வாரப்பத்திரிகைகளின் பொற்காலத்தில் வாழ வாய்ப்பு கிடைத்தவர்கள் கோபுலுவும் சிற்பியும். அன்றைய அச்சுவடிவில் மிகச்சிறந்த ஓவியமுறை என்பது கோட்டோவியங்கள். அதில் அற்புதங்களை நிகழ்த்த அவர்களுக்கு சாத்தியமாகியது
கோபுலு கலங்கரைத்தெய்வம் [துரோணன் என்ற பெயரில் புஷ்பா தங்கத்துரை என்ற ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய நாடகத்தொடர்] ஆலவாய் அழகன்[ஜெகசிற்பியன்] தொடர்களுக்கு வரைந்த ஓவியங்களை இன்றும் நினைவுகூர்கிறேன். வெறும் ஓவியங்கள் அல்ல அவை. ஒரு பண்பாட்டின் இறந்த காலத்தை மீட்டுக்கொண்டுவந்தவை
கரிகால்சோழன் தன் அமைச்சர்களுடன் தரையில் சப்பணமிட்டு அமர்ந்திருக்கும் அரச சபையும் கல்லால் ஆன உயரமற்ற அரண்மனைகளும் மிக நுணுக்கமான ஆய்வும் விரிவான கற்பனையும் கலந்தவை. அவற்றுக்குப்பின்னால் இருந்தவன் ஒரு உயர்கலைஞன்
கோபுலுவுக்கு அஞ்சலி