ்துக்கள் . அன்புடன் ரகுநாதன்

 8. hayyram

  அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஜெயமோகன் அவர்களே!

  உங்கள் தெளிவான நிதானமான விளக்கத்திற்கு நன்றி. முதற்கண் ஒரு தெளிவுரையை கூறிக்கொள்கிறேன். நான் ப்ராமணர்களின் ப்ரதிநிதியாக எதையும் பேசவில்லை. என் கால் மிதிபடும் போது ‘ஐயோ’ எனக் கத்துகிறேன். நீ மிதி பட்டவர்களுக் கெல்லாம் குரல் கொடுக்கிறாய் என்று நீங்கள் கூறினால்
  நான் என்ன செய்வது?

  உங்கள் கட்டுரையை திசை திருப்பும் கருத்தை ‘சாதியுடன் புழங்குதலில்’ வைக்கவில்லை. //மொத்த தமிழகமும் தங்களை வெறுப்பதாகவும் வேட்டையாடுவதாகவும் அவர்கள் நினைக்கிறார்கள்// என்ற உங்கள் வரிகளை படித்ததால்
  ஆம் அப்படி நானும் நினைத்ததுண்டு என்று வெளிப்படுத்தவே
  என்னுடைய கட்டுரைகள் அடங்கிய சுட்டியையும், அங்காடித்தெரு பற்றிய அங்கலாய்ப்பையும் செய்தேன். நீங்கள் அதை வெளியிடவில்லையாதலால் அங்காடித்தெரு குறித்த கருத்துக் குத்தியதோ என வினவினேன். ஆனால் அதற்கு நீங்கள் எனக்கு கொடுத்திருக்கும் சான்றிதழ் ஒரு சுயத்தை உருவாக்க
  முடியாத பாமர ஆத்மா! நன்றி.

  //ஆகவே பிராமணசாதியைப்பற்றி பெருமிதமாக அல்லாது ஏதாவது சொல்லப்பட்டால் நீங்கள் உடனே புண்படுகிறீர்கள்.// இந்தக் கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை. ப்ராமண ஜாதியைப் பற்றி பெருமிதாமாக எல்லோரும் சொல்ல வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு தமிழகத்தில் ப்ராமணர்களின் நிலை இல்லை. ஏறக்குறைய ஐம்பது வருடங்களாக
  அவமதிப்பையும் புறக்கணிப்பையும் அரசியல் ரீதியாக சந்தித்துவரும் ப்ராமணர்கள் இதற்கு மேலும் படுத்தாதீர்கள் ஐயா என்று கேட்கும் நிலையில் தான் இருக்கிறார்களே ஒழிய எங்களைப் புகழ்ந்து பேசுங்கள் என்ற நிலையில் இல்லை.
  எனவே நீங்கள் ப்ராமணர்களைப் புகழாமல் போனால் அதனால் ப்ராமணர்களுக்கு நஷ்டம் இல்லை. மாறாக ‘இன்னும் நிறுத்தாமல் ஏறி மிதித்துக்கொண்டே இருக்கிறீர்களே, அதற்கு
  நீங்களும் துணைபோய் விட்டீர்களே ஜெயமோகன், ஏன்?’ என்று தான் கேட்கத் தோன்றுகிறது. ஆனால் நீங்கள் அப்படித்தான் புண்படுவீர்கள், கொஞ்சம் அடக்கிக் கொள்ளுங்கள் என்ற
  ரீதியில் மறுமொழிகிறீர்கள். அவ்வாறு கேட்டதால் நீங்கள் எனக்கு கொடுத்திருக்கும் சான்றிதழ் ஒரு சுயத்தை உருவாக்க
  முடியாத பாமர ஆத்மா! நன்றி.

  தமிழ் சினிமாவில் ஜாதிகளைக் காட்ட வேண்டிய தேவையே இல்லாத படங்களில் கூட ப்ராமண பெண்ணாகவே ஹீரோயினைக் காட்ட வேண்டும் (ஈரம்). ஜாதி வெறியைப் போக்க படம் எடுக்க வேண்டும் என்றால் ப்ராமணனையே ஜாதி வெறியனாகக் காட்டி வசனம் பேச வேண்டும். ஜாதியைக் குறித்து நகைச்சுவை எடுக்க வேண்டுமென்றால் ப்ராமணர்களையே நகைச்சுவைப் பொருளாகக் காட்டவேண்டும், கொடுமைக்காரரைக் காட்ட வேண்டுமானாலும் ப்ராமணரையே சித்தரிக்க வேண்டும். தமிழ்ச் சினிமாவில் ப்ராமணர்களை
  முன்னிருத்தி தொடர்ச்சியாக எத்தனை படங்கள்! அத்தனையிலும் ப்ராமணப் பெண்தான் வேறு ஜாதி
  ஆணை காதலித்து சமூகப்புரட்சிக்கு வித்திட வேண்டும். படம் எடுக்கும் தயாரிப்பாளரோ, இயக்குனரோ, கதாசிரியரோ, தன்னுடைய ஜாதி கதாபாத்திரத்தை மையப்படுத்தி
  அந்த ஜாதிப் பெண் வேறு ஜாதி ஆணை பெற்றோரை எதிர்த்து காதலிப்பதாக கதை அமைப்பதில்லையே ஏன்? ப்ராமணர்கள் மட்டுமே ஜாதியை வலியப்பிடித்திருப்பவர்களாக
  காட்ட வேண்டும். வரிசையாக எத்தனைப் படங்கள்.. நீங்களே யோசித்துப் பாருங்கள். நான் ஏதோ அங்காடித்தெருவைப் மட்டும் பார்த்தே பொங்கிப் போய் கேட்பதாய் நீங்கள்
  நினைத்துக் கொண்டால்… மன்னிக்கவும்! ஆனால் இப்படி 10 படத்திற்கு 8 படத்தில் ப்ராமணர்களை வைத்தே எடுக்கிறீர்களே ஏன் என்று கேட்டால் நீங்கள் எனக்கு கொடுத்திருக்கும் சான்றிதழ் ஒரு சுயத்தை உருவாக்க முடியாத பாமர ஆத்மா!
  நன்றி.

  நான் அடையாளங்களுக்காக சண்டைபோடவில்லை. ஆனால் நான் எவ்வாறு வாழ்கிறேனோ அதுவே எனது அடையாளமாகக் காணப்படும் போது அதை மற்றவர்கள் தவறாகச் சித்தரிக்கும் போது ஏன் என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. அல்லது கேட்காமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?
  ஒரு முஸ்லீம் பெண் இந்து ஆணை காதலிப்பதாய் பர்தா அடையாளங்களுடன் படம் எடுத்த மணிரத்தினம் மீது பாம் போடப்பட்டது. அதற்கு பிறகு ஒரு சினிமாவில் கூட
  முஸ்லீம் பெண்ணை ஹீரோயினாக காட்டவில்லை நம்முடைய தமிழ் சினிமா….ஏன்? கொலை செய்வான் என்னும் போது
  அந்த அடையாளங்களை தொடத்தயங்கும் சினிமா, சிரித்துக்கொண்டே சகித்துக் கொண்டிருக்கும் ப்ராமணர்களை மட்டும் தொடர்ந்து கிண்டலும் கேலியும், வெறுப்பும் கசப்பும் கொண்ட கதாபாத்திரங்களாக ஏன் தொடர்ந்து காண்பித்துக் கொண்டே இருக்கிறீர்கள் என்று சலித்துப் போய் கேட்க வேண்டியிருக்கிறது. அவ்வாறு கேட்டதால் நீங்கள் எனக்கு கொடுத்திருக்கும் சான்றிதழ் ஒரு சுயத்தை உருவாக்க முடியாத பாமர ஆத்மா! நன்றி.

  மற்றவர்களை ஏன் அப்படிக் காண்பிக்கவில்லை என்று கேட்பது அவர்களையும் அப்படிக் காட்டுங்கள் என்பதற்காக அல்ல! அவர்களிடம் காட்டும் கண்ணியத்தை குறைந்த பட்ச
  அளவிற்காவது ப்ராமணர்களிடமும் காட்டுங்கள் என்று சினிமாக்காரர்களைக் கேட்கிறேன். அவ்வாறு கேட்டதால் நீங்கள் எனக்கு கொடுத்திருக்கும் சான்றிதழ் ஒரு சுயத்தை உருவாக்க முடியாத பாமர ஆத்மா! நன்றி.

  ஜெ அவர்களே! நான் ப்ராமண மதிப்பீட்டின் அடையாளமாக என்னை உருக்கொள்ளவில்லை. மாறாக என்னுடை அடையாளம் இதுவென தொடர்ந்து அரசியல் வாதிகளும், சினிமாக்காரர்களும் தான் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறார்கள்! பள்ளிப்பருவத்தில் ஒன்றாக உட்கார்ந்து
  அனைவரின் உணவுப்பையிலிருந்தும் ஒருகை எடுத்து நண்பர்களின் உணவினைக் கூட்டாஞ்சோறாக
  சாப்பிட்டவன் நான்.. வளரும் வயது வரை என் ஜாதி என்னவென்றே யோசிக்காமல் வளர்ந்தவன்
  நான். ஆனால் கல்லூரி பருவத்தில் நன்றாகப்படித்தாலும் உனக்கு சீட் கிடைக்காது, ஆனால் கொஞ்சம் மார்க் வாங்கினாலும் எனக்கு சீட் கிடைக்கும் என்று என் நண்பன் சொல்லும் போது
  என் ஜாதி எனக்கு அடையாளப்படுத்தப்பட்டது. தமிழ் சினிமாக்களில் நான் வீட்டில் பேசுவது போன்றே பெசுபவரைப் பார்க்க நேரிட்டு அவர் ஜாதி வெறியராக இருப்பதாகவும் ஒரு ஊரே கூடி அவருக்கு புத்தி சொல்வதாகவும் காட்டும் போது நாம் அப்படி இல்லையே ஏன் நம்மை இப்படிக் காட்டுகிறார்கள் என்று எண்ணத்துவங்கும் போது என் ஜாதி எனக்கு அடையாளப்படுத்தப்
  பட்டது. பாப்பானை ஒழி, பாப்பானை அழி என்று கோவில்கள் தோறும் ப்ராமணர்களின் பூனூல் அறுக்கப்பட்ட போதும், வலைதளங்கள் தோறும் கட்டுப்பாடே இல்லாத முறையில்
  ப்ராமணர்கள் மீது மிக அசிங்கமான அவதூறு வார்தைகள் கொட்டப்படும் போதும் கேட்பாரில்லாமல் துவேஷம் பாராட்டப்பட்ட போதும் என் ஜாதி எனக்கு அடையாளப்படுத்தப்
  படுகிறது. இப்படி எனது அடையாளங்கள் என்மீது கட்டாயமாக சுமத்தப்படும் போது நான் இனக்குழுவிற்குள் சேராமல் தனித்து எப்படி இயங்க முடியும்? இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நடுநிலையாளர் என்று நான் எண்ணும் ஜெயமோகனும் மற்றவர்களுடன் சேர்ந்து அதே ப்ராமண துவேஷ காட்சியை
  படமாக்குகிறாரே என்ற ஆதங்கத்தில் ஏன்? என்று கேட்டால் நீங்கள் எனக்கு கொடுத்திருக்கும் சான்றிதழ் ஒரு சுயத்தை உருவாக்க முடியாத பாமர ஆத்மா! நன்றி.

