இந்த இணையதளத்தில் [ http://www.neerottam.com/artpost/ ] அந்தக்கால அச்சு இதழ்களின் படங்களை வலைப்படுத்தியிருக்கிறார்கள். என்னைப்போன்று நாற்பதுக்கு மேல் வயதுள்ளவர்கள் மலரும் நினைவுகளுக்காக வாசிக்கலாம். அறுபதுக்கு மேல் வயதானவர்கள் மலரும் நினைவுகளுக்குள் செல்லாமலிருப்பதே மேல் என்று சொல்வேன். அது தேவையில்லாமல் ஒரு மனச்சுமையை உருவாக்கி செயல்மயமான உலகில் இருந்து விலக்கி விடும்.
ஒருமுறை பாலுமகேந்திராவைச் சந்தித்தபோது அவரது சிறுவயது படங்கள் மற்றும் குடும்ப படத்தொகுதிகளை மறு அச்சு போட்டு வைத்து பேசிக்கொண்டிருந்தார். அவற்றை அப்படியே தூக்கி கடாசும்படிச் சொன்னேன். கலைஞனுக்கு சென்றகால ஈர நினைவுகள் போல சுமை ஏதுமில்லை. அவன் நிகழ்காலத்தில் வாழ வேண்டும். இறந்தகால ஏக்கம்கூட நிகழ்காலக் கலையின் வடிவில் மட்டுமே வெளிப்பட வேண்டும்
2 comments
ramji_yahoo
July 23, 2010 at 3:28 pm (UTC 5.5) Link to this comment
நிகழ் காலத்தில் மன வருத்தத்தில் இருக்கும் பொழுது, கடந்த காலத்தில் நாம் செய்த சாதனைகள், நமது மகிழ்வான தருணங்களை நினைத்தால், புகைப்படங்களை பார்த்தல், ஒரு தன்னம்பிக்கை, உத்வேகம் கிடைக்குமே.
எனக்கு சில சமயங்களில் இவ்வாறு உத்வேகம் ஏற்படுவது உண்டு.
முத்துகுமாரின் கவிதை வரிகள தான் ஞாபகம் வருகிறது. ஒன்பதாவது முறை கீழே விழுந்து பத்தாவது முறையில் எழுந்து நிற்கும் பொழுது அவன் நினைப்பான, ஒன்பது முறை எழுந்து விட்டேனே, பூமி தாய் உதவி செய்கிறாளே, எனவே பத்தாவது முறையும் முயற்சி செய்வோம் என்று முயற்சி செய்து பத்தாவது முறையில் வெற்றி பெறுகிறான்.
mazhaithuli
July 24, 2010 at 12:59 pm (UTC 5.5) Link to this comment
சிறு வயதிலிருந்தே இதை கடைபிடிப்பவன் என்ற முறையில், உங்கள் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்.