வெள்ளை யானையும் வரலாறும்

vellai-yanai

Dear Mr. Jeyamohan,
Greetings!

This is my first mail to you though I have discussed many times the quality of your creative works with my friend Prof. Bernard Chandra.

I fully agree with whatever you have written about Jeyakanthan as a writer in The Hindu (Tamil) today. As you have said, there is a synthesis of Marxism and Gandhian philosophy. Though it manifested forcefully in his later works, it was always there. Jeyakanthan is one of the writers who do not show a gap between what they write and how they live.

Your assessment of modern Tamil literature is very true. Bharathi’s greatest achievement is his intention to become a poet-prophet. It was natural. Having chosen the pen name “Shelley Thaasan” he acquired the spirit of Shelley. Both were like Prometheus.

I am yet to complete a critical essay on your novel வெள்ளை யானை, though I have presented lectures on the novel in National Seminars in our college and also at Teresian College, Mysore. I analysed the novel from postcolonial perspective. I was happy that you have provided an opportunity to the readers to realize the subjectivity of history. As New Historicists like Stephen Greenblatt and Louis Montrose say, history is cultural and is connected to power.

வெள்ளை யானை establishes that there never was and there never is a single history or a single worldview. When I was reading வெள்ளை யானை, I just thought of Amitav Ghosh’s Sea of Poppies and River of Smoke. While Amitav Ghosh’s novels focus on the Opium Trade, வெள்ளை யானை deals with the predicament of the marginalised people. While Ghosh’s novels have the technique of parallel plots, வெள்ளை யானை becomes more emotional and complex.

Thank you.

Dr. V. S. Joseph Albert
Deputy Principal & Associate Professor of English
St. Xavier’s College

JA Photo

மதிப்பிற்குரிய ஜோசஃப் ஆல்பர்ட் அவர்களுக்கு,

பெர்னாட் சந்திரா வழியாக உங்களை அறிவேன். நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?

வரலாறு என்பது கண்டிபபக புறவயத்தன்மை [objectivity] நோக்கிச் செல்லவேண்டியது. அப்போதுதான் அதற்கு மதிப்பு. ஆனால் அப்படிச்செல்வதனாலேயே அது இழந்துவிடும் சில அம்சங்கள் உண்டு. அதை மானுட உணர்ச்சிகள், ஆன்மீகம் என்று நான் சொல்வேன். அவையிரண்டையும் வரலாற்றில் இணைப்பதே இலக்கியத்தின் பணியாக இருக்கமுடியும்.

எப்படிப்பார்த்தாலும் இலக்கியம் வரலாற்றுக்கு ஒரு மேலதிக இணைவுதான். ஆகவே வரலாறு எப்படி எழுதப்பட்டிருக்கிறதோ அதற்கு மாறாகவே இலக்கியம் அமையமுடியும். வரலாறு ஒற்றைப்படையாக , உணர்ச்சிகரமாக எழுதப்பட்டிருந்தால் புனைவு விரிந்து பலசரடுகளாக மாறும். கறாரான சித்தரிப்பாக ஆகும்.

மாறாக பஞ்சத்தின் வரலாறோ பலபல சரடுகளாக பிரிட்டிஷாராலேயே மாற்றப்பட்டு உண்மையை விட்டு விலகிச்சென்றது. ஆகவே ஒற்றை அம்புபோல, உணர்ச்சிகரமாக அது அமையவேண்டுமெனத் தோன்றியது. முழுக்கமுழுக்கக் குறியீடுகள் வழியாக நாவலைக் கொண்டுபோனதும் ஓரிரு நாட்களுக்குள் கதை நிகழ்ந்து முடியும்விதமாக அதை அமைத்ததும் அதனால்தான்.

ஜெ

வெள்ளை யானை- அனைத்து விமர்சனங்களும்

முந்தைய கட்டுரைஅறிவியலின் அறிவும், சமயத்தின் அறிவும்(விஷ்ணுபுரம் கடிதம் பதினெட்டு)
அடுத்த கட்டுரைஅ.மார்க்ஸின் ஆசி