  இப்படி சமூகத்தின் எல்லாவித சித்திரைவதைகளையும் ப்ராமணர்களுக்கு எதிராக மிக வெளிப்படையாக அரசாங்க அனுமதியுடன் வேறு யாருக்கும் இல்லாத அளவு செய்யப்படுகின்றது. ஏன் என்று கேட்டால் என் முப்பாட்டன் கெட்டதுக்கு உன் முப்பாட்டன் தான் காரணம் என்று அதே
  அறதப்பழைய வரலாற்றுச் சமூகக் காரணங்கள் வாந்தியெடுக்கப்படும். அவற்றை ஏன் என்று கேட்காமல் வாய்திறக்காமல் சகித்துக்கொண்டிருக்கும் ப்ராமணர்கள் தான் உங்கள் பார்வையில் ”இன்னமும் அறிவுத்தளச் சமநிலை கொண்ட மென்மையான மனிதர்கள்”. தவறில்லை. மென்மையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் இந்த உணர்ச்சி வதைகளிலிருந்து எப்போது விடுவிக்கப் போகிறார்கள் சினிமாக்காரர்களும் அரசியல் வாதிகளும் என்ற குழப்பத்தில் கேள்வி கேட்டால் நீங்கள் எனக்கு கொடுத்திருக்கும்
  சான்றிதழ் ஒரு சுயத்தை உருவாக்க முடியாத பாமர ஆத்மா!
  நன்றி.

  ஜெயமோகன் அவர்களே!

  உங்களைப் பொறுத்தவரை யார் ப்ராமணன்..

  உங்கள் மூக்கில் குத்தினேனே எப்படி இருந்தது – நன்றாக இருந்தது.. = ப்ராமணன்.
  உங்கள் மூக்கில் குத்தினேனே எப்படி இருந்தது – ஏன் குத்தினாய்? = ப்ராமணன் இல்லை.

  உங்களைப் புரிந்து கொள்ள நான் லாயக்கற்றவன் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் நேரத்தை வீனடித்ததற்காக என்னை மன்னிக்கவும். நான் ப்ராமணன் என்ற சான்றிதழை உங்களிடமிருந்து வாங்கவேண்டும் என்று நினைக்கவில்லை.
  அது எனக்கு தேவையும் இல்லை.

  இன்னும் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் ப்ராமணரைக் கேலி செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.
  இன்னும் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் ப்ராமணரைக் கொடுமைக்காரர்களாகக் காட்டி எடுத்துக் கொள்ளுங்கள்!
  இன்னும் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் ப்ராமணரை ஜாதி வெறியர்களாகக் காட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அரசியல் ரீதியாகத் தூற்றுங்கள். தமிழகத்தில் ப்ராமணர்கள்
  என்று சொல்லிக்கொள்பவர்கள் மொத்தமாக இல்லாமல் போய் கடைசி ப்ராமணன் எஞ்சியிருப்பினும் அதையே செய்யுங்கள். அப்போதும் அவன் மென்மையானவனாகவே இருப்பான்.

  ஆனால் அத்தனையையும் எதிர்கொள்வதற்கு ஒரே ஒரு நம்பிக்கை மட்டுமே எஞ்சியிருக்கிறது…
  “சமூகம் தன்னைத் தானே சமன் செய்து கொள்ளும்”

  இப்படிக்கு
  அடையாளங்களுடன் அல்லல்பட்டு ஒரு சுயத்தை உருவாக்க முடியாத பாமர ஆத்மா..
  ராம்!

 9. bagapath

  //இப்படிக்கு
  அடையாளங்களுடன் அல்லல்பட்டு ஒரு சுயத்தை உருவாக்க முடியாத பாமர ஆத்மா..
  ராம்!//

  ராம். உங்கள் மொத்தக் கடிதத்திலும் நாணயம் ததும்பும் உண்மையான வரிகள் இவை மட்டும்தான். மற்ற படி நீங்கள் கொட்டித் தள்ளியிருக்கும் அரை வேக்காட்டு வாக்குவாதங்களும் சுய பச்சாதாபமும் நாஸியேடிங் ஆக இருக்கின்றன.

 10. RV

  அன்புள்ள ஜெயமோகன்,

  வெளுத்து வாங்கிவிட்டீர்கள், பாராட்டுகள்!

  ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் நான் உங்களிடமிருந்து வேறுபடுகிறேன். என் பதிவிலிருந்து – // “மூர்க்கமான இனக்குழுக்கள்” என்று அவர் எழுதி இருப்பதில் (நியாயமான) பயம் தெரிகிறது. இந்த பயம் இல்லாமல் என்று எழுத முடிகிறதோ, அன்றுதான் இந்தியா ஒரு ஜனநாயக, கருத்து சுதந்திரம் உள்ள நாடு என்று சொல்லமுடியும். அந்த நிலை இன்று உலகில் எங்கும் இல்லை. மேலை நாடுகளில் கூட. கருத்து சுதந்திரம் முதல் சட்ட திருத்தத்தால் (First Amendment) பாதுக்காகப்பட்டிருக்கும் அமெரிக்காவில் கூட இன்று அது 100% இல்லை. அந்த பயமே இந்த கேள்வியை ஜெயமோகனிடம் கேட்டவரின், இப்படி யோசிப்பவர்களின் உண்மையான பிரச்சினை. ஜெயமோகன் சொல்லி இருப்பது போல அது பாமரத்தனமான கேள்வி என்று நான் நினைக்கவில்லை. எல்லா குழுக்களையும் ஒரே மாதிரி நடத்த முடியவில்லை. அதற்கு ஆயிரம் வரலாற்று காரணங்கள் இருந்தாலும் அதில் ஒரு unfairness இருக்கத்தானே செய்கிறது? ராமர் எந்த காலேஜில் படித்தார் என்று கேட்கும் கலைஞர் ரம்ஜான் கஞ்சி குடித்தால் எரிச்சல் வரத்தானே செய்யும்? அந்த unfairness-ஐ acknowledge செய்ய வேண்டும், வரலாற்று காரணங்களை பற்றி மேலும் மேலும் பேச வேண்டும், பக்கத்து வீட்டுக்காரன் தடுப்பூசி போட்டுக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அவன் மனதை மாற்ற வேண்டும், நாமும் இதுதான் சாக்கு என்று தடுப்பூசி போட்டுக்கொள்வதை நிறுத்தக் கூடாது என்று விளக்க வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. //

  முடிந்தால் இது பாமரத்தனம் என்று புறம் தள்ளுவதைப் பற்றி இன்னும் எழுதுங்களேன்! அப்படி கேட்பவர்களின் ஆதங்கத்தின் நியாயம் துளியும் இல்லை என்று நினைக்கிறீர்களா?

 11. samyuappa

  டியர் bagapath, அது ஏன் nausiating? Our mind is conditioned with lots of factor;(J.K). சுய-விமர்சனம் செய்துகொள்பவனுக்கு அது தெரியும். நான் என் பெரும்பாலான ஒழுங்கற்ற நடவடிக்கைகளுக்கு என்னையே திட்டிக்கொள்வேன். அதுவும் எப்படி…”இந்த school -பசங்க குணம் இப்படித்தான்”. ஒரு வகையான escape தான். ஒரு உண்மையை ஒத்துக்கணும்… பிரமணர்கள் இருந்தவரை அரசு இயந்திரம் ஊழல்கள் இன்றி இருந்தது. அவங்க வளர்ப்பு அந்தமாதிரி. ரெண்டுமுறை குளிக்கறாங்க… பிரணாயாமம் பண்றாங்க…. படிக்கறாங்க… நாமளும் இருக்கோம்……ம்…. சப்பாத்தி சப்பாத்திதான்… ரொட்டி ரொட்டிதான்.

 12. கோவை அரன்

  hayyram ,

  கட்டுரையை இன்னும் கொஞ்சம் புரிந்து படிக்க முயற்ச்சிக்கலாம் ,

 13. gomathi sankar

  [சுஜாதா முன்பு சொன்னது போல ]நீங்கள் என்ன சொன்னாலும் புண்பட யாராவது காத்துக் கொண்டிருக்கிறார்கள் .இனி நீங்கள் ஐஸ்லேண்டுக்கு குடிபெயர்ந்து எஸ்கிமோ மொழியில் எழுதுவதே பாதுகாப்பானது.

 14. Rajan

  அன்புள்ள ஜெயமோகன்

  இந்த பிரச்சினை சற்று ஆழமானது. அதற்குள் போவதற்குள் நான் சில தன்னிலை விளக்கங்களைத் தந்து விடுகிறேன்.

