சுஜாதா விருதுகள் -கடிதங்கள் 3

சுஜாதா அறிமுகம்

ஆனால் ராஜமார்த்தாண்டன் இறந்தபோது அவரை ஒரு குடிகாரன் என்று அஞ்சலிக் குறிப்பில் ஜெயமோகன் எள்ளி நகையாடினார்.

இது மனுஷ்யபுத்திரன் எழுதியது. இதெல்லாம்தான் உங்களுக்கான பதில்கள்

சிவராம்

அன்புள்ள சிவராம்

இதுதான் ராஜமார்த்தாண்டான் பற்றிய என்பதிவு.

அண்ணாச்சி 1

அண்ணாச்சி 2

அண்ணாச்சி 3

அண்ணாச்சி 4

இதை வாசித்துவிட்டு அன்று முதலில் என்னை அழைத்து கண்ணீருடன் பேசியவர் மனுஷ்யபுத்திரன். அண்ணாச்சியை கண்முன் காட்டிவிட்டீர்கள் என்றார்

அவரது கடிதம் இப்படிச்சொன்னது மார்த்தாண்டன் பற்றிய கட்டுரையின் கடைசி வரிகளைப்படிக்க முடியவில்லை. கண்களில் நீர் நிறைந்துவிட்டது

பிரச்சினையை எப்படியெல்லாம் கொண்டுபோகவேண்டியிருக்கிறது. என் எளிமையான விமர்சனம் முன்னல் இருக்கிறது. நான் தனிப்பட்ட தாக்குதல்களை முன்வைக்கவில்லை. இலக்கியம் சார்ந்த என் மதிப்பீடுகளை, பிரச்சினைகளை மட்டுமே முன்வைக்கிறேன்

ஜெ

ஜெ,

எளிமையான கேள்வி. சுஜாதா விருதை ஃபிலிம்பேர் விருது மாதிரி என்று சொல்லலாம். அது ஒரு பொது விருது. அதை ஏன் விமர்சிக்கவேண்டும்?

ஆர்

அன்புள்ள ஆர்,

அது ஃபிலிம்ஃபேர் விருதுபோல. அதைப்பற்றி மட்டும் தான் நானும் சொல்கிறேன். ஆனால் ஃபிலிம்ஃபேர் விருதுகள் தங்களை அந்த எல்லைக்குமேல் சொல்லிக்கொள்வதில்லை

ஜெ


சுஜாதா விருதுகள்

கடிதங்கள் 4

கடிதங்கள் 3

கடிதங்கள் 2

கடிதங்கள் 1

முந்தைய கட்டுரைசுஜாதா விருதுகள் கடிதங்கள்-2
அடுத்த கட்டுரைசுஜாதா விருதுகள் கடிதங்கள் 4