தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (Tamil Heritage Trust) சார்பில் சென்னையில் நிகழும் கூட்டத்தில் பழந்தமிழ் பண்பாட்டின் சேரநாட்டு எச்சங்கள் என்னும் தலைப்பில் உரையாற்றுகிறேன்.
நாள் 2- 5 2015 [மேய் 2, சனிக்கிழமை]e
நேரம் மாலை ஐந்து மணி
இடம் தக்கர்பாபா வித்யாலயா, வினோபா ஹால், திநகர், சென்னை
தலைப்பு பற்றி:
குமரி மாவட்டம் பழைய சேரநாடு. இங்கு தொன்மையான தமிழ் நாகரிகத்தின் பண்பாட்டு நீட்சி இப்போதும் ஓரளவு இருக்கிறது. இவற்றை விழாக்களில். ஆலயச்சடங்குகளில் நாம் காணலாம். பிற தமிழ்ப் பகுதிகளில் வெவ்வேறு பிற்கால ஆட்சியாளர்களாலும் தொடர்குடியேற்றங்களாலும் நிகழ்ந்த பண்பாட்டுமாற்றம் குமரிப் பகுதியில் நிகழவில்லை. ஆகவே இது ஆய்வாளார்களுக்குரிய ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது என்று கூறலாம். இந்தப் பண்பாட்டு எச்சங்கள் குறித்த ஓர் அறிமுகப் பார்வை