  1 முதலில் அங்காடித் தெரு சினிமாவில் நீங்கள் வைத்திருந்த பிராமணப் பெண்ணின் பாத்திரம் உங்கள் கதைப் படி, கதையின் வலுவிற்குத் தேவையான ஒரு பாத்திரம் என்பதையும் அந்தப் பெண்மணியின் மூலமாகவே நீங்கள் மாத விலக்கைத் தீட்டாகவும் அதே நேரத்தில் புனிதமாகவும் கருதும் இந்து மதத்தின் இரு வேறு எல்லைகளை விளக்குவதற்கும் அதன் மூலம் சேர்மக்கனி பெறும் மன தைரியத்தை விளக்குவதற்கும் அந்தப் பாத்திரத்தை நீங்கள் படைத்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். நிச்சயம் உங்களது பாத்திரப் படைப்பிற்கு உள்நோக்கம் கற்பிக்கவும் மாட்டேன். அதன் நோக்கம் பற்றி நன்கு அறிந்தவன். மேலும் அந்த வழக்கத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு பிராமணப் பெண்ணைக் காட்டினால் மட்டுமே அந்தக் காட்சிக்கு யதார்த்தமும், நிஜத்தன்மையும் கிட்டும் என்பதற்காக நீங்கள் அதை வைத்திருக்கிறீர்கள் என்பதையும் நான் நன்கு அறிவேன். நிச்சயமாக நீங்கள் பிராமணர்களை இழிவு செய்யும் நோக்கத்தில் அந்தப் பாத்திரத்தை வைக்கவில்லை என்பதை நன்கு அறிவேன். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ஒரு காட்சிக்கு அதன் களனும், அந்தப் பாத்திரங்களின் நம்பகத்தன்மையும், களனின் யதார்த்தமும், ஏன் பாத்திரங்கள் கையாளும் மொழியும் கூட முக்கியமானவை என்பதை மலையாளப் படங்களையும், பிற முக்கியமான உலகப் படங்களையும் தொடர்ந்து பார்ப்பவன் என்ற முறையில் இந்தக் காட்சிக்கு நீங்கள் பயன் படுத்தியிருக்கும் பாத்திரத்தின் ஜாதியின் முக்கியத்துவம் குறித்தும் நான் வேறு எவரையும் விட மிக நன்றாகவே அறிவேன். நம்பூதிரிகளைக் காட்டாமல் ஒரு பரிணயம் எடுக்கவியலாது. மீனவர்களைக் காட்டாமல் ஒரு செம்மீன் சாத்தியமேயில்லை. கம்னியுஸ்டுகளைக் காட்டாமல் ஒரு அரபிக் கதாவை எடுத்திருக்க முடியாது. நாயர்களைச் சொல்லாமல் ஈழவர்களைச் சொல்லாமல் பெரும்பாலான மலையாளப் படங்களை எடுத்திருக்கவே முடியாது. முஸ்லீம்களைச் சொல்லாமல் ஒரு மிழிகள் சாட்சி எடுத்திருக்க முடியாது. கிறிஸ்துவர்களைக் காண்பிக்காமல் ஒரு அச்சன் உறங்காத வீட்டையோ, ஒரு சின்சையோ தொட்டிருக்கக் கூட முடியாது. ஆகவே ஒரு படைப்பில் அது சினிமாவாக இருந்தாலும் சரி, நாவலாக இருந்தாலும் சரி அந்தக் கதையில் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டாலோ அதைச் சொல்லியே ஆக வேண்டும். அப்படிச் சொல்லாமல் மழுப்பினால் அது மணிரத்தினத்தின் “இருவர்” சினிமா போல ஒரு வெளிறிப் போன ஒரு அபத்தமான படைப்பாகவே போய் முடியும். அந்தப் படைப்பின் நம்பகத்தன்மையே கேள்விக்குரியதாகி அந்தப் படைப்பே கேலிக்குரியதாகி விடும். ஆகவே ஒரு படத்திலோ ஒரு நாவலிலோ ஒரு ஜாதியோ, ஒரு கட்சியோ, ஒரு இனமோ, ஒரு மதமோ சொல்ல வேண்டிய தேவை அந்தக் கதைக்கு இருப்பின் அதைத் தயங்காமல் சொன்னால் மட்டுமே ஒரு நல்ல படைப்பு உருவாகும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் ஆட்சேபணையும் கிடையாது. அதே அடிப்படையில் எனக்கும் அங்காடித் தெரு படத்தில் நீங்கள் படைத்திருக்கும் பாத்திரங்களில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது என்பதை நான் நிச்சயமாகத் தயங்காமல் சொல்வேன். அப்படி எவ்வித சந்தேகமும் இருந்திருப்பின் மிக நீண்ட இரு பெரும் பதிவுகளை அந்தப் படம் குறித்து

  http://solvanam.com/?p=௭௫௭௫
  http://solvanam.com/?p=௭௫௮௮

  நான் சொல்வனத்தில் எழுதியே இருக்க மாட்டேன்.

  2 இரண்டாவதாக நான் எந்த ஜாதியின் பிரதிநிதியாகவும் என்னை நிறுத்திக் கொண்டு இங்கே எழுதவில்லை. முதலில் அப்படி நிறுத்திக் கொள்ளும் தகுதி எனக்குக் கிடையாது. அப்படியே நான் நிறுத்திக் கொள்ள முயன்றாலும் அதே ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்னைக் கல்லால் அடித்து இறக்கி விட்டு விடுவார்கள். ஆகவே அந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டியதில்லை. நான் இங்கு என் சார்பாக மட்டுமே என் அனுபவத்தின் அடிப்படையில் விளைந்த சில கருத்துக்களை மட்டுமே இங்கு பகிர்ந்து கொள்கிறேனே அன்றி நான் யாரையும் எந்த ஜாதியின் பிரதிநிதியாகவும் பேசவில்லை என்பதை தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன். வேறு எந்த ஜாதிக்கு வேண்டுமானாலும் ஒரு ஒற்றுமையான பிரதிநிதி இருந்து விட முடியும் ஆனால் பிராமணர்களுக்கு மட்டும் அந்த ஒற்றுமை உணர்வு சாத்தியமே இல்லை என்பது என் தீர்மானமான எண்ணம். அங்கு ஒரே ஒருவர் மட்டும் மிச்சம் இருந்தால் கூட நிச்சயம் இரண்டு விதமான கருத்து அந்த ஒருவரிடமிருந்தே கிளம்பும் அவ்வளவு ஒற்றுமையுள்ள சமூகம் அது. ஆகவே நான் எனக்காக மட்டுமே இங்கு பேசுகிறேன் என்பதையும் தெளிவு படுத்தி விடுகிறேன்.

  ஆனால் ஒருவர் ஒரு குழுவிற்காக பேசுவதில் எந்த தப்பும் இல்லை என்பது என் கருத்து. இஸ்லாமியத் தீவீரவாதத்தால் குண்டு வெடிப்புகளால் பாதிக்கப் படும் எந்தவொரு ஹிந்துவும் ஹிந்துக்கள் சார்பாகப் பேசினால் அதை நாம் தவறாக கருத முடியாது என்பதே என் எண்ணம். இன்று தமிழ் நாட்டில் ஏழை பள்ளி மாணவர்களில் கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லீம்களுக்கு மட்டுமே பண உதவி அரசாங்கத்தால் செய்யப் பட்டு வருகிறது. அதை விடக் கீழான ஏழ்மையில் இருக்கும் இந்து மாணவர்களுக்கு அந்தச் சலுகை மறுக்கப் படுகிறது. வருடத்திற்கு ஒரு கிறிஸ்துவ/முஸ்லீம் மாணவனுக்கு அரசாங்கமே கல்லூரிப் படிப்பிற்காக ஒரு லட்சம் ரூபாய்கள் வழங்குகிறது ஆனால் அதே வேளையில் கடும் ஏழ்மைச் சூழலில் வாழும் இந்து மாணவனுக்கு அது கிடையாது என்னும் பொழுது அந்த ஒரு லட்ச ரூபாய்க்காக அந்த ஏழை இந்து மாணவன் மதம் மாற வாய்ப்புகள் உண்டு. ஆக அரசாங்கமே மதமாறத்தை ஊக்குவிக்கிறது என்ற அநியாயத்தைக் கருதி ஒரு இந்துவாக நான் குரல் கொடுத்தால் நிச்சயமாக அதை ஒரு குழுவின் பிரதிநிதியாக என்னைக் கருதிக் கொள்கிறேன் என்று நீங்கள் குறை சொல்ல மாட்டீர்கள் என்றே எண்ணுகிறேன். அப்படிச் சொன்னால் அது தவறு. ஆக ஒரு சில இடங்களில் பிரதிநித்த்துவக் குரல்கள் ஒலிப்பதில் தவறில்லை என்றே நான் கருதுகிறேன்

  இந்த இரண்டு சுய விளக்கங்களுடன் என் கருத்துக்களை வைக்கிறேன்

  அன்புடன்
  ராஜன்

 15. Rajan

  முதலில் தமிழ் சினிமக்களில் பிராமண ஜாதி பாத்திரங்கள் இழிவாகக் காண்பிக்கப் படுவது குறித்து சில கருத்துக்கள்.

  தமிழ் சினிமா, இலக்கிய, கலைச் சூழலில் இன்று நீங்கள் எந்த ஜாதியையும், எந்த கட்சியையும் குறை கூறும் வகையில் சொல்லி விட முடியாது. ஆனால் அதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு பிராமணர்கள் மட்டுமே. பிராமணர்களை சினிமாக்களில் இழிவாகவும், கேலிக்குரியவர்களாகவும், ஆபாசமாகவும் காண்பிக்கப் படுவது எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் பல வருடங்களகாகத் தமிழ் நாட்டில் தொடர்ந்து வருகிறது. இதை ஆரம்பித்து வைத்தவர்களே பிராமண சினிமாக்காரர்கள் தான் என்பதையும் சொல்ல வேண்டும். சூர்யா போன்ற இயக்குனர்கள் பிராமணப் பெண்களைக் காட்டும் விதம் போல் வேறு எந்த விதப் பெண்களையும் பெயர் சொல்லிக் காண்பித்து விட முடியாது. சினிமாக்களில் மட்டும் அல்ல பத்திரிகைகள், இணைய தளங்கள், ப்ளாகுகள் ஆகிய இடங்களிலும் கூட இந்த ஆபாசம் தொடர்கிறது. அதற்கு எந்த விதமான நியாயத்தையும் சொல்லி விட முடியாது. ஒரே காரணம் அவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள். எதிர்த்துப் பேச விருப்பம் இல்லாதவர்கள் அல்லது அதற்கான ஒற்றுமை இல்லாதவர்கள். ஏற்கனவே தமிழக அரசியலில் அவர்கள் கொடுமையானவர்களாகவும் ஆதிக்க ஜாதியினர்களாகவும் பெரும் வில்லன்களாகச் சித்தரிக்கப் பட்டவர்கள். ஆகவே அவர்களை எப்படி சித்தரித்தாலும் யாரும் எதிர்த்து கேள்வி கேட்க்க மாட்டார்கள், அப்படியே ஒரு சிலர் வந்தாலும் அவர்களை அடித்து விரட்டி விடலாம் என்ற எண்ணம் மட்டுமே இவ்வித சித்தரிப்புக்களுக்குக் காரணம். இதையே நான் எந்த ஜாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சொல்லியிருந்திருப்பேன்.

