யானைச்சிறை

அன்புள்ள ஜெ

இந்த புகைப்படக்கவிதை பெரிய அளவில் மனச்சோர்வை உருவாக்கியது http://www.boredpanda.com/crying-elephant-rescue-50-years/. யானைகள் இப்படி சுரண்டப்படுவதை நாம் எப்படி அனுமதிக்கமுடியும்? நாம் யானைகளின் தேசம் என்று எப்படி பெருமிதம் கொள்ளமுடியும்?

சரவணன்
crying-elephant-raju-rescued-chained-50-years-2

அன்புள்ள சரவணன்,

உண்மைதான்.

ஆனால் இந்த புகைப்படங்களின் வர்ணனைகள் சரியானவைதானா என எனக்கு ஐயமாக இருக்கிறது. யானை அழும் என்று நான் நினைக்கவில்லை. அவை துயரத்தை வெளிப்படுத்தும். ஆனால் கண்ணீர்விடுவது வேறு. கண்ணீர் அவற்றின் கண்களின் ஒரு தூய்மையாக்கல் முறை

நமது ஆலயங்கள் மற்றும் தோட்டங்களில் கட்டுக்குள் கிடக்கும் யானைகளை விடுதலைசெய்துவிடவேண்டும் என்று கோரும் ஒரு வலிமையான சூழியல் குரல் கேரளத்தில் உண்டு. நானும் அதில் ஒருவன். ஆனால் காடுகள் வேகமாக அழிந்து காட்டுயானைகள் வாழமுடியாத நிலை வந்துள்ள இன்று அவற்றை காட்டில் விடுவதாலும் பயனில்லை

பாதுகாக்கப்பட்ட காடுகளில் எல்லை வகுத்து அவற்றை விடலாம். கேரளத்தில் காகிதத்திற்காக மூங்கில்வெட்டப்படுவது நிறுத்தப்பட்டபின் யானைகள் பெருகியிருக்கின்றன. அதற்கான வழிகள் கண்டடையபப்டவேண்டும்

மொத்தத்தில் யானைகளை பிடித்து அடித்து பழக்கி வேடிக்கை மிருகமாகவோ வழிபாட்டு மிருகமாகவோ வைத்திருப்பதை முற்றாகத் தடைசெய்யவேண்டுமென்பதே என் கருத்து

ஜெ

முந்தைய கட்டுரைதேர்வு ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஅ.மார்க்ஸும் ஜெகேவும்