«

»


Print this Post

நாவல் கோட்பாடு – நூல் விமர்சனம்


சுருக்கமாகச் சொன்னால் சிறுகதை, பக்க அளவைக் கொஞ்சம் கடந்தால் குறுநாவல், பக்கங்கள் இன்னும் சற்று எல்லை மீறினால் நாவல் என்ற காலம் காலமான கற்பிதம் எந்த அளவுக்குச் சிறுபிள்ளைத்தனமானது என்பதைத் தன் நூலில் எடுத்துக் காட்டும் ஜெயமோகன், மேற்குறித்த மூன்று வடிவங்களுக்குமான தனிப்பட்ட கூறுகளை, படைப்புக்கான சாத்தியங்களைத் தான் அமைத்துக் கொண்ட கருதுகோளின் அடிப்படையில் தெளிவாக விளக்கிக் கொண்டு போகிறார்.

ஜெயமோகனின் ‘நாவல் கோட்பாட்டை’ முன் வைத்து… எம்.ஏ.சுசீலா | சொல்வனம்

.

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7434

2 comments

 1. M.A.Susila

  அன்பு ஜெ.எம்.,
  உங்கள் மிகச் சிறந்ததொரு விமரிசன நூலை…
  அதுவும் நான் பேராசிரியராக இருந்தபோது தேடித் தவித்த ஒரு நூலை மதிப்பீடு செய்யச் சொல்வனம் வாய்ப்பளித்ததில் நான் பேரானந்தம் கொண்டேன்.
  உண்மையில் அந்த நூல் வழி நான் கற்றது மிக அதிகம்.
  பகிர எண்ணியதில் ஒரு சிலவற்றை மட்டுமே கட்டுரைக்குரிய வரையறைகள் காரணமாகப் பகிர முடிந்தது.
  உங்கள் கணிப்பில் கட்டுரை எவ்வாறு வந்துள்ளது என்பதை இரண்டு வரி எழுத முடியுமா.
  எல்லாம் உங்கள் வார்த்தைகள் …கருத்துக்கள்தான். ஆனாலும் அவற்றைச் சரியாக உள் வாங்கி உங்கள் வழி வெளிப்படுத்தி இருக்கிறேனா என்பதை உங்கள் வாய்மொழியாகவே தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
  என் மிகப் பெரிய வருத்தம்…என் ஆசிரியப் பணி முடிந்த பிறகு இந்த நூல் என் கைக்குக் கிட்டியதுதான்.
  கல்விக் கூட ஆய்வுப் பேராசிரியர்கள் செய்தாக வேண்டிய மிகப் பெரும் பணியைத் தாங்கள் மிகச் செம்மையாக ‘92 காலகட்டத்திலேயே செய்து முடித்திருக்கிறீர்கள்.
  இதைக் கட்டுரையில் குறிப்பிடாது விட்டு விட்டதால் இக் கடிதத்தில் எழுதியிருக்கிறேன்.
  நன்றி,
  எம்.ஏ.சுசீலா

 2. ஜெயமோகன்

  வணக்கம் ஜெ..
  சிறுகதை , நீள்கதை, குறு நாவல், நாவல் என்று வடிவம், பக்கங்களை கொண்டு படைப்புகளை தீர்மானிப்பதை உங்கள் வாதம் தகர்க்கிறது. சுசீலா அம்மாவை எனக்கு நன்கு தெரியும். சொல்வனத்தில் அவர் எழுதும் முதல் கட்டுரை உங்கள் புத்தகம் பற்றி என்பதில் சந்தோஷம்.

  தொடர்கதைகளாக வந்து பின்பு நாவலாக உருமாற்றம் பெறும் பல கதைகளை நான் நாவலாக நினைப்பதில்லை. நிறைய உதாரணம் சொல்லலாம். சுந்தரராமசாமியின் ‘ புளியமரத்தின் கதை’ கூட ஒரு பத்திரிக்கைக்காக தொடராக ஆரம்பிக்கப்பட்டு பின்பு அந்த பத்திரிக்கை நின்று போனதால் பின்பு அதை முழு நாவலாக எழுதினார் என்று அவரே எழுதியிருக்கிறார். முதல் இரண்டு அத்தியாயங்கள் படிக்க அப்படிதான் தோன்றுகிறது. அதை ஒரு தொடர்கதையாக எழுதப்பட்டு பின்பு நாவலாகி இருந்தால், இந்த வடிவம் ஒருவேளை கிடைக்காமல் போயிருக்கலாம்


  Chandramohan Vetrivel,
  New Delhi.
  http://www.chandanaar.blogspot.கம

  அன்புள்ள சந்திரமோகன்

  அந்தக் கோட்பாட்டு நூல் நாவலின் வடிவம் பற்றிய ஒரு பேச்சை உருவாக்கும் எண்ணத்துடன் எழுதப்பட்டது. வடிவத்தை இரு முனைகலில் இருந்து உருவாக்கும் முயர்சி அது. ஒன்று எழுத்தாளன் இன்னொன்று வாசகன். அதற்காகவே வாசக இடைவெளி என்ற கருத்தை உருவாக்கினேன். அதை அப்போது சில அமைப்பியலாளர் கிண்டல்செய்து எழுதினார்கள். ஆனால் அந்தக்காலகட்டத்தில் அந்த கருதுகோள் அமெரிக்காவில் கல்வித்துறை வட்டாரத்தில் பேசப்பட்டு மேலும் சிலவருடங்கள் கழித்து பிரபலமடைந்தது.

  ஜெ

Comments have been disabled.