  ஒரு ஜாதியினரை ஒரு கதையின் நம்பகத்தன்மை கருதி காண்பிக்கக் கூடாதா என்றால் அதற்குப் எனது பதில் தாராளமாக காண்பிக்கலாம் காண்பிக்க வேண்டும் என்பதே. ஆனால் தமிழ் சினிமாக்களில் சமீப காலமாக அந்த வித யதார்த்த நோக்கம் கருதி பிராமணர்கள் காண்பிக்கப் படுவதில்லை. அவர்களது உடை, தோற்றம், மொழி ஆகியவற்றைக் கேலி செய்யும் நோக்கிலும் பெண்களை விரக் தாபத்தில் அலையும் பெண்களாகச் சித்தரிக்கும் நோக்கிலும் மட்டுமே அந்த ஜாதியினர் காண்பிக்கப் படுகிறார்கள் என்பதைத் தமிழ் படங்களைத் தொடர்ந்து பார்க்கும் எவரும் அறிவர்.

  இதனால் உனக்கு என்ன? நீ ஏன் அவர்களது பிரதிநிதியாக வருகிறாய் ? என்று நீங்கள் கேட்க்கலாம்.

  நான் யாருடைய பிரதிநிதியாகவும் இங்கு வரவில்லை. நான் என்னுடைய பிரதிநிதியாக மட்டுமே இங்கு பேசுகிறேன்.

  ஒரு பிராமணப் பெண்ணை தொடர்ந்து தமிழ் சினிமாக்களில் விரக தாபம் மிக்க பெண்களாக சித்தரிப்பதன் மூலம் அந்த ஜாதிப் பெண்கள் தெருவில் வரும் பொழுது அவர்களைக் காணும் எந்தவொரு விடலைப் பையன்கள் மனதிலும், எந்தவொரு பொறுக்கியின் மனதிலும், எந்தவொரு லும்பன்களின் மனதிலும் அவர்களை கேலிப் பொருளாக எளிதில் வக்கிரமாகக் கைக்கொள்ளும் மனோநிலையே ஏற்படும். இதில் படிதவர்களுக்கும் தெருவில் சுற்றும் ரவுடிகளுக்கும் கூட வித்தியாசம் இல்லை. அதனால்தான் அமெரிக்காவில் பி எச் டி செய்யும் பொறுக்கிகள் கூட இணையத்தில் பாட மறுக்கும் பாப்ப்பாத்திகள் என்று எளிதாக எழுதி விட்டு முற்போக்குப் பட்டமும் வாங்கிக் கொண்டு போய் விட முடிகிறது.

  சினிமாக்களில் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு தெருமுனை தி க, தி மு க, தனித் தமிழ் கூட்டங்களிலும் இதே விதமான வக்கிரப் பிரச்சாரமே தமிழ் நாட்டில் கடந்த அறுபது வருடங்களாக அவிழ்ந்த்து விடப் பட்டிருக்கிறது. இவ்வாறான ஒரு சூழலில் சினிமாக்களும் சேர்ந்து கொள்ளும் பொழுது பிராமணப் பெண்களும் ஆண்களும் தெருவில் செல்லும் பொழுது ஏற்படுத்தப் படும் அவமானகரமான செயல்பாடுகளுக்கு இந்த விதமான சினிமாக்களே பொறுப்பாகின்றன. இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் தமிழ் இணைய ப்ளாகுகளையும் அதில் வெளியிடப் படும் பின்னூட்டங்களையும் ஒரு நாள் உலாவிப் பார்த்தாலே புரிந்து விடும்.

  பிராமணப் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் கூட கடுமையான கேலிக்கும் தாக்குதலும் அடிக்கடி உள்ளாகின்றனர். ஆவணி அவிட்டம் என்ற பிராமணர்களின் பூணூல் அணியும் சடங்கு முடிந்து அவர்கள் வீடுகளுக்குத் திரும்புகையில் தாக்கப் படுவதும் ஆபாசமாகக் கிண்டல் செய்யப் படுவதும் இன்றும் தமிழ் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளில் நடை பெறுகின்ற ஒரு காட்சியே. ஒரு முஸ்லீம் பெண் பர்தா அணிந்து வரும் பொழுது செய்யப் படாத ஒரு கிண்டல், ஒரு முஸ்லீம் குல்லா போட்டு வரும் பொழுது, மீசையை மழித்து விட்டுத் தாடி மட்டும் வைத்துக் கொண்டு செல்லும் பொழுது செய்யப் படாத ஒரு கேலி, ஒரு சர்தார் தாடி வைத்து, டர்பன் வைத்துக் கொண்டு போகும் பொழுது செய்யப் படாத அவமானம், ஒரு பாதிரியார் பாவாடை அணிந்து கொண்டு போகும் பொழுது செய்யப் படாத ஒரு ஏளனம், ஒரு பிராமணப் பெண் மடிசார் கட்டிக் கொண்டு போகும் பொழுதும், ஒரு பிராமணப் புரோகிதர் குடுமி வைத்துக் கொண்டு செல்லும் பொழுதும், ஒரு பிராமணர் பூணூல் அணிந்து கொண்டு போகும் பொழுது மட்டுமே செய்யப் படுவதன் காரணம் என்ன? தமிழ் நாட்டின் இன வெறுப்பு அரசியல் மற்றும் ஆபாச சினிமாக்கள் இரண்டுமே காரணம் என்று நான் சொல்கிறேன்.

  இதை நீ ஏன் சொல்கிறாய் என்று கேட்டால் என் மனைவியோ, அம்மாவோ, அப்பாவோ, மகளோ செல்லப் படும் பொழுதும் இதே அவமானத்திற்கும் தாக்குதலுக்கும் உள்ளாகக் கூடிய சாத்தியங்கள் இருப்பதினால் சுயநலம் கருதி நான் இவற்றைக் கடுமையாக எதிர்க்கிறேன். கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

  இதனால் பாதிக்கப் படாத இந்த நிலைகளையெல்லாம் அறிய நேராத நீங்களோ வேறு எவருமோ இதையெல்லாம் வெற்றுப் புலம்பல் என்று கருதி மிக எளிதாக இடது கையால் ஒதுக்கி விட்டுப் போய் விடலாம் அல்லது ஒரு குழுவின் பிரதிநிதியாக தன்னைக் கருதிக் கொண்டு அநாவசியமாகப் புலம்புகிறான் என்று மிக எளிதாக ஒதுக்கி விடலாம். உண்மை அதுவல்ல இன்றும் இவை போன்ற அவமானத் தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன அதற்குப் பெரும் அளவில் நம் அரசியல் கட்சிகளும், ஆதிக்க ஜாதியினரின் பழியைப் பிறரிடம் தள்ளி விடும் போக்கும், சினிமாக்களுமே காரணம் என்று நான் கருதுகிறேன். அந்தக் காரணங்களினால் நான் சொந்த வாழ்வில் நானும் என் குடும்பத்தாரும் பாதிக்கப் படும் பொழுதும் அவ்வாறு பாதிக்கப் படும் சாத்தியம் இருக்கும் பொழுதும் அதற்கான காரணங்களை ஒது தனிப்பட்ட ஒரு அநாதயான குரலாகவேனும் ஒரு சிறிய பலவீனமான எதிர்ப்பையாவது பதிய முயல்கிறேன்.

  இப்படி சினிமாக்களில் பிராமணர்களை அவமானப் படுத்தும் போக்குகளை ஒரு ஞாநியோ, ஒரு தி ஹிந்து ராமோ ஒரு கமலஹாசனோ கேள்வி கேட்க்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் சுய அடையாளங்களை மறைப்பதற்கே அவர்கள் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறார்கள்.

  மேலும் ஒரு கமலஹாசனின் குடும்பப் பெண்களோ, ஒரு பாலச்சந்தரின் குடும்பப் பெண்களோ டவுண் பஸ்ஸில், தாம்பரம் பீச் ட்ரெயினில் செல்பவர்கள் அல்லர், ரேஷன் அரிசிக்காக க்யூவில் நிற்கும் பிராமணர்கள் அல்லர், தனியார் வேலைக்குச் செல்பவர்கள் அல்லர். ஆகவே அவர்களுக்கு இது குறித்து எவ்விதக் கவலையும் கிடையாது, மாறாக ஒரு ஜெயமோகனை தலித்துக்களை அவமானப் படுத்தி விட்டார் என்று சொன்னால் அவர்களுக்கு முற்போக்கு பட்டம் கிட்டும் அவர்களின் ஜாதி அடையாளத்தை மறைக்க உதவும் அதனால் அதை வேகமாகச் செய்வார்கள். ஆகவே பாதிக்கப் படுபவர்கள் மட்டுமே இது குறித்து ஏதேனும் சொல்ல முடியும். நான் இந்த விஷயத்தில் மிகக் கடுமையாகப் பாதிக்கப் பட்டவன். சிறு வயதில் நான் அனுபவதித்த ஒரு கொடூரமான தாக்குதலின் பயங்கரத்தில் இருந்து இன்றும் மீள முடியாத கடுமையான கசப்பில் உழல்பவன் என்ற முறையில் இவை போன்ற சினிமாக்களை ஒரு தனி மனிதனாக கண்டித்தால் அது தவறு ஏதும் இருக்க முடியாது என்றே கருதுகிறேன்.

  சினிமாவில் பிராமணப் பெண் அலைவதாகக் கவர்ச்சி மதிப்பு கருதி மட்டும் காண்பிக்கப் படும் பொழுது அதைப் பார்க்கும் ரோட்டில் அலையும் ரவுடிக்கு அவன் காணும் பிராமணப் பெண்களின் இடுப்பைக் கிள்ளச் சொல்லும் தைரியத்தை அளிக்கிறது. சினிமாவில் குடுமி வைத்த ஒரு புரோகிதர் இழிவு செய்யப் படும் பொழுது ரோட்டில் அதே போலச் செய்யும் ஒரு புரோகிதர் அசிங்கமாக ஏசப் படுகிறார் சமயங்களில் தாக்குதலுக்கும் உள்ளாகிறார். இவையெல்லாம் நடக்கின்றன, நானே கண்டிருக்கிறேன். உங்கள் சூழலில் நடக்கவில்லை என்பதினால் இப்படி நடப்பதேயில்லை என்று சொல்லி விடாதீர்கள்.

