‘ஜெகே”- கடிதங்கள்

jayakanthan_2161849f

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் ஓர் எளிய வாசகன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஜெயகாந்தனை வாசிக்க ஆரம்பித்தேன்,அவரது பல படைப்புகளை வாசித்த பின்னர் தங்கள் படைப்புகளை வந்தடைந்தேன். தங்கள் வலைதளத்தில் ஜெ.கே அவர்களை பற்றி நீங்கள் எழுதிய அனைத்தையும் வாசித்தேன். ஜெகே படைப்புகளை எப்படி நெருங்க வேண்டும், வாசகன் கதையில் அவன் சென்றடைய வேண்டிய தளம் பற்றி அறிந்தேன். அதன் பின்னர் மறுபடியும்
ஜெ கெவை படித்த பொழுது நான் தவற விட்ட கணங்களை கண்டேன்,என்னுள் பல வாசல் திறந்தது, அந்த நிமிட அனுபவங்கள் அணுக சொல்லி கொடுத்த உங்கள் கட்டுரைகளுக்கு நன்றி. என்னை பொறுத்தவரையில் ஜெயகாந்தன் என் உலகத்தில்,என் வீட்டில் என்றும் என் மனிதனாய் என்னுடன் இருப்பார். இதோ நான் ஹென்றியுடன் அவன் கிராமத்துக்கு செல்கிறேன், என்னுடன் இன்று ஜெயகாந்தனும் வருகிறார்.

நன்றி
ராம்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவு இலக்கிய உலகிற்கு ஒரு பேரிழப்பாகும். எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டது போல எழுத்தாளரின் மறைவு என்பது ஒரு தொடக்கமே. அவரைத் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு என்பதற்கு ஏற்ப ஜெயகாந்தன் குறித்து அறியச் செய்துள்ளார் ஜெயமோகன் . அரை நூற்றாண்டு காலம் அவரின் குரல் ஒலித்துள்ளது. தொடர்ந்து ஒலிக்கும் என்னும் நம்பிக்கையும் ஏற்படுகிறது .

_ பொன்.குமார்
சேலம் 636006

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 70
அடுத்த கட்டுரைகருவறையின் ஒளியில் காணக்கிடைக்கும் வெட்டவெளி(விஷ்ணுபுரம் கடிதம் பதினேழு)