பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.
உங்கள் வாய்க்கு சர்க்கரைதான் போடவேண்டும், இந்தப் பதிவில் இப்படி குறிப்பிட்டு இருந்தீர்கள்.
இதன் எதிரொலியாக இன்று NDTV இல் வந்த செய்தி.
US Seeks ‘Clarification’ on India’s Crackdown on Ford Foundation, Greenpeace
பார்ப்போம் மோதி அரசு என்ன செய்கிறது என்று.
அன்புடன்,
அ .சேஷகிரி.
அன்புள்ள சேஷகிரி
கொஞ்சம் அரசியல் தெரிந்து, கொஞ்சம் சீனியர் டெல்லி இதழாளர்களிடம் பழக்கமும் இருந்தால் ஒன்று தெரியும், மோதி அல்ல அவருக்கும் மேலே எவரும் வந்தாலும் பெரிதாக ஒன்றும் செய்துவிடமுடியாது என்று. இந்திய அரசு என்பது உண்மையில் பல்வேறு அதிகாரசக்திகளின் ஒரு சமரசப்புள்ளி. அந்தச் சமரசத்தை வெற்றிகரமாகச் செய்பவர் யானைமேல் ஏறிக்கொள்கிறார். பலவிசைகள் இருந்தாலும் முக்கியமான மூன்று விசைகள் ஐரோப்பிய- அமெரிக்க முதலீடு, உள்ளூர் பெருமுதலாளிகள்- இப்போது கனிம அகழ்வாளர்கள், இந்தியாவின் வணிக இடைத்தரகர்கள். இவர்கள்தான் நிதிகொடுத்து அரசை உருவாக்குகிறார்கள். அது காங்கிரஸோ பிஜெபியோ எதுவானாலும். ஆகவே அவர்களை எந்த அரசும் பகைக்க முடியாது. போக அவர்கள் அனுமதிக்கும் ஓர் எல்லை உண்டு அதுவரைக்கும் போகலாம். அவ்வளவுதான்
ஜெ