  ஏன் தமிழ் நாட்டில் தலித்துக்கள் அவமானப் படுத்தப் படுவதில்லையா, கொடுமைக்குள்ளாவதில்லையா நீ அவமானப் பட்டால் என்ன உன் முன்னோர் செய்த பாவத்திற்கு நீ கொடுக்கும் விலை இது என்பது அடுத்த பதிலாக வரும். நிச்சயமாக ஒடு தலித் படும் வேதனைக்கும் அவமானத்திற்கும் வேறு எந்த அவமானமும் ஈடு இணையாகாது. ஆனால் அவர்களை சினிமாவில் அப்படிச் சித்தரிக்க யாரும் துணிவதில்லை. கட்சி மேடைகளில் யாரும் பேசுவதில்லை. அவர்கள் படும் அவமானம் அந்தந்தப் பகுதிகளில் வாழும் பிராமணர்கள் அல்லாத பிற ஜாதியினரால் உண்டாக்கப் படுவது மட்டுமேயன்றி சினிமாக்கள் காரணமாக இருப்பதில்லை.

  எனக்கு ஜெயமோகனைத் தெரியும், ஒரு சினிமாவிலோ ஒரு படைப்பிலோ தேவை கருதி ஒரு ஜாதியோ ஒரு இனமோ, ஒரு மதமோ ஒரு கட்சியோ சித்தரிக்கப் பட வேண்டுமானால் அதன் அவசியம் குறித்து நன்கு தெரியும். ஆகவே அங்காடித் தெருவில் நீங்கள் எந்த வித உள்நோக்கமும் இன்றி அந்தக் கதையின் நம்பகத்தன்மைக்காகவும், அதன் நிஜத்தன்மைக்காகவும் மட்டுமே அந்தக் காட்சியை வைத்திருக்கிறீர்கள் என்பதும் நன்கு தெரியும். ஆனால் உங்களை அறியாத உங்கள் எழுத்துக்களைப் படித்தறியாத, உங்கள் நோக்கங்களை அறிந்திராத, தமிழ் சினிமாவில் வழக்கமாக பிராமணர்கள் சித்தரிக்கப் படுவதைக் கண்டு வெறுப்பும், அவநம்பிக்கையும் கொண்ட அதனால் பாதிக்கப் பட்ட ஒரு சராசரி பிராமணப் பெண்ணோ ஆணோ, அப்படிச் செய்யும் சினிமாக்காரர்களையும் உங்களையும், வசந்த பாலனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவே செய்வார்கள். அது புரியாமல் உங்களைப் பற்றி அறியாமல் செய்யும் ஒரு செயலாகவே நான் கருதுவேன்.

  தொடரும்..

  அன்புடன்
  ராஜன்

 16. Rajan

  அடுத்து அடையாளம் குறித்து. எனக்கு அடையாளங்கள் ஏதும் கிடையாது. எனக்கு அடையாளங்களின் அவசியமும் தேவையும் கிடையாது. எந்த பிராமணர்களிடத்தும் போய் எதற்காகவும் கெஞ்சி நின்றதும் கிடையாது. ஜாதி என்பது உறவுகளைப் பேணவும் உணவு, சடங்குகள் போன்ற ஒரு சில கலாச்சார அடையாளங்களை தொடர்வதற்காகவும், ஒருவருக்கு ஒருவர் தேவைப் பட்டால் கஷ்டப் படுவதற்கு உதவுவதற்காகவும் வேண்டுமானால் ஜாதிகள் தேவைப் படுமே ஒழிய அவற்றை மீறி அதன் தேவைகள் ஏதும் இல்லை என்ற கொள்கைகள் உடையவன். மேலும் ஒருவர் எந்த ஜாதியில் பிறந்தாலும் பிறப்பின் அடிப்படையில் அவர்கள் யாருக்கும் உயர்வானவர்களோ தாழ்வானவர்களோ கிடையாது என்ற நம்பிக்கையும் உடையவன். ஆனாலும் நான் பிறந்த குழுவின் அடிப்படையில் என் மீது நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில அடையளங்கள் திணிக்கப் படுகின்றன. அதற்கு நான் பொறுப்பாக முடியாது, நீ இந்த ஜாதி ஆகவே இப்படித்தான் நடந்து கொள்வாய் என்ற தெளிவான முன் தீர்மானங்கள் கொண்டே இன்று தமிழ் நாட்டில் எவரும் அணுகப் படுகிறார்கள். ஆகவே என் மீது திணிக்கப் படும் ஜாதி சார்ந்த அடையாளங்களுக்கு நான் பொறுப்பாக முடியாது. ஆகவே ஒரு ஜாதியின் அடையாளமாக நான் இதைச் சொல்லாமல் தனிப்பட்ட அளவில் பாதிக்கப் பட்ட பாதிக்கப் படும் வாய்ப்புள்ளவன் என்ற அளவில் மட்டுமே நான் இதை அணுகுகிறேன் என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவு படுத்திக் கொள்கிறேன்.

  அங்காடித் தெருவில் அந்த பிராமணர் பாத்திரம் குறித்தும் பக்தியுள்ள இந்துக்கள் வில்லன்களாக காண்பிக்கப் படுவதும் குறித்தும் நீங்கள் உள்நோக்கம் கருதி அவற்றை வைக்காவிட்டாலும் கூட வக்கிரம் புரையோடிப் போன நம் தமிழ் சூழலில் அவை எவ்வாறு புரிந்து கொள்ளப் படும் என்ற என் அச்சத்தை எனது அங்காடித் தெருவின் சமூகப் பார்வை என்ற கட்டுரையில்

  http://solvanam.com/?p=7588

  ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். குறை உங்களிடம் இல்லை நம் பார்வையாளர்களிடம் உள்ளது என்பதைச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் ஒரு பிராமணப் பெண்ணை அப்படிச் சித்தரிப்பதினால் எல்லா பிராமணப் -பெண்களுமே அப்படித்தான் என்று சொல்ல வரவில்லை. நீங்கள் ஒட்டு மொத்த ஜாதியையும் சொல்ல வரவில்லை என்பதை ரப்பர் படித்த, பி தொ நி குரல் படித்த, காடு படித்த, அனைத்து கட்டுரைகளையும் படித்த, ஜெயமோகனுடன் நெருங்கிப் பழகி நேரில் அறிந்த நான் நன்கு அறிவேன். அதில் எனக்கு எவ்விதச் சந்தேகமும் கிடையாது.

  ஆனால் இதை அறியாத பொதுவாகவே கடந்த அறுபது எழுபது வருடங்களாக தமிழ் நாட்டில் நிலவி வரும் கடுமையான பிராமணக் காழ்ப்புச் சூழலில் வளர்ந்த பிராமணர்கள் என்றாலே கொடூரமான வெறியர்கள் என்று சொல்லி வளர்க்கப் பட்ட தமிழர்களில் பலருக்கும் இந்தக் காட்சி பிராமணர்களை கடுமையாக வெறுக்க மற்றும் ஒரு காரணத்தைக் கற்றுக் கொடுக்கும் அது போன்ற குரோத மனப்பான்மைக்கு தூபம் போடும். இது சினிமாவில் அதை வைத்த உங்கள் நோக்கம் வேறு ஆனால் அது பெரும்பான்மை தமிழர்களிடம் ஏற்படுத்தும் விளைவு வேறு. நீங்கள் அறியாமலேயே விளைவது அந்தக் குரோதம். இந்தச் சூழல் கேரளாவில் கிடையாது. அங்கு படம் பார்ப்பவனுக்குத் தெரியும். சினிமாவில் ஒரு நம்பூதிரியோ, ஒரு முஸ்லீமோ, ஒரு கிறிஸ்துவனோ மோசமாக காண்பிக்கப் பட்டால் அது அதே இனத்தைச் சேர்ந்த அனைவரின் ஒட்டு மொத்தக் குணமும் கிடையாது என்பதை ஒரு எளிய மலையாள ரசிகன் கூட புரிந்து கொள்வான். ஆனால் தமிழ் நாட்டில் அந்த நிலை இல்லை. ஆகவேதான் தமிழ் சினிமாக்களில் ஜாதிகளை வெளிப்படையாகக் காண்பிப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இங்கு நிலவும் சூழலில் ஒரு கட்சியையோ, ஜாதியையோ, தலைவர்களையோ படைப்பின் யதார்த்தம் கருதி கூட அப்படியே காண்பித்து விட முடியாது என்பதுதான் தமிழ் நாட்டு யதார்த்தம். ஆனால் பிராமணர்களை காண்பிக்கலாம் அதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோனோர் அதை உரிய விதத்தில் புரிந்து கொள்வார்கள். கையை, தலையை வெட்ட வரமாட்டார்கள். உண்மைதான். அதனால் உங்களைப் போன்ற ஒரு சில படைப்பாளிகள் நேர்மையான காரணங்களினால் ஒரு சின்ன சுதந்திரம் எடுத்துக் கொள்கிறீர்கள் அதில் தப்பும் இல்லை. ஆனால் அந்த சின்ன சுதந்திரம் கூட அப்படிப் பெருந்தன்மையுடன் புரிதலுடன் அமைதி காக்கும் ஒரு தரப்பாருக்கும் கூட எதிர் மறையான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன என்பதே என் ஆதங்கம்.

  இன்றைய தமிழ் சூழலில் ஒரு சிவாஜி, ஒரு எம் ஜியாரை விமர்சிக்க முடியாது. பிராமணர்களைத் தவிர வேறு எந்தவித ஜாதியினரையும் பெருமைப் படுத்துவது அன்றி வேறு எந்த விதமாகவும் விமர்சித்து விட முடியாது. பா ஜ க போன்ற ஒரு சில கட்சிகளைத் தவிர வேறு எந்த கட்சியினரையும் சினிமாவில் விமர்சித்து விட்டு உயிரோடு இருந்து விட முடியாது. இப்படியாகப் பட்ட ஒரு சூழலில் படைப்புச் சுதந்திரம் கருதி எதிர்ப்புத் தெரிவிக்காத ஒரு சமூகத்தை மட்டும் எப்படியும் காண்பிக்கலாம் என்பது நிச்சயம் படைப்பாளிக்கு எந்த வித எதிர்ப்பையும் ஏற்படுத்தாது ஆனால் அந்த சமூகத்தின் மீது தமிழ் நாட்டுச் சூழலில் ஒரு வித புரிதல் இல்லாத எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்த அவை போன்ற யதார்த்தம் கருது உள்நோக்கமின்றி வைக்கப் பட்ட காட்சிகள் காரணமாகி விடுகின்றன என்று கருதுகிறேன்.

