பதாகை நாஞ்சில் சிறப்பிதழ்

nanjil_

இந்த பதாகை இதழ் நாஞ்சில் சிறப்பிதழ் ஆக வெளிவந்துள்ளது. முக்கியமான ஒரு இதழ். நாஞ்சில்நாடனைப்பற்றி புதிய கோணங்களில் எழுதும் புதிய குரல்களுக்கு முக்கியத்துவம் அளித்து தொகுத்திருக்கிறார்கள். சமகாலத்தைய பெரும்படைப்பாளிகளில் ஒருவரின் படைப்புலகம் நோக்கிய ஒரு பார்வை. நாஞ்சிலின் நக்கல், அவரது யதார்த்தமான வாழ்க்கைத்தரிசனங்கள், மரபிலக்கியத்தேர்ச்சி என பலமுகங்களை இதில் காணமுடிகிறது.


நாஞ்சிலின் விரிவான நேர்காணல்
இவ்விதழின் சிறப்புகளில் ஒன்று. கட்டுரைகளில் சுரேஷ் கண்ணனின் கட்டுரை வாசகனின் ஆய்வு நோக்கிலும் அ.முத்துலிங்கத்தின் கட்டுரை நட்புநோக்கிலும் அழுத்தமானவையாக இருந்தன

நாஞ்சில் பேட்டியில் ஒருவிஷயம் சொல்கிறார், அவர் மட்டுமே சொல்லக்கூடியது அது. இணைய எழுத்தைப்பற்றிச் சொல்லும்போது காபியாக இருந்தாலும் அதை பிளாஸ்டிக் டம்ளரில் குடித்தால் நன்றாக இல்லை, வெண்கலக் கோப்பையில்தான் குடிக்கவேண்டும் என்கிறார். உண்மையில் அந்த வேறுபாடு அழகியல்சார்ந்தது.

நான் புன்னகைப்பதைக் கண்டு அஜிதன் என்ன என்று கேட்டான். ‘புரட்சியாளர்கள் புதுமையை நாடுவது எப்படி ஒரு இயல்பான இணைவோ அதைபோல அழகியலாளர்கள் கொஞ்சம் பழமைவாதிகளாக இருப்பதும் இயல்பான இணைவுதான். என்ன சொல்கிறாய்?” என்றேன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 87
அடுத்த கட்டுரைஅறிவியலின் மொழியும் கலையின் மொழியும்