  இன்றைய சூழலில் தமிழ் நாட்டில் நான் ஒரு சினிமா இயக்குனராக இருந்தால், ஒரு சமுதாயம் அல்லது ஒரு கட்சி மட்டுமே தன் பலவீனம் காரணமாகவோ, எண்ணிக்கை காரணமாகவோ, பெரும் தன்மை காரணமாகவோ, சரியான புரிதலின் காரணமாகவோ அல்லது வேறு எந்த விதமான காரணமாகவோ தன்னைப் பற்றிய நேர்மையான, ஆபாசமான, கேலியான, உள்நோக்குள்ள்ள, இல்லாத அனைத்து விதமான சித்தரிப்புகளையும் பொறுமையுடனும் புன்னகையுடனும் அனுமதிக்கிறது என்றாலும் கூட என் படைப்புகளில் நான் அந்த சமூகத்தை மட்டுமே பயன் படுத்த மாட்டேன். என்று எனக்கு எல்லாவிதமான சமூக அமைப்புகளையும், ஜாதிகளையும்,கட்சிகளையும், தலைவர்களையும் ஒரே விதமாக விமர்சிக்கும், சித்தரிக்கும் உரிமை மறுக்கப் படுகிறதோ அந்தவிதமான ஒரு விஷச் சூழலில் நான் ஒரு சமூகத்தை மட்டும் அது அனுமதிக்கிறது அல்லது அது அனுமதிக்கும் அளவிற்கு பலவீனமாக இருக்கிறது அல்லது பெருந்தன்மையாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக என் படைப்புகளில் அந்தச் சமூகத்தைப் பயன் படுத்திக் கொள்ள மாட்டேன் என்பதே என் நிலைப்பாடாக இருக்கும்.

  எமர்ஜென்சியின் பொழுது யாரும் இந்திராவையோ அவரது கட்சியையோ ஆட்சியையோ விமர்சிக்க முடியாது. கடுமையான சென்சார், கடுங்காவல் எல்லாம் அமுலில் இருந்தது. அப்பொழுது கவிழ்க்கப் பட்ட தி மு க ஆட்சியும் ஒன்றும் யோக்யமான ஆட்சி அல்ல அது மாநில அளவில் எதோச்சிகாரமும் ஊழலும் அராஜகமும் செய்து கொண்டிருந்த கட்சிதான் (இன்றைக்கும் அதே கதைதான்) அப்பொழுது சோ வுக்கு கருணாநிதியையும் அவர் ஊழல்களையும் விமர்சிக்க முழு உரிமையும் அனுமதியும் இருந்தது. அன்று சோ தனது துக்ளக்கில் தாராளமாகக் கருணாநிதியை விமர்சிக்கலாம் ஆனால் இந்திராவை விமர்சிக்க முடியாது. அப்பொழுது சோ ஒரு தீர்மானம் எடுத்தார் எப்பொழுது என்னால் ஒரு கட்சியை விட்டு விட்டு இன்று கவிழ்க்கப் பட்டு பலவீனமாக இருக்கும் மற்றொரு கட்சியை மட்டுமே விமர்சிக்க முடிகிறதோ அப்பொழுது நான் கருணாநிதியையும் விமர்சிக்கப் போவதில்லை. என்று என்னால் இந்திராவை விமர்சிக்க எனக்கு அனுமதியும் பேச்சுரிமையும் மீண்டும் கிடைக்கிறதோ அன்றுதான் நான் கருணாநிதியையும் விமர்சிப்பேன் என்று கூறினார். சோவின் நிலைப்பாடே என் நிலைப்பாடாகவும் இருக்கும்

  என் அச்சங்கள் தேவையற்றதாகவும், அதீதமானதாகவும் நீங்கள் கருதலாம். பாதிக்கப் படாத யாரும் அவ்வாறே கருதுவார்கள். நான் சொல்வது என் அனுபவத்தின் அடிப்படையில் நான் கண்ட சம்பவங்களின் அதன் காரணங்களாக நான் கருதுபவற்றின் அடிப்ப்டையில் அமைந்தவை மட்டுமே. இதையே நான் மலையாள சினிமா சூழலுக்குச் சொல்ல மாட்டேன். அங்கு இயக்குனர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் எல்லா ஜாதியினரைப் பற்றியும், மதத்தினரைப் பற்றியும், கட்சியினரைப் பற்றியும் துணிவுடன் விமர்சிக்கும் சுதந்திரம் நேற்று வரை இருந்தது. இன்று கைகள் வெட்டப் பட்ட கிறிஸ்துவ கல்லூரி ஆசிரியருக்குப் பின்னால் கேரளத்திலும் கூட தமிழகத்தில் நிலவும் சூழல் வந்து விட்டிருக்கிறதோ என்ற அச்சம் நிலவுகிறது. இருந்தாலும் நேற்று வரை இருந்த மலையாள படைப்புலகச் சூழலில் எந்த ஜாதியினரை விமர்சிப்பதிலும் யாரும் தயக்கம் இருந்ததில்லை அதற்கான தேவையும் பெரும்பாலும் இல்லை. ஆனால் தமிழ் நாட்டின் சூழல் வேறு. இங்கு கருணாநிதியையும், எம் ஜி யாரையும் குறிப்பிட்டு ஒரு சாதாரண சினிமா கூட எடுக்க முடியாத சூழல் தான் நிலவுகிறது. மலையாள அரபிக் கதாவில் சர்வ சாதாரணமாக பிரணையில் விஜயனும், அச்சுதானந்தனும் பேசப் படுகிறார்கள். போப்பும், நம்பூதிரிகளும், சங்கராச்சாரியர்களும் மிகச் சுதந்திரமாக விமர்சிக்கப் படும் சூழல் உள்ளது. அங்கு தாராளமாக படைப்புச் சுதந்திரத்தைப் பயன் படுத்தலாம்.

  ஆனால் புரையோடிப் போயிருக்கும் தமிழ் நாட்டுச் சூழலில் வேறு விதமாகச் செயல் பட வேண்டிய கட்டாயமே எந்தவொரு படைப்பாளிக்கும் நிலவுகிறது. அந்த சூழல் மாறும் ஒரு காலம் வரும் பொழுது என்று எல்லா ஜாதியினரையும் சமமாக விமர்சிக்கலாம் என்ற காலம் வரும் பொழுது, என்று எல்லா கட்சியினரையும் அரசியல்வாதிகளையும் எவ்வித அச்சமும் இல்லாமல் பகிரங்கமாக நேர்மையாக விமர்சிக்கலாம் என்ற நிலை வரும் பொழுது பிராமணர்களையும் அவர்களில் பலரது சிறுமைகளுக்காகவும், ஆணவங்களுக்காகவும், ஜாதி மேலாண்மைக்காகவும், தீண்டாமைக்காகவும் கட்டாயம் கடுமையாக விமர்சிப்பதில் எந்த வித ஆட்சேபணையும் இருக்க முடியாது.

  நான் எதையாவது சரியாகச் சொல்லியிராவிட்டாலோ புரியும் வண்ணம் விளக்கியிருக்காவிட்டாலோ தயவு செய்து தப்பாகப் புரிந்து கொள்ளாமல் என் விளக்கத்தை மீண்டும் ஒரு முறை கோரவும்

  அன்புடன்
  ராஜன்

  ஆனால்

 17. jasdiaz

  / வருடத்திற்கு ஒரு கிறிஸ்துவ/முஸ்லீம் மாணவனுக்கு அரசாங்கமே கல்லூரிப் படிப்பிற்காக ஒரு லட்சம் ரூபாய்கள் வழங்குகிறது /

  It is a wonderful news to me. I am a Christian and I have two daughters studying in college. Kindly let me know the details so that I can avail this wonderful benefit. As far as I know there is no such thing. These all exist only in your imagination. I paid full fees when I did B.Sc 40 yrs back and paid full fees now for my both daughters.

  jas

 18. Rajan

  நண்பர் ஜாஸ் டையாஸ் அவர்களுக்கு

  முதலில் நான் சொல்ல வந்தது என்பதைக் கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள். நான் ஜெயமோகன் அவர்களுக்கு அளித்த தன்னிலை விளக்கம் ஒன்றில் ஒரு சில சமயங்களில் ஒரு குழுவின் பிரதிநிதியாக நிறுத்திக் கொண்டு ஒருவர் பேசுவதில் தவறு இல்லை என்று சொல்லி அதற்கு உதாரணமாக அந்தத் தருணத்தில் என் மனதில் தோன்றிய இரண்டு நிகழ்ச்சிகளை அளித்தேன். அது இந்த விவாதத்தின் முக்கிய கரு அல்ல.

  இந்த விவாதம் “ஜெயமோகன் அங்காடித் தெரு திரைப் படத்தில் ஒரு பிராமணப் பெண்ணை சித்தரித்தது சரியா இல்லையா” என்பது பற்றி மட்டுமே. அந்த விவாதப் பொருளுக்கு நான் பதில் அளிக்கும் பொழுது “அவர் அப்படிச் சித்தரித்ததில் எவ்விதத் தவறும் இல்லை என்றும் ஒரு படைப்புக்குத் தேவையானால் அது சரியே என்றும் சொல்லி விட்டு ஆனால் தமிழகச் சூழலில் அப்படிப் பட்ட சித்தரிப்புகள் ஒரு சாராரின் மீதும் ஒரு வித காழ்ப்பை அதிகரிக்க உதவி செய்து விடுகிறது என்பதையும் விளக்கியிருந்தேன்.

  ஆனால் நீங்கள் விவாதக் கருவையெல்லாம் விட்டு விட்டு நான் உதாரணமாகக் காண்ப்பித்த ஒரு விஷயத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அது என் கற்பனையில் உதித்த விஷயம் என்று சொல்லியிருக்கிறீர்கள். நான் இந்த விவாதத்தின் முக்கிய கருவில் இருந்து விலகிச் சென்று எதையும் விவாதிக்க விரும்பவில்லை. இருந்தாலும் நான் சொன்னதை பொய், கற்பனை என்று நீங்கள் குற்றம் சாட்டி விட்டபடியால் உண்மை என்ன என்பதைச் சொல்வது என் கடமையாகி விடுகிறது. மேலும் ஒரு வேளை உங்களுக்கு இரண்டு லட்ச ரூபாய் கிடைக்காமல் போய் விடுவதற்கும் என் மொளனம் ஒரு வேளை காரணமாகி விடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஒரு பதிலை மட்டும் விவாதப் பொருளில் இருந்து விலகினாலும் பரவாயில்லை என்று சொல்லி விடுகிறேன். மட்டுறுத்துனர்கள் என்னை மன்னிப்பார்களாக.

  இப்பொழுது உங்கள் கேள்விக்கு எனது பதில்:

  முதலில் நான் எழுதியுள்ளதைத் தெளிவாகப் படித்தீர்களா? நாற்பது ஆண்டுகளாக இந்த சலுகை கொடுப்பதாக எங்கு சொல்லியுள்ளேன். தமிழ் நாட்டில் ஏழை பள்ளி மாணவர்களில் ஏழ்மையான கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லீம்களுக்கு மட்டும்தான் இந்த சலுகை வழங்கப் படுவதாகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேனே. நீங்கள் ஒரு வேளை ஆண்டுக்கு 2 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ள ஏழைக் கிறிஸ்துவராக இருந்தால் நிச்சயம் உங்கள் பெண்களுக்கும் இந்தப் பணச் சலுகை உண்டு. தமிழக அரசு கொடுக்கிறது. என் கற்பனையில் உதித்த விஷயம் அல்ல. உங்களுக்கு தினமும் தினசரி படிக்கும் வழக்கம் இருந்திருந்தால் இந்த விஷயம் நிச்சயம் தெரிந்திருக்கும். உங்கள் பெண்கள் படிக்கும் கல்லூரியின் நிர்வாகிகள் அல்லது முதல்வர் கிறிஸ்துவ முஸ்லீம் மாணவர்களை மட்டும் தனியாக அழைத்து இந்தப் பணத்தைப் பட்டுவாடா செய்கிறார்கள். ஒரு வேளை உங்கள் குழந்தைகளும் இதற்குத் தகுதியானவர்களாக இருந்தால் உடனே அந்தக் கல்லூரி நிர்வாகத்தின் சட்டையைப் பிடித்து உங்களுக்குச் சேர வேண்டிய பணத்தை கேட்டு வாங்குங்கள். எனக்கு பதில் கூட அப்புறம் போட்டுக் கொள்ளலாம் :)

  அது உங்கள் உரிமை. ஆம். இந்தியாவின் சொத்து எல்லாமே சிறுபான்மையினரின் உரிமை என்று மன்மோகன் சொல்லியிருக்கிறார். மைனாரிட்டிக்காக மட்டுமே தன் அரசு நடப்பதாகக் கருணாநிதி சொல்லியிருக்கிறார். உங்கள் அரசு, உங்கள் பணம், உங்கள் உரிமை, உங்களுக்காக மட்டுமெ தரப்படும் சலுகை தவற விடாதீர்கள்.

  ஐயா இது என் கற்பனையில் உதித்த கதை அல்ல. நிஜம். இது கற்பனையாக இருந்தால் ஏன் பா ஜ க கட்சியினர் ஊர் ஊராகப் போய் கூட்டம் போட்டு போராட்டம் நடத்துகிறார்கள்? அவர்களும் என்ன கற்பனையில் வாழ்கிறார்களா? சரி போகட்டும் அவர்களும் என்னைப் போல ஒரு கற்பனை உலகத்தில் வாழ்ந்து கற்பனையாக இந்தச் சலுகையை ஒரு கட்டுக்கதையாக சொல்லுகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம் ஒவ்வொரு ஊரிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏன் போராட்டத்தில் குதித்து இந்த பாரபட்சமான, ஓரவஞ்சனையான, மதமாற்றத்தைத் தூண்டும் சலுகையை எதிர்க்கிறார்கள்? ஒரு வேளை அவர்களும் கற்பனையாக எண்ணிக் கொண்டு கற்பனையாகப் போராடுகிறார்களோ? இப்படி எல்லோருமே கற்பனை உலகத்தில் வாழ இவர்கள் அனைவரும் என்ன ஜெயமோகன் சொன்ன அரங்க மனிதர்களா? ட்ரூமேன் ஷோவா? அல்லது மாயையா?

  உங்களுக்குச் சந்தேகம் உண்டெங்கில் கீழ்க்கண்ட சுட்டிகளில் இது குறித்து உள்ள முழு விபரங்களையும் படிக்கவும், கேட்க்கவும். அதில் பேசுபவர்கள் ஒவ்வொருவரின் உணர்ச்சிகரமான உரைகளையும் கேட்கவும். அங்கு கூடியிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களை காணவும். அப்புறமும் சந்தேகம் இருந்தால் தமிழ் நாளிதழ்களைப் படித்து விபரம் அறியவும். இது உண்மை வெறும் கற்பனை அல்ல. எனக்கு கற்பனையாக எதையும் உருவாக்கத் தெரியாது. நான் ஜெயமோகன் அவர்களின் சாதாரண வாசகன் மட்டுமே அவரைப் போல கற்பனா சக்தி படைத்தவன் கிடையாது. ஆகவே நான் சொல்வதை கற்பனை என்று ஒதுக்கி விடாமல் உடனே போய் ரெண்டு லட்சம் பெறும் வழியைப் பாருங்கள்.

  http://www.tamilhindu.com/2010/07/nagerkovil-bjp-protest-july-2010-a-report/

  http://www.tamilhindu.com/2010/07/tn-bjp-july-struggle-for-the-rights-of-hindu-poor/

  http://ezhila.blogspot.com/2010/08/blog-post.ஹ்த்ம்ல்

  இதைப் படித்த பின்னால் யார் கற்பனையில் வாழ்கிறார்கள் யார் நிஜ உலகில் இருக்கிறார்கள் என்பதை நீங்களும் இதைப் படிக்கும் எவரும் முடிவு செய்து கொள்ளலாம் அது வரையில் நான் ட்ரூ மென் ஷோ ஜிம் கேரி மாதிரி இருந்து விட்டுப் போகிறேன் :))

  நான் அரசாங்கம் இலவசமாக எதை வழங்குவதையும் எதிர்ப்பவன். இங்கு ஒரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே அந்த சலுகை வழங்கப் படுவதை இன்னமும் கடுமையாக எதிர்ப்பவன். இது போன்ற சலுகைகள் தமிழ் நாட்டில் மதமாற்றத்தை அதிகரிக்கவே உதவும் என்பதினால் அதை விடக் கடுமையாக எதிர்ப்பவன். மதம் மாறினால் உனக்கு ஏன் கவலை? உனக்கு என்ன அக்கறை என்று அடுத்த கேள்வி கேட்ப்பீர்களானால் அதற்கு பதில் சொல்ல இந்தத் திரியை நான் பயன் படுத்திக் கொள்ள மாட்டேன் வேறு தளங்களில் நாம் சந்திக்கலாம் பதில் சொல்லக் காத்திருக்கிறேன். இந்தத் திரியின் கருவைத் தாண்டி இவ்வளவு தூரம் நான் எழுதியதற்கே வருத்தப் படுகிறேன்.

  அன்புடன்
  ராஜன்

  பி கு உங்களுக்கு இந்த சலுகையின் மூலம் பணம் கிடைக்குமானால் எனக்கு மகிழ்ச்சியே. எனது எதிர்ப்பு உங்களுக்கு பணம் கிடைப்பது குறித்தல்ல அரசின் ஓரவஞ்சகமான சதித் திட்டத்தை எதிர்த்து மட்டுமே.

 19. Rajan

  ஜாஸ் டையாஸ் அவர்களே

  உங்களை ஏமாற்றுவதற்றியதற்கு மன்னிக்கவும். தொகை 1 லட்சம் இல்லையாம் ஆனால் அதிக பட்சம் நாற்பதினாயிரம் வழங்குகிறார்களாம். இரண்டு மகள்களுக்கும் சேர்த்து பதிணொண்ணாயிரம் முதல் எண்பதினாயிரம் வரை பெற வாய்ப்புள்ளது. வாழ்த்துக்கள். மேலதிக விபரங்களை கல்லூரியில் கேட்க்கவும் பணம் கிட்டினால் எனக்கு ஒரு சிறு நன்றியாவது சொல்வீர்கள்தானே?

  அன்புடன்
  ராஜன்

 20. V.Ganesh

  “இப்படி சினிமாக்களில் பிராமணர்களை அவமானப் படுத்தும் போக்குகளை ஒரு ஞாநியோ, ஒரு தி ஹிந்து ராமோ ஒரு கமலஹாசனோ கேள்வி கேட்க்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் சுய அடையாளங்களை மறைப்பதற்கே அவர்கள் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறார்கள்”
  சரியாக விளக்கம்.

  அனுராத ரமணன், பாலசந்தர் போன்ற middle class மக்கள் தங்களை நிலை நாட்டிகொள்ள இப்படி படம், கதை எடுத்தார்கள் என்பது என் கருத்து.

  நானும் உண்மையாகவே பார்ப்பனர்கள் மிக்க ஜாதி பேதம் பார்ப்பார்கள், தீண்டாமை என்பதின் நிலைப்பாடு என்று நினைத்தேன். ஆனால் அண்மையில் வேதாரண்யத்தில் ஒரு கோவிலில் இன்னும் ஜாதி பேதம் இருக்க்கிறது என்று படித்த பிறகு மிக வியப்பாக இருந்தது. இன்றைய நிலையில் நீங்கள் கூறியது போல் எந்த ஒரு பார்ப்பன கும்பலும் அதில் ஈடு பட்டிருக்கமுடியாது.
  நெடு நாள் முன்பு குமுதத்தில் சுஜாதா ஒரு கதை எழுதினார். british கால கதை. “ரத்தத்தின் நிறம் சிகப்பு” என்று. அதில் ஒரு ஜாதி யை பற்றி குறிப்பிட, அந்த ஜாதி அமைப்பு அவரிடமும், குமுதம் பத்ரிகையிடமும் மன்னிப்பு வாங்கியது. பிறகு ஜாதி பற்றி குறிப்பிடாது அதே கதையை எழுதினார் என்பது வேறு விஷயம்.
  நீங்கள் டிவியில் மத்திய அரசின் மத கோட்பாடு நிறைந்த விளம்பரங்கில் பார்க்கலாம். ஹிந்து என்றால் ஒருவர் குடுமியோடு, விபூதி இட்டு வருவார். முஸ்லிம் என்றால் குல்லா அணிந்து…

  அலைகள் ஒய்வதில்லை படத்தில் பாரதிராஜ பார்ப்பனர் இல்லாது சித்தரித்து இருந்தால் அந்த மெசேஜ் வந்திருக்காது.

  ஆக ஜாதி அரசியல், ஜாதி சினிமா, ஹிந்து மதம் என்பதற்கு பார்ப்பன சமூகம் ஒரு symbol அவ்வளவு தான் என்பது என் கருத்து.

 21. hayyram

  //ஆக ஜாதி அரசியல், ஜாதி சினிமா, ஹிந்து மதம் என்பதற்கு பார்ப்பன சமூகம் ஒரு symbol அவ்வளவு தான் என்பது என் கருத்து//

  symbol அவ்வளவு தான்என்று எளிதாக சொல்லிவிட்டீர்கள் கனேசன் அவர்களே! ஆனால் இந்துக்களின் சிம்பளாக நீங்கள் ப்ராமணரையே காட்டுவதால் ஏற்படும் விளைவுகளை பற்றி நீங்கள் சிந்தித்தீரா! நீங்கள் அறிவு ஜீவி ப்ராமணராக இல்லாமல் சாதாரண உணர்ச்சிகள் கொண்ட பாமர ப்ராமணராக இருந்தால் உங்களால் அதை யோசிக்க முடியும். ஸ்ரீரங்கத் தெருவில் மறைந்த ராமசாமி நாயக்கரின் தோற்றம் கொண்ட உருக்கல்லை யாரோ சேதப்படுத்தினார்கள் என்பதற்காக சென்னை அயோத்தியா மண்டபத்தில் ஐம்பது பைசா லாபத்திற்கு பூனூல் விற்றுக்கொண்டிருந்த அறுபது வயது அப்பாவி ப்ராமணக் கிழவனை வெட்டிப்போட்டார்களே! இந்துக்களின் சிம்பளாக சினிமாக்காரர்கள் ப்ராமணரைத் தொடர்ந்து காட்டுவதால் வந்த விளைவு இது என்பதை உங்களால் உணர முடியுமா? நீங்கள் ப்ராமணரில்லையென்றால் இந்த உணர்ச்சியை உங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாமல் போகலாம்! ஆனால் அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும் அதன் வேதனை! இது போன்ற வெறி பிடித்தவர்கள் மனதில் ஏற்கனவே ப்ராமணன் தான் கொடுமைக்காரன் என்றும் வேற்று நாட்டிலிருந்து படையெடுத்து வந்து நம்மை அழித்தவர்கள் என்றும் கூறப்பட்டு உரையேற்றப்பட்டு வளர்க்கப் பட்டவர்கள். ப்ராமணர்களை மேலும் கொடுமைக்காரர்களாகவே ஜெயமோகன் போன்றவர்கள் உருவகித்து எழுதினாலோ சினிமாக்களில் மேலும் மேலும் தொடர்ந்து காண்பித்தாலோ அதனால் இந்த வெறியர்கள் மேலும் வெறிகொள்வார்களே! இது போன்ற காட்சிகளால் உந்தப்பட்டு இன்னொரு மேற்கு மாம்பலம் பகுதியிலோ ஸ்ரீ ரங்கத்திலோ மற்றொரு ப்ராமணர் வெட்டப்பட்டாலோ , ஒரு ப்ராமணப்பெண் மானபங்கம் செய்யப்பட்டாலோ அதற்கு எழுத்தாளர்களோ, சினிமாக்காரர்களோ அல்லது கனேசனோ பொறுப்பேற்பீர்களா? இல்லை அப்பொழுதும் இது உன் முப்பாட்டனைப் பழி வாங்க உன்னை இப்படிச் செய்தேன் என்று திராவிட மாயை மொழி பேசி மேலும் துவேஷம் பாராட்டுவீர்களா? மனிதத்துடனும் மனசாட்சியுடனும் யோசியுங்கள்!

 22. stride

  சயீத் நக்வி இந்தியன் எக்ஸ்பிரஸில் பல வருடங்களுக்கு முன்பு எழுதிய கட்டுரை ஞாபகம் வருகிறது. பாப்ரி மசூதி இடிக்கப்பட்ட பிறகு லக்னோ அருகே நடந்த ஒரு கலவரத்தில் இந்துக்கள் கும்பல் ஒரு முஸ்லீம் குடியிருப்பை தாக்க வந்தது. அவர்கள் அங்கு வந்ததும் ஒரு வீட்டின் மேல் நின்று கொண்டிருந்த ஒரு பிராமணப் பெரியவரைப் பார்த்து அப்படியே நின்று விட்டார்களாம். அவர் கூட்டத்தை கலைந்து போக சொன்னதும் போய் விட்டார்களாம். அவரை தவிர்த்து வேறு சாதியினர் எவராக இருந்தாலும் அந்த கும்பலை தடுத்திருக்க முடியாது. பிராமணர்கள் மேல் இன்னும் இருக்கும் (தேவையில்லாத) பக்தியும் மரியாதையும் தான் அந்த ஆத்திரக் கும்பலை நிறுத்தியது.

  இந்த பக்தியும் மரியாதையும் தமிழ்நாட்டிலும் பெரும்பாலான மக்களிடம் இன்னமும் இருக்கிறது என்று உறுதியாக சொல்ல முடியும். வழிபாட்டு முறைகளை நடத்துவதினாலும், கலாச்சாரக் காப்பகங்களான கோவில்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாலும் இன்னமும் இந்து மதத்தின் காப்பளர்களாக கருதப் படுவது பிராமணர்கள் தான். அதற்கு இணையாக படித்தவர்களாகவும், நாகரீகமானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் அவர்கள் கருதப்படுகிறார்கள். அறுபதுகளில் இருந்த “பாப்பானைக் கண்டால் பாம்பைக் கண்டது போல” போன்ற முழக்கங்கள் எப்போதோ ஓய்ந்து விட்டன. தாழ்த்தப்பட்ட சாதியினர் அவர்களை மேலே வராமல் தடுப்பது மற்ற பின்தங்கிய சாதியினரே என்று தெளிவாக புரிந்து கொண்டிருக்கின்றனர். பிராமணர்கள் சினிமாவிலும், இசையிலும், கணினி மற்றும் பிற துறைகளிலும் நிறையவே செயல்படுகின்றனர். தமிழக மக்கள் தொகையில் மூன்று சதவிகிதத்துக்கும் குறைவான எண்ணிக்கை உள்ள பிராமணர்கள் பல துறைகளில் எண்ணிக்கைக்கதிகமாக உயர் பதவியில் இருக்கின்றனர். யதார்த்தம் இப்படி இருக்கும் போது எதோ சில திரைப்படக் காட்சிகளை , இணைய எழுத்துக்களை மேற்கோள் காட்டி மொத்த பிராமண சமூகமே நசுக்கப்படுகிறது போல் எழுதுவது சிரிப்பை தான் வரவழைக்கிறது.

  மிக மிக தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து ஆயிரம் வருடங்கள் நசுக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு இப்போதும் இன்னல படும் ஒருவர் கூட இப்படி மேலே புலம்பும் சில பிராமணர்கள் போல புலம்ப மாட்டார். அவர்கள் புலம்புவதற்கு காரணம் ஒன்று மட்டும் தான். துரும்பு கூட அசைக்காமல் நூற்றுக்கணக்கான வருடங்கள் கோயில் நிலங்கள், சொத்துக்கள், அரசர்கள் தானமாக கொடுத்த நிலங்கள் அளித்த வருமானத்தில் வாழ்ந்தவர்கள் , பிறகு பிரிட்டிஷ் காலத்தில் கல்வி மற்றும் அதிகாரத்தை மொத்தமாக கையில் எடுத்துக்கொண்டு கோலோச்சியவர்கள், அது தொடர்ந்து முப்பது ஆண்டுகள் சுதந்திர இந்தியாவின் அதிகார மையத்தை ஆக்கிரமித்திருந்தவர்கள், இப்போது அதனை இழக்க ஆரம்பித்தது தான்.

  இப்போது ஜெ போன்ற சிந்தனையாளர்கள் பிராமணர் ஆதிக்கம் செய்யும் இந்து வழிபாட்டு முறைகள் புரோகித மதம் மட்டும் தான், அது இந்து ஞான மரபின் ஒரு சிறு பகுதி தான் என்றும் இந்து ஞான மரபின் பெரும் சிந்தனைகள் பிராமணரல்லாவர்களால் ஆக்கப்பட்டவை என்று வெளிச்சமிட்டு காட்டுவதும் இந்த புலம்பலுக்கு ஒரு சிறு காரணம்.

  இவை எல்லாவற்றிற்கும் மேலான ஒரு காமெடி – இரண்டாயிரம் வருடங்கள் கிறித்துவர்களால் விடாமல் குறி வைத்து தாக்கித் துரத்தப்பட்டு பின் ஹிட்லரால் ஏறக்குறைய மொத்தமாக அழிக்கப்பட்ட யூத இனத்தோடு சில பிராமணர்கள் தங்களை ஒப்பிட்டுக் கொள்வது தான். ஆனால் பயங்கர கொடுமைக்கு உள்ளான யூதர்கள் கூட இப்படி மேலே எழுதும் பிராமணர்கள் போல புலம்பமாட்டார்கள் என்று தோன்றுகிறது. இப்படி எழுதுகிறவர்கள் எந்த பரிமாணத்தில் தான் வாழ்கிறார்கள் என்னும் வினா எழுகிறது. ஆனால் நிறைய பிராமணர்கள் தற்போதைய சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு விட்டார்கள், சிலர் தான் இப்படி இழந்த ஆதிக்கத்தின் நினைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு தோன்றுகிறது.

  சிவா

 1. “அங்காடித் தெருவின்” ஜாதி பற்றி ஜெயமோகன் « அவார்டா கொடுக்கறாங்க?

  […] அவரிடம் இதைப் பற்றி யாரோ கேட்க, அவர் பிளந்து கட்டி இருக்கிறார். படித்துப் […]

 2. அங்காடித் தெரு, பார்ப்பனீயம், சாதி, பெண்ணியம் – திருமலை ராஜன் « Snap Judgment

  […] கவலையும் கிடையாது, மாறாக ஒரு ஜெயமோகனை தலித்துக்களை அவமானப் படுத்தி […]

 3. அங்காடித் தெரு – ராஜனின் எதிர்வினை « அவார்டா கொடுக்கறாங்க?

  […] செலுத்துபவர், நல்ல ரசனை உடையவர். அங்காடித் தெரு பற்றி ஜெயமோகன் எழுதிய… அதை ஆதரித்து நான் எழுதியதையும் […]

Comments have